பகுதி 1
முன்குறிப்பு:
இந்த கதையில (?!?!?) இடாலிக்ஸ், நீல வண்ணத்துல இருக்கறது எல்லாம், குமுதம் சிநேகிதில இருந்த அட்வைஸ், என்னோட வார்த்தைகளில்…
----
“சொல்லு அர்ச்சனா, சொல்லு…” இது தான் அர்ச்சனாவுக்கு ரொம்ப பிடிச்ச வார்த்தை! வளர்மதி இப்படி கேக்கவும் அர்ச்சனா முகத்துல ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்.
“ஹுக்கூம்…வேற வேலை இல்ல இவளுகளுக்கு…” இப்படி பழிச்சிட்டு முகத்த திருப்பி வச்சுகிட்டது வேற யாரும் இல்ல, சங்கீதா தான்!
“இத பாரு வளர், இதெல்லாம் ஒரு ஜீன்ஸ் ப்ராபளம். இப்ப நாமெல்லாம் ஒருதங்கள பாத்தோம்னா, அவங்க மூக்கு நீளமா, சப்பையா…அவங்க கண்ணு யானைக்கண்ணா, இல்ல பூனைக்கண்ணா… அவங்க என்ன ட்ரெஸ் போட்ருந்தாங்க, ஏன் அவங்க என்ன தோடு போட்ருந்தாங்கங்கற வரைக்கு ஒரு நிமிஷத்துலையே பாத்துருவோம். மனுஷ முகங்கள, முகபாவங்கள புரிஞ்சிக்கற தன்மை பிறப்பிலேயே பொண்ணுகளுக்கு அதிகம்…ஆனா நம்ம பசங்களுக்கு பொதுவாவே அந்த தன்மை குறைவு!”
“சரி அர்ச்சனா, அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”
“இரு, இரு மேட்டருக்கு வரேன்…இந்த மாதிரி இருக்கறதால, பொதுவாவே ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளக் காட்டிலும் ’ஸோஷியல் ஷைனஸ்’ என்கிற சமூகக் கூச்சம் அதிகம்…ஆனா அதெல்லாம் வளர வளர சரியாயிடும், ஏன்னா நம்மள விட பசங்க அதிக இடங்களுக்கு போறாங்க, பரிட்சையமில்லாத பல பேரோட பேசி பழகறாங்க…அதனால் பொதுவாவே வளந்தப்புறம் அவங்க பொண்ணுகள விட அதிக சோஷியல் டைப்பா மாறிடறாங்க…ஆனா அதெல்லாம் அவங்க வட்டத்துக்குள்ள மட்டும் தான். “
“எத்தனையோ வீட்ல அன்னிய மனுஷங்க விருந்தாளியா வீட்டுக்கு வந்த உடனே உள்ள ஓடி ஒளியற ஸ்கூல், காலேஜ் பசங்கள நம்மளே பாத்திருக்கோம்….ஆனா பொண்ணுக அந்த மாதிரி ஓட மாட்டாங்க, யாரா இருந்தாலும் வாங்க, உக்காருங்கன்னு ஆரம்பிச்சு நல்லா வள வளன்னு பேச ஆரம்பிச்சுடுவாங்க!”
“ஆமா, நான் கூட அந்த மாதிரி பசங்கள பாத்திருக்கேன்…ஏன் சங்கீதா தம்பியே முன்னாடி எல்லாம் நான் அவங்க வீட்டுக்கு போனா ஒரு ரூமுக்குள்ள போய்ட்டு வெளிய வரவே மாட்டான்…ஆனா இப்பெல்லாம் தலைக்கு மேல ஏறி உக்காறாத குறை தான்…”
“கரெக்டு! ஒரு வயசு வந்தா, இல்ல நல்லா பழகிட்டா அவங்களுக்கு அந்த கூச்சம் எல்லாம் போய்டும், ஆனா அது வரைகும் மூணு வகையான பசங்கள நம்ம பாக்கலாம். பொன்னுகளோட பேசுறத ஒரு விஷயமாவே நினைக்காம எல்லார்கிட்டையும் சகஜமா பழகறவங்க ஒரு வகை… பொண்ணுகளோட பேசனும்னு ஆசை இருக்கும்/இல்ல இருக்காது, ஆனா பொண்ணுகளோட பேசுறதுக்கே ஒரு பயம், கூச்சம், இது ரெண்டாவது வகை…மூனாவது வகை நம்ம மெளனம் பேசியதே சூர்யா மாதிரி, பொண்ணுகளோட பேசுறதே ஒரு தப்பு, தேவையில்லாத விஷயம்ன்னு சொல்லிட்டு திரியறவங்க!”
“ஓஹ்ஹ்…”
“இதுல முதல் வகை, அவங்க நம்ம டிஸ்கஷன்லயே இல்லை. ரெண்டாவது வகை, எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இந்த வகை தான் அந்த பிரசன்னா…”
“ஏன் அவன் மூனாவது வகையா இருக்கக் கூடாது?” அதுவரைக்கு கம்முன்னு கேட்டுகிட்டு இருந்த சங்கீதா தான் இப்படி கேட்டது.
“எல்லாம் ஒரு கெஸ் தான்…அவன பாத்தா அப்படி தெரியல…அது மட்டுமில்லாம கெத்து காட்றதுக்கும் ஒரு மொகறக்கட்டை வேணும், அதெல்லாம் அந்த கேனப் பிரசன்னாவுக்கு கிடையாது…இந்த மூனாவது வகை பசங்க இருக்காங்களே, அவங்களால நமக்கு எந்த பிரச்சனையும் இல்ல, ஆனா பசங்க தான் அவங்க கிட்ட ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கனும்…”
“பசங்களா? என்ன அர்ச்சனா சொல்ற?”
