இந்த தொடர் விளையாட்டில் என்னை மாட்டி விட்ட திவ்யப்ரியாவுக்கு ர்ர்ர்ர்ர்ர் நன்றி (என்ன முழிக்கறீங்க? நானா தான போய் சரவணகுமார் தொடர் பதிவுல மாட்டிகிட்டேன் :-( கத்திரிக்காய், சாரி சாரி காதல பத்தி ஏதோ எழுதி இருக்கேன்…பாத்து கொஞ்சம் பாஸ் மார்க் போடுங்க…)
***
காதல் எனப்படுவது யாதெனில்…
வேறென்ன? வெறும் பேராசை தான்…
பின்னே?
கண் மூடி கண் திறக்கும் போதெல்லாம்,
நீ தெரிய வேண்டும் என்றல்லவா ஆசைப்படுகிறேன்…
***
என்ன பெரிய காதல், கத்திரிக்காய்?
இப்படித் தான் கொக்கரித்துக் கொண்டிருந்தேன்…
உன்னை பார்க்கும் வரை…
இப்படித் தான் கொக்கரித்துக் கொண்டிருந்தேன்…
உன்னை பார்க்கும் வரை…
***
பல மையில்களுக்கு அப்பால் நீ சென்ற பிறகும் கூட,
என் கண்களின் உள்ளே என் உருவம் தெரிவதெப்படி?
என் கண்களின் உள்ளே என் உருவம் தெரிவதெப்படி?
***
காதல் என்றால் என்னவென்று,
தூக்கத்தின் ஊடே எழுப்பிக் கேட்டாலும் சொல்வேன்…
நீ என்று!!!
***
உன் மெளனங்களின் அர்த்தம் கூட புரிகிறதே…
இந்த காதல் வந்த பின்னாலே…
***
காதல் என்றால் என்னவென்பதை பற்றி
கவிதைகள் பல,
கிறுக்கிக் கொண்டே இருக்கிறேன்…
பேனாவில் மை தீர்ந்து விட்டது கூட தெரியாமல்…
சும்மாவா சொன்னார்கள்?
காதலுக்கு கண்ணில்லை என்று?
***
“காதல் எனப்படுவது யாதெனில்” இந்த தலைப்பை இரு காதலர்களிம் கொடுத்துப் பார்த்தேன் (சும்மா கற்பனையில் தான் ;-) )…
அப்போது அவர்களுக்கிடையே நடந்து ஒரு சிறு சொல்லாடல்…
காதல் என்றால்?
விட்டுக் கொடுத்தல்…
விட்டுக் கொடுத்தல் என்றால்?
எனக்கான உன் கண்ணீர்…
எனக்கான உன் கண்ணீர் என்றால்?
அன்பின் வெளிப்பாடு…
அன்பின் வெளிப்பாடு என்றால்?
பாசப் பறிமாற்றம்…
பாசப் பறிமாற்றம் என்றால்?
நேசத்தின் உச்சகட்டம்…
நேசத்தின் உச்சகட்டம் என்றால்?
நான்…
நான் என்றால்?
நீ தான்…
நீ என்றால்?
காதல்…
காதல் என்றால்?
மீண்டும் முதல் வரியில் இருந்து ஆரம்பித்து விட்டார்கள்!
அடச்சே…இப்போ நான் சொல்கிறேன் கேளுங்கள்…
காதலர்கள் என்றால்?
பைத்தியங்கள்…
***
சரி, எனக்கு தெரிந்த ஒரு நாலு பேரிடம் "காதல் எனப்படுவது யாதெனில்"…விளக்குங்கள் என்று கேட்டேன்…
அனு: அது ஒரு வலி…
கவிதா: காதல்? அதெல்லாம் சுத்த பேத்தல்…
இளமதி: அது ஒரு உணர்வு…சரியான தருணத்தில் சரியான நபர் மீது மட்டும் தான் வரணும்…
பாலா: என்ன பொறுத்த வரைக்கும் காதல் கல்யாணத்துல தான் முடியனும்ன்னு எந்த அவசியமும் இல்ல…இப்போதைக்கு, எனக்கு it’s just a time pass…அவ்ளோ தான்…
அட, யாரு இவங்கெல்லாம்ன்னு முழிக்கறீங்களா? இவங்க தாங்க, என்னோட அடுத்த தொடர் கதை “3rd year” ல வர முக்கிய கதா பாத்திரங்கள்…
கதைக்கு இந்த intro போதுமா? ;-)
விதிமுறைகள்
1. பதிவின் தலைப்பு - “காதல் எனப்படுவது யாதெனில்…” (மாற்றக்கூடாது).
