வழக்கம் போல கில்ஸ் நம்மள tag பண்ணிட்டாரு…
One book that changed my life:
அப்படி எல்லாம் ஒரு புக்கும் இல்லை…ஆனா, ரொம்ப தாக்கத்த ஏற்படுத்தின, இல்லை அதிகமா discuss பண்ணின books ன்னா, பொன்னியின் செல்வன், harry potter. மணிக்கணக்கா, இடம் பொருள் ஏவல் மறந்து harry potter பத்தி நானும் ஒரு சில நண்பர்களும் discuss பண்ணுவோம்…
The book you have read more than once:
Mostly எல்லா புக்குகளுமே பிடிச்சு போய்ட்டா, கணக்கே இல்லாம படிக்கறது வழக்கம்…பொன்னியின் செல்வன் ஒரு மூணு இல்ல நாலு தடவை. மத்த கல்கி புக்ஸ் எல்லாம் ரெண்டு தடவை, Harry potter ஒரு மூணு தடவை.
kane and abel/ the prodigal daughter – ரெண்டு தடவை, அதிலையும் இந்த ரெண்டு புக்லையும், வேற வேற point of view ல வர similar part of the story ய, எத்தனையோ தடவை படிச்சிருக்கேன்.
அப்புறம் நான் எழுதின கதை எல்லாம், (அத publish பண்ணிட்டு இருக்கும் போது) – ஒரு பத்து தடவையாவது படிச்சிருவேன்…
One book you would want on dessert island:
harry potter இருந்தா போதும்…எப்படியும் ஏழாவது புக் முடிச்சிட்டு, முதல் புக் மறுபடியும் உடனே ஆரம்பிச்சா கூட thrilling ஆ தான் இருக்கும்…
One book that made you laugh:
எல்லா பதிலையுமே harry potter ன்னு போட வேண்டியதா இருக்கு…நான் என்ன பண்றது? :)
One book that made me cry:
Not one book, so many books...
1. கில்ஸ் மாதிரியே நானும் அழுதது சிவகாமியின் சபதம் கடைசியில தான்…அந்த புக்ல கடைசி பக்கம் வேற ஓரத்துல கொஞ்சம் கிழிஞ்சிருந்தது…அப்படியும் அத படிக்கும் போது, கண்ணுல நிக்காம தண்ணி வந்துட்டே இருந்தது….ஆனா அந்த சிவகாமி மட்டும் கையில கிடைச்சிருந்தா, அப்பவே அவள நாலு அறை விடலாம் போல கோவமா இருந்துச்சு :)
2. அப்புறம் harry potter, last part ல, snape சாகும் போது harry கிட்ட, “look in to my eyes” ன்னு சொல்லுவாரு…அத மறுபடியும், மறுபடியும் படிச்சு படிச்சு அழுதேன்…
3. நா.பார்த்தசாரதி எழுதின பாண்டிமாதேவின்னு ஒரு புக் – படிச்சு முடிச்சுட்டு, ஹய்யோ இத 300 ரூபாய் குடுத்து வாங்கிடமேன்னு அழுதேன் :) என்ன பண்றது, கதைக்காக வேங்கி நாட்டு சரித்தரத்த மாத்த முடியாதே!
One book you wish you had written:
பாலங்கள் – சிவசங்கரி எழுதினது…1980s ல எழுதியிருப்பாங்கன்னு நினைக்கறேன்…1901 ல இருந்து 2000 வரைக்கும் பல தலைமுறை (பிராமண) பெண்களோட கதை, பிறப்பிலிருந்து இறப்பு வரை நடக்கற எல்லா சடங்கு, சம்பிரதாயங்களும் ஒவ்வொரு காலகட்டதிலையும் எப்படி நடந்துச்சுன்னு அப்படியே தத்ரூபமா எழுதியிருப்பாங்க..பக்கத்துல இருந்து பாக்குற ஒரு effect இருக்கும்…மேலோட்டமா பாத்தா, சும்மா life history மாதிரி, கதையே பெருசா இல்லாத மாதிரி இருக்கும்….ஆனா, அதுக்கு அவங்க எவ்ளோ research பண்ணியிருப்பாங்கன்னு நினைச்சா ரொம்பவே ஆச்சர்யமா இருக்கும்….
