Saturday, September 13, 2008

சிக்கன் பாக்ஸ் - 4

பகுதி – 4
பகுதி 1

பகுதி 2

பகுதி 3

“டெல்லி…எத்தனையோ போராட்டங்கள பாத்த ஒரு நகரம், என் மனப் போராட்டங்களும் மறுபடியும் ஆரம்பிச்ச நகரம்”

“வேலை விஷயமா நான் டெல்லி போய் இருந்தேன்…என் காதல் எனக்கு தெரிஞ்சு, அவளுக்கும் தெரிஞ்சு, அதுக்கு அப்புறம் அந்த கலவையான உணர்ச்சி பிரபாவங்கள்ள இருந்து ஓரளவுக்கு ரெண்டு பேருமே மீண்டு வந்திருந்த நேரம்”

“டெல்லியில இருந்து அவளுக்கு ஃபோன் செஞ்சேன்…அவளுக்கு டெல்லில இருந்து என்ன வேணும்ன்னு கேட்டேன்…அவளும், விளையாட்டா, எனக்கு ஒரு தாஜ்மஹால் ஷோ பீஸ் வேணும்ன்னு சொன்னா…”

“ஹ்ம்ம், அப்புறம்?”

“தாஜ்மஹால் தான? நாளைக்கு ஆக்ரா போறேன், அங்கயே போய், கண்டிப்பா வாங்கிட்டு வந்துடறேன்னு சொன்னேன்…ஆனா அவ சிரிச்சுகிட்டே, ’இல்ல, இல்ல, எனக்கு வெள்ள கலர் தாஜ்மஹால் வேண்டாம், மஞ்சளும், மெஜெந்தா கலரும் கலந்த மாதிரி இருக்குற தாஜ் மஹால் வேணும்’ ன்னு கேட்டா…அவளுக்கு எதுவும் வேண்டாம்ங்கறத தான் அவ அப்படி என்கிட்ட சொன்னான்னு எனக்கு புரிஞ்சுது…”

“என்ன செஞ்ச? ஒரு வெள்ள தாஜ்மஹால் வாங்கி, பெயிண்ட் பண்ணி குடுத்திட்டியா?”

“ச்சே, இல்லடா…அவளுக்காக ஆசை ஆசையா தேடி, ஒரு அழகான வெள்ளை தாஜ்மஹால வாங்கினேன்…ஏனோ, உலகத்தையே வாங்கிட்டதா ஒரு இருமாப்பு, ஒரு சந்தோஷம். வாங்கிட்டு ரூம்முக்கு வந்தப்ப தான் படீர்ன்னு யாரோ அடிச்ச மாதிரி இருந்துச்சு. நட்புங்குற போர்வைக்குள்ள ஒளிஞ்சுகிட்டு அவளோட பழகிட்டு, மனசெல்லாம் நிறைஞ்ச காதலோட வாங்கின அந்த தாஜ்மஹால எப்படி அவ கிட்ட குடுக்கறது? நான் பண்றதெல்லாம் நியாயமான்னு எனக்கே தோணுச்சு”

“என்ன பண்ண அத?”

“அந்த தாஜ்மஹால அவ கிட்ட குடுக்கவே இல்ல, நானே வச்சிகிடேன்…இப்படியே மனசுக்குள்ள போராட்டங்களோட இதுக்கு மேல தொடர முடியாதுன்னு ஒரு கட்டத்துல தோனுச்சு, சரின்னு ஒரு முடிவெடுத்து, சூழல் மாறினா, எல்லாத்தையும் மறக்கலாம்ன்னு இங்க யு.யெஸ் வந்து படிப்ப கண்டின்யு பண்ணலாம்ன்னு முடிவு பண்ணேன்…”

“ஹ்ம்ம்…”

