Monday, December 22, 2008

ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சனா!

முன்குறிப்பு!!!
“அவளை பார்த்ததும் பேச வார்த்தைகள் தேடி தடுமாறி தவிப்பென்னும் கடலில் சிக்கித் தத்தளித்தான்...” இப்படி பசங்களோட பீலிங்கஸ்ஸ அநியாயத்துக்கு எல்லா ப்ளாகுளையும் போட்டுத் தாக்கி இருக்கோம். நம்ம ஹீரோ ஒரு பொன்னுகிட்ட பேசனும்னு நினைக்கறதும், அதுக்கு நண்பர்கள் அட்வைஸ் குடுக்கறதும், இது போல நிறைய படிச்சாச்சு.
ஆனா, பொண்ணுங்க அதே போல நினைச்சா? அந்த மாதிரி ஒரு கதையையோ, பதிவையோ போடனும்ன்னு ரொம்ப நாளா ஒரு எண்ணம் எனக்குள்ள புகைய ஆரம்பிச்சது, சமீபத்துல குமுதம் சிநேகிதியில ஒரு கட்டுரைய படிச்சதும் அந்த எண்ணம் குபுக்குன்னு பத்தி எறிய ஆரம்பிச்சுடுச்சு :) அதன் தழுவல் + சொந்த கற்பனை தான் இந்த முயற்சி! படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

பகுதி 1

“ஹாய் அர்ச்சனா!” சங்கீதாவும் வளர்மதியும் கோரஸா அர்ச்சனாவுக்கு ஒரு ஹாய் சொன்னாங்க.

“ஹாய்…”

“என்ன கிளாஸ்ல செம தூக்கம் போல? பாக்கவே சரி காமடியா இருந்துச்சு! ஆனா அதெப்படி ஒரு நாள் கூட நீ ஸ்டாஃப்ஸ் கிட்ட மாட்டினதே இல்ல?”

“எப்பயுமே, முதல் பென்ச்சுல உக்காந்து நல்லா நோட்ஸ் எடுக்குற மாதிரி ஆக்ட் குடுக்கனும், எழுதறதுக்கு எதுவும் இல்லன்னா கூட, எதாவது நோட்ல கிறுக்கி வைக்கனும்…இப்படி சில க்ளாஸ்ல சீனப் போட்டா போதும், அதுக்கப்புறம் தூக்கம் வரும் போது தூங்கிக்கலாம்…பசிக்கும் போது சாப்டுக்கலாம்…என்ன வேணா பண்ணலாம்…மாட்டவே மாட்டோம்…”

“ஆ அ அ அ…”
வளர்மதி ஏதோ ஆ அ ன்னு சொல்ல, அத கேட்ட உடனே சங்கீதாவும் சிரிக்க ஆரம்பிச்சுட்டா.

அர்ச்சனா “என்ன ஆ ஆ? யெஸ்.ஜே சூர்யா படம் மாதிரி எதையோ சொல்ற, அதுக்கு அவளும் சிரிக்கறா?”

“ஆ ஆ இல்ல…ஆ அ அ அ…அப்டின்னா, ஆரம்பிச்சிட்டாடா அர்ச்சனா அட்வைஸ அள்ளித்தெளிக்க!”

“போங்க போங்க…ஒரு நாள் அட்வைஸ் வேணும்ன்னு ரெண்டு பேரும் என்கிட்ட வந்து நிக்கத் தான் போறீங்க…அப்ப பாத்துக்கறேன் உங்கள…”


*******

“மினி ப்ராஜட்ட செய், மைக்ரோ ப்ராஜட்ட செய்ன்னு போர் அடிக்கறாங்கப்பா…வாரத்தில ஒரு நாள் ஃபுல்லா இதுக்கே போகுது!”

வளர்மதி இவ்வளவு நீளமா சலிச்சுகிட்டாலும், பிரசன்னாகிட்ட இருந்து தலையை நிமிர்த்தாம, ஏன் வாயக் கூட திறக்காம “ஹ்ம்ம்…” ன்னு மட்டும் தான் பதில் வந்துச்சு. வேற என்ன கேள்வி கேட்டாலும், இதே போல பதில் தான். அதுக்கு மேல வளர்மதியும் அவனோட எதுவும் பேசல. இப்படியே மூணு மணி நேரம் போச்சு.