“ஆமா, அவங்க பொண்ணுக கிட்ட பேசாம இருக்கறது மட்டுமில்லாம, அவங்ககூட சுத்தற பசங்களோட கடலை ஆசையக் கூட தீய வச்சுருவாங்க…ஆனா அவங்க மட்டும் யாருக்கும் தெரியாம, மெளனம் பேசியதே சூர்யா மாதிரி திரிஷா, திரிஷா போனா லைலான்னு யாரையாவது ஒரு சூப்பர் ஃபிகரா பாத்து கரெக்ட் பண்ணி நீட்டா செட்டில் ஆய்டுவாங்க!!!”
“சரி, அவங்கள பத்தி நமக்கெதுக்கு? நம்ம சப்ஜெக்ட் இப்ப ரெண்டாவது வகை தான? அதப் பத்தி சொல்லு…”
“முதல்ல நம்ம சப்ஜெக்ட்டுகளுக்கு இருக்கற பிரச்சனை என்னன்னு பாப்போம்…பொதுவாவே சின்ன வயசில் இருந்து அதிக பெண்களோடு பேசிப் பழகாத நம்ம சப்ஜெக்ட்டுகளுக்கு, டீன் ஏஜ்ஜுல இது ஒரு பெரிய பிரச்சனையா இருக்கும். ஒரு பொண்ண பாத்தா, அவளோட சகஜமா பேச முடியாம, வார்த்தை தடுமாறி, அவனே என்ன பேசறதுன்னு முழிச்சுகிட்டு இருக்கும் போது, உன்னை மாதிரி பொண்ணுக போய், மூச்சு விடாம, மூனு நிமுசத்துல மூன்னூரு வார்த்தை பேசினா, அவ்ளோ தான்…உங்க பேச்சு வெள்ளத்திலையே அவன் திக்கு முக்காடி போய்டுவான்…”
“சரி, அதான் அப்பயே சொன்னியே…ஏ ஒன் பெளடர் போட்டு விளக்கறத விட்டுட்டு மேட்டருக்கு வா அர்ச்சனா!”
“இரு, இரு…ஸோ, அந்த மாதிரி பசங்கள பாக்கும் போது முக்கியமா ஒரு விஷயம் பண்ணனும். அதாவது அவங்க வெட்க உணர்வை மதிக்கனும்! அத நாம கண்டுக்காத மாதிரி இருந்து அவங்களுக்கு தைரியம் குடுக்கனும்…ஏன்னா, நம்ம ஊர்ல வேற, ’ச்சீ, ச்சீ ஒரு பையன் போய் வெட்கப்படறதா? பசங்கன்னா அப்படி இருக்கனும், இப்படி இருக்கனும்’ ன்னு தான் பல சட்டம் இருக்கே…அதனால் நம்ம சப்ஜெக்ட்டுகள் எல்லாம் பொதுவா, ’ஹய்யோ நம்ம வெட்கப்படறத இவ வேற கண்டுபிடிச்சுட்டா, கேவலமா நினைப்பாளோ?’ இப்படி யோசிக்க ஆரம்பிச்சுடுவாங்க…”
“ஹ்ம்ம்…அப்டியே கண்டுக்காம விட்றனும்…”
“ஆமா…அது மட்டுமில்ல, நம்மளும் ரொம்ப கூச்ச சுபாவம் மாதிரி காட்டிக்கனும்…அவங்கள நேருக்கு நேர் பாத்து பேசக் கூடாது, சத்தமா பேசாம, நம்மகே கேக்காத மாதிரி தான் பேச ஆரம்பிக்கனும்…அப்ப நம்ம தலைவர் என்ன நினைப்பாருன்னா, “ஹை! இவ நம்மள விட ஷை டைப்பா இருக்காளே!! இவளுக்கு நம்மளே தேவலாம்…” இப்படி அவங்க கான்ஃபிடன்ஸ பூஸ்ட் குடுத்து வளத்தோம்ன்னா, தலைவரே தைரியமா வந்து கான்வெர்ஸேஷன ஆரம்பிப்பாரு!!!”
“ஒஹ்ஹ்…அப்ப நானும் இனிமே ரொம்ப கூச்ச சுபாவம் மாதிரி போஸ் குடுக்கனுமா? ஓகே…”
சங்கீதா, “ஹலோ! எங்க, அந்த கூச்ச சுபாவம் மூஞ்சிய கொஞ்சம் இப்படி காட்டு! அந்த பிரசன்னாவுக்கு கண்ணு இருக்கில்ல? இத்தன நாளு இவ அடிச்ச லூட்டிய பாக்கமையா இருந்திருப்பான்? இவ ஒரு நிமிசத்துல ஒன்றரை கிலோ வார்த்தைய உதிர்ப்பான்னு தான் இந்த ஊருக்கே தெரியுமே!”
அர்ச்சனா, “இல்ல சங்கீதா...போன செமெஸ்ட்டர்ல இருந்து தான நாம எல்லாரும் டிபார்ட்மெண்ட் படி ஒரே கிளாஸ்ல இருக்கோம்? எப்ப பாரும், நீயும் வளர்மதியும், ஒட்டி வச்ச மாதிரி ஒன்னாவே சுத்திட்டு இருக்கறதுல, நீங்க எந்த பையன் கிட்டையாவது ரெண்டு நிமிஷத்துக்கு மேல பேசி இருக்கீங்களா? அப்படியே வளர்மதி நல்லா பேசுற பசங்கன்னு நம்ம கிளாஸ்ல பாத்தா, எல்லாரும் அவ ஸ்கூல் மேட்ஸ்…சோ, அவளுக்கு புதுசா பாக்குற பசங்களோட பேசுறதுக்கு கூச்ச சுபாவம்ன்னு கூட அவன் நினைச்சுகலாம்ல?”