“அன்னிக்கு தான் ஆபிஸ்ல கடைசி நாள், ஷிவானி, எனக்கு முன்னாடியே படிக்கறதுக்காக, வேலைய விட்டுட்டு மும்பை போய்ட்டா…ஸோ, நாங்க ரெண்டு பேரு தான்…கடைசி நாள், பேசாம அந்த தாஜ்மஹால அவ கிட்டயே குடுத்தர்லாம்ன்னு முடிவு பண்ணேன்…அந்த தாஜ்மஹால எடுத்து அவ ட்ரா உள்ள வச்சிடேன், எப்பயும் போல ரெண்டு பேரும் காஃபிக்கு போனோம். அன்னிக்கு அந்த காஃபி ப்ரேக் முடியவே கூடாதுன்னு நான் ஆசைபட்டேன்…அவளும் அப்படி தான் நினைக்கனும்ன்னு கூட குழந்தை தனமா ஆசைப்பட்டேன்…”

“திரும்பி வந்து, அவ ட்ரா திறந்திருக்கறத பாத்தா, உள்ள இருந்த பார்சலையும் பாத்தா…”

“ஹ்ம்ம்ம்”

“என்ன பாத்து, ’என்னதிது’, அப்டீன்னு கேட்டா…நான், ’எனக்கென்ன தெரியும்? உன்னோட ட்ரா, என்ன இருக்குன்னு உனக்கு தான தெரியும’ ன்னு சொன்னேன்…”


“என்ன பாத்து செல்லமா முறைச்சிகிட்டே அந்த கவர திறந்தா, உள்ள இருந்தத பாத்து அவளுக்கு ஒரே ஆச்சர்யம்…இத எப்ப வாங்கினேன்னு கேட்டா…”

நான், “அன்னிக்கே வாங்கிட்டேன்…நீ கேட்ட மாதிரி மஞ்சள் அன்டு மெஜெந்தா கலர்ல இல்லாட்டியும், still…It’s a Tajmahal.” ன்னு சொன்னேன். ’நீ விரும்புற மாதிரியான துணை…நான் இல்ல, But still, என் மனசுல இருக்கறதும் உண்மையான காதல் தான்…’ ன்னு சொல்லத் துடிச்சேன். ஆனா சொல்லல.

“ச்சே…போடா, பேசாம மறுபடியும் சொல்லி பாத்திருந்துருக்கலாம்…”

“இல்ல ப்ரவீன், மனசும், கண்ணும் பேசாத பாஷையா உதடு பேசிட போகுது? முதல்ல இருந்தே, அவ என் காதல ஒத்துக்கணும், அவளும் என்ன காதலிக்கனும்ன்னு எனக்கு தோனினது இல்லடா, ஏன்னா…”

“உனக்கு அவள பத்தி தெரியும், அதான?”

“அதே தான்…இப்ப கூட நான் அவ கூட தினமும் பேசுறேன்…என்னோட பெஸ்டு ஃப்ரெண்டுஸ்ன்னா அதுல நிரு எப்பயுமே இருப்பா… என் அன்றாட வாழ்கைல அவளும் ஒரு அங்கமா இருக்கா…இருந்தாலும், என் முதல் காதல்ன்னா அது நிரு தான்! ஆனா, அதுக்காக தினமும், அவள நினச்சு உருகறதெல்லாம் இல்ல, இருந்தாலும், ஏதோ ஒரு தருனத்துல, ஒரு சின்ன வலி, ஒரு இதம், ஒரு துக்கம், ஒரு சந்தோஷம், ஒரு வேதனை, ஒரு பரவசம்ன்னு பல வித உணர்வுகள் வரத தவிர்க்க முடியல…”

“சரி, நீ இப்டின்னா, அவளுக்கு உன் மேல இருந்த ஒப்பீனியன் மாறவே இல்லயா?”