வளவளன்னு நிறுத்தாம பேசுறது தான் வளவளமதி சாரி, வளர்மதியோட கேரக்டர். ஆனா அவளுக்கு அந்த வருஷம் வாச்ச ப்ராஜட்மேட் பிரசன்னா காசு குடித்தா கூட பேச மாட்டான் போல! அவளும் எத்தன நேரம் தான் இப்படி போர் அடிச்சுகிட்டு ஒரு இன்டராக்ஷனே இல்லாம ப்ராஜக்ட்ட பண்ணி முடிக்கறது? எப்படியும் ஒரு மூணு மாசம் இவனோட தான் ஓட்டியாகனும். பொதுவா இந்த பையன கிளாஸ்ல பாத்ததுல மத்த பசங்களோட எல்லாம் நல்லாத் தான பேசுவான், அப்புறம் ஏன் இப்படி முழுங்கி முழுங்கி பேசுறான் நம்ம கிட்ட மட்டும்னு வளர்மதிக்கு மண்டைய பிச்சுக்காத குறை தான்.

*******

“வாவ்!!! இன்னிக்கு செம ஸ்மார்ட்டா இருக்கானே! என்னமா நடக்கறான்…நடக்கறது கூட செம ஸ்டைலா இருக்கு…ஹாய் ஹான்சம், ஹாய் ஹான்சம் ன்னு எழுந்து பாடலாம் போல இருக்கே…” நல்ல வேளையா சங்கீதா டீ குடிச்சுகிட்டு இருந்ததால, அவ வாயில இருந்து வழிஞ்சத டீன்னு அப்பாவியா நினைச்சுகிட்டா அவ எதிர்ல உக்காந்திருந்த வளர்மதி.

’இந்த பாழாப்போன டீ வேற முடிஞ்சிருச்சு, இவளும் தின்னு முடிச்சிட்டா!!!’
“வளர்…இன்னொரு ஐஸ்க்ரீம் சாப்டறையா? நான் வேணா வாங்கி குடுக்கறேன்…” சங்கீதா கொஞ்சும் குரல்ல கேக்கவும், வளர்மதி, “என்ன விஷயம்? காரணமில்லாம நீ இப்படி வலிய வந்து ஸ்பான்ஸர் பண்ண மாட்டியே??” ன்னு சொல்லிட்டே காண்டீன சுத்தி முத்தி பாக்கவும் தான் தெரிஞ்சுது, அப்ப தான் கான்டீனுக்குள்ள நுழைஞ்ச கார்த்திக் கவுண்டர்ல நின்னு எதையோ வாங்கிட்டு இருந்தது!!!

“ஓ…அதானா விஷயம்…போதும் ஊத்தினது…வா போலாம்…”

“வளர் உனக்கு இரக்கமே இல்லையா?”

“இல்ல…வா முதல்ல”

“ஹ்ம்ம் இன்னும் ஒரே ஒரு செமெஸ்டர் தான் இருக்கு!” ன்னு பெருமூச்சு விட்டுகிட்டே சங்கீதா சொல்லவும், வளர்மதி, “அவனுக்கு ஒரு செமெஸ்டர் தான் இருக்கு, ஆனா நமக்கு இன்னும் ஐஞ்சு செமெஸ்டர் இருக்கு!!! அதனால ஒழுங்கா கிளாஸுக்கு நேரத்தோட போகலாம்…வா…”

கிளாசுக்குள்ள நுழையும் போது தான் வளர்மதி அத கவனிச்சா. பிரசன்னா, ஒரு டெஸ்கு மேல ஏறி உக்காந்துகிட்டு ஏதோ சொல்ல, அவன சுத்தி ஒரு ஏழெட்டு பசங்க நின்னுகிட்டு சிரிச்சிட்டு இருந்தாங்க.

’இவன் எல்லாத்துகிட்டையும் நல்லாத் தான பேசுறான்…அப்புறம் ஏன், நம்மள பாத்தா மட்டும் பேய் முழி முழிக்கறான்?’ ன்னு யோசிச்சுகிட்டே இருந்ததுல பக்கத்துல அர்ச்சனா வந்து உக்காந்தது கூட அவ கவனிக்கல.

அர்ச்சனா, “என்ன வளர்? பயங்கரமான திங்கிங்க போட்டுகிட்டு இருக்க?”

“அதில்லை அர்ச்சனா. இந்த பிரசன்னா இருக்கானே…”

“எந்த பிரசன்னா, ஆர்.பிரசன்னாவா இல்ல கே.பிரசன்னாவா?”

