Monday, February 9, 2009

வழக்கொழிந்த சொற்கள்

வழக்கொழிந்த சொற்கள் பத்தி ரொம்ப அழகா பதிவெழுதி இருந்த விஜயும், சந்தனமுல்லையும் என்னையும் எழுத சொன்னாலும், சொன்னாங்க…எங்க எப்படி வார்த்தைகள் கண்டுபிடிக்கறதுன்னு ரொம்பவே யோசிச்சு நிறைய நாள் கடத்திட்டேன்.

ஒரு நாள் என் நண்பன்கிட்ட பேசிட்டு இருக்கும் போது அவன் சொன்ன ஒரு வார்த்தை கேள்விப்படாததா இருந்ததால, அவன் வாயப் பிடிங்கி மேலும் ஒரு வார்த்தையை சேத்து ஒரு பதிவா இங்கே…

பத்தாயம் – கிராமத்து வீடுகள்ள நெல் சேகரிக்க பயன்படறதாம். ஏதோ ஒரு சின்ன பீரோ மாதிரி இருக்குமாம். அகராதியில இதுக்கு இன்னொரு பேர் கூட உண்டு, குதிர்.
இந்த வார்த்தையை வைச்சு பேச்சு வழக்குல அழகான (?!?!) சொற்தொடர் கூட உண்டாம். ஒரு பருமனான பொண்ண பாத்தா, “பத்தாயத்துக்கு புடவை கட்டி விட்ட மாதிரி இருக்கா!!!” ன்னு அவங்க ஊர் பக்கம் சொல்லுவாங்களாம்.

இளுப்பங்கரண்டி – தாளிக்க பயன்படும் மிகச் சிறிய வடச்சட்டி மாதிரி, நீண்ட பிடியோட இருக்குமே, அதுக்கு பேர் தான் இ
ளுப்பங்கரண்டியாம். இத வாகனக் கரண்டின்னு கூட சொல்லுவாங்க….

இனி எனக்கு தெரிந்த இரண்டு வார்த்தைகள்

பக்கா – இரண்டு படியை குறிக்கும் அளவு. சின்ன வயசுல ஒரு பொரி தாத்தா மாட்டு வண்டியில வருவாரு…அவர் உபயோகிக்கும் வார்த்தை தான் இந்த பக்கா.

அநாயசம் – ஒரு வேலையை சுலபமா முடிக்கறத குறிக்கும். இத ஒரு முறை பேச்சுவாக்குல நான் பயன்படுத்தி, என் friends எல்லாரும் இப்படி ஒரு வார்த்தையே தமிழ்ல இல்லைன்னு என்னை கிண்டல் பண்ணப்ப, “தெரியாதுன்னு சொல்லுங்க…இல்லைன்னு சொல்லாதீங்க…” ன்னு நான் எவ்ளோ வாதாடியும் அவங்க யாரும் காது குடுத்து கேக்கறதா இல்லை :( சரி உங்களுக்கு தெரிஞ்சது அவ்ளோ தான் போங்கன்னு நானும் அவங்கள மண்ணிச்சு விட்டுட்டேன் :)

பதிவு எழுதறதுக்கு வார்த்தைகள் கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடியே, யார மாட்டி விடறதுன்னு முடிவு பண்ணி, அவங்ககிட்ட அனுமதியும் வாங்கியாச்சு…இவரோட பதிவுகள் சிலதை தமிழ் அகராதி வச்சிட்டு தான் வாசிக்கனும்! குளிர் காலத்தினாலோ என்னவோ, அமைதியாய் இருந்த தமிழ் மழை, இப்ப
வெயிலில் (கண)மழையா தூர ஆரம்பிச்சுடுச்சு! இந்த பதிவையும் போட்டுடுங்க ஜி…

23 comments:

Unknown said...

me the first :) enna kodmai.. ennaiyum ida maadri comment poda vachutiyae ;)

மேவி... said...

me th 2nd

மேவி... said...

"அநாயசம் – ஒரு வேலையை சுலபமா முடிக்கறத குறிக்கும்."
அப்பனா என்னக்கும் இந்த வார்த்தைக்கும் ரொம்ப distance

மேவி... said...

"இத ஒரு முறை பேச்சுவாக்குல நான் பயன்படுத்தி, என் friends எல்லாரும் இப்படி ஒரு வார்த்தையே தமிழ்ல இல்லைன்னு என்னை கிண்டல் பண்ணப்ப, “தெரியாதுன்னு சொல்லுங்க…இல்லைன்னு சொல்லாதீங்க…” ன்னு நான் எவ்ளோ வாதாடியும் "
இந்து தன்னுங்க நீங்க தமிழுக்கு செய்ஞ்ச பெரிய தொண்டு

மேவி... said...

"Sundar Raman said...
me the first :) enna kodmai.. ennaiyum ida maadri comment poda vachutiyae ;)"
ada pavamey.....

MSK / Saravana said...

இந்த ஆட்டத்தில நல்ல வேளை என்னை புடிச்சி போடல.. நன்றி..
:)

இந்த மாதிரியான வார்த்தைகளுக்கு எங்கே போவேன்..????