2. என்ன பதிவிடலாம் - இது தான் எழுதணும் என்கிற கட்டாயம் கிடையாது. பதிவு எதைப்பற்றி வேண்டுமானால் இருக்கலாம். கதை, கவிதை, நக்கல், கட்டுரை, மொக்கை………. என்ன வேணும்னா எழுதுங்க உங்கள் விருப்பம். (ஆனால் தலைப்போட கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கணும்)
3. பதிவு போட இன்னும் ஒருவரை அழைக்கணும். முன்பெல்லாம் இரண்டு மூன்று பேர் அழைக்கப்பட்டதால் தொடர் சங்கிலிகள் எங்காவது ஒரு தொடர்பு அறுந்தாலும் அவை கொஞ்சம் பயணித்தன. இங்கு ஒருவர் தான் அழைக்கப்படுகிறார் அதனால் நீங்கள் அழைப்பவரின் வசதியைக் கேட்டுவிட்டு கூப்பிடுங்கள்.
நான் அழைப்பவர் – என் அன்புத் தோழி ரம்யா
59 comments:
கத்தரிக்காய் எனப்படுவது யாதெனில்னு தலைப்பு வச்சிருந்தா நல்லாருக்கும்.. :)
அப்புடியே கத்தரிக்காய் எத்தனை வகை, எது சொத்தை, எது நல்லது.. அத வச்சு கூட்டு, பொறியல், சாம்பார் எப்புடி பண்ணுறதுன்னு சொல்லிருந்தா நல்லா இருந்துருக்கும்
//காதலர்கள் என்றால்?
பைத்தியங்கள்…//
ஒத்துக்கொள்ள முடியாதது.. எதைவைத்து இப்படி சொல்கிறீர்கள்?
//இந்த தொடர் விளையாட்டில் என்னை மாட்டி விட்ட திவ்யப்ரியாவுக்கு ர்ர்ர்ர்ர்ர் நன்றி (என்ன முழிக்கறீங்க? நானா தான போய் சரவணகுமார் தொடர் பதிவுல மாட்டிகிட்டேன் :-(//
கலக்கல்.. இப்படி கூட ஒரு இன்ட்ரோ கொடுக்க முடியுமா??
//பின்னே?
கண் மூடி கண் திறக்கும் போதெல்லாம்,
நீ தெரிய வேண்டும் என்றல்லவா ஆசைப்படுகிறேன்… //
அடடா.. இதுவல்லவோ பேராசை..
//என்ன பெரிய காதல், கத்திரிக்காய்?
இப்படித் தான் கொக்கரித்துக் கொண்டிருந்தேன்…
உன்னை பார்க்கும் வரை… //
சரி கோழி..
;)
//என்ன பெரிய காதல், கத்திரிக்காய்?
இப்படித் தான் கொக்கரித்துக் கொண்டிருந்தேன்…
உன்னை பார்க்கும் வரை… //
சரி கோழி.. சேச்சே.. சாரி.. தோழி..
//காதல் என்றால் என்னவென்பதை பற்றி
கவிதைகள் பல,
கிறுக்கிக் கொண்டே இருக்கிறேன்…
பேனாவில் மை தீர்ந்து விட்டது கூட தெரியாமல்…
சும்மாவா சொன்னார்கள்?
காதலுக்கு கண்ணில்லை என்று?//
பின்னீட்டீங்க போங்க..
//அட, யாரு இவங்கெல்லாம்ன்னு முழிக்கறீங்களா? இவங்க தாங்க, என்னோட அடுத்த தொடர் கதை “3rd year” ல வர முக்கிய கதா பாத்திரங்கள்…
கதைக்கு இந்த intro போதுமா? ;-)//
அடபாவிகளா.. இப்படியும் ஒரு விளம்பரமா??