“இல்ல டா, இப்ப கூட ஒரு மாசம் முன்னாடி, இந்த ஷிவானி கிட்ட பேசும் போது, ஷிவானி சொன்னா, அவளும் நிருவும், ஏதோ பேசிட்டு இருந்திருக்காங்க…அப்ப என்னோட பேச்சு அடி பட்டுருக்கு, அப்ப நிரு சொன்னாலாம், ’என்ன தான் இருந்தாலும், shiva is a gem of a person’ ன்னு… அது தான் என் நிரு”

“ஹ்ம்ம்…இந்த காதல் குடுத்த தளும்புகள் இன்னும் மறையல, இன்னொரு காதல் வரதுக்கான அறிகுறியும் இப்போதைக்கு இல்ல…அதான், நான் சொல்றேன், Love is a chicken pox…”

“ஓஹ்…அப்ப கல்யாணம்ன்னு பண்ணிகிட்டா அரேஞ்சுடு மேரேஜ் தான்னு சொல்லு…”

“இல்லயே, கண்டிப்பா இல்ல, உனக்கே நல்லா தெரியும்…எனக்கு அரேஜ்சுடு மேரேஜ்ல நம்பிக்கை இல்லை, ஸோ, கண்டிப்பா லவ் மேரேஜ் தான்…”

“எப்டி டா? Chicken pox – அனாலஜி என்ன ஆச்சு?”

“சிக்கன் பாக்ஸ் ஒரு தடவ வந்தா, மறுபடியும் வர்ரது கஷ்டம் தான்…ஆனா வரக் கூடாதுன்னு சட்டமா என்ன?”

[முற்றும்]

32 comments:

MSK / Saravana said...

Me the first??

MSK / Saravana said...

பாவம் அந்த நாயகன்..


//“சிக்கன் பாக்ஸ் ஒரு தடவ வந்தா, மறுபடியும் வர்ரது கஷ்டம் தான்…ஆனா வரக் கூடாதுன்னு சட்டமா என்ன?”//

விடு மச்சி.. பாத்துக்கலாம்.. உலகம் பெரிசு..
:))

MSK / Saravana said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க..

அருமையான தொடர்..
கிரேட்..
:))

MSK / Saravana said...

முன்குறிப்பு : திவ்யப்ரியா, இந்த பின்னூட்டம் உங்களுக்கல்ல.. உங்கள் கதை நாயகனுக்கு..

//’என்ன தான் இருந்தாலும், shiva is a gem of a person’ ன்னு… அது தான் என் நிரு”//

போடாங்..

MSK / Saravana said...

திவ்யப்ரியா..

உங்கள் கதை மிக அழகாய் செதுக்கி இருக்கிறீர்கள்.. மிக இயல்பான கதை.. அதனால் மிக இயல்பாய் கதைக்குள் மூழ்க செய்துவிட்டது..

அதன் விளைவே.. இதற்கு முந்தைய பின்னூட்டம்..

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

அமைதியாய் மிக அழகாய் வருடியது தங்களின் இந்த தொடர்! வாழ்த்துக்கள்

முகுந்தன் said...

இயல்பா இருந்தது,வாழ்த்துக்கள்...

//இன்னொரு காதல் வரதுக்கான அறிகுறியும் இப்போதைக்கு இல்ல…அதான், நான் சொல்றேன், Love is a chicken pox…”
//

இத படிச்சதும் கடைசில

//“சிக்கன் பாக்ஸ் ஒரு தடவ வந்தா, மறுபடியும் வர்ரது கஷ்டம் தான்…ஆனா வரக் கூடாதுன்னு சட்டமா என்ன?”
//

இப்படி ஒரு லைன் வரும்னு எதிர் பார்த்தேன்...

gayathri said...

“ச்சே, இல்லடா…அவளுக்காக ஆசை ஆசையா தேடி, ஒரு அழகான வெள்ளை தாஜ்மஹால வாங்கினேன்…ஏனோ, உலகத்தையே வாங்கிட்டதா ஒரு இருமாப்பு, ஒரு சந்தோஷம்

இது தான் காதல்,
கதை ரொம்ப நல்ல இருந்தது திவ்யப்ரியா......

Hariks said...