வளர்மதி, “வெல் செட் அர்ச்சனா, நீ கன்டின்யு பண்ணுமா…”
“அவ்ளோ தான் வளர்மதி! அவனா கூச்சம் போய் உன்கிட்ட பேசுற வரைக்கும் அவனோட நீயும் அவ்வளவா பேசாத, நேருக்கு நேர் பாக்காத, தலைய திருப்பி வச்சுக்கோ, இல்ல குனிஞ்சு வச்சுக்கோ…அப்புறம் பாரு, அவனாவே ஒரு நாள் பேச ஆரம்பிப்பான்…”
சங்கீதா, “சரி, அப்படியே அவன் பேச ஆரம்பிச்சுட்டான்னு வச்சுப்போம்…இவளால எத்தன நாளைக்கு ஊமை வேஷம் போட முடியும்? இவ வளர்மதி இல்ல, வளவளமதின்னு தெரிஞ்சப்புறம் ஆப்போஸிட் சைட்ல எகிறி குதிச்சு ஓடிட்டான்னா?”
“அங்க தான் நீ தப்பு பண்ற…பசங்க யாரையாவது ஃப்ரெண்டா ஏத்துக்கிட்டா அப்புறம் என்ன நடந்தாலும் அவங்கள விட மாட்டாங்க…அது மட்டுமில்லாம, நிறைய பேத்துக்கு துருதுருன்னு இருக்கற பொண்ணுகள ரொம்பவும் பிடிக்குமே…”
ரெண்டு வாரங்கள் கழித்து…
“ஹேய் வளர்…நாளைக்கு வரும் போது அந்த பிரண்ட் அவுட் மறந்துடாத…” இப்படி கத்தினது வேற யாரும் இல்ல, சாட்சாச் நம்ம சப்ஜெக்ட் கே.பிரசன்னாவே தான்!
சங்கீதா, “என்னது? வளர் ஆ?? அடிப்பாவி? ஜஸ்ட் நாலு லேப் ஸெஷன்ஸ்ல எப்படி இதெல்லெல்லாம்?”
“அ அ அ அ தான்…”
“என்னது இது புதுசா இருக்கு?”
“அர்ச்சனா அள்ளித்தெளித்த அற்புத அட்வைஸ்…சரி வா, வீட்டுக்கு கிளம்புவோம்…”
பஸ் ஸ்டாப்ல மீண்டும் அர்ச்சனா…
வளர்மதி “ஹேய் அர்ச்சனா! நீ சொன்ன மாதிரியே, ரெண்டு வாரத்துல அவனா கொஞ்சம் கொஞ்சம் பேச ஆரம்பிச்சு, இப்ப ஒரளவுக்கு நல்லாவே பேசுறான்…”
அர்ச்சனாவும், வளர்மதியும் தங்களோட வீரப் பிராதபங்கள பத்தி ஒயாம பேசிட்டு இருக்க, சங்கீதா மட்டும் முகத்த அந்த பக்கம் திருப்பிகிட்டா.
அதை கவனிச்ச அர்ச்சனா, “ஏய் சங்கீதா! ஏன் முகத்த திருப்பிகிட்ட? இப்பயும் உனக்கு இந்த டிஸ்கஷன் பிடிக்கலையா?”
“அதில்லப்பா…அந்த பக்கம் ஒரு பொறுக்கி, ரொம்ப நேரமா மொறைச்சு மொறைச்சு பாத்துகிட்டே இருக்கான்….”
“ஹே…ஹே திரும்பி பாக்காத, லூசு…”
“எங்க அவன்?”
“திரும்பி பாக்காதன்னு சொல்றேன்ல?”
“இத பாரு சங்கீதா…ஒருத்தன் உன் விருப்பதுக்கு விரோதமா உன்ன பாத்தா, முகத்த திருப்பி எந்த பிரயோஜனமும் இல்ல…நீயும் அவன மொறைச்சு பாக்கனும்…”
“என்னது???”
“ஆமா! நீயும் அவன நேருக்கு நேர் பாக்கனும்! நீ பாக்குற பார்வையிலையே ’போதும்டா, அடங்கு! தோலை உரிச்சுடுவேன்…’ ன்னு அவனுக்கு புரியனும்…”
“ஹ்ம்ம்…இது கூட சென்ஸிபிலாத் தான் இருக்கு…ஹே அர்ச்சனா! நிஜமாவே உன் அட்வைஸ் எல்லாம் அற்புதம் தான்…”
வளர்மதி, “ஹய்யோ…சங்கீதா, நீயா இப்படி சொல்ற? இன்னிக்கு மழை தான் போ…”
உடனே சங்கீதா, “அர்ச்சனா…அப்படியே எனக்கும் ஒரு அட்வைஸ் வேணும்ப்பா…”
“ஹ்ம்ம் சொல்லு சங்கீதா…”
“வந்து….வந்து…இந்த கார்த்திக் இருக்கானே, மெக்கானிகல் டிபார்ட்மெண்ட, பைனல் இயர்…”
“யாரு அவன்? எனக்குத் தெரியாதே…அவனுக்கு என்ன இப்ப?”
“வந்து…நான் ரொம்ப நாளா அவன சைட் அடிச்சிகிட்டு இருக்கேன்…”
“அதுக்கு???”
“நான் அவனோட ஒரு ரெண்டு வார்த்தை பேசிப் பழகனும், அவ்ளோ தான்…அதுக்கு மேல எதுவும் வேண்டாம்…அதுக்கு எதாவது ஐடியா குடு அர்ச்சனா…ப்ப்ளீஸ்ஸ்ஸ்…”
வளர்மதி, “இது ஓவரா இருக்கு சங்கீதா…வேணாம்….வீண் வம்பு….”