One book that you wish had never been written:
college books.. specific ah numerical methods, telecommunication books.
One book you are currently reading:
Time to kill – john grisham
One book you have been meaning to read:
சுஜாதா புக்ஸ் தான் அடுத்து படிக்கலாம்னு இருக்கேன்…
One book you’ll recommend
இந்த question நானா சேத்தது…
நா. பார்த்தசாரதி எழுதின குறிஞ்சி மலர்…link இதோ…
இந்த புக் பத்தி சொல்லனும்ன்னா, கொஞ்சம் இல்லை, ரொம்பவே மொக்கையா இருக்கும்…மெதுவா போகும், நடுவில பயங்கரமா போர் அடிக்கும்…ஆனா, நிறைய நல்ல நல்ல கருத்துக்கள சொல்ற சமுதாய நாவல். 1980s ல மதுரை ல நடக்கற கதை…ஒரு தடவைக்கு மேல படிக்கறது கொஞ்சம் கஷ்டம் தான்…ஆனா, கண்டிப்பா ஒரு தடவையாவது படிக்க வேண்டிய புத்தகம்…
யாரை மாட்டி விடலாம்? Blog template லயே நிறைய புக்கெல்லாம் அடுக்கி வச்சிருக்காரு, அவரை விட்டுட்டு வேற யார tag பண்றது?
அப்புறம், g3 – இது ஏன்னா நான் g3 ய இது வரைக்கும் tag பண்ணதேயில்லை…அதான் :)
33 comments:
ஹுக்கும்!
இது ஆவுறது இல்லை
இம்பூட்டு புக்கும் எத்தனை நாட்களில் படித்தீர்கள் ...
//அப்புறம் நான் எழுதின கதை எல்லாம், (அத publish பண்ணிட்டு இருக்கும் போது) – ஒரு பத்து தடவையாவது படிச்சிருவேன்…//
இருந்தாலும் உங்களுக்கு எதையும் தாங்கும் இதயம் தான் போல :)
//நாகை சிவா said...
//அப்புறம் நான் எழுதின கதை எல்லாம், (அத publish பண்ணிட்டு இருக்கும் போது) – ஒரு பத்து தடவையாவது படிச்சிருவேன்…//
இருந்தாலும் உங்களுக்கு எதையும் தாங்கும் இதயம் தான் போல :)
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய் :)))))
//One book that you wish had never been written:college books.. specific ah numerical methods, telecommunication books.//
எனக்கு Fluid Mechanics & Hydraulic Machines நினைச்சாலே கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆகிடும் :)))
//அவரை விட்டுட்டு வேற யார tag பண்றது?
அப்புறம், g3 – இது ஏன்னா நான் g3 ய இது வரைக்கும் tag பண்ணதேயில்லை…அதான் :)//
ஹைய்ய்ய்ய் நம்ம பாஸு :))
harry potter படிக்கிற ஆளா நீங்க ......
இவ்வளவு புக்ஸ் படிச்சு இருக்கீங்க ....
"இந்த புக் பத்தி சொல்லனும்ன்னா, கொஞ்சம் இல்லை, ரொம்பவே மொக்கையா இருக்கும்…"
அப்படி ன்ன நான் படிக்கிறேன் அந்த புக் யை.......
சரிங்க ....உங்களுக்கு போட்டிய நானும் சஸ்பென்ஸ் கதை எழுதுறேன்ங்க .....
"One book you are currently reading:
Time to kill – john grisham"
Indha book a nan unaku kuduthu 6 maasam aaradhu...ippo dan padikariya?
//அப்புறம், g3 – இது ஏன்னா நான் g3 ய இது வரைக்கும் tag பண்ணதேயில்லை…அதான் :)//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... நோட் பண்ணிக்கறேன்.. நான் கூட உங்களை டேக்கே பண்ணதில்லைனு நினைக்கறேன் ;-)
Anyways, அடுத்த 200-வது & 201-வது பதிவு ஸ்பெஷல் பதிவுங்கறதால அதுக்கப்புறம் பொறுமையா ஒரு நாள் இந்த டேக்க பண்றேன் :D
பொன்னியின் செல்வன் - எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம்.