//“சிக்கன் பாக்ஸ் ஒரு தடவ வந்தா, மறுபடியும் வர்ரது கஷ்டம் தான்…ஆனா வரக் கூடாதுன்னு சட்டமா என்ன?”//

இல்ல‌யே ;)

Hariks said...

க‌தையை ரொம்ப‌ ந‌ல்லா எழுதி இருக்கீங்க‌!

Hariks said...

சினிமாவுல‌ வ‌ர‌ மாதிரியான‌ க்ளைமாக்ஸ் வ‌ராம‌ ரொம்ப‌ ப்ராக்டிக‌லா முடிவு இருக்கு. வாழ்த்துக்க‌ள்!

Hariks said...

அந்த‌ பொண்ணு ஏன் ஏத்துக‌ல‌னு சொல்லி இருந்தா இன்னும் ந‌ல்லா இருந்திருக்கும் :)

மணி said...

nice tale with acceptable end
வாழ்த்துகள்.

chandru / RVC said...

/“சிக்கன் பாக்ஸ் ஒரு தடவ வந்தா, மறுபடியும் வர்ரது கஷ்டம் தான்…ஆனா வரக் கூடாதுன்னு சட்டமா என்ன?”/
சிக்கன் பாக்ஸ் எத்தன தடவ வேண்ணாலும் வரும்... நாம வீக்கா இருந்தா :)
எதிர்பார்த்த முடிவு, ஆனாலும் நல்லா இருந்துச்சு கதை.

ஜியா said...

யதார்த்தமான கதை... நினைவுகளின் உணர்வுகளை வெளிப்படுத்துவது எப்போதுமே சுகம்தான்.... அதே மாதிரி கதை சொல்லிய உங்கள் நடை மிகவும் கவர்ந்து விட்டது... இதே மாதிரி ஒரு நடைய ஃபாலோ பண்ணி ஒரு கத எழுதனும்னு உள்ளுணர்வுல தோனிக்கிட்டே இருக்குது... பாப்போம்...

கதை நடை அருமை... ஆனா, எதனால அவுங்கவுங்க தங்களோட காதல அங்கிகரிக்கலைன்னு எனக்கு கடைசி வரைக்கும் வெளங்கவே இல்ல... 'ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சு வச்சிக்கிட்டா காதல ஏத்துக்கக் கூடாதா? நண்பர்களுக்கிடையே வரும் காதலில்தான் அதிகமான புரிதல் இருக்கும்'னு சமீபத்துல ஏதோ பதிவுல படிச்ச ஞாபகம். எனக்கும் அதே அபிப்ராயம்தான்... ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம்னு சமாதானப் படுத்திக்கிட்டாலும், அவனோட முடிவ நெனச்சு பாராட்ட முடியல... பாவப்படத்தான் முடியுது... :)))

//சிக்கன் பாக்ஸ் எத்தன தடவ வேண்ணாலும் வரும்... நாம வீக்கா இருந்தா :)//

kalakkal point RVC :)))

Divya said...

திவ்யப்ரியா!!
அருமையான தொடர்,
மிக நேர்த்தியான உரையாடல்களுடன் உங்கள் எழுத்து நடை அபாரம்:))

எதிர்பார்த்த முடிவுதான் எனினும், அதையும் மிக அழகாக எழுதியிருக்கிறீங்க, வாழ்த்துக்கள் திவ்யப்ரியா!!!


ஆண்-பெண் நட்பில், புரிதலின் அவசியத்தை வலியுறுத்தியதே உங்கள் தொடரின் ஹைலைட்!!!சூப்பர்ப்!!!

Vijay said...

அது ஏன் எல்லாக் காதலர்களுக்கும் தாஜ் மஹால் தான் காதல் சின்னமா??

