Wednesday, December 31, 2008

ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சனா! - 3

பகுதி 1
பகுதி 2

முன்குறிப்பு: இந்த பகுதியோட ஆ அ வ அ அ முடியுது…இதுவரைக்கும் அட்டென்டன்ஸ் போடாதவங்கெல்லாம் இதுல போடலாம் :)

---

ஒரு வாரம் ஆகியும், மூவர் கூட்டணி செய்த க்ரண்டு வொர்க்குல கார்த்தி எந்த வகைன்னே கண்டு பிடிக்க முடியல…அவன் க்ளாஸ்ல வேற பொண்ணுகளே இல்ல, ஒரு இன்ஃபர்மேஷன் கலெக்ட் பண்றதுக்கு கூட ஆளில்லைன்னு அர்ச்சனா தினமும் ஒரே பொலம்பல் தான்…

அப்ப தான் ஒரு நாள், க்ளாஸுக்கு வெளியே…

சங்கீதா, “ஹாய் சுனிதா…பாக்கவே முடியறதில்லை…எப்டி போகுது கிளாஸ் எல்லாம்…” யாரோ சுனிதாவோட பேசிட்டு வந்துட்டு இருந்தா.

“அவ யாரு சங்கீதா?” ன்னு வளர்மதி கேக்க,

சங்கீதாவும், “அவ என்னோட பர்ஸ்ட் இயர் க்ளாஸ்மேட்…” ன்னு சாதாரணமா பதில் சொல்ல, உடனே அர்ச்சனாவுக்குள்ள ஒரு தீப்பொறி…

“ஹே…சங்கீதா…இப்ப நீயும் நானும் க்ளாஸ்மேட்ஸ்…ஆனா பர்ஸ்ட் இயர்ல நீயும் அந்த சுனிதாவும் க்ளாஸ்மேட்ஸ்…அதே மாதிரி பர்ஸ்ட் இயர்ல நானும் கம்ப்யூட்டர் சைன்ஸ் அனிதாவும் க்ளாஸ் மேட்ஸ்” ன்னு உளரிக் கொட்ட ஆரப்பிச்சுட்டா.

வளர்மதி, “ஆமா…நானும் E&I வனிதாவும் கூட தான் பர்ஸ்ட் இயர் க்ளாஸ்மேட்ஸ்…அதுக்கென்ன இப்போ? என்னவோ நீயே புதுசா இன்வென்ட் பண்ண மாதிரி சொல்ற?”


ரமணா படத்துல வர யூகிசேது ரேஞ்சுக்கு முகத்த வச்சுகிட்டு “ஹா ஹா ஹா…இன்வென்ட் தான் பண்ணிட்டேன்…இப்ப கார்த்தி க்ளாஸ்ல நோ பொண்ணுக…ஆனா, பர்ஸ்ட் இயர்ல??? எப்படி?”

“ஹே…ஆமால்ல…ஆனா அவங்க க்ளாஸ் மேட்ஸ் எந்த எந்த பொண்ணுங்கன்னு எப்படி கண்டுபிடிக்கறது?”

“ஹ்ம்ம்…அங்க தான் நிக்குறா நம்ம ராஜம்மா!!!” ராஜம்மா வேற யாரும் இல்ல, அவங்க காலேஜோட பாவப்பட்ட ப்ரின்சிபால் தான்!


“அட்டென்டன்ஸ் ஆர்டர் படி தான நம்மள செக்ஷன் பிரிச்சு போட்டாங்க? இஃப் அர்ச்சனா = அனிதா, சங்கீதா = சுனிதா, வளர்மதி = வனிதா…கார்த்திக் = என்ன? என்ன?”

“என்ன?” ரெண்டு பேரும் ஒன்னும் தெரியாம முழிக்க, அர்ச்சனா, “ஹய்யோ…கார்த்திக் = கவிதா…நம்ம கவிதா அக்கா!!!”

******
லேடீஸ் டைனிங் ரூம்…

அடுத்த கட்ட வேலையா மூவர் கூட்டணி கவிதா அக்காவ முற்றுகை இட்டாங்க…

வளர்மதி, “ஹே அர்ச்சனா! நம்ம எப்படி திடீர்ன்னு அவங்க கிட்ட போய் அந்த பையன பத்தி கேக்குறது?”