நோட் பண்ணிக்கிறேன்..:)
திவ்யப்ரியா.. உங்கள் தளத்தின் தமிழ்மணம் toolbar எங்கே?? தெரியமாட்டேனேன்கிறது..
Please check..
கவுஜையில் நகைச்சுவையையும் சேர்த்தது அருமை...
//காதலர்கள் என்றால்?
பைத்தியங்கள்…//
:))) உண்மைய இப்படியெல்லாம் போட்டு உடைக்கக் கூடாது அம்மணி...
//தொடர் கதை “3rd year” ல வர முக்கிய கதா பாத்திரங்கள்…//
கலக்கறீங்க... உங்களுக்கு மட்டும் எப்படிங்க கதை கெடக்குது?? நானும் தலகீழ நின்னு தண்ணி குடிச்சிப் பாத்தும் ஒன்னும் தேற மாட்டேங்குது :(((
\\பல மையில்களுக்கு அப்பால் நீ சென்ற பிறகும் கூட,
என் கண்களின் உள்ளே என் உருவம் தெரிவதெப்படி?
\\
\\காதல் என்றால் என்னவென்பதை பற்றி
கவிதைகள் பல,
கிறுக்கிக் கொண்டே இருக்கிறேன்…
பேனாவில் மை தீர்ந்து விட்டது கூட தெரியாமல்…
சும்மாவா சொன்னார்கள்?
காதலுக்கு கண்ணில்லை என்று?
\\
:) ரூம் போட்டு யோசிப்பீங்களோ?? சூப்பர்
என்னப்பா இந்த சின்ன அறியாப்பொண்ண காதல பத்தி எழுதசொல்றீங்களே..இதுக்கு எந்த பாட்டிக்கிட்ட ஹெல்ப் கேப்பேன் :((
ஹிம்ம் என்ன சொல்றீங்க "திவ்யா" பாட்டிகிட்டாயா..சரி முயற்சிக்கறேன்!!
//இந்த தொடர் விளையாட்டில் என்னை மாட்டி விட்ட திவ்யப்ரியாவுக்கு ர்ர்ர்ர்ர்ர் நன்றி (என்ன முழிக்கறீங்க? நானா தான போய் சரவணகுமார் தொடர் பதிவுல மாட்டிகிட்டேன்//
//காதல் எனப்படுவது யாதெனில்…
வேறென்ன? வெறும் பேராசை தான்…பின்னே?
//
காதல் பத்தி எழுத அவ்வளவு ஆசையா? சாரி பேராசையா :))
//என்ன பெரிய காதல், கத்திரிக்காய்?
இப்படித் தான் கொக்கரித்துக் கொண்டிருந்தேன்…
உன்னை பார்க்கும் வரை…//
பின்றீங்க அம்மணி
//காதலர்கள் என்றால்?
பைத்தியங்கள்…//
நான் பார்த்த சில காதலர்கள் இப்படி தான் ..
//அட, யாரு இவங்கெல்லாம்ன்னு முழிக்கறீங்களா? இவங்க தாங்க, என்னோட அடுத்த தொடர் கதை “3rd year” ல வர முக்கிய கதா பாத்திரங்கள்…
கதைக்கு இந்த intro போதுமா? ;-)
//
தெய்வமே... நீங்க எங்கியோயோயோயோ போய்ட்டீங்க...
(அபூர்வ சகோதரர்கள் ஸ்டைல்ல படிங்க....)
//கத்தரிக்காய் எனப்படுவது யாதெனில்னு தலைப்பு
வச்சிருந்தா நல்லாருக்கும்.. :)//
ரிபீட்டு...
//ஒத்துக்கொள்ள முடியாதது.. எதைவைத்து இப்படி சொல்கிறீர்கள்?//
நான் ஒத்துக்கறேன் , ஏன்னா நான் பார்த்த காதலர்கள் ரொம்ப பைத்தியக்கார தனமா இருந்திருக்காங்க..