எல்லார் வாழ்க்கையிலும் பொன்னியின் செல்வன் ஒரு சகாப்தம் தான் இல்லை?
அப்படி என்ன தான் இந்த ஹாரி பாட்டர் கதைகளில் இருக்கோ தெரியலை. இப்படி மாஞ்சு மாஞ்சு படிக்கிறாங்க.
மாட்டி விட்டாச்சா? எழுதிடுவோம், My Tryst with Literature'னு :-)
ம்ம்ம்... இம்பூட்டு புக்கும் என்னால முடியாதுமா....
avvvvvv...u the harrypotter likea..i also like like...athuvum hermioneva nadikara antah ponnu..enna cutea iruku!! :D heeh..
ponniyin selvan 3 timesa read!! avvvvvvvv...chancelanga neenga..eanku seriana kaampetition :D naan prodigal daughter mug adichi vachiruken
indha book tag ellam naan padikratha avoid pannidalam nu irukken.. endha book ume padikkave illa.. athanaala enakum pudikum nu comment poda mudiyala :(
உங்கள் புத்தக வாசிப்பு அனுபவங்கள் வியக்க வைக்கின்றன...
//சுஜாதா புக்ஸ் தான் அடுத்து படிக்கலாம்னு இருக்கேன்…//
ம்...நானும் தான்...
\\kane and abel/ the prodigal daughter\\
எனக்கும் மிகப் பிடித்த புத்தக்கங்கள் :-)
இந்த ஹாரி பாட்டர்’ல அப்படி என்ன தான் இருக்கோ. நானும் 7-8 வருஷத்துக்கு முன்னாடி ஒரு புத்தகம் வாங்கிப் படித்துப் பார்த்தேன். நம்மூர் விக்ரம் வேதாளக் கதை மாதிரி இருந்தது. பாதி புத்தகம் படிச்சுட்டு தூக்கிப் போட்டுட்டேன். :-)
\\பாலங்கள் – சிவசங்கரி எழுதினது…1980s ல எழுதியிருப்பாங்கன்னு நினைக்கறேன்…1901 ல இருந்து 2000 வரைக்கும் பல தலைமுறை (பிராமண) பெண்களோட கதை, பிறப்பிலிருந்து இறப்பு வரை நடக்கற எல்லா சடங்கு, சம்பிரதாயங்களும் ஒவ்வொரு காலகட்டதிலையும் எப்படி நடந்துச்சுன்னு அப்படியே தத்ரூபமா எழுதியிருப்பாங்க..பக்கத்துல இருந்து \\
எங்கம்மா இந்தப் புத்தகத்தை படிக்கச் சொன்னாங்க. சிவசங்கரியோட ஒரு சிறிய நூல்கண்டா.... புஸ்தகம் படிச்சப்புறம், இவங்க யார், நம்ம வாழ்க்கை எப்படி இருக்கணும்’னு அறிவுறை கொடுக்கன்னு சொல்லிட்டு, அவங்க புத்தகங்கள் படிக்கறதில்லை. இந்தப் புத்தகம் நல்லா இருக்குன்னு சொல்லிட்டீங்கள்லே, படிச்சுட வேண்டியது தான்.
அப்புறம் இந்த சிவகாமியின் சபதத்தின் முதல் இரண்டு பாகம் இரண்டே நாளில் படித்து முடித்தேன். கடைசி பாகம் தான் கொஞ்சம் ஜவு மிட்டாய் போல் இருந்தது. இந்த சிவகாமியை நாலு சாத்து சாத்தணும் போலவும் இருந்தது.
இவ்ளோ பெரிய படிப்ஸா நீங்க?
உங்களுக்கு ஒரு வேலை.அங்கே வந்து பார்க்கவும்.
//அப்புறம் நான் எழுதின கதை எல்லாம், (அத publish பண்ணிட்டு இருக்கும் போது) – ஒரு பத்து தடவையாவது படிச்சிருவேன்…//
same blood :))
never read harry potter. anyway interesting post. :)
//ஜியா said...
