Saturday, December 13, 2008

உனக்கும் எனக்கும் இடையே ஒரு பூலோகம்!

தேசங்கள் கடந்து வாழும் நேசமிகு உறவுகளுக்காக…

ஷ்ஷ்ஷ்…இது துயில் கொள்ளும் நேரம்…

நான் துயில்கையில், நீ விழித்திருப்பதால் தானோ
தினமும் என் கனவுகளில் உலவுகிறாய்?

நீ துயில்கையில், உன்னோடு பேச முடியாமல்
சூரியனை சபித்தபடி பொழுதை கழிக்கிறேன்…


இங்கே மணி நான்கு!

பேருந்துப் படிக்கட்டுப் பயணம்,
நாசி துளைக்கும் சிற்றுண்டி மனம்,
அம்மாவின் சிரித்த முகம்,
சோம்பல் ததும்பும் விடுமுறை நாட்கள்,
ஞாயிறு தூர்தர்ஷன் தமிழ் படம்,
இப்படி எத்தனையோ நினைவுகள் பதிந்த
மாலை நான்கு மணி…

இன்று கேப்பச்சீனோ கோப்பையுடன் தனிமையில் கழிகிறது,
அங்கே இப்பொழுது நடுநிசி என்ற நினைப்போடு…

38 comments:

Vijay said...

நானே முதல்!!! :-)

புதியவன் said...

//நான் துயில்கையில், நீ விழித்திருப்பதால் தானோ
தினமும் என் கனவுகளில் உலவுகிறாய்?

நீ துயில்கையில், உன்னோடு பேச முடியாமல்
சூரியனை சபித்தபடி பொழுதை கழிக்கிறேன்…//

ஆஹா...அருமை...அழகு...
ரொம்ப நல்லா இருக்கு வரிகள்...
வாழ்த்துக்கள் திவ்ய பிரியா...

Anonymous said...

இப்படியா சில விஷயங்கள் உங்கள பாதிக்கணும்.... :)

க(வி)தை நல்லா இருக்கு...

இன்னும் நிறைய எழுதுங்க.

Vijay said...

கவிதை அருமை ;-)

\\நான் துயில்கையில்,... என் கனவுகளில் உலவுகிறாய்?\\
ஆஹா !!

\\நீ துயில்கையில், ...
சூரியனை சபித்தபடி பொழுதை கழிக்கிறேன்…\\

சூப்பர்!

\\இன்று கேப்பச்சீனோ கோப்பையுடன் தனிமையில் கழிகிறது,\\
ரொம்பவும் உண்மை!! என்ன தான் அயல்நாடக இருந்தாலும் சொந்த ஊர் மாதிரி வருமா.

ரொம்ப நன்றாக இருக்கிறது, வெவ்வேறு நாடுகளில் பிரிந்து வாழும் உறவுகளின் ஏக்கத்தைத் தெரிவிக்கும் வரிகள்!!

Raghav said...

ஒரே வரியில எழுதக்கூடியதை மடக்கி மடக்கி எழுதினா.. அதை கவிதைன்னு சொல்லலாமா ? :)

Raghav said...

//ஷ்ஷ்ஷ்…இது துயில் கொள்ளும் நேரம்…//

அட அட.. கவிதை கவிதை எல்லாரும் நோட் பண்ணிக்குங்கப்பா.. :)

Raghav said...

//ஞாயிறு தூர்தர்ஷன் தமிழ் படம் //

ம்.. மீண்டும் பழைய நினைவுகள்.. 25பைசா கொடுத்து ஞாயிறு படம் பார்த்த நினைவுகள் ஞாபகத்துக்கு வருது.. நடுவில் வரும் அரைமணி நேர செய்தியின் போது சின்னப் பையன்கள்லாம் (நான் இப்பவும் சின்னப்பையன் தான் அது அப்புறம் பாத்துப்போம்).. தட்டுல சாதத்தை போட்டுகிட்டு தெரு முக்குல சாப்புடுவோம்..

Raghav said...

//மதி said...
க(வி)தை நல்லா இருக்கு... //

ஹி ஹி...

Raghav said...