“ஹேய்…நான் என்ன சொல்லிட்டேன்? அவனோட சும்மா பேசிப் பழகனும்னு தான சொல்றேன்? நானும் எவ்ளோ நாள் தான் அவன தூரத்தில இருந்தே பாக்குறது? கொஞ்சம் கிட்டக்க இருந்து பாக்கனும், பேசனும்ன்னு ஆசையா இருக்குப்பா…அர்ச்சனா…ஹெல்ப் நோ!”
அர்ச்சனா, “சரி….ஓகே…ஓகே…அட்வைஸ பொறுத்த வரைக்கு நான் எப்பயுமே பாரி வள்ளல் தான்…யூ டோன்ட் வொரி…இப்ப அந்த பையன், அவன் பேரு என்ன சொன்ன? ஹாங்…கார்த்தி, அவன் எந்த கேட்டகரின்னு முதல்ல நம்ம கண்டுபிடிக்கனும், இப்ப இந்த சப்ஜெக்ட்டுக்கு நம்ம சில க்ரண்டு வொர்க்ஸ் பண்ணனும்…” ஏதோ ஒரு பெரிய பிராஜக்ட்டுக்கு வேலை பண்ணனும்ங்கற மாதிரி தீவிரமா அர்ச்சனா சொல்லவும்,
சங்கீதா, “அர்ச்சுமா…டோன்ட் சே சப்ஜெக்ட்…அழகா கார்த்தின்னு சொல்லு…”
இது தான் சாக்குன்னு வளர்மதியும், “ஹய்யே வழியுது…தொடச்சுக்கோ…” ன்னு அவள ஓட்ட ஆரம்பிச்சுட்டா.
“சரி சரி…ஓகே..கார்த்தி…இதுல முதல் ஸ்டெப் என்னன்னா, அவன் எந்த கேட்டகரி பையன்னு கண்டு பிடிக்கறது…”
சங்கீதா, “அவன் கண்டிப்பா முதல், இல்ல மூனாவது கேட்டகரியாத் தான் இருப்பான்…”
வளர்மதி, “நீ ரொம்ப பேசுற…கொஞ்சம் அடங்கு…”
அர்ச்சனா, “தாட் ப்ராஸஸ நடுவுல பூந்து டிஸ்டர்ப் பண்ணாதீங்கப்பா…முழுசா கேளுங்க…
முதல் ஸ்டெப் முடிஞ்சவுடனே, அடுத்த கட்டம்…அது தான் கொஞ்சம் ட்ரிக்கியானது…அவனோ ஃபைனல் இயர்…அதுவும் நமக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத மெக் டிப்பார்ட்மென்ட்…அப்படி இருக்கும் போது, அவனப் பத்தி தெரிஞ்சாலும், எப்படி போய் அவன் கிட்ட பேசறது?”
சங்கீதா, “என்னது? ரெண்டாவது ஸ்டெப்புலையே பேசப் போறோமா?”
“போறோம் இல்ல…பேசப் போற…அதுக்கு தான் சொன்னேன்…முதல் ஸ்டெப், அதாவது க்ரண்டு வொர்க்…அது ரொம்ப ரொம்ப முக்கியமானது…” அர்ச்சனா டி.வி ஆங்கர் மாதிரி எஃபெக்ட் குடுக்கவும், சங்கீதா, “அதுக்கு என்ன ஐடியா, சொல்லு அர்ச்சனா…”
“அது மட்டும் தான் எப்படின்னு எனக்கு தோனவே மாட்டேங்குது…”
“தூஊஊ…இதுக்கு தான் இந்த பில்ட்டப்பா?”
“ஜாரி…கொஞ்சம் ஓவர் பில்டப்பு ஆயிடுச்சு…இருந்தாலும் நான் கண்டு பிடிக்கறேன்…எடுத்த காரியத்த ஜெயமா முடிப்பேன்…” அர்ச்சனா சூழுரைக்கவும், பஸ் வரவும் சரியா இருந்துச்சு.
“எனக்கு பஸ் வந்துடுச்சு…இத பத்தி நாளைக்கு பேசுவோம்..பை பை…”
[அ அ அ அ]
அர்ச்சனா அள்ளித்தெளிக்கும் அட்வைஸ் அடுத்த பகுதியில்…
Friday, December 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
50 comments:
me the first
commets apparum :)
evening kandippa :)
saaami...embutu advice..!!! font kuttia poatu karutha perusa solreenga DP ku one big O :D pasanga psychologya "putuu putuu" vachirukeengalay unga native enna keralava :D :D
சூப்பரா இருக்கு....
//பொன்னுகளோட பேசுறத ஒரு விஷயமாவே நினைக்காம எல்லார்கிட்டையும் சகஜமா பழகறவங்க ஒரு வகை… பொண்ணுகளோட பேசனும்னு ஆசை இருக்கும்/இல்ல இருக்காது, ஆனா பொண்ணுகளோட பேசுறதுக்கே ஒரு பயம், கூச்சம், இது ரெண்டாவது வகை…மூனாவது வகை நம்ம மெளனம் பேசியதே சூர்யா மாதிரி, பொண்ணுகளோட பேசுறதே ஒரு தப்பு, தேவையில்லாத விஷயம்ன்னு சொல்லிட்டு திரியறவங்க!”//
இது நல்லா இருக்கே.... :)
மீ த மூணாவதா??
ஆத்தி, கலக்குறீகளே... செம ஜாலியா இருந்துச்சு..