\\மஞ்சளும், மெஜெந்தா கலரும் கலந்த மாதிரி இருக்குற தாஜ் மஹால் வேணும்’ \\
பச்சை கலர் மாடு வேணும்னு ஒரு நாடகத்தில் எஸ்.வி.சேகர் சொல்லுவார். அது மாதிரி இருக்கு. LOL

ஒரு தலைக் காதல் கூட ஒரு விதமான சுகம் தான் இல்லை. அதில் இருக்கற த்ரில், அது ஏற்படுத்தற பரவசம், ரணம் எல்லாமே அழகு தான். சிக்கன் பாக்ஸ் நல்லா கொண்டு போயிருக்கீங்க. ஏற்கனவே சொன்னமாதிரி உங்க பாத்திரப்படைப்பு என்னை பிரமிக்க வைத்தது. ஷிவா நிரு பாத்திரங்கள் ரொம்ப நாட்களுக்கு மனதில் நிற்பார்கள். இந்த தடவை பாத்திரப் பெயர் சொதப்பல் செய்யலை அம்மணி.

A Good story with strong characters and a very good narration. Hats off once again.

ஜியா said...

//ஆண்-பெண் நட்பில், புரிதலின் அவசியத்தை வலியுறுத்தியதே உங்கள் தொடரின் ஹைலைட்//

ஹலோ மேடம்... காதல உணர்ந்து அத வெளிப்படுத்துனதுக்கப்புறம் என்ன நட்பு??? ரெண்டு பேருமே சும்மா அவுங்கள அவுங்க ஏமாத்திக்கறாங்க அஸ்டே... புரிஞ்சுதோ?? ;))))

வெட்டிப்பயல் said...

நல்ல கதை... ரொம்ப மெச்சூர்ட் கேரக்டர்ஸ் :))

narsim said...

ஏன் முற்றும்??

நல்ல நடை..

நர்சிம்

Raghav said...

//“டெல்லி…எத்தனையோ போராட்டங்கள பாத்த ஒரு நகரம், என் மனப் போராட்டங்களும் மறுபடியும் ஆரம்பிச்ச நகரம்”
//

இந்த வரிய படிச்சவுடனே கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுத்து நடை தான் ஞாபகம் வந்தது.

//அரேஜ்சுடு மேரேஜ்ல நம்பிக்கை இல்லை, ஸோ, கண்டிப்பா லவ் மேரேஜ் தான்…”//
பாவம்டா பத்மனாபா... :)

Unknown said...

யக்கா ரொம்ப நல்லாயிருந்தது..!! ரொம்ப அழகா, சமர்த்தா கதை சொல்லிருக்கீங்க..!! Too good..!! :))

Raghav said...

//ஸ்ரீமதி said...
ரொம்ப அழகா, சமர்த்தா கதை சொல்லிருக்கீங்க..!! Too good..!! :)) //

சூப்பரு.. ரிப்பீட்டேய்ய்ய்ய்

Ramya Ramani said...

வாவ் திவ்யபிரியா அருமையான காதல் கதை ..கணமான கதையும் கூட..

Divyapriya said...

// Saravana Kumar MSK said...
பாவம் அந்த நாயகன்..//

ஆமாங்க, காதல் தோல்வி மட்டும் இல்லாம, உங்ககிட்ட வேற திட்டு வாங்கறானே, பாவம் தான் ;-)

//விடு மச்சி.. பாத்துக்கலாம்.. உலகம் பெரிசு..
:))//

ஹா ஹா :-D சூப்பர்…

//ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க..

அருமையான தொடர்..
கிரேட்..
:))
//

நன்றிகள் பல சரவணன்…

//
முன்குறிப்பு : திவ்யப்ரியா, இந்த பின்னூட்டம் உங்களுக்கல்ல.. உங்கள் கதை நாயகனுக்கு..

//’என்ன தான் இருந்தாலும், shiva is a gem of a person’ ன்னு… அது தான் என் நிரு”//

போடாங்..//

:)) இதுக்கு ஒரு முன்குறிப்ப நல்ல வேளையா போட்டீங்க ;-) ஷிவா.! இது எனக்கில்லையாம், உன்ன தான் திட்றாங்க ;-)

//திவ்யப்ரியா..