அக்கா கலக்கிட்டீங்க..!! :))
//இந்த தொடர் விளையாட்டில் என்னை மாட்டி விட்ட திவ்யப்ரியாவுக்கு ர்ர்ர்ர்ர்ர் நன்றி (என்ன முழிக்கறீங்க? நானா தான போய் சரவணகுமார் தொடர் பதிவுல மாட்டிகிட்டேன் :-( கத்திரிக்காய், சாரி சாரி காதல பத்தி ஏதோ எழுதி இருக்கேன்…பாத்து கொஞ்சம் பாஸ் மார்க் போடுங்க…)//
சொந்த காசில சூனியம் வெசுப்பாங்கன்னு கேள்விபட்ருக்கேன் பட் இப்ப தான் பார்க்கிறேன்..!! ;))
//காதல் எனப்படுவது யாதெனில்…
வேறென்ன? வெறும் பேராசை தான்…
பின்னே?
கண் மூடி கண் திறக்கும் போதெல்லாம்,
நீ தெரிய வேண்டும் என்றல்லவா ஆசைப்படுகிறேன்… //
இது கொஞ்சம் ஓவர் தான்..!! :))நரி முகத்துல முழிச்சா நல்லது தான் பட் நரியவே பக்கத்துல வெச்சுக்கலாம்னு ஆசைப்படலாமோ?? ;))
//என்ன பெரிய காதல், கத்திரிக்காய்?
இப்படித் தான் கொக்கரித்துக் கொண்டிருந்தேன்…
உன்னை பார்க்கும் வரை…//
அச்சச்சோ ஏமாந்துட்டீங்களே அக்கா..!! :( காதல் கத்திரிக்காய் இதெல்லாம் உடம்புக்கு+மனதுக்கு ஆகாது..!! :((
//பல மையில்களுக்கு அப்பால் நீ சென்ற பிறகும் கூட,
என் கண்களின் உள்ளே என் உருவம் தெரிவதெப்படி? //
பல மைல் போனப்பிறகு தான் தெரியுதா?? அப்ப உங்களுக்கு கிட்டப் பார்வையா இருக்கும்..!! ;))
//காதல் என்றால் என்னவென்று,
தூக்கத்தின் ஊடே எழுப்பிக் கேட்டாலும் சொல்வேன்…
நீ என்று!!! //
நீங்க படிக்கற காலத்துல A,B,C,D..Essays எல்லாம் தூக்கத்துல சொல்லிப் பழக்கமா???? ;))
//காதல் என்றால் என்னவென்பதை பற்றி
கவிதைகள் பல,
கிறுக்கிக் கொண்டே இருக்கிறேன்…
பேனாவில் மை தீர்ந்து விட்டது கூட தெரியாமல்…
சும்மாவா சொன்னார்கள்?
காதலுக்கு கண்ணில்லை என்று?//
:((((
//காதலர்கள் என்றால்?
பைத்தியங்கள்…//
அக்கா இது மட்டும் உங்க கருத்தா இருந்ததுனா... நீங்களும் நானும் ஒரே வேவ் லேன்த்ல இருக்கோம்னு அர்த்தம்...!! :))
//அட, யாரு இவங்கெல்லாம்ன்னு முழிக்கறீங்களா? இவங்க தாங்க, என்னோட அடுத்த தொடர் கதை “3rd year” ல வர முக்கிய கதா பாத்திரங்கள்…
கதைக்கு இந்த intro போதுமா? ;-)//
அக்கா சூப்பர் intro தில் தோ பாகல் ஹை மாதிரி..!! :)) Waitting for ur next story..!! :))
யக்கா மொத்தத்துல குடுத்த வேலையா ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர்ரா செஞ்சிருக்கீங்க...!! :)) எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது பதிவு அதான் பூந்து விளையாடிட்டேன்..!! ;))
சும்மா சுத்தி சுத்தி ரவுண்டு கட்டி அடிக்கறீங்க.
கத்தறிகாயெல்லாம் எவ்வளவு நல்லா இருக்கு. ஏதாவது காய்கறி கடையில போய் ஃபோடோ எடுத்து போட்டீங்களா?
\\காதலர்கள் என்றால்?