“அதான் என் புது ப்ராஜட்மேட் கே.பிரசன்னா…அவன் எல்லார் கிட்டையும் ரொம்ப நல்லா தான் பேசுறான்…ஆனா என்கிட்ட மட்டும் பேசவே மாடேங்குறான்…இந்த ப்ராஜட் இன்னிக்கு பண்ண ஆரம்பிச்சமே, அவன் வாயவே திறக்கல…முதல் நாளே செம போர்…இப்படியே போச்சுன்னா, இன்னும் மூணு மாசத்துக்கு எப்படி தான் இவனோட எல்லாம் ப்ராஜட் பண்ணப் போறனோ தெரியலையே…முதல்ல நாமளே ப்ராஜட்மேட்ஸ் செலக்ட் செய்ய விடாம சதி பண்ண அந்த பேகிமண்டையன சொல்லனும் ”

“பேகிமண்டையனா? அந்த சாருக்கு பொருத்தமான பேரு தான்…ஆனா வளர், நீ ஒன்னு கவனிச்சிருக்கியா? அந்த பிரசன்னா உன்கிட்ட மட்டும் இல்ல, எந்த பொண்ணு கிட்டையும் பேசி நான் பாத்ததில்லைப்பா…”

“ஆமால்ல? அவனுக்கு என்ன வந்ததாம்? நம்மளோட எல்லாம் பேசினா கிரீடம் விழுந்திருமா என்ன?”

“அவனுக்கு பொண்ணுங்க கூட பேசுறதுக்கே கூச்சமா இருக்கலாம்…”

“கூச்சமா? பேசுறதுல என்ன அர்ச்சனா இருக்கு?”

“அப்படியில்ல வளர்…சிட்டியிலையே பிறந்து வளந்து கோ-யெட் ஸ்கூல படிச்சுட்டு வந்த உனக்கு வேணா இதெல்லாம் பெரிய விஷயமா இல்லாம இருக்காலாம்…ஆனா அவன் சூழ்நிலை என்னவோ? யாருக்கு தெரியும்?”

“சரி அப்ப என்ன தான் பண்றது? இப்படியே என்னால இருக்க முடியாது, பேசாம அந்த பேகி மண்டையன பாத்து வேற யார்கூடையாவது சேத்து விட்ருங்கன்னு கேக்கப் போறேன்…”

“ச்சே…பாவம் வளர்…அது அவன இன்னும் மோசம் தான் ஆக்கும்…”

“ஹ்ம்ம்…சரி…அப்ப நானா பேசிப் பேசி தான் அவன பேச வைக்கனுமா? சரி, எனக்கென்ன பேசவா சொல்லிக் குடுக்கனும்? இன்னிக்கு தான் கொஞ்சம் கடுப்பாகி, நான் அவனோட பேசவே இல்ல…இனிமே, ஓயாம பேசி பேசியே அவனயும் பேச வச்சுடறேன்…”

“ஹய்யோ வளர், நீ இன்னும் வளரவே இல்ல…இன்னிக்கு நீ பண்ணது கூட ஒரு வகையில சரி தான்…நீயா போய் எடுத்தவுடனே எப்பயும் போல லொட லொடன்னு ஆரம்பிச்சீன்னா, இந்த ஜென்மத்துல அவன் உன்கிட்ட பேச மாட்டான்…”

“அப்புறம்?”

“சொல்றேன் கேளு…” ன்னு அர்ச்சனா ஆரம்பிக்கவும், சங்கீதா, “ஆ அ அ அ…”
ன்னு சொல்லி சிரிக்கறதுக்குள்ள பேகிமண்டையன் எனப்படும் கம்யூனிகேஷன் இஞ்சினியரிங் எடுத்து இம்சிக்கும் சார் வந்துட்டாரு.

“சரி சரி, கிளாஸ் முடியட்டும் சொல்றேன்…” ன்னு அர்ச்சனாவும் தீவிரமா நோட்ல எதையோ எழுத ஆரம்பிச்சிட்டா.

[அ அ அ அ]
அர்ச்சனா அள்ளித்தெளிக்கும் அட்வைஸ் அடுத்த பகுதியில்…

29 comments:

Nimal said...

//அதன் தழுவல் + சொந்த கற்பனை தான் இந்த முயற்சி!//

'சொந்த கதை' என்னு சொல்ல வந்தது தப்பா 'சொந்த கற்பனை' என்னு டைப் ஆயிடுச்சு போல... :)

Nimal said...

நீங்க / அர்ச்சனா அள்ளித்தெளிக்கும் அட்வைஸ் நல்லா இருக்கு..

MSK / Saravana said...

me the second.. :))

Divyapriya said...

நிமல்-NiMaL said...