//இன்று கேப்பச்சீனோ கோப்பையுடன் தனிமையில் கழிகிறது, //

நோ.. நோ.. நானெல்லாம் போனப்போ.. கையோட ஒருகிலோ கோத்தாஸ் காபி, காபி ஃபில்டர் கொண்டு போயிட்டேன்.. :)

நல்ல காபி இல்லாம உயிர் வாழ முடியுமா என்ன ?

முகுந்தன் said...

//பேருந்துப் படிக்கட்டுப் பயணம்,
நாசி துழைக்கும் சிற்றுண்டி மனம்,
அம்மாவின் சிரித்த முகம்,
சோம்பல் ததும்பும் விடுமுறை நாட்கள்,
ஞாயிறு தூர்தர்ஷன் தமிழ் படம்,
//

நான் இதற்காகவே தினமும் ஏங்குகிறேன் :((

முகுந்தன் said...

//நோ.. நோ.. நானெல்லாம் போனப்போ.. கையோட ஒருகிலோ கோத்தாஸ் காபி, காபி ஃபில்டர் கொண்டு போயிட்டேன்.. :)
//

ராகவ்,
நான் கூட இந்த முறை காபி டே போடி வாங்கி வந்தேன்:)

ஆயில்யன் said...

//பேருந்துப் படிக்கட்டுப் பயணம்,
நாசி துழைக்கும் சிற்றுண்டி மனம்,
அம்மாவின் சிரித்த முகம்,
சோம்பல் ததும்பும் விடுமுறை நாட்கள்,
ஞாயிறு தூர்தர்ஷன் தமிழ் படம்,
இப்படி எத்தனையோ நினைவுகள் பதிந்த
மாலை நான்கு மணி//


மீ டூ!

அய்யோ ஞாபகம் படுத்திட்டீங்களே :(((

மீ த ஸ்டார்ட் கிரையிங்க் :(

ஊர் போகும் நாள் வரும் வரையில்

நினைவுகள் சுமந்து நின்றிருப்போம்

பரவசம் பரவசம் அந்த வாழ்க்கை வாழ்வதில் பரவசமோ!

Punarvasu said...

divs, suuper! esp, the first kavidhai. these days ur writing never fails to impress me :)

நாகை சிவா said...

AMEN :)

தாரணி பிரியா said...

திவ்யா நான் வெளி நாடு எல்லாம் போனதில்லை. ஆனா என் வீட்டை விட்டு வெளியில இருக்கற ஒவ்வொரு நிமிசமும் நாஇன் இந்த மாதிரிதான் ஃபீல் செய்வேன்.

மூணு மணி ஆயிடுச்சு. இப்ப இது செஞ்சுகிட்டு இருப்பாங்களே ‍இதே மாதிரிதான் எண்ணம் ஒடிக்கிட்டு இருக்கும்.

தாரணி பிரியா said...

// Raghav said...

நோ.. நோ.. நானெல்லாம் போனப்போ.. கையோட ஒருகிலோ கோத்தாஸ் காபி, காபி ஃபில்டர் கொண்டு போயிட்டேன்.. :)

நல்ல காபி இல்லாம உயிர் வாழ முடியுமா என்ன ?//

வழி மொழிகிறேன். காலையில காபி நல்லா இல்லாட்டா அன்னிக்கு ஆபிஸ்க்கு கிளம்பற வரைக்கும் எரிச்சலா இருக்கும்

Unknown said...

வாவ் அக்கா சூப்பர் சூப்பர் சூப்பர்.. உணர்வுகள ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க.. :)))

Unknown said...

//நான் துயில்கையில், நீ விழித்திருப்பதால் தானோ
தினமும் என் கனவுகளில் உலவுகிறாய்?//

ம்ம்ம்ம் :)))))))

Unknown said...

//நீ துயில்கையில், உன்னோடு பேச முடியாமல்
சூரியனை சபித்தபடி பொழுதை கழிக்கிறேன்…//

உண்மை :((

Unknown said...

//இன்று கேப்பச்சீனோ கோப்பையுடன் தனிமையில் கழிகிறது,
அங்கே இப்பொழுது நடுநிசி என்ற நினைப்போடு…//

:(((((((( ம்ம்ம்ம்..

priyamudanprabu said...