உங்கள் கதை மிக அழகாய் செதுக்கி இருக்கிறீர்கள்.. மிக இயல்பான கதை.. அதனால் மிக இயல்பாய் கதைக்குள் மூழ்க செய்துவிட்டது..

அதன் விளைவே.. இதற்கு முந்தைய பின்னூட்டம்..//

கதைகுள்ள மூழ்க்கிட்டீங்களா? ரொம்ப நன்றி :))

-------------------------------
// sathish said...
அமைதியாய் மிக அழகாய் வருடியது தங்களின் இந்த தொடர்! வாழ்த்துக்கள்
//

உங்கள் முதல் வருகைக்கும் அழகான உங்கள் பின்னூட்டத்திற்க்கும் நன்றி சதீஷ்.

-----------------------------
// முகுந்தன் said...
இயல்பா இருந்தது,வாழ்த்துக்கள்...

//இன்னொரு காதல் வரதுக்கான அறிகுறியும் இப்போதைக்கு இல்ல…அதான், நான் சொல்றேன், Love is a chicken pox…”
//

இத படிச்சதும் கடைசில

//“சிக்கன் பாக்ஸ் ஒரு தடவ வந்தா, மறுபடியும் வர்ரது கஷ்டம் தான்…ஆனா வரக் கூடாதுன்னு சட்டமா என்ன?”
//

இப்படி ஒரு லைன் வரும்னு எதிர் பார்த்தேன்...//

Thanks முகுந்தன்….முன்னாடியே guess பண்ணீட்டீங்களா? இதுக்கு தான் சிக்கன் ஃபாக்ஸ் ன்னு title வைச்சதே…

Divyapriya said...

// gayathri said...
“ச்சே, இல்லடா…அவளுக்காக ஆசை ஆசையா தேடி, ஒரு அழகான வெள்ளை தாஜ்மஹால வாங்கினேன்…ஏனோ, உலகத்தையே வாங்கிட்டதா ஒரு இருமாப்பு, ஒரு சந்தோஷம்

இது தான் காதல்,
கதை ரொம்ப நல்ல இருந்தது திவ்யப்ரியா......//

ரசித்து பாராட்டியதற்க்கு நன்றி காயத்ரி…

-----------------------------------
// Murugs said...
கதையை ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க!

சினிமாவுல வர மாதிரியான க்ளைமாக்ஸ் வராம ரொம்ப ப்ராக்டிகலா முடிவு இருக்கு. வாழ்த்துக்கள்!//

நன்றி Murugs…

//அந்த பொண்ணு ஏன் ஏத்துகலனு சொல்லி இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் :)//

நான் முதல்லயே சொன்ன மாதிரி, இது ஒரு நண்பனின் ஒரு பக்க கதைய கேட்பது போல எழுதப்பட்ட கதை, அதனால அந்த பொண்ணு ஏன் ஒத்துக்கலைன்னு எனக்கும் தெரியாது ;-) ’ஏன்னா, நிருவ பத்தி எனக்கு தெரியும்’ இது ஷிவா சொல்ற dialogue தான், ஆனா நிருவ பத்தி எனக்கு தெரியாது ;-)

-----------------------------------
// தமிழ் said...
nice tale with acceptable end
வாழ்த்துகள்.//

உங்கள் முதல் வருகைக்கும், பின்னூட்டதிற்க்கும் நன்றி தமிழ்.

Divyapriya said...
This comment has been removed by the author.
Divyapriya said...