//'சொந்த கதை' என்னு சொல்ல வந்தது தப்பா 'சொந்த கற்பனை' என்னு டைப் ஆயிடுச்சு போல... :)//

எங்களுக்கு அந்த அளவுக்கெல்லாம் மூளை கிடையாதுங்க :))

MSK / Saravana said...

//அவனுக்கு பொண்ணுங்க கூட பேசுறதுக்கே கூச்சமா இருக்கலாம்…//

என்ன மாதிரி போல.. :)

பிரசன்னா என்ற பெயருக்கு பதில், என் பெயரையே வச்சி இருக்கலாம்.. பொருத்தமா இருந்திருக்கும்..

சரி விடுங்க.. என் பெயர்ல இன்னொரு கதை எழுதி உங்க எல்லாரையும் பழி வாங்கறேன்.. :)

MSK / Saravana said...

அட்டகாசமா எழுதறீங்க திவ்யப்ரியா.. செம கலக்கல் டயலாக்ஸ் எல்லாம்..

Divya said...

ஹாய் திவ்யப்ரியா.......போஸ்ட் தூள் கிளப்புது:))

Divya said...

\\“அவனுக்கு பொண்ணுங்க கூட பேசுறதுக்கே கூச்சமா இருக்கலாம்…”

“கூச்சமா? பேசுறதுல என்ன அர்ச்சனா இருக்கு?”\\

இந்த டாபிக்ல நான் ஒரு போஸ்ட் என் 'சும்மா சும்மா' ப்ளாக் ல போட்டிருக்கிறேன்.....அந்த ப்ளாக் க்கு invite பண்றேன் , படிச்சுட்டு சொல்லுங்க திவ்யப்ரியா:))

Divya said...

\\அர்ச்சனா அள்ளித்தெளிக்கும் அட்வைஸ் அடுத்த பகுதியில்…\\


திவ்யப்ரியாவின்.......ஊப்ஸ் ஸாரி, அர்ச்சனாவின் அட்வைஸ்காக வெயிட்டீங்க்:)))

புதியவன் said...

//“அப்படியில்ல வளர்…சிட்டியிலையே பிறந்து வளந்து கோ-யெட் ஸ்கூல படிச்சுட்டு வந்த உனக்கு வேணா இதெல்லாம் பெரிய விஷயமா இல்லாம இருக்காலாம்…ஆனா அவன் சூழ்நிலை என்னவோ? யாருக்கு தெரியும்?”//

யதார்த்தமான உண்மை...

//[அ அ அ அ]
அர்ச்சனா அள்ளித்தெளிக்கும் அட்வைஸ் அடுத்த பகுதியில்…//

சீக்கிரமா அட்வைஸ ஆரம்பிச்சிடுங்க...

தமிழ் said...

கலக்கல்

Lancelot said...

super appu...Archana mathiri enkittayum nerraya advise irukku venungravanga contact seyya vendiyaa tholaipesi en 111...

Vijay said...

ஸ்வாரஸ்யம் :-)

தேங்காய் மண்டையன் மாங்காய் மண்டையன் எல்லாம் கேள்விப் பட்டிருக்கேன். பேகி மண்டையன் புதுசா இருக்கே.

எனக்கென்னவோ, இதெல்லாம் நீங்க காலேஜ் வாழ்க்கையில் அடித்த லூட்டியை பெயர் மாற்றி எழுதறீங்களோன்னு ஒரு டவுட்.

Vijay said...

\\ Divya said...
\\“அவனுக்கு பொண்ணுங்க கூட பேசுறதுக்கே கூச்சமா இருக்கலாம்…”

“கூச்சமா? பேசுறதுல என்ன அர்ச்சனா இருக்கு?”\\

இந்த டாபிக்ல நான் ஒரு போஸ்ட் என் 'சும்மா சும்மா' ப்ளாக் ல போட்டிருக்கிறேன்.....அந்த ப்ளாக் க்கு invite பண்றேன் , படிச்சுட்டு சொல்லுங்க திவ்யப்ரியா:))\\

திவ்யா,
இதெல்லாம் ரொம்ப ஓவர். எங்களுக்கெல்லாம் அந்த இன்விடேஷன் கிடையாதா??? :-)

/விஜய்

Anonymous said...

//அதன் தழுவல் //
thazhuavla..neenga solrathu nazhuval mathiri iruku :D

//[அ அ அ அ]
அர்ச்சனா அள்ளித்தெளிக்கும் அட்வைஸ் அடுத்த பகுதியில்…//

ka.ka.ka.po
kathaiyum karuthum katchithamai pogirathu nu sonen :D

~gils

Smriti said...