“எவ்வளவோ யோசிக்கறோம், இத கூட யோசிச்சு வைக்க மாட்டோமா? இட்ஸ் அ ஜிலேபி மேட்டர்…யாமிருக்க பயமேன்?”

“இப்ப எதுக்கு முருகர் டைலாக் எல்லாம் காபி அடிக்கற?”

“ஏன்னா, நமக்கு ஹெல்ப் பண்ணப் போறதே முருகப் பெருமான் தான?”

“என்னது?”

“முருகப் பெருமான் மீன்ஸ் கார்த்திகேயன்…” ன்னு விஷமமா சிரிச்சா அர்ச்சனா.

மெதுவா எல்லாரும் போய் கவிதா அக்கா பக்கதுல உக்காந்தாங்க…அர்ச்சனா உடனே, “ஹே வளர்…Do you know? In tamilnadu, 29% of the men are named Karthik…isn’t that interesting?” ன்னு பீட்டர் விடவும், அவ எதிர் பாத்த மாதிரியே கவிதா, “அப்படியா? எங்க அர்ச்சனா படிச்ச? But 100% true…எங்க க்ளாஸ்ல கூட இப்ப நாலு கார்த்திக்…”

’மீனு மாட்டிடுச்சு, இனி வலைய வெளிய இழுக்க வேண்டுயது தான் பாக்கி!’ ன்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டே, “நாலு பேர் தானாக்கா? எங்க க்ளாஸ்ல மொத்தம் ஐஞ்சு பேர்…” என்னவோ அவளே பேர் வச்ச மாதிரி ரொம்பவே பெருமையோட அர்ச்சனா சொல்லவும்,

உடனே கவிதா, “இதாவது பரவாயில்ல…பர்ஸ்ட் இயர்ல வேற அட்டென்டன்ஸ் ஆர்டர் படி செக்ஷனா...”

(pause…இப்ப கவிதா பேசுறதுக்கு கொஞ்சம் பாஸ் போட்டுட்டு நம்ம மூவர் கூட்டணிய கவனிப்போம்…”கமான்…கமான், இத, இத தான் நாங்க எதிர்பாத்தோம்” ங்கற மாதிரி மூனு பேரும் ஒரே ரியாக்ஷன் :) )

இப்ப மீண்டும் கவிதா, “…அட்டென்டன்ஸ் ஆர்டர் படி செக்ஷனா? அப்ப எங்க க்ளாஸ்ல மொத்தம் எட்டு கார்த்திக்!!!”


“ஓஹ்…செம கன்ஃபூஷன் தாங்க்கா…ஆமா…அப்படீன்னா உங்களுக்கு மெக் கார்த்திக் தெரிஞ்சிருக்கனுமே…”

“ஆமா…அவனும் என் க்ளாஸ் தான்…அவன பத்தி எதுக்கு கேக்குற?”

“இல்ல…அவன் எங்கண்ணாவோட எதோ ஃப்ரெண்டு…அதான்…உங்களுக்கு ஃப்ரெண்டா அவரு?”

“ச்சே…ச்சே…ஃப்ரெண்டெல்லாம் இல்ல, க்ளாஸ் மேட்…அவ்ளோ தான்…அவன் ஒரு சரியான ஹெட் வெயிட் பார்ட்டி, பொண்ணுங்க கிட்டையே பேச மாட்டான்…”

Mission accomplished ரேஞ்சுக்கு அர்ச்சனா விட்டா பாருங்க ஒரு லுக்கு…சரி, சரி இனிமே தான கதையே இருக்கு!

******
பேகி மண்டையன் ஸார் க்ளாஸ், பர்ஸ்ட் பென்ஞ்


வளர்மதி, “சரி…அவன் கெத்து பார்ட்டின்னு கண்டுபிடிச்சாச்சு…அப்புறம்?”

அர்ச்சனா, “அப்புறம் என்ன? ரொம்ப ஈஸி தான்…நாம சங்கீதாவ அவனோட இந்த வாரமே பேச வைக்கப் போறோம்…”

சங்கீதா, “என்னது???”