Divyapriya said...
//RVC said...
/“சிக்கன் பாக்ஸ் ஒரு தடவ வந்தா, மறுபடியும் வர்ரது கஷ்டம் தான்…ஆனா வரக் கூடாதுன்னு சட்டமா என்ன?”/
சிக்கன் பாக்ஸ் எத்தன தடவ வேண்ணாலும் வரும்... நாம வீக்கா இருந்தா :)
எதிர்பார்த்த முடிவு, ஆனாலும் நல்லா இருந்துச்சு கதை.//

ஹா ஹா, நல்ல தத்துவம்…நன்றி RVC
-------------------------------

// ஜி said...
யதார்த்தமான கதை... நினைவுகளின் உணர்வுகளை வெளிப்படுத்துவது எப்போதுமே சுகம்தான்.... அதே மாதிரி கதை சொல்லிய உங்கள் நடை மிகவும் கவர்ந்து விட்டது... இதே மாதிரி ஒரு நடைய ஃபாலோ பண்ணி ஒரு கத எழுதனும்னு உள்ளுணர்வுல தோனிக்கிட்டே இருக்குது... பாப்போம்...

கதை நடை அருமை... ஆனா, எதனால அவுங்கவுங்க தங்களோட காதல அங்கிகரிக்கலைன்னு எனக்கு கடைசி வரைக்கும் வெளங்கவே இல்ல... 'ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சு வச்சிக்கிட்டா காதல ஏத்துக்கக் கூடாதா? நண்பர்களுக்கிடையே வரும் காதலில்தான் அதிகமான புரிதல் இருக்கும்'னு சமீபத்துல ஏதோ பதிவுல படிச்ச ஞாபகம். எனக்கும் அதே அபிப்ராயம்தான்... ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம்னு சமாதானப் படுத்திக்கிட்டாலும், அவனோட முடிவ நெனச்சு பாராட்ட முடியல... பாவப்படத்தான் முடியுது... :)))

//சிக்கன் பாக்ஸ் எத்தன தடவ வேண்ணாலும் வரும்... நாம வீக்கா இருந்தா :)//

kalakkal point RVC :)))//


விரிவான பின்னூட்டதிற்க்கு நன்றி ஜி...

அவ ஏன் ஒத்துகல, அவன் ஏன் இப்படி பண்ணான், இந்த கதை எல்லாம் எனக்கும் தெரியாது, அவன் கிட்ட கேட்டு தான் சொல்லனும் ;-) , எனக்கு அவன் சொன்ன கதைய, கொஞ்சம் கற்பனை கலந்து எழுதிட்டேன்…அவ்ளோ தான்…

கூடிய சீக்கரம் நீங்களும் ஒரு flash back கதையா? Waitings…சிக்கரமா எழுதுங்க…

Divyapriya said...

Divya said...
//திவ்யப்ரியா!!
அருமையான தொடர்,
மிக நேர்த்தியான உரையாடல்களுடன் உங்கள் எழுத்து நடை அபாரம்:))

எதிர்பார்த்த முடிவுதான் எனினும், அதையும் மிக அழகாக எழுதியிருக்கிறீங்க, வாழ்த்துக்கள் திவ்யப்ரியா!!!


ஆண்-பெண் நட்பில், புரிதலின் அவசியத்தை வலியுறுத்தியதே உங்கள் தொடரின் ஹைலைட்!!!சூப்பர்ப்!!!//

ஆமா திவ்யா…ஷிவா நிஜமாவே ஒரு ரொம்ப நல்ல ஃபரெண்ட், அத இந்த கதை உணர்த்திடுச்சுன்னா ரொம்ப சந்தோஷம்:))
------------------------
// விஜய் said...
அது ஏன் எல்லாக் காதலர்களுக்கும் தாஜ் மஹால் தான் காதல் சின்னமா??//

என்ன பண்றது விஜய்? ஷாஜஹான் சும்மா இல்லாம, ஒரு தாஜ்மஹால கட்டி வச்சுட்டு போய்ட்டாரே!!! ;-)

//ஒரு தலைக் காதல் கூட ஒரு விதமான சுகம் தான் இல்லை. அதில் இருக்கற த்ரில், அது ஏற்படுத்தற பரவசம், ரணம் எல்லாமே அழகு தான். சிக்கன் பாக்ஸ் நல்லா கொண்டு போயிருக்கீங்க. ஏற்கனவே சொன்னமாதிரி உங்க பாத்திரப்படைப்பு என்னை பிரமிக்க வைத்தது. ஷிவா நிரு பாத்திரங்கள் ரொம்ப நாட்களுக்கு மனதில் நிற்பார்கள். இந்த தடவை பாத்திரப் பெயர் சொதப்பல் செய்யலை அம்மணி.