Good going Div...
கொஞ்சம் பெரிய எழுத்துக்களாக இனிமேல் இருந்தால் கண்கள் வலிக்காமல் சுவாரசியத்தோடு சுகமாகப் படிக்க உதவியாக இருக்கும் தோழி !
Kindly Consider! :D

gayathri said...

அர்ச்சனா அள்ளித்தெளிக்கும் அட்வைஸ் அடுத்த பகுதியில்…//

சீக்கிரமா அட்வைஸ ஆரம்பிச்சிடுங்க

அர்ச்சனா அள்ளித்தெளிக்கும் அட்வைஸ் நல்லா இருக்கு

gayathri said...

Saravana Kumar MSK said...
//அவனுக்கு பொண்ணுங்க கூட பேசுறதுக்கே கூச்சமா இருக்கலாம்…//

என்ன மாதிரி போல.. :)

ஆமா ஆமா உங்கள மாதிரி தான்னு நானும் நினைக்கிறேன்

ஜியா said...

sema flow... chanceless... me wait cheisthunaanu next partuge....

ஜியா said...

//“அவனுக்கு பொண்ணுங்க கூட பேசுறதுக்கே கூச்சமா இருக்கலாம்…”
//

payapulla enna maathiriye iruppaan polaiye... ;))

Shiva.G said...

me the 21st :)
nallaarkke kadhai.. edho kumudham aa-vi la padikkara maariye irukku .. good going !!
aaaanaaa..
wats with this label?? "ennanne therilla" tht too with :(
??
lighttta doubt varudheee ;)

Raghav said...

உள்ளேன் ஐயா மட்டும் இப்போதைக்கு சொல்லிக்கிறேன்.

Anonymous said...

அட...அட்டகாசமா ஆரம்பிச்சாச்சு..ஆரவாரத்தை.. அசத்தறேள் அம்மணி..

இதுவரை 1 அட்வைஸ் வழங்கியிருக்காக அர்ச்சனா.. மிச்சம் 999 அட்வைஸும் சீக்கிரமா குடுங்கோ.. பாவம் பொண்ணுங்கல்லாம் இப்படி அட்வைஸ் தர ஆள் இல்லாம கஷ்டப்படுறாங்க பாருங்க.

Karthik said...

Divyapriya.. semaya eludureenga!!!

// நல்ல வேளையா சங்கீதா டீ குடிச்சுகிட்டு இருந்ததால, அவ வாயில இருந்து வழிஞ்சத டீன்னு அப்பாவியா நினைச்சுகிட்டா அவ எதிர்ல உக்காந்திருந்த வளர்மதி.//

ta.vi.si (ROTFL)

//அர்ச்சனா அள்ளித்தெளிக்கும் அட்வைஸ் அடுத்த பகுதியில்…//

waiting waiting!!!

Karthik said...

chk ma blog... Santa has gt smething for u!! Here is Santa's address...

http://nxgmobz.blogspot.com/2008/12/jingle-bells-jingle-bells-awards-all.html

தாரணி பிரியா said...

கலக்கல் திவ்யப்ரியா

priyamudanprabu said...

////
எப்பயுமே, முதல் பென்ச்சுல உக்காந்து நல்லா நோட்ஸ் எடுக்குற மாதிரி ஆக்ட் குடுக்கனும், எழுதறதுக்கு எதுவும் இல்லன்னா கூட, எதாவது நோட்ல கிறுக்கி வைக்கனும்…இப்படி சில க்ளாஸ்ல சீனப் போட்டா போதும், அதுக்கப்புறம் தூக்கம் வரும் போது தூங்கிக்கலாம்…பசிக்கும் போது சாப்டுக்கலாம்…என்ன வேணா பண்ணலாம்…மாட்டவே மாட்டோம்…”
////


நல்ல யோசனை
உருப்புட்டடலாம்

சரவணா JK said...

கலக்கறீங்க திவ்யப்ரியா... அர்ச்சனா கேரக்டர் சூப்பர்...

சரவணா JK said...

//“கூச்சமா? பேசுறதுல என்ன அர்ச்சனா இருக்கு?”//

பிரசன்னா பரவாயில்ல... எனக்கு தெரிஞ்ச நெறைய பசங்க ஓவர் கூச்ச சுபாவம்... பசங்க கிட்ட மட்டும் பேச மாட்டாங்க... எப்பவும் பொண்ணுங்க கூட தான் பேசுவாங்க... ரொம்ப கூச்ச சுபாவம்