“ஆமா…என்ன தான் கெத்து பார்ட்டி, சிடு மூஞ்சி, ரிஸர்வட் டைப் யாரா இருந்தாலும், அவங்கவங்களுக்குன்னு ஒரு வீக் பாயின்ட் இருக்கும்…அது தான் அவங்களோட ஆ.கோ…”

“என்னது? ஆ.கோ வா? என்ன சொல்ற? ஒன்னுமே புரியல…”

“இப்போ…என்னோட ஒரு சின்ன வயசு ஃபெரண்ட எடுத்துக்கோ…அவனுக்கு சாதாரணமா புதுசா பொண்ணுக கூட பேசுறதுல ஒரு தயக்கம்…ஆனா அவன் எழுதின கதைய பத்தியோ, இல்ல கவிதைய பத்தியோ யாராவது பேசினா பொண்ணு, பையன்னு வித்யாசமில்லாம சகஜமா பேச ஆரம்பிச்சுடுவான்…அதே மாதிரி, ஓடி ஒளியற சின்ன குழந்தைங்க கூட அவங்களுக்கு பிடிச்ச கார்டூன் பத்தியோ, இல்ல மிஸ் பத்தியோ பேச ஆரம்பிச்சா, அப்படியே வந்து நம்ம கிட்ட ஒட்டிக்குவாங்க… அதே மாதிரி தான், கார்த்திக்கும் ஒரு விஷயத்துல ஆர்வக் கோளாரு, அதவாது ஆ.கோ வா இருக்கான்…”

“என்ன விஷயம் அர்ச்சனா அது?”

“உங்களுக்கு ஒன்னு ஞாபகம் இருக்கா? பர்ஸ்ட் இயர்ல intra college fest அப்ப ஓடி ஒளிஞ்ச நம்மளை எல்லாம் பிடிச்சுட்டு வந்து fine arts competitions ல participate பண்ண வச்சாங்களே? நீங்க ரெண்டு பேர் மட்டும் தப்பிச்சு ஓடிட்டீங்க…”

“ஆமா..அதுக்கென்ன?”

“அதுல அந்த கார்த்திக்கும் இருந்தான்! அவன நீ காட்டின உடனே இவனை எங்கயோ பாத்த மாதிரி இருக்கேன்னு ஒரு வாரமா மூளைய கசக்கி பிழிஞ்சு, நேத்து நைட் கனவுல தான் கண்டுபிடிச்சுட்டேன்….அடுத்த வாரம் intra college fest இருக்கு, அதுல fine arts ல Collage competition இருக்கு…கண்டிப்பா இந்த வருஷமும் அவனும் அதுல ஒரு ஆர்கைனைஸரா இருப்பான்…சோ, நம்ம போறோம்…அதுல கலந்துக்கறோம்…”

சங்கீதா, “அதெல்லாம் சரி…ஆனா… Collage னா என்ன?”

******
Fine arts club presents…
COLLAGE
Freak out with your freakiest designs and vibrant colours!!!


Collage நடக்குற ரூம்ல பல ஆ.கோ க்களின் நடுவே, ஆறு கண்கள் மாத்திரம் திரு திருன்னு முழிச்சுட்டு இருந்துச்சு.

சங்கீதா, “ஹய்யோ…கார்த்தி முன்னாடி என் மானம் போகப் போகுது…ஐடியா குடிக்கறேன்னு சொல்லி இப்படி கவுத்துட்டியே பாவி!!! எல்லாரும் எப்படி பண்ணி இருக்காங்க பாரு!!! நம்மளது பெக்கர் வாமிட் மாதிரி இருக்கு…” ன்னு ஒப்பாரியே வக்க ஆரம்பிச்சுட்டா.

அர்ச்சனா, “சரி, சரி…விடு, அரசியல்ல இதெல்லாம் ஜகஜம்…”

“வெளிய வாடி, உன்ன கொல்லாம விட மாட்டேன்…”

“சரி சரி…அதான் நம்ம இன்னும் பேர் எழுதலையே…வா இப்படியே ஓடிப் போய்டுவோம்…”

முனு பேரும் யாருக்கும் தெரியாம, மெதுவா ஒவ்வொரு அடியா வச்சு கதவு வரைக்கும் போய்ட்டாங்க.

“Excuse me…hello!! உங்கள தான்…என்ன பேர் எழுத மறந்துட்டு போறீங்க?”