//அப்புறம் நான் எழுதின கதை எல்லாம், (அத publish பண்ணிட்டு இருக்கும் போது) – ஒரு பத்து தடவையாவது படிச்சிருவேன்…//
same blood :))
innoru same blood!
Naanum harry potter, Sujatha fan :)))) Enakku Dobby saagum podhu thaan aluga vanduchu HAARRY POTTER SIR nu sollitu saagum le... sema touching...
PS; En blog pakkam vara maatengala?? unga e-mial kku oru dictionary anuppirukken.. LOL, ROTFL thavira type seiya vendiya vaarthaigalnnu!!
//”இந்தாங்கம்மா, நான் ஒங்களுக்காக செஞ்சு வச்சிருக்கேம்மா” - என்று இதை கையில் கொடுத்தாள் பப்பு!
//
ரசிச்சேன் திவ்யா..பயங்கர படிப்பாளியா இருக்கீங்க அதுவும் numerical methods எழுதனும்னு நீங்க சொன்னதைக்கேட்டு டெரர் ஆகிட்டேன்! :-)
சிவகாமியின் சபதம் படிச்சு எனக்கு ஒரே ஃபீலிங்ஸ்!! பாலங்கள் கேள்விப்பட்டிருக்கேன் - டிரை பண்றேன்! :-) நல்ல பதிவு, திவ்யா!
இதுல நெறய கதை நானும் படிச்சிருக்கேன்.
பாலங்கள், பொன்னியின் செல்வன், ஹாரி பாட்டர் எல்லாம்.
அப்புறம் நான் உங்கள பாலோ பண்றேன். ஈவ் டீசிங் கேஸ் போட மாட்டீங்களே.
நான் இதுக்கு முன்னயே பதிவுலகத்தில் இருந்தாலும் சிலகாலத்துக்கு, முன்பு என்னுடைய ப்ளாக் கூகுலால் விழுங்கப் பட்டதால் எனது பதிவுகள் புதிய முகவரியில் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. இதை எல்லா நண்பர்களுக்கும், அவர்கள் கூடும் இடங்களிலும் சொல்ல்னும்ல. அதான்
http://pappu-prabhu.blogspot.com/
இதுதான் என் ப்ளாக்கோட முகவரி.
hello...rombaa naal ayiduchu..vera ethavathu puchha (new) eluthungapaa..
padithu siripomlaa...
//இத 300 ரூபாய் குடுத்து வாங்கிடமேன்னு அழுதேன் :) //
பழைய புத்தக கடையில வித்திருங்க.. தலைக்கு வந்தது தலைபாகையோடு போகட்டும்.
நா.பார்த்தசாரதியைப் படிப்பதற்கு மட்டும் என்று சொல்லவில்லை, ஒரு எழுத்தாளன் அவன் வாழும் காலம், அவன் நம்புகிறது விஷயங்கள், யத்தார்த்தம் அல்லது அவனிருக்கும் நிலைமை இவைகளை வைத்தே எழுதுகிறான். அந்த வகையில், நா.பாவைப் பற்றிய உங்கள் மதிப்பீடு, கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிற மாதிரியே எனக்குப் படுகிறது.ஹாரி பாட்டர் மாதிரி fancy கதைகள் மட்டுமே ரொம்பப் பிடிக்கிற நிலையில், இது புரிந்து கொள்ளக் கூடியதே.
குறிஞ்சிமலர், பொன் விலங்கு இவை நா.பார்த்தசாரதி என்கிற லட்சியவாதியை அடையாளம் காட்டுபவை. இவை வெளி வந்த நாட்களில், ஒரு ஆவேசமான வாசகர் கூட்டமே இருந்தது என்பது உங்களுக்குத் தெரிய நியாயமே இல்லை.
மு.கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதை எதிர்த்து அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போராட்டமும், அதில் உதயகுமார் என்ற மாணவன் கொல்லப் பட்டதும், அன்றைய மாணவர்கள் மத்தியில் எவ்வளவு கொந்தளிப்பை உருவாக்கியது என்பதும் உங்களுக்குத் தெரியுமோ என்னவோ, சத்திய வெள்ளம் என்று ஒரு தொடர்கதை நா.பா எழுதியது, இந்த சம்பவத்தை மையமாக வைத்து கல்கி வார இதழில் வந்தது.