//////
பேருந்துப் படிக்கட்டுப் பயணம்,
நாசி துழைக்கும் சிற்றுண்டி மனம்,
அம்மாவின் சிரித்த முகம்,
சோம்பல் ததும்பும் விடுமுறை நாட்கள்,
ஞாயிறு தூர்தர்ஷன் தமிழ் படம்,
////////

ஆமாங்க ஆமா......
எனக்கும்தான் ஏக்கமா இருக்கு

gayathri said...

நான் துயில்கையில், நீ விழித்திருப்பதால் தானோ
தினமும் என் கனவுகளில் உலவுகிறாய்?

நீ துயில்கையில், உன்னோடு பேச முடியாமல்
சூரியனை சபித்தபடி பொழுதை கழிக்கிறேன்

intha lines nalla iruku pa

logu.. said...

\\நான் துயில்கையில், நீ விழித்திருப்பதால் தானோ
தினமும் என் கனவுகளில் உலவுகிறாய்?//

Fentastic..

மேவி... said...

"நான் துயில்கையில், நீ விழித்திருப்பதால் தானோ
தினமும் என் கனவுகளில் உலவுகிறாய்?

நீ துயில்கையில், உன்னோடு பேச முடியாமல்
சூரியனை சபித்தபடி பொழுதை கழிக்கிறேன்…"

my words search their meaning
when u r there....
my dress dont hav freshness
without ur hug.....
my eyes often go blind
even they r open
when i see ur photo...
i only see american news
bcause u will be seeing
tht only...
whatta strange feeling
my heart beats are heard
in a room
in america......
still ur arrival
my life goes meaningless


how s ths...

i also tried writtin some lines...

nice post:-))

ஜியா said...

//நாசி துழைக்கும் சிற்றுண்டி மனம்,
//

I guess some slip of fingers here ;)

gud one... still some scope to improve :)) [Ithellaam note pannikittu naan eppaiyaavathu kavujainu ethavathu podumpothu vanthu kalaaikka koodaathu ;))]

Divya said...

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு திவ்யப்ரியா:))

Divya said...

மனதின் ஏக்கத்தை........வரிகள் அழகாக வெளிப்படுத்துகிறது!!

MSK / Saravana said...

ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க..

Anonymous said...

"தனிமை" கவிதை அருமை...

வாழ்த்துக்கள்...

Shiva.G said...

:):):) awesome .. ippa dhaan padichen.. arpudham.. indha kavidhaya vida.. andha title dhaan gummmm.. "unakkum enakkum idaye oru boologam" .. eppdi eppdi idhellaa.. :)

Anonymous said...

Wow really gd kavithai..arumai...
//இன்று கேப்பச்சீனோ கோப்பையுடன் தனிமையில் கழிகிறது,
அங்கே இப்பொழுது நடுநிசி என்ற நினைப்போடு…// - en nilamai niyapakam vanthathu....! Nice kavithai...

Poornima Saravana kumar said...

ரொம்ப அழகா உங்க உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கீங்க!!

Anonymous said...

//நான் துயில்கையில், நீ விழித்திருப்பதால் தானோ
தினமும் என் கனவுகளில் உலவுகிறாய்?//
unga aal onsitela irukaro?? hehee

Anonymous said...

anony=me and me = gils :D

Divyapriya said...

//Anonymous said...

//நான் துயில்கையில், நீ விழித்திருப்பதால் தானோ
தினமும் என் கனவுகளில் உலவுகிறாய்?//
unga aal onsitela irukaro?? hehee
//

hello...யாருப்பா அது, அனானியா வந்து இப்படி அநியாயம் பண்றது?
இது வெளியூர்ல இருக்கற வேற பாசமிகு உறவுகளுக்காக :))

Divyapriya said...

// Anonymous said...

anony=me and me = gils :D//

why this murder veri??

sri said...

நான் துயில்கையில், நீ விழித்திருப்பதால் தானோ
தினமும் என் கனவுகளில் உலவுகிறாய்?

Warey wa!!

Muthusamy Palaniappan said...

உணர்வுகள் வேறேதுவுமில்லை...அழகு