பைத்தியங்கள்…\\
காதலர்கள் யாராவது கேட்டால் செருப்பைக் கழட்டி அடிப்பாங்க!!
\\காதல் என்றால்?
விட்டுக் கொடுத்தல்…\\
கல்யாணம் என்றால்
கணவன் மட்டுமே
விட்டுக்கொடுத்தல்!! :-)
சீக்கிரம் "3rd year" எழுதிடுங்க!!
//முகுந்தன் said...
நான் ஒத்துக்கறேன் , ஏன்னா நான் பார்த்த காதலர்கள் ரொம்ப பைத்தியக்கார தனமா இருந்திருக்காங்க..
//
ஓஹோ.. எனக்கு நேற்று தெரிய வந்த ஒரு விஷயம், நேற்று வரை என் நண்பனாக இருந்த ஒருவனின் அக்கா (உடல் ஊனமுற்றவர்) 34 வயது, தான் விரும்புபவரை மணமுடிக்க இரண்டு வருடம் போராடியும் பலனில்லை. ஏனென்றால் பையன் வேறு சாதி. இறுதியில் அவரே முடிவெடுத்து கல்யாணம் செய்து கொண்டு விட்டார். என் நண்பரின் குடும்பத்தார் செய்த வேலை என்ன தெரியுமா ??? அவர் இறந்ததாக கருதி ஒரு புரோகிதரை அழைத்து வந்து நீத்தார் கடன்(திதி) செய்துள்ளனர். இப்படி ஒரு செயலை செய்தவர்கள் பைத்தியமா அல்லது அந்த காதலர்களா ??
//விஜய் said...
காதலர்கள் யாராவது கேட்டால் செருப்பைக் கழட்டி அடிப்பாங்க!! //
மன்னிக்கனும் விஜய் வார்த்தைகளின் வீரியம் அதிகமாக உள்ளது. சொல்வது நம்ம திவ்யப்ரியா தானே, அமைதியாவே சொல்வோம்..
நாம் பார்த்த ஒரு சிலரை வைத்து இதுதான் உண்மைன்னு எப்புடி சொல்றீங்க தி.பி, முகுந்தன் ? நானும் சில உதாரணங்கள் மூலம் அப்படி கிடையாதுன்னு சொல்ல முடியும். அது முடிவாகாது. காதல் அவரவர் தனிப்பட்ட விஷயம். நல்ல காதலர்களின் கடமை, அவர்களின் பெற்றோர் சம்மதத்தை முடிந்தவரை போராடிப் பெறுவது. நல்ல பெற்றோர்களின் கடமையும் அதுவே, ஊரார் என்ன நினைப்பரோ, உறவினர் என்ன நினைப்பரோ, என்று மற்றவர்களுக்காக வாழ்வதை விட்டு தமக்காக, தம் குழந்தைகளுக்காக வாழ வேண்டும்.
@Raghav
// //விஜய் said...
காதலர்கள் யாராவது கேட்டால் செருப்பைக் கழட்டி அடிப்பாங்க!! //
மன்னிக்கனும் விஜய் வார்த்தைகளின் வீரியம் அதிகமாக உள்ளது. சொல்வது நம்ம திவ்யப்ரியா தானே, அமைதியாவே சொல்வோம்..//
விஜய் சும்மா விளாட்டுக்கு சொல்லி இருப்பார்,
ஃபீரியா விடுங்க :-)
// நாம் பார்த்த ஒரு சிலரை வைத்து இதுதான் உண்மைன்னு எப்புடி சொல்றீங்க தி.பி, முகுந்தன் ? நானும் சில உதாரணங்கள் மூலம் அப்படி கிடையாதுன்னு சொல்ல முடியும். அது முடிவாகாது. காதல் அவரவர் தனிப்பட்ட விஷயம். நல்ல காதலர்களின் கடமை, அவர்களின் பெற்றோர் சம்மதத்தை முடிந்தவரை போராடிப் பெறுவது. நல்ல பெற்றோர்களின் கடமையும் அதுவே, ஊரார் என்ன நினைப்பரோ, உறவினர் என்ன நினைப்பரோ, என்று மற்றவர்களுக்காக வாழ்வதை விட்டு தமக்காக, தம் குழந்தைகளுக்காக வாழ வேண்டும்.//