ஹய்யோ போச்சுடான்னு திரும்பி பாத்தா, அவங்கள தடுத்து நிருத்தினது வேற யாரும் இல்ல…சாட்சாத் கார்த்திகே தான்.

உடனே அர்ச்சனா, “ஹீ ஹீ…வந்து…மறந்துட்டோம்…”

“வந்து உங்க பேரு, டிபார்ட்மென்ட், இயர் எல்லாம் பக்கத்துல நோட் பண்ணுங்க…இன்னும் கொஞ்ச நேரத்துல ரிஸல்ட்ஸும் சொல்லிடுவோம்…ஒரு டென் மினிட்ஸ் தான்…”

வேற வழியில்லாம மூனு பேரும் மறுபடியும் அவங்க செய்து வச்சிருந்த கொலாஜ் பக்கத்துல போய் நின்னாங்க.அர்ச்சனா, “சரி ஓகே…ஆனது ஆயிடுச்சு…நடந்தத நினைச்சு வீணா வருத்தப் படாம, இனிமே நடக்கப் போறத பாப்போம்…சங்கீதா! நாங்க ரெண்டு பேரும் இங்க பேர் எழுதிட்டு இருக்கோம்…நீ போய் அப்டியே அவனோட பேசிட்டு வந்துடு பாப்போம்…”

கோழி குண்ட முழுங்கின மாதிரி சங்கீதா, “என்னது?” ன்னு பேய் முழி முழிச்சா.

“இவ்ளோ பெரிய ஆப்பர்ச்சூனிடிய ஏற்படித்துக் குடுத்திருக்கோம்…இதுக்கு மேல என்ன பண்ண முடியும்?? போ…டைம் வேஸ்ட் பண்ணமா மரியாதையா போய் பேசு…”

“திடீர்ன்னு போய் என்னத்த பேசுறது?”

“போ…” ன்னு ரெண்டு பேரும் பிடிச்சு தள்ளவும், சங்கீதாவும் கொஞ்சம் தைரியத்த வரவழைச்சிட்டு, கார்த்திக் கிட்ட போய், “ஹாய்…”

“சொல்லுங்க…”

“இந்த காம்ப்டீஷனெல்லாம் எந்த பேஸில ஜட்ஜ் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?”

இப்படி மொக்கைய போட்டதுக்கே சங்கீதா லிட்டர் கணக்குல வழிய, ’இவ என்ன சம்பந்தம் இல்லாம இத்தன கேள்வி கேக்குறா?’ ன்னு கார்த்திக்கும் குழம்ப அந்த கொலாஜ் இனிதே முடிந்தது! காம்பெட்டீஷனல அவங்களுக்கு ஒரு வழியா முதல் இடம் கிடைச்சது, கடைசியில இருந்து!

*****
கான்டீன்


மறுபடியும் ஒரு நாள் கான்டீல சங்கீதா கார்த்திக்க பாக்கறதுக்கும் முன்னாடி அர்ச்சனா பாத்துட்டு, “சங்கீதா! இப்ப போ, நான் சொன்ன மாதிரி உன்னோட கவிதையெல்லாம் காலேஜ் மேகஸீன்ல போட முடியுமான்னு போய் கேளு போ!!”

“அதான் சொன்னனே அர்ச்சனா…நான் எழுதியிருக்கறதெல்லாம் இங்கலீஷ்ல…தமிழ் மேகஸீன்ல எப்படி போடுவாங்க?”

“இதே கேள்விய போய் அவன்கிட்ட கேளு போ!!!”

இப்படியா ஒரு வழியா, சங்கீதாங்கற ஒரு பொண்ண கார்த்திக் மனசுல ரெஜிஸ்டர் பண்ணாங்க, இல்ல இல்ல, அப்படி பண்ணதா தான் நினைச்சுகிட்டு இருந்தாங்க. ஆனா அவன் மனசுல நல்லா ரெஜிஸ்டர் ஆனதென்னவோ…

******
சில நாட்களுக்கு பின்…


“சரி…எங்க எனக்கு ட்ரீட்? நான் குடுத்த ஐடியால நீ கார்த்திக் கிட்ட ரெண்டு தடவை பேசிட்ட…அவனும் உன்னை எங்கயாவது வெளிய பாக்கும் போது ஸ்மைல் பண்றான்…அப்புறம் என்ன? உடனே ட்ரீட் தான்…”

“ச்சே…போ அர்ச்சனா…அவனோட பேசாமையே இருந்திருக்கலாம்…”

“அடிப்பாவி! ஏன் இப்படி சொல்ற?”