A Good story with strong characters and a very good narration. Hats off once again.//

ரொம்ப நன்றி விஜய்…ஷிவா கேட்டா ரொம்ப சந்தோஷப் படுவான் ;-) உங்க comments எல்லாம் பாத்தா ரொம்ப ஃபீல் பண்ற மாதிரி இருக்குது? சேச்சிக்கு தெரியுமா? ;-)

Divyapriya said...

// வெட்டிப்பயல் said...
நல்ல கதை... ரொம்ப மெச்சூர்ட் கேரக்டர்ஸ் :))
//

Thanks ணா…தொடர்ந்து அடுத்த கதைகளையும் படிங்க…
------------------------
// narsim said...
ஏன் முற்றும்??

நல்ல நடை..

நர்சிம்//

நிஜக் கதை இன்னும் தொடர்ந்துட்டு தான் இருக்கு நர்சிம்…ஆனா நம்ம ப்ளாகுல ஒரு முடிவுக்கு கொண்டு வரனுமே, அதான் முற்றும் ;-)

...உங்க முதல் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி நர்சிம்…
------------------------
// Raghav said...
//“டெல்லி…எத்தனையோ போராட்டங்கள பாத்த ஒரு நகரம், என் மனப் போராட்டங்களும் மறுபடியும் ஆரம்பிச்ச நகரம்”
//

இந்த வரிய படிச்சவுடனே கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுத்து நடை தான் ஞாபகம் வந்தது. //

அய்யய்யோ ரொம்ப புகழாதீங்க ;-) உண்மைய சொல்லனும்னா, இத எழுதின உடனே எனக்கு சிரிப்பு வந்துடுச்சு :-D

//அரேஜ்சுடு மேரேஜ்ல நம்பிக்கை இல்லை, ஸோ, கண்டிப்பா லவ் மேரேஜ் தான்…”//
பாவம்டா பத்மனாபா... :)//

யாரு ராகவ் அந்த பாவப்பட்ட பத்மனாபன்?

------------------------
//ஸ்ரீமதி said...
யக்கா ரொம்ப நல்லாயிருந்தது..!! ரொம்ப அழகா, சமர்த்தா கதை சொல்லிருக்கீங்க..!! Too good..!! :))
//

சமத்தா comment போட்டதுக்கு ரொம்ப thanks தங்கச்சி…
------------------------
// Raghav said...
//ஸ்ரீமதி said...
ரொம்ப அழகா, சமர்த்தா கதை சொல்லிருக்கீங்க..!! Too good..!! :)) //

சூப்பரு.. ரிப்பீட்டேய்ய்ய்ய்//

:)) Thanks Raghav…

Pranav said...

Hi Divyapriya,
unmayil ungal kathaiyai padithi mei silurthu ponen... ungalukkullum ivvalavu thiramaya??? really really really extraordinary narration... oru one line story ah ivlo azhaga solla mudyumannu nenachu parkka mudiyatha alavukku irunthuthu.... certain dialogues are really excellent... if i wanna quote few examples, i need to copy n paste the entire story... amidst this, there are numerous pranks, senti, etc etc... really superb.... i read love potion and chicken pox and i was just dumbfounded.... don mistake me,,, but u have got good scope in screenplay writing....
way to go gal!!!!!!!!!!

DHANS said...

what a great person he is.....

i too know exactly same kind of person like this hero....

if you talk to him again tell him that its not only one guy in thsi world but one more too....

the chicken pox phrase is too good, and its true