ஆமா.. லாங் வீக் எண்ட் ஊருக்கு போயிருப்பீங்க.. பஸ்ஸ்டாண்ட்ல என்ன நடந்துச்சுன்னு ஏதாவது எழுதியிருப்பீங்கன்ன்னு நினைச்சேன்..
ஆயிரம் அருவைஸ்.. ஜாரி ஜாரி.. அட்வைஸ் வழங்கிய அர்ச்சனாவ எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு...
// தாரணி பிரியா said...
me the first //
யக்கோவ்.. அத இங்க மட்டும் சொன்னா பத்தாது.. உங்க ஆபீஸுக்கும் சொல்லணும்.. :)
//“ஹுக்கூம்…வேற வேலை இல்ல இவளுகளுக்கு…” இப்படி பழிச்சிட்டு முகத்த திருப்பி வச்சுகிட்டது வேற யாரும் இல்ல, சங்கீதா தான்!//
ஹா.. ஹா.. கதை சொல்வதில் நீங்க மிகத் திறமைசாலி.
//மனுஷ முகங்கள, முகபாவங்கள புரிஞ்சிக்கற தன்மை பிறப்பிலேயே பொண்ணுகளுக்கு அதிகம்…ஆனா நம்ம பசங்களுக்கு பொதுவாவே அந்த தன்மை குறைவு!”//
இது உண்மையா...?
முக்கியமானத மறந்துட்டேனே..
ஒரு வருடம் நிறைவு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
உங்களுடைய மார்கழி திங்கள் பதிவுகளை பார்த்து தான் உங்கள் பக்கமே வந்தேன்.. இப்போ ஒரு வருடம் ஆயிருச்சு..
பதிவுலகில் மலரும் நினைவுகளாக உள்ளவைகளை பதியலாமே..
அருமையான அட்வைஸ்...ஆனா எல்லாம்
பொண்ணுங்களுக்கா இருக்கே...ஆண்களுக்கும்
அப்படியே சொல்லிக் கொடுத்தா நல்லா
இருக்குமே...
//புதியவன் said...
//மனுஷ முகங்கள, முகபாவங்கள புரிஞ்சிக்கற தன்மை பிறப்பிலேயே பொண்ணுகளுக்கு அதிகம்…ஆனா நம்ம பசங்களுக்கு பொதுவாவே அந்த தன்மை குறைவு!”//
இது உண்மையா...//
ஆஹா.. யாராவது வந்து கும்மிய ஆரம்பிக்கணும்னு வேண்டிகிட்டு இருந்தேன்.. உடனே நிறைவேறி விட்டது. :)
தமிழ் சினிமாவின் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு தாங்கள் வரவு புரிந்து, சிலவிருதுகளை வழங்கும் படி கேட்டு கொள்கிறேன்... இதோ உங்களுக்கானஅழைப்பிதழ்..
http://lollum-nakkalum.blogspot.com/2008/12/blog-post_26.html
மறக்காம வாங்க... அழைப்பிதழில் உங்கள் பெயர் போட்டாச்சு... அப்றோம்நிலவரம் கலவரம் ஆயிடும்... சொல்லி புத்தேன்....
PS: Post perusssssssu!! Viral reagigal pathiram!!! Padhikum pothu glows pothu padikavum!!!!
//மூனாவது வகை நம்ம மெளனம் பேசியதே சூர்யா மாதிரி, பொண்ணுகளோட பேசுறதே ஒரு தப்பு, தேவையில்லாத விஷயம்ன்னு சொல்லிட்டு திரியறவங்க!”
//
என்னாத்தை பேசி
என்னாத்தை பழகின்னு
ஒரு மூன் கேரக்டரா கூட இருக்கலாம்ல :)))))
//கெத்து காட்றதுக்கும் ஒரு மொகறக்கட்டை வேணும், அதெல்லாம் அந்த கேனப் பிரசன்னாவுக்கு கிடையாது///
ஆஹா!!!
செம டெரரா இருக்கே :)
//மெளனம் பேசியதே சூர்யா மாதிரி திரிஷா, திரிஷா போனா லைலான்னு யாரையாவது ஒரு சூப்பர் ஃபிகரா பாத்து கரெக்ட் பண்ணி நீட்டா செட்டில் ஆய்டுவாங்க!!!”
“சரி, அவங்கள பத்தி நமக்கெதுக்கு? நம்ம சப்ஜெக்ட் இப்ப ரெண்டாவது வகை தான? அதப் பத்தி சொல்லு…” //
தோ பார்றா.. சூர்யாவை பத்தி சொன்னவுடனே, வளர்மதிக்கு பத்திகிட்டு வர்றத.. :)
//இரு, இரு…ஸோ, அந்த மாதிரி பசங்கள பாக்கும் போது முக்கியமா ஒரு விஷயம் பண்ணனும். அதாவது அவங்க வெட்க உணர்வை மதிக்கனும்! அத நாம கண்டுக்காத மாதிரி இருந்து அவங்களுக்கு தைரியம் குடுக்கனும்…///
ஒஹோ...!
இதுதான்
”ஹய்ய்யோ மாமனுக்கு வெக்கத்தை பாரு” வசனத்துக்கு ரீசனா....??
//சரி, அப்படியே அவன் பேச ஆரம்பிச்சுட்டான்னு வச்சுப்போம்…இவளால எத்தன நாளைக்கு ஊமை வேஷம் போட முடியும்? இவ வளர்மதி இல்ல, வளவளமதின்னு தெரிஞ்சப்புறம் ஆப்போஸிட் சைட்ல எகிறி குதிச்சு ஓடிட்டான்னா?”///
பார்ட்டீ எஸ்கேப்புன்னு அர்த்தம் :))))
//ஆமா! நீயும் அவன நேருக்கு நேர் பாக்கனும்! நீ பாக்குற பார்வையிலையே ’போதும்டா, அடங்கு! தோலை உரிச்சுடுவேன்…’ ன்னு அவனுக்கு புரியனும்…”
///
வெரிகுட் வெரிகுட்! அப்படி பாக்க ஆரம்பிச்சா நீயும் கண்டினியூ பண்ணுடா ராசான்னு அந்த பொறுக்கிக்கு யாரவது ஒரு -------அட்வைஸ் கொடுத்திருந்தா.....!