“ஆமா…க்ரஷ் னா எப்பயுமே, தூரத்துல இருந்து வழியறது தான் நல்லா இருக்கு…அவனோட பேசும் போது comfortable லாவே இல்ல…அவன பாத்து ஸ்மைல் பண்றத விட, அவனுக்கே தெரியாம அவன தூரத்துல இருந்து பாக்கறது தான் எனக்கு பிடிச்சுருக்கு…”

“ஆக மொத்தத்துல ட்ரீட் இல்லைங்கற…சரி, சரி, வாங்க வீட்டுக்காவது கிளம்புவோம்…”

சங்கீதா, “இல்ல வளர்…நீங்க போங்க…எனக்கு லைப்ரரி போனும்…நான் மெதுவா வரேன்…”

பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்த படியே வளர்மதியும், அர்ச்சனாவும் எதோ ஒரு சிதம்பர ரகசியம் பேசிக்கிட்டாங்க…அது என்னன்னு கேப்போமா?

அர்ச்சனா, “உங்கிட்ட முதல்லயே சொல்லனும்னு நினைச்சேன் வளர்…சரி, இப்பயும் ரொம்ப லேட் இல்ல…”

“என்ன பீடிகை பலமா இருக்கு?”

“சொல்றத கேளு! நான் பாத்த வரைக்கும் உன் பேட்ச் மேட் பிரசன்னா, நம்ம க்ளாஸ்லையே வச்சு, உன்கிட்ட மட்டும் தான் பேசுறான். வேற எந்த பொண்ணு கிட்டையும் அவன் பேசிப் பழகறது இல்ல…அதுக்கு அவனுக்கு கொஞ்ச நாள் ஆகும்…அவன் எல்லா பொண்ணுககிட்டையும் பாகுபாடில்லாம சகஜமா பேசிப் பழகற வரைக்கும் நீ அவன்கிட்ட ஒரு லிமிட்டோட தான் பேசனும்…”

“லிமிட்டில்லாம அப்படி என்னத்த நான் பேசிடப் போறேன்?”

“அப்படியில்ல வளர்…நீ சாதாரணமா உன்னோட மத்த ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பேசுற மாதிரி அவனோட பேசி, அப்புறம் போகப் போக அவன் மேல அக்கறை காட்ட ஆரம்பிச்சன்னு வை…அதையே அவன் தப்பா எடுத்தக்க கூட வாய்ப்பு இருக்கு…அதுக்கு தான் சொல்றேன்…அவன் எல்லாரோடையும் நல்லா பழகுற வரைக்கும், இல்ல உனக்கு அவன் மேல முழு நம்பிக்கை வர வரைக்கும், நீ அவனோட எப்பயுமே ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டன் பண்ணிக்கறது தான் உனக்கும் நல்லது, அவனுக்கும் நல்லது!"

*****
லைப்ரரி


லைப்ரரிக்கு ப்ராஜக்ட் விஷயமாக வந்த கார்த்திக் அப்ப தான் தனியா லைப்ரரில சுத்திட்டு இருந்த சங்கீதாவ பாத்தான், “ஹாய் சங்கீதா! என்ன லைப்ரரி பக்கம்?”

“சும்மா புக்ஸ் ரிடர்ன் பண்ணலாம்னு…”

“எப்பயும் மூனு பேரா சுத்திட்டு இருப்பீங்க… அர்ச்சனா, அப்புறம் அந்த கண்ணாடி போட்ட பொண்ணு், அவங்கெல்லாம் எங்க?”