காதலர்கள், சில நேரம் சில அழகான கிறுக்குத் தனமான காரியங்கள செய்வாங்க (உதாரணதுக்கு இந்த பதிவுல இருந்த சொல்லாடல் மாதிரி), அதனால குறும்பா ’பைத்தியங்கள்’ அப்டீன்னு தெரியாத்தனமா சொல்லிட்டேன்…நான் அப்பாவி…என்ன விட்டுங்க ;-)
“மற்றவர்களுக்காக வாழ்வதை விட்டு தமக்காக, தம் குழந்தைகளுக்காக வாழ வேண்டும்”
இத நானும் வழி மொழிகிறேன்…
//அதனால குறும்பா ’பைத்தியங்கள்’ அப்டீன்னு தெரியாத்தனமா சொல்லிட்டேன்…நான் அப்பாவி…என்ன விட்டுங்க ;-)
//
அது எப்புடிங்க விட முடியும்.. நீiங்க ஒரு பெரிய்ய்ய எழுத்தாளர், இந்த மாதிரி விவாதங்கள் சூடு கிளப்ப வேண்டாமா :)
//காதலர்கள், சில நேரம் சில அழகான கிறுக்குத் தனமான காரியங்கள செய்வாங்க//
இது சூப்பரு..
காதல் எனப்படுவது யாதெனில்…
வேறென்ன? வெறும் பேராசை தான்…
பின்னே?
கண் மூடி கண் திறக்கும் போதெல்லாம்,
நீ தெரிய வேண்டும் என்றல்லவா ஆசைப்படுகிறேன்
kavithai varigal armai.
//இப்படி ஒரு செயலை செய்தவர்கள் பைத்தியமா அல்லது அந்த காதலர்களா ??
//
//அது எப்புடிங்க விட முடியும்.. நீiங்க ஒரு பெரிய்ய்ய எழுத்தாளர், இந்த மாதிரி விவாதங்கள் சூடு கிளப்ப வேண்டாமா :)//
ஜூபர், நான் ரெடி...
ராகவ்,
நான் சொன்னது நான் பார்த்த காதலர்கள்.... இரண்டு மூன்று ஜோடிகள்.அவர்கள் நடந்து கொண்டது மிக கீழ்த்தரமானது. அதை இங்கே சொல்ல விரும்ப வில்லை.பெற்றோரிடம் சொல்லவே இல்லை. அவர்களாகவே முடிவெடுத்து,
அந்த குடும்பங்களும் சின்னா பின்னமானது.
நான் காதல் பைத்தியகாரத்தனம் என்று சொல்லவில்லை. பெற்றோரை சமாதான படுத்தி விரும்பியவரை மணக்க வேண்டும்.
/“மற்றவர்களுக்காக வாழ்வதை விட்டு தமக்காக, தம் குழந்தைகளுக்காக வாழ வேண்டும்”
//
இது காதலுக்கு மட்டுமில்லை , எல்லாவற்றிற்குமே அற்புதமான கருத்து.
//ஜூபர், நான் ரெடி...ராகவ்,
அண்ணா, மீ ஒன் ஸ்மால் பையன்.. :) மல்யுத்தத்துக்கு நான் தயார் இல்லை.. சும்மா உதார் விடுற பார்ட்டி நானு..
//நான் சொன்னது நான் பார்த்த காதலர்கள்.... //
கண்டிப்பாக கண்டிக்கப்படவேண்டியவர்களே.. இதில் சிலரை வைத்து மட்டும் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாது என்று தான் சொல்கிறேன். பொதுவாக காதலர்களை தான் விட்டுக் கொடுக்க சொல்கிறார்கள். பொதுவாக மற்றவரிடம் சென்று “விட்டுக்கொடுங்கள்” என்று சொல்வதற்கு பதிலாக, “உனக்காக நான் விட்டுக்கொடுக்கிறேன்” என்று ஏன் சொல்ல முடிவதில்லை ?