புதியவன் said...

வழக்கொழிந்த சொற்கள் தொடர் பதிவில என்னையும் ஒருத்தவங்க
மாட்டிவிட்டிருக்காங்க...நீங்க சிறப்பா எழுதிட்டீங்க...

Unknown said...

'பக்கா'

இது மட்டும் தெரியவில்லை.

Unknown said...

\\Saravana Kumar MSK said...

இந்த ஆட்டத்தில நல்ல வேளை என்னை புடிச்சி போடல.. நன்றி..
:)

இந்த மாதிரியான வார்த்தைகளுக்கு எங்கே போவேன்..???\\

அப்படியா சரவணா ...

வார இறுதியில் பார் ...

Vijay said...

அப்பாடா, ஒரு வழியா எழுதிட்டீங்களா. திவ்யா, நீங்க இந்த வார்த்தைகளையெல்லாம், உங்க சூர்யகாந்தி கதைல அழகா பயன் படுத்தலாமே. இந்த வார்த்தைகளெல்லாம் இன்னமும் கிராமபுரங்களில் புழக்கத்தில் இருக்கு. நகரத்தில் தான் நிறைய தங்க்ளிஷ் பேசறோம் :-)

ஜியா said...

குறுக்காலையும் நெடுக்காலையும் எம்புட்டும் நடந்தும் யாருமெ சொல்லாத ஒரு வழக்கொழிந்த சொல்ல சொல்லலாம்னா ஒன்னுமே தோன மாட்டேங்குது :((

Unknown said...

//“தெரியாதுன்னு சொல்லுங்க…இல்லைன்னு சொல்லாதீங்க…” //

நானும் நிறைய முறை இப்படி கெஞ்சிருக்கேன்.. :(( பிசாசுங்க புரியாம படுத்தும்.. ;)))

Unknown said...

/வானவில்லாய் ஆணும்...வண்ணமேலாய் பெண்ணும்...//

அக்கா இது: "வானவில்லாய் ஆணும்... வர்ணம் ஏழாய் பெண்ணும்... இருந்தால் இன்னும் வானின் அழகு கூடும்".. இப்படி வரும்ன்னு நினைக்கிறேன் கொஞ்சம் பாருங்க..

Unknown said...

//சுட்டு விரலாய் நீயும்...கட்டை விரலாய் நானும்...

எழுதும் எதுவும்...கவிதையாக மாறும்!//

சொல்லவே இல்ல.. கவிதை எழுதறது எல்லாமே நீங்கன்னு நினைச்சேன்.. பாதி பங்கு அவருக்கும் இருக்கா?? ;))

Unknown said...

BTW எனக்குமே ரொம்ப பிடிச்ச பாட்டு அது... பதிவு போட்டா படிச்சிட்டு அதுக்கு கமெண்ட் போடுவாளா பாட்டப் பத்தி பேசிட்டு இருக்கா அப்படின்னு தானே நினைக்கிறீங்க?? ஹா ஹா.. :))))))

gils said...

:)) oru nal en friend opice leave...enda varala ketapo shali pidichiruku sonaan :)) pudichirukkunna athukudavay settle aga vendi thaanaynu mokka poten..kadupaaitan..aprum yosichipathapo thaan thonithu..it shd have been peedichiruku...neettal vigaaram kurukkal vigarama maari poi pudichiruku aadichi pola :))

தாரணி பிரியா said...

திவ்யா நம்ம ஊருல எல்லாம் இன்னும் இதை பேசிகிட்டுதான் இருக்காங்க. பக்கா கணக்குலதான் இன்னும் இங்க பொரி விக்கிறாங்க.அநாசயமா எழுதி இருக்கிங்க வாழ்த்துகள்

தமிழன்-கறுப்பி... said...

:)

தமிழன்-கறுப்பி... said...

ஸ்ரீமதி said...
\\
//“தெரியாதுன்னு சொல்லுங்க…இல்லைன்னு சொல்லாதீங்க…” //

நானும் நிறைய முறை இப்படி கெஞ்சிருக்கேன்.. :(( பிசாசுங்க புரியாம படுத்தும்.. ;)))
\\

ரிப்பீட்டு...:)

தமிழன்-கறுப்பி... said...

20

Smriti said...

Nalla velai naan on blog la idha padikkaama reader la padichen... pah font is soo small. knanu valikkudhu paathaley... and one doubt.... on fav song la வர்ணம் ஏலாய் பெண்ணும்... nu ezhudirukka... did u mean எழாய் by any chance ? as in the no 7 as ref. Or is there some word in tamil as ஏலாய் ? Ennoda tamizh proficiency endha level u onakku dhan theriyum adhaan asking ....

முகுந்தன் said...

ஹலோ,

இந்த பதிவெழுத உங்களை கூப்பிட்டது நான். கொஞ்ச நாள் உங்கள் வலை பக்கம் வரலைன்னா மறந்துட்டீங்களே :)

Pranav said...

Am not sure whether it's 'kuthir' or 'kuruthu'... But still it's there in my grandpa's house and they have a separate room for this... Anyways now it's empty... :-(