“அவங்க ரெண்டு பேரும் இப்ப தான் வீட்டுக்கு கிளம்பினாங்க…”

“ஓஹ்…சரி, ஓகே தென்…எனக்கு ஒரு முக்கியமா வேலை இருக்கு…பை…”

வேக வேகமா கார்த்திக் ஓடவும், சங்கீதா, ’என்ன இவன்? இப்ப தான லைப்ரரிகுள்ள வந்தான்? திடீர்ன்னு வேலை இருக்குன்னு ஓடிட்டான்? ’

******
பஸ் ஸ்டாப்


வளர்மதி, “ஹே அர்ச்சனா! இது வரைக்கும் எத்தன அட்வைஸ் சொல்லி இருக்கேன்னு எண்ணவே இல்லப்பா…இந்த ஒரு மாசத்துல மட்டும் எத்தனை அட்வைஸ்? அப்ப ஃபர்ஸ்ட் இயர்ல இருந்து நீ மொத்த க்ளாசுக்கும் சொன்னத கணக்கு போட்டா ஆயிரம் அட்வைஸ் வந்திடும் போல!!!”

ஆனா அர்ச்சனா பதில் எதுவும் சொல்லமலேயே இருக்கவும், வளர்மதி, “ஹலோ…என்ன பயங்கரமா திங்க் பண்ணிட்டு இருக்க?”


“அதில்ல வளர்…இந்த ஒரு மாசம் எப்படி போச்சுன்னே தெரியலைல்ல? க்ளாஸ் எல்லார் கிட்டயும் என்ன தான் சிரிச்சு பேசி, ஃப்ரெண்ட்லியா பழிகினாலும், உன்னையும் சங்கீதாவையும் பாக்கும் போது, ச்சே எனக்கு இந்த மாதிரி ’எனக்கே எனக்குன்னு’ ஃப்ரெண்ட்ஸ் இல்லையேன்னு தோனும்…ஆனா இந்த ஐடியா அது இதுன்னு ஒரு மாசமா உங்க கூடயே சுத்திட்டேன்…ஆனா…இனிமே…”

“அர்ச்சனா…ஃபீலிங்ஸ கன்ட்ரோல் பண்ணு, சென்டிமென்ட்ட கட் பண்ணு! ஹே…இப்ப மட்டும் இல்ல, எப்பயுமே நீயும் எங்களுக்கு ஃப்ரெண்ட் தான்! இனிமே உனக்கும் ஃபெவிகால் வாங்கிக் குடுக்கறோம்..கவலைப்படாத…”

அர்ச்சனா இதுக்கு பதிலா ஒரு அழகான புன்னகைய உதிர்க்கவும், வளர்மதி, “இதுக்கு நீ ஆனந்த கண்ணீர் இல்ல வடிக்கனும்? இப்படி புன்னகை பூவே மாதிரி போஸ் குடுத்தா என்ன அர்த்தம்?”

“ஹே…நான் அதுக்கு சிரிக்கல…கார்த்திக்க பாத்து சிரிச்சேன்…உன்கிட்ட சொல்லவே இல்லயே…கார்த்திக்கும் என் பஸ்ஸ்டாப் தான்…இத்தன நாள் எனக்கு தெரியவே இல்லை…இப்ப ஒரு வாரமா தான் பஸ்ஸ்டாப்புல ரெகுலரா பாக்குறோம்…அப்படி பாக்கும் போதெல்லாம் ஒரு சின்ன ஸ்மைல்…”

அர்ச்சனா பேசி முடிக்கறதுக்கு முன்னாடி கார்த்திக் அவங்க பக்கத்துல வந்துட்டான். இவன் என்ன பேசப் போறான்னு அர்ச்சனா முழிக்க, கார்த்திக் எந்த தயக்கமும் இல்லான, “என்ன அர்ச்சனா, இன்னிக்கு காலைல 12 c ல வரல போல இருக்கு? நான் உனக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்ணி பாத்தேன்…”

கார்த்திக் கேளியன் கணக்குல வழிய, அர்ச்சனா என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம முழிக்க, வளர்மதி அவள மொறைக்க அதுக்குள்ள பஸ் வந்துடுச்சு.
பஸ்ஸுக்குள்ள ஏறினதும் வளர்மதி, “என்னதிது? இவன போய் கெத்துப் பார்ட்டின்னு சொன்னாங்க? இந்த வழி, வழியறான்? பாரு இப்ப, பின்னாடி நின்னுட்டு உன்னையே தான் பாத்துட்டு இருக்கான்…நீ என்ன பண்ணித் தொலைச்ச?”