//அண்ணா, மீ ஒன் ஸ்மால் பையன்.. :) மல்யுத்தத்துக்கு நான் தயார் இல்லை.. சும்மா உதார் விடுற பார்ட்டி நானு..
//
ராம்நாட் சிங்கம் இப்படி சொல்லிட்டா நான் என்ன செய்வேன் ?
//“உனக்காக நான் விட்டுக்கொடுக்கிறேன்” என்று ஏன் சொல்ல முடிவதில்லை ?//
மானம் , மரியாதை,(வறட்டு) கவுரவம் போய்டுமே?
முதலில் ஒத்து கொள்ளாதவர்கள் ஒரு குழந்தை பிறந்ததும்
ஒத்து கொள்கிறார்கள்..அதை முதலில் செய்திருந்தால்
எல்லோரும் இன்பமாய் இருந்திருக்கலாம்...
ஆனால்......
பிள்ளைகளும் காதலுக்காக பெற்று வளர்த்து,எல்லாமுமாய் இருந்த பெற்றோரை காதலுக்காக
தூக்கி எரிய வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.
இதில் சரி,தவறு என்று எதுவும் கிடையாது.இரண்டு பக்கமும் ஞ்யாயங்கள் இருக்க தான் செய்கிறது....
//மானம் , மரியாதை,(வறட்டு) கவுரவம் போய்டுமே?
முதலில் ஒத்து கொள்ளாதவர்கள் ஒரு குழந்தை பிறந்ததும்
ஒத்து கொள்கிறார்கள்..அதை முதலில் செய்திருந்தால்
எல்லோரும் இன்பமாய் இருந்திருக்கலாம்...//
அட்டகாசம்..
//ராம்நாட் சிங்கம் இப்படி சொல்லிட்டா நான் என்ன செய்வேன் ?
//
ஆஹா.. ஊரை ஞாபகப்படுத்திட்டீகளே.. சிங்கம் ரெண்டு நாள் காட்டுக்கு(பரமக்குடி) போகுது.. திங்கள் வந்து கும்மியில் கலக்கிறேன்..
//உன் மெளனங்களின் அர்த்தம் கூட புரிகிறதே…
இந்த காதல் வந்த பின்னாலே…//
Super..........
//காதல் என்றால் என்னவென்பதை பற்றி
கவிதைகள் பல,
கிறுக்கிக் கொண்டே இருக்கிறேன்…
பேனாவில் மை தீர்ந்து விட்டது கூட தெரியாமல்…
சும்மாவா சொன்னார்கள்?
காதலுக்கு கண்ணில்லை என்று?//
காதலுக்கு கண் இல்லைனா இது தானா? ;)
//மீண்டும் முதல் வரியில் இருந்து ஆரம்பித்து விட்டார்கள்!
அடச்சே…இப்போ நான் சொல்கிறேன் கேளுங்கள்…
காதலர்கள் என்றால்?
பைத்தியங்கள்…//
ரூம் போட்டு யோசிப்பீங்களோ? ;)
எல்லா கவிதைகளும் நச் :)
கலக்கல்
காதல் பத்தி அநியாயத்துக்கும் அலசிட்டீங்க... வாழ்த்துகள்...!
3rd Year எப்போங்க ரிலீஸ்...?
//Raghav said...
கத்தரிக்காய் எனப்படுவது யாதெனில்னு தலைப்பு வச்சிருந்தா நல்லாருக்கும்.. :)//
:))
-----------------
@ Saravana Kumar MSK
கோழியா? அடப்பாவமே ;-)
//அடபாவிகளா.. இப்படியும் ஒரு விளம்பரமா??
நோட் பண்ணிக்கிறேன்..:)//
நோட் பண்ணா மட்டும் போதாது, சீக்கரம் ஒரு கதைய போடுங்க ;-)
---------------
ஜி said...
//கவுஜையில் நகைச்சுவையையும் சேர்த்தது அருமை...
//காதலர்கள் என்றால்?
பைத்தியங்கள்…//
:))) உண்மைய இப்படியெல்லாம் போட்டு உடைக்கக் கூடாது அம்மணி...