//சங்கீதா, “அர்ச்சுமா…டோன்ட் சே சப்ஜெக்ட்…அழகா கார்த்தின்னு சொல்லு…”//
:)))))))
//எனக்கு பஸ் வந்துடுச்சு…இத பத்தி நாளைக்கு பேசுவோம்..பை பை…”///
ஒ.கேய்ய்ய்ய்ய்
//அவங்ககூட சுத்தற பசங்களோட கடலை ஆசையக் கூட தீய வச்சுருவாங்க…ஆனா அவங்க மட்டும் யாருக்கும் தெரியாம, மெளனம் பேசியதே சூர்யா மாதிரி திரிஷா, திரிஷா போனா லைலான்னு யாரையாவது ஒரு சூப்பர் ஃபிகரா பாத்து கரெக்ட் பண்ணி நீட்டா செட்டில் ஆய்டுவாங்க!!!//
ஏங்க எப்படிங்க பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே எழுதிருக்கீங்க. நான் UG படிக்கும்போது நான் என்னோட friends(girls) கூட பேசினாவே எங்க gang பசங்க என்னை ஒரு வழி ஆக்கிடுவாங்க. நாங்க 8 பேர், அதுல என்னை படுத்துன நாலு பேரு இப்ப ஜோடிப்புறா-வா இருக்காங்க...
///அவங்கள நேருக்கு நேர் பாத்து பேசக் கூடாது, சத்தமா பேசாம, நம்மகே கேக்காத மாதிரி தான் பேச ஆரம்பிக்கனும்…அப்ப நம்ம தலைவர் என்ன நினைப்பாருன்னா, “ஹை! இவ நம்மள விட ஷை டைப்பா இருக்காளே!! இவளுக்கு நம்மளே தேவலாம்…” இப்படி அவங்க கான்ஃபிடன்ஸ பூஸ்ட் குடுத்து வளத்தோம்ன்னா, தலைவரே தைரியமா வந்து கான்வெர்ஸேஷன ஆரம்பிப்பாரு!!!”///
நீங்க HR-ஆ வேலை செய்றீங்களா? :-)
:) :) :) ஹா ஹா திவ்யா கலக்கல்ஸ் நிறைய க்ரவுண்டு வொர்க்ஸ் செஞ்ச மாதிரி தெரியுதே
//மனுஷ முகங்கள, முகபாவங்கள புரிஞ்சிக்கற தன்மை பிறப்பிலேயே பொண்ணுகளுக்கு அதிகம்…ஆனா நம்ம பசங்களுக்கு பொதுவாவே அந்த தன்மை குறைவு!”//
பசங்களுக்கு புரிஞ்சுக்கற தன்மையே கொஞ்சம் குறைவுதான் :)
//ஆமா, அவங்க பொண்ணுக கிட்ட பேசாம இருக்கறது மட்டுமில்லாம, அவங்ககூட சுத்தற பசங்களோட கடலை ஆசையக் கூட தீய வச்சுருவாங்க…ஆனா அவங்க மட்டும் யாருக்கும் தெரியாம, மெளனம் பேசியதே சூர்யா மாதிரி திரிஷா, திரிஷா போனா லைலான்னு யாரையாவது ஒரு சூப்பர் ஃபிகரா பாத்து கரெக்ட் பண்ணி நீட்டா செட்டில் ஆய்டுவாங்க!!!”
//
என் கூட இந்த மாதிரி கேட்டகிரில ஒரு பையன் படிச்சான். யார் லவ் செஞ்சாலும் சின்சியரா அட்வைஸ் செய்வான். ஆனா கடைசியில் அவனோடது லவ் மேரேஜ்தான். கேட்டா அது பக்குவப்பட்ட பிறகு வந்த காதலுன்னு ஒரு பில்டப் வேற குடுத்தான்.
//சத்தமா பேசாம, நம்மகே கேக்காத மாதிரி தான் பேச ஆரம்பிக்கனும்…//
உதட்டை மட்டும் அசைச்சா போதுமா
// Raghav said...
// தாரணி பிரியா said...
me the first //
யக்கோவ்.. அத இங்க மட்டும் சொன்னா பத்தாது.. உங்க ஆபீஸுக்கும் சொல்லணும்.. :)
//
இன்னிக்கும் வெற்றிகரமா மீ தி பர்ஸ்ட்டு சொல்லிட்டேன் தம்பி. :)
வேற வழி கடப்பாரை எல்லாம் கான்கீரீட் தூணா மாற ஆரம்பிச்சாச்சு.
:(
ஆனாலும் இன்னிக்கு ப்ளாக் உலகத்துல நாலு இடத்துல me the first சொல்லிட்டேனே :)
\\மனுஷ முகங்கள, முகபாவங்கள புரிஞ்சிக்கற தன்மை பிறப்பிலேயே பொண்ணுகளுக்கு அதிகம்…ஆனா நம்ம பசங்களுக்கு பொதுவாவே அந்த தன்மை குறைவு!”\\
யார் சொன்னா? உங்க அனுமானம் ரொம்ப தப்பு :-) :-)
\\“எத்தனையோ வீட்ல அன்னிய மனுஷங்க விருந்தாளியா வீட்டுக்கு வந்த உடனே உள்ள ஓடி ஒளியற ஸ்கூல், காலேஜ் பசங்கள நம்மளே பாத்திருக்கோம்\\
என்னம்மா புதுக்கதை சொல்லறீங்க. பொதுவா பொண்ணுங்களுக்குத்தான் அச்சம் மடம் நாணம் பயிர்ர்பு எல்லாம் உண்டுன்னு கேள்வி பட்டிருக்கேன். நீங்க கதையையே மாத்தறீங்களே!!