“நான் ஒன்னுமே பண்ணல வளர்…ஏதோ தெரிஞ்சவனாச்சேன்னு சொல்லி, லைட்டா, ஃபெரண்ட்லியா ஸ்மைல் பண்ணேன்…வேற எதுவும் பேசினது கூட இல்ல…”

“அட லூசே! இவ்ளோ பேருக்கு அட்வைஸ் சொல்றியே…தேவையில்லாம அவ்வளவா பழக்கமில்லாதவங்கள பாத்து சிரிக்கக் கூடாதுன்னு உனக்கு தெரியாதா?”

“இவன் இப்படி பண்ணுவான்னு எனக்கெப்படி தெரியும்? அவனுக்கு என் பேர் தெரியும்ன்னு கூட எனக்குத் தெரியாது…”

“ஒரே ஒரு தடவை அந்த கொலாஜ்ல பாத்ததுக்கு, அவன பாத்து சிரிக்கனுமா? எதுக்கு இந்த வேண்டாத வேலை? ஒரு பொண்ணு பின்னாடி சுத்துற பையன் கிட்ட போய், ’ஏன்டா இப்படி பண்றேன்னு’ யாராவது கேட்டா, ’நான் ஒன்னும் பண்ணல…அந்த பொண்ணு தான் முதல்ல என்னை பாத்து சிரிச்சான்னு’ தான் சொல்லுவாங்க…”

[அ அ அ அ]
அப்படியே அடங்கிட்டா அட்வைஸ் அர்ச்சனா

இருங்க, இருங்க இன்னும் முடியல….
அ இ பு வா! (அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!)

32 comments:

Nimal said...

மீ த முதலாவது... :)

Nimal said...

ஆஹா... ரூட்டே மாறிடிச்சே....
ஆனாலும் சூப்பரா இருக்கு...

புத்தாண்டு வாழ்த்துக்கள்...!!!

Nimal said...

'ஆ அ அ தி' அப்பிடீன்னு உங்களுக்கு ஒரு abbreviation போட்டிடலாம்... :)

(ஆயிரம் அப்ரிவியேசன் அள்ளித்தெளித்த திவ்யா)

G3 said...

//இதுவரைக்கும் அட்டென்டன்ஸ் போடாதவங்கெல்லாம் இதுல போடலாம் :)//


Thangal uththaravu :D

Iniya puthaandu vaazhthukkal :))

Raghav said...

நல்ல ஜாலியான பதிவு திவ்யா. கல்லூரி கால வாழ்க்கையை ஞாபகப்”படுத்தியமை”க்கு நன்றி. :)

தாரணி பிரியா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் திவ்யா

Raghav said...

2009 வருடம் முழுதும் இனிதே இருக்க வாழ்த்துகிறேன். :)

தாரணி பிரியா said...

இந்த பதிவு கொஞ்சம் நீளமா இருந்தாலும் சுவாரஸ்சியமான எழுத்து நடையில அது ஒரு பெரிய விஷயமா தெரியலை. ஜாலி பதிவு

Raghav said...

ஆணிகள் அதிகமா இருக்கு, கும்மிய சாயங்காலம் வைச்சுக்குறேன்.. இல்லன்னா.. அடுத்த வருடம் சந்திப்போம்.

Anonymous said...

முடி......யல

butterfly Surya said...

உங்க வலை நல்லாயிருக்கு..

வாழ்வென்னும் வங்கியில்
வரவாகும் புத்தாண்டு வைப்புத் தொகை

வளம் பெருக.. துயர் மறைய..

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சூர்யா
butterflysurya.blogspot.com

Divya said...

டயலாக்ஸ் எல்லாம் தூள்.......ரொம்ப ரசிச்சு படிச்சேன் திவ்யப்ரியா:))


புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

புதியவன் said...

யதார்த்தமான உரைநடை அருமை...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

பாசகி said...