//தொடர் கதை “3rd year” ல வர முக்கிய கதா பாத்திரங்கள்…//
கலக்கறீங்க... உங்களுக்கு மட்டும் எப்படிங்க கதை கெடக்குது?? நானும் தலகீழ நின்னு தண்ணி குடிச்சிப் பாத்தும் ஒன்னும் தேற மாட்டேங்குது :(((//
நன்றி ஜி...நேரா நின்னு தண்ணி குடிச்சிப் கதைய யோசிச்சி பாருங்க ;-)
Ramya Ramani said...
//:) ரூம் போட்டு யோசிப்பீங்களோ?? சூப்பர்
என்னப்பா இந்த சின்ன அறியாப்பொண்ண காதல பத்தி எழுதசொல்றீங்களே..இதுக்கு எந்த பாட்டிக்கிட்ட ஹெல்ப் கேப்பேன் :((
ஹிம்ம் என்ன சொல்றீங்க "திவ்யா" பாட்டிகிட்டாயா..சரி முயற்சிக்கறேன்!!//
திவ்யா பாட்டிகிட்டயா? சரியான ஆளு தான் ;-)
-------------
@முகுந்தன்
நன்றி முகுந்தன்
-------------
@ஸ்ரீமதி
போட்டு தாக்கினதுக்கு ரொம்ப நன்றி ஸ்ரீ...
ஸ்ரீமதி said...
//காதலர்கள் என்றால்?
பைத்தியங்கள்…//
//அக்கா இது மட்டும் உங்க கருத்தா இருந்ததுனா... நீங்களும் நானும் ஒரே வேவ் லேன்த்ல இருக்கோம்னு அர்த்தம்...!! :))//
என் கருத்தன்னு சொன்னா, சில பேரு அடிக்க வந்துருவாங்க போல இருக்கே ;-) சொன்னாலும், சொல்லாட்டியும், நம்ம ஒரே வேவ் லேன்த்ல தான் இருக்கோம் :-)
விஜய்
//சும்மா சுத்தி சுத்தி ரவுண்டு கட்டி அடிக்கறீங்க.//
;-)
//கத்தறிகாயெல்லாம் எவ்வளவு நல்லா இருக்கு. ஏதாவது காய்கறி கடையில போய் ஃபோடோ எடுத்து போட்டீங்களா?//
உங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சுன்னு prove பண்றீங்க விஜய் ;-)
-----------
//Raghav said...
//காதலர்கள், சில நேரம் சில அழகான கிறுக்குத் தனமான காரியங்கள செய்வாங்க//
இது சூப்பரு..//
தாங்ஸு :))
---------------
gayathri said...
//kavithai varigal armai.//
Thanks a lot gayathri
@Murugs
Round கட்டி கமெண்ட் போட்டதுக்கு நன்றி Murugs…
-------------------
//திகழ்மிளிர் said...
கலக்கல்//
நன்றி திகழ்மிளிர்
-------------------
//மதி said...
காதல் பத்தி அநியாயத்துக்கும் அலசிட்டீங்க... வாழ்த்துகள்...!
3rd Year எப்போங்க ரிலீஸ்...?//
அப்படியா? நன்றி மதி. 3rd Year இன்னும் ரெண்டு வாரத்தில :-)
Attagasam Divyapriya!!!
kalakkals:)))
Kavithaikal ellamey romba alaga irukku, superb!!
nice one..
personally liked it!!
typical divs style... :) i can actually hear u commenting like that...only thing missing is our PG atmosphere !! :)
romba naal kazhichi un blog iniku dhan padikkaren! keep going...nalla irukku.
ரமணன்
நன்றி ரமணன்
---
rathnaK
Thanks rathna…
---
Punarvasu said…
//typical divs style... :) i can actually hear u commenting like that...only thing missing is our PG atmosphere !! :)
romba naal kazhichi un blog iniku dhan padikkaren! keep going...nalla irukku.
//
:)) thanks aish…
Really all r wonderfull... sry i have stolen so many in this....!
Gowtham ;-)
காதல் என்றால் என்னவென்று,
தூக்கத்தின் ஊடே எழுப்பிக் கேட்டாலும் சொல்வேன்…
நீ என்று!!!
cute lines...
supeprp..
அருமை
Post a Comment