\\மெளனம் பேசியதே சூர்யா மாதிரி திரிஷா, திரிஷா போனா லைலான்னு யாரையாவது ஒரு சூப்பர் ஃபிகரா பாத்து கரெக்ட் பண்ணி நீட்டா செட்டில் ஆய்டுவாங்க!!!”\\
இதை வேணா ஒத்துக்கலாம் :-)
// தாரணி பிரியா said...
:) :) :) ஹா ஹா திவ்யா கலக்கல்ஸ் நிறைய க்ரவுண்டு வொர்க்ஸ் செஞ்ச மாதிரி தெரியுதே//
பெரிய்ய்ய்ய்ய்ய்ய ரிப்பீட்டு..
அட்டகாசமா எழுதி இருக்கீங்க.. நீங்க கிரேட்தான்..
//மனுஷ முகங்கள, முகபாவங்கள புரிஞ்சிக்கற தன்மை பிறப்பிலேயே பொண்ணுகளுக்கு அதிகம்…ஆனா நம்ம பசங்களுக்கு பொதுவாவே அந்த தன்மை குறைவு!”//
Yes.. body language-a பொண்ணுங்க தெளிவா observe பண்ணுவாங்க.. பசங்களுக்கு அதை பத்தி கவலையே கிடையாது..எங்கேயும் சுதந்திரமே.
// தாரணி பிரியா said...
பசங்களுக்கு புரிஞ்சுக்கற தன்மையே கொஞ்சம் குறைவுதான் :)//
ஆனா இது கொஞ்சம் ஓவரு..
//எத்தனையோ வீட்ல அன்னிய மனுஷங்க விருந்தாளியா வீட்டுக்கு வந்த உடனே உள்ள ஓடி ஒளியற ஸ்கூல், காலேஜ் பசங்கள நம்மளே பாத்திருக்கோம்//
perfect..
//பொண்ணுகளோட பேசனும்னு ஆசை இருக்கும், ஆனா பொண்ணுகளோட பேசுறதுக்கே ஒரு பயம், கூச்சம், இது ரெண்டாவது வகை…//
மீ த செகண்ட் டைப்??!!!
//முதல்ல நம்ம சப்ஜெக்ட்டுகளுக்கு இருக்கற பிரச்சனை என்னன்னு பாப்போம்…பொதுவாவே சின்ன வயசில் இருந்து அதிக பெண்களோடு பேசிப் பழகாத நம்ம சப்ஜெக்ட்டுகளுக்கு,//
சப்ஜெக்ட் என்ற வார்த்தையை மிக மிக மிக வன்மையாக கண்டிக்கிறேன்..
//அது மட்டுமில்லாம, நிறைய பேத்துக்கு துருதுருன்னு இருக்கற பொண்ணுகள ரொம்பவும் பிடிக்குமே…//
எனக்கு எல்லா பொண்ணுங்களையுமே பிடிக்குமே.. :)
சரி.. சரி.. அடுத்த பகுதியை சீக்கிரம் போடுங்க..
எப்படி பிரியா இந்த மதிரியெல்லாம் எழுதிரிங்க.கொஞ்ச சொல்லுஙக
தாரணி பிரியா
வாங்க தாரணி...படிக்கறது, கமெண்ட்ஸ் போடறது எல்லாத்தையும் installment basis ல செய்யறீங்களா ;)
me too :))
------------
gils said...
//pasanga psychologya "putuu putuu" vachirukeengalay unga native enna keralava//
ஹீ ஹீ :) எல்லாம் கேள்வி ஞானம் தான் ;)
------------
நிமல்-NiMaL
thanks நிமல்...இந்த 3 categories எல்லாம் ஒரு friend சொன்னது தான், அப்படியே இங்க போட்டுட்டேன் :)
------------
Raghav
வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி ராகவ்...
இப்ப மார்கழி மாசத்துல மறுபடியும் அந்த கவிதைகளை எல்லாம் படிச்சு பாத்தேன்...
நான் தான் எழுதினேன்னா எனக்கே சந்தேகம் வந்துடுச்சு :) இப்ப அந்த மாதிரி எழுத முடியும்னு கூட தோனல....
------------
புதியவன் said...
// இது உண்மையா...?//
அப்படி தான் நிறைய பேர் சொல்லிக்கறாங்க ;)
நீங்க உம்மனா மூஞ்சிக்கு சூர்யாவ வம்புக்கு இழுத்ததால், subject என்ற வார்த்தையை உபயோகித்த உங்கள் பாத்திரத்துக்கு நான் டாக்டர் M.B.B.S ஆ மாறி ஊசி போடறேன்... :))
குமுதன் மூலம் பெறப்பட்ட தகவல்களை இங்கு தான் முதன் முதலில் படிக்கிறேன்.. ஆகவே சுவாரிசியமாக துணுக்கு மூட்டை படிப்பது போல் உள்ளது... continue ur good work :))
Karthik
நல்ல மொக்கை தான் போட்டு இருக்கீங்க....
------------
ஆயில்யன் said...