//“முருகப் பெருமான் மீன்ஸ் கார்த்திகேயன்…” ன்னு விஷமமா சிரிச்சா அர்ச்சனா.//

என்ன ஒரு கள்ளத்தனம் :-)

//…அர்ச்சனா உடனே, “ஹே வளர்…Do you know? In tamilnadu, 29% of the men are named Karthik…isn’t that interesting?” ன்னு பீட்டர் விடவும்//

என்ன ஒரு வில்லத்தனம் :-)

//“அட லூசே! இவ்ளோ பேருக்கு அட்வைஸ் சொல்றியே…தேவையில்லாம அவ்வளவா பழக்கமில்லாதவங்கள பாத்து சிரிக்கக் கூடாதுன்னு உனக்கு தெரியாதா?”//

பல்லி பழமொழிதான்ங்க நியாபகம் வருது :-)

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

காண்டீபன் said...

அழகான கதை. நன்றி தோழி.

//Do you know? In tamilnadu, 29% of the men are named Karthik…isn’t that interesting?//

Priya? Divya, Lakshmi (1 generation back) மாதிரியோ :)

உங்க அப்ரிவேஷன்ஸ் நன்று.

மேவி... said...

கதை சூப்பர். அம் வ்ர்திங் திஸ் கமெண்ட் அபிடேர் ரெஅடிங் ஆல் த ரேலடேது போஸ்ட்ஸ்.

anyways keep rocking
happy new year

gils said...

a.ah.ee.ie
apdina enna expansionum ila :))) summa poattu uten :)

gils said...

//அட்டென்டன்ஸ் ஆர்டர் படி தான நம்மள செக்ஷன் பிரிச்சு போட்டாங்க? இஃப் அர்ச்சனா = அனிதா, சங்கீதா = சுனிதா, வளர்மதி = வனிதா…கார்த்திக் = என்ன? என்ன?”//
12th organic chemsity equation kuda ivlo interstinga padichirukamatenga nenakren :D :D chancela..epdinga ithelam!! mudiala..

gils said...

!!!! emma saami..edho mega serial paathe epect..epdi imbutu charactera kati meikareenga??!!!

Karthik said...

Naa mathum thaan periyaaa post podhuvenu sogathula irundhen.. enakku company tara akka neenga irukeenga.. nandri hein!!! New yr vaalthukkal

Karthik said...

//Do you know? In tamilnadu, 29% of the men are named Karthik…isn’t that interesting?//

Ennaiyum unga blog la oru charactera serthadukku nandri!!

ஜியா said...

:)))

So entha formulaavum, adviceum yaarukkum oththu varaathunnu solreenga... cool!.. I like it :))

Vijay said...

அங்கே சுத்தி இங்கே சுத்தி கடைசியிலே பெருமாளுக்கே நாமமா?

பசங்க தான் பொண்ணுங்க கிட்ட பேசறதுக்கு ஏதாவது சாக்கு யோசிப்பாங்கன்னா, பொண்ணுங்க அதை விட மேலா இருக்காங்களே.
இந்த சூட்சுமமெல்லாம் ஒரு 15 வருஷத்துக்கு முன்னாலயே தெரிஞ்சிருந்தா, காலேஜ் லைஃபுல அமோக சாகுபடி பண்ணிருக்கலாமே :-)

MSK / Saravana said...

இவ்ளோ பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பதிவா...????? எவ்ளோ நேரம் ஆச்சு.. டைப் செய்ய..

MSK / Saravana said...

அட்டகாசம் போங்க.. செம கலக்கல்..

உங்க auto biography-யா.. ஹி..ஹி..ஹி..

MSK / Saravana said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க திவ்யப்ரியா..

மேவி... said...

vijay said
"ஒரு 15 வருஷத்துக்கு முன்னாலயே தெரிஞ்சிருந்தா, காலேஜ் லைஃபுல அமோக சாகுபடி பண்ணிருக்கலாமே :-)"
ennum andha asai irukka???
ippo koda late agaley....
office la try pannu pa .....

Anonymous said...

hey divya.. kadhai super!!! part 1-la irundhu ippo dhan padichaen.. Keep rocking!!!

வெட்டிப்பயல் said...

arumaiya ezhuthirukamma.. Too good :)

Divyapriya said...

வெட்டிப்பயல் said...
// arumaiya ezhuthirukamma.. Too good :)//

எல்லா கதையும் படிச்சு, காமெண்ட்டினதுக்கு ரொம்ப தாங்ஸ்ணா :)

gayathri said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க திவ்யப்ரியா

pari@parimalapriya said...

very gud story.reflects my college days.