அது போகட்டும், படிக்க வேண்டும், படித்ததில் பிடித்ததைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று தோன்றியதே, அதுவே ஒரு நல்ல அனுபவம் தான்!
enna panreenga? kanaama poyteenga??
@கிருஷ்ணமூர்த்தி
நா. பா வ பத்தி, நான் தப்பா எதுவும் சொன்ன மாதிரி தெரியலையே!
//என்ன பண்றது, கதைக்காக வேங்கி நாட்டு சரித்தரத்த மாத்த முடியாதே//
இப்படி எழுதியிருக்கறத நீங்க பாக்கலையா? எனக்கு அந்த கதையோட முடிவு பிடிக்கலன்னு மட்டும் தான் இதுக்கு அர்த்தம். அந்த புத்தகத்தை அஞ்சாறு வருஷமா தேடி கண்டுபிடிச்சு வாங்கி படிச்சது எனக்கு மட்டும் தான் தெரியும்...
கிருஷ்ணமூர்த்தி said...
//நா.பாவைப் பற்றிய உங்கள் மதிப்பீடு, கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிற மாதிரியே எனக்குப் படுகிறது.//
நா.பா புத்தகங்கள தேடித் தேடிப் படித்த எனக்கு, அவரை பத்தி மிக சிறுபிள்ளைத்தனமான மதிப்பீடு இருக்க வாய்ப்பில்லைன்னு நினைக்கறேன்.
//ஹாரி பாட்டர் மாதிரி fancy கதைகள் மட்டுமே ரொம்பப் பிடிக்கிற நிலையில், இது புரிந்து கொள்ளக் கூடியதே.//
இதுலிருந்து ஹாரி பாட்டரை நீங்கள் படித்ததில்லையென்றும், அந்த கதை (கதாசிரியர்) பற்றின உங்கள் மதிப்பீடு சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாகவும் எனக்கும் தோன்றுத் தான் செய்கிறது!
நா.பா பற்றி நான் தவறாக எழுதியது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும் உங்கள் கருத்து எனக்கு வருத்ததை அளித்தாலும், அதை நா.பா மீது நீங்கள் கொண்ட பற்றாகத் தான் நான் கருதுகிறேன்...அதே போல என் பதிலும், நா.பா மற்றும் ஹாரிபாட்டர் மீது எனக்கிருக்கும் பற்றின் வெளிப்பாடு தான்!
//Karthik said...
enna panreenga? kanaama poyteenga??
//
கூடிய சீக்கரத்துல வரேன் :)
/இத 300 ரூபாய் குடுத்து வாங்கிடமேன்னு அழுதேன்/
இந்த வார்த்தைகளுக்கு வேறு எப்படி அர்த்தம் கொள்வது?
நா.பாவை தேடிப்படித்தவர்கள், தெரிந்து படித்தவர்கள் இப்படிச் சொல்ல முடியுமா?
சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாகத் தெரியவில்லை என்று சுய மதிப்பீடு செய்துகொண்டிருக்கிரீர்களே, அது உண்மையாக இருக்க வேண்டும் என்றே ஆசைப் படுகிறேன்.
ஹாரி பாட்டர் மாதிரி fantasy கதைகள் என்று மட்டும் தான் சொல்லியிருந்தேன். அந்தக் கதைகளைப் பற்றியோ, கதாசிரியரைப் பற்றியோ வேறு எந்த விமரிசனமும் செய்யவில்லை.
சொல்லாததை சொன்னதாக அர்த்தப் படுத்திக் கொண்டு, "நீயும் கூட அப்படித்தான் ....." என்பது கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது.
வாசிப்பு அனுபவம் என்ற ஒரு நல்ல விஷயத்தைத் தொட்டதற்காக மட்டுமே இங்கே பின்னூட்டமிட வந்தேன், அம்மா!
Post a Comment