// வெரிகுட் வெரிகுட்! அப்படி பாக்க ஆரம்பிச்சா நீயும் கண்டினியூ பண்ணுடா ராசான்னு அந்த பொறுக்கிக்கு யாரவது ஒரு -------அட்வைஸ் கொடுத்திருந்தா.....!//
ஆஹா இத பத்தி யோசிக்கவே இல்லையே ;)
------------
பாசகி
அநியாயத்துக்கு பீல் பண்றீங்க போல இருக்கு ;) அந்த நாலு பேதையும் நீங்க திட்டறது என்னக்கு கேக்கவே இல்லையே ;)
------------
தாரணி பிரியா said...
// :) :) :) ஹா ஹா திவ்யா கலக்கல்ஸ் நிறைய க்ரவுண்டு வொர்க்ஸ் செஞ்ச மாதிரி தெரியுதே//
அப்படி எல்லாம் ஒன்னும் இல்லீங்கக்கா ;)
------------
விஜய்
//பொதுவா பொண்ணுங்களுக்குத்தான் அச்சம் மடம் நாணம் பயிர்ர்பு எல்லாம் உண்டுன்னு கேள்வி பட்டிருக்கே//
விஜய்! நீங்க எந்த century ல இருக்கீங்க??? ;)
Saravana Kumar MSK said...
//
//எத்தனையோ வீட்ல அன்னிய மனுஷங்க விருந்தாளியா வீட்டுக்கு வந்த உடனே உள்ள ஓடி ஒளியற ஸ்கூல், காலேஜ் பசங்கள நம்மளே பாத்திருக்கோம்//
perfect..//
நீங்களும் இந்த வகை தானா? சீக்கரம் திருந்துங்க :))
//சப்ஜெக்ட் என்ற வார்த்தையை மிக மிக மிக வன்மையாக கண்டிக்கிறேன்..//
superu...இத, இத தான் நான் எதிர்பாத்தேன்...
------------
sekar said...
//எப்படி பிரியா இந்த மதிரியெல்லாம் எழுதிரிங்க.கொஞ்ச சொல்லுஙக//
கையால தான் ;)
------------
சிம்பா said...
// நீங்க உம்மனா மூஞ்சிக்கு சூர்யாவ வம்புக்கு இழுத்ததால், subject என்ற வார்த்தையை உபயோகித்த உங்கள் பாத்திரத்துக்கு நான் டாக்டர் M.B.B.S ஆ மாறி ஊசி போடறேன்... :))//
உண்மைய சொன்னா, ஊசி குத்த வராங்கப்பா :((
யப்பாடி.. சப்ப மேட்டர்க்கெல்லாம் இம்புட்டு யோசிப்பாங்களா...????
ஒரு சந்தேகம்.. இவ்ளோ அட்வைஸ் அள்ளித் தெளிக்கும் அர்ச்சனாவுக்கு ஆள் யாரும் இருக்க மாட்டாங்களே..? ஊருக்குத் தானே உபதேசம்.. ஹிஹி
அர்ச்சனாவுக்கு ஆள் இருந்தா இத்தனை ஆண்களைப் பார்த்து ரகம் வாரியா பிரிச்சிருக்க நேரமிருக்காது.. கண்ணே மணியேனு அவன் எழுதற கவிதைகளை படிக்கவே நேரம் சரியா இருந்திருக்கும். :D
அது சரி... இது வரை தோராயமா எத்தன அட்வைஸ் அள்ளிவுட்டிருக்கீங்க..?? ஆயிரமாவது அட்வைஸ்க்கு வெயிட்டிங்..:)
மதி
//கண்ணே மணியேனு அவன் எழுதற கவிதைகளை படிக்கவே நேரம் சரியா இருந்திருக்கும். :D//
எல்லாரும் உங்கள மாதிரியா? கவிதை ரெடியா எழுதி வச்சுட்டு ஆளுக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க ;)
//ஆயிரமாவது அட்வைஸ்க்கு வெயிட்டிங்..:)//
ஆயிரம் அட்வைஸ் எல்லாம் குடுக்க முடியாதுங்க...ஏதோ ரைமிங்கா பேரு வைச்சா, உட மாட்டிங்கராங்கப்பா...
//எல்லாரும் உங்கள மாதிரியா? கவிதை ரெடியா எழுதி வச்சுட்டு ஆளுக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க ;)//
தப்பா புரிஞ்சிக்கிட்டீங்களே... கவிதைன்னா.. சின்னதா இருக்கும். சீக்கிரமா படிச்சு முடிச்சிடலாம். அப்புறம் அன்புத் தொல்லை அதிகமாகலாம். அதனால என் பாணியே க(வி)தை தான்.ஹிஹி. படிக்கவும் நேரமாகும். நாமளும் ரிலாக்ஸ் பண்ணலாம்ல..ஹிஹி
இப்படி நாங்கள் பொண்ணுங்கள பத்தி அலசி ஆராயனும். இன்னாடான நீங்கள் ஆம்பளைங்க எத்தனை வகை நு ஆராய்ச்சி செஞ்சி கட்டுரை வேற எழுதறீங்க. பய்யன் கூச்ச படரான் ஒன்னும் செய்ய மாட்டான்னு நினைச்சி தனிய போயிடாதீங்க. கேர் புல்
ஓகோ..........!!!!!!!!
பெண்கள் இந்த ஆராச்சியெல்லாம் பன்னுவாங்களா?????
ஆண்களே உசாரா இருங்கோ.....
//Divyapriya said...
பாசகி
அநியாயத்துக்கு பீல் பண்றீங்க போல இருக்கு ;) அந்த நாலு பேதையும் நீங்க திட்டறது என்னக்கு கேக்கவே இல்லையே ;)//
நோ feelings ஒன்லி greetings :-)
:)))
One of the subjects :((
kalakittinga kaapi...waiting for the next post in this series...
rounda oru ambathu :)) adutha part eponga
Post a Comment