Tuesday, February 24, 2009

சூர்யகாந்தி - 6

கடைசியா ஒரு முன்குறிப்பு!
மொத்தம் ஏழு பகுதின்னு வழக்கம் போல தப்பான கணக்கு சொல்லிட்டேன். ஆறு தான்.
இது வரை படிச்சுட்டு வந்த எல்லாருக்கும் அரசியல் வாதி ஸ்டைல்ல கோடான கோடி நன்றிகள் சொல்லிக்கறேன். இன்னையோட சூர்யகாந்திக்கு லீவ் விட்டாச்சு :)
இந்த பகுதியில கவிஜ ஆக்கரமிப்பு கொஞ்சம் அதிகமாய்டுச்சு. மொக்கையா இருந்தா நேரடியா இங்கயே திட்டுடுங்க ;) இது வரை அட்டண்டண்ஸ் போடாம யாராவது இருந்தா இதுலையாவது போடவும் :(

***************
பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5

தோட்டத்துக்கும் வீட்டுக்கும் நடுவுல இருக்கற தூரத்தின் அளவு அன்னிக்கு மட்டும் அதிகமாத் தான் தெரிஞ்சது கதிருக்கு.
“ஏதோ தைரியத்துல கிளம்பி வந்துட்டோம்…என்ன பேசறது?” ன்னு யோசிச்சிட்டே நடந்த அவனோட கால்கள் முன் நோக்கி போக, அவன் நினைவுகள் பின்னோக்கி பயணிக்க ஆரம்பிச்சது.

கதிர் பீரோ உள்ள இருந்து விழுந்த சூர்யா ஃபோட்டவ பாத்ததும் முதல்ல செல்லாத்தாவுக்கும் தேன்மொழிக்கும் ஒன்னுமே புரியல. ரொம்ப நாளா, சூர்யா காணோம்ன்னு தேடிகிட்டு இருந்த அதே படங்க தான்னு, தேன்மொழிக்கு அதப் பாத்தவுடனே தெரிஞ்சிடுச்சு.

“என்னண்ணா இது? இது எப்படி உன்னோட ட்ரெஸ்ஸுக்கு நடுவுல வந்துச்சு?”

கதிர் பதிலேதும் பேசாம இருக்கவும், செல்லாத்தா, “கதிரு! என்னப்பா? நீ மனசுக்குள்ள ஒன்னு வச்சுட்டு வெளிய ஒன்னு பேசறவனில்லையே? என்ன இதெல்லாம்?”

“அதெல்லாம் ஒன்னுமில்ல மா…இது எப்படி இங்க வந்துச்சுன்னு எனக்கே தெரியல….பாரு, இவளோட வேலையாத் தான் இருக்கும்…”

தேன்மொழி, “எதுக்கு என்னைய வம்புக்கு இழுக்கற? ஏன்ணா! எதுக்கு பொய் சொல்ற? உனக்கு சுத்தமா பொய் சொல்ல வராதுன்னு எங்களுக்கு தெரியும், உன் முகத்த பாத்தாலே தெரியுது…சொல்லு, என்னண்ணா பிரச்சனை?”

கதிர் எவ்வளவோ மழுப்பப் பாத்தும், செல்லாத்தாவும் தேன்மொழியும் விடாம நச்சரிக்கவும், கதிரும் வேற வழியில்லாம, “இல்லம்மா….வந்து….மாமா கண்டிப்பா எதாவது பிரச்சனை பண்ணுவாரும்மா…அத்தை விஷயத்துலையே எத்தனை பிரச்சனை வந்து, கடைசியில அத்தை….அதான்….நானும்…இதெல்லாம் கண்டிப்பா நடக்காதும்மா….அதனால தான் அப்பாவே இதப் பத்தி எதுவும் பேச மாட்டேங்கறார்…ஆனா, நீங்க, பாட்டி எல்லாம் எதேதோ பேசி சூர்யா மனசுலையும் வேண்டாத கற்பனைய வளத்து வச்சுருக்கீங்க….”
“அதெல்லாம் விடு…உன் மனசுல என்ன இருக்குன்னு தான் நாங்க கேக்கறோம்…அதுக்கு முதல்ல பதில சொல்லு நீ!”

“எனக்கு அப்படி ஒரு நினைப்பு இருந்தது உண்மை தான்ம்மா…ஆனா…இப்ப எல்லாத்தையும் மறந்துட்டேன்…” மறந்துட்டேன்ங்கற வார்த்தை மட்டும் அவன் இதயத்த கிழிச்சிட்டு, அதுக்கு தண்டனையா தொண்டைக்குள்ளையே சிக்கிச் சிதறி பாதியாத் தான் வெளிவந்துச்சு!

“ஏன்டா நாங்க இத்தன பேர் இருக்கோம், அப்படி எல்லாம் விட்டுருவோமா? உங்க மாமா கிடக்கறாரு…என்னடா பெருசா பிரச்சனை பண்ணிடப் போறாரு? உங்க அத்தைக்கு எதனால பிரச்சனை வந்துச்சு? கட்டினவன் சரியில்லாதனால தான? ஒரு பொண்ணுக்கு உலகமே நல்லவங்களா இருந்து துணையிருந்தாலும், கட்டின புருஷன் சரியில்லன்னா, அவ்ளோ தான்…ஆனா, நீ அப்படியா? நீ எங்க? உங்க மாமா எங்க? நீ சொக்கத் தங்கம்டா ராஜா…”

“ஹய்யோ அம்மா…போதும், போதும்…அண்ணா! நீ மொதல்ல போய் சூர்யாவ சமாதானப் படுத்தி கூட்டிட்டு வாண்ணா…பாவம், எப்படி அழுதுட்டே போனா தெரியுமா?”“அதில்ல தேனு! நான்…எப்படி….?”

கதிர் எவ்வளவு வாதாடியும் ரெண்டு பேரும் காது குடுத்து கேக்கறதா இல்ல. அவனோட அஞ்சு வருஷ தவத்த அஞ்சே நிமிஷத்துல கரைக்க பாத்தாங்க ஆத்தாளும் மகளும். கடைசியில பிடிவாதமா “போ….” ன்னு சொல்லி ரெண்டு பேரும் பிடிச்சுத் தள்ளவும், கதிரும் வேற வழியில்லாம சூர்யாவ தேடி நடக்க ஆரம்பிச்சான்.

***
"யேய் சூர்யா!!! வீட்டுக்கு போகாம இங்க என்ன பண்ணிட்டு இருக்க?”
"இல்ல….நேத்திக்கு பேரு எழுதி வச்சமே, அந்த பூவை தான் தேடிட்டு இருக்கேன்…காணவே காணோம்"

"ஓஓஹ்ஹ்…அதுவா? எதாவது ஆடோ, மாடோ தின்னுருக்கும், இல்ல எதாவது குழந்தைங்க பறிச்சிட்டு போயிருப்பாங்க…."

ஹேன்னு சூர்யா உடனே அழுக ஆரம்பிக்க,
“யேய்!!! நிறுத்து…மொத நிறுத்து!!! இப்ப எதுக்கு இப்படி ஒப்பாரி வைக்கற? நான் வேணா ஒரு பத்து பென்னு வாங்கித் தரேன்…நைட்டு பூரா உக்காந்து எல்லா பூவுலையும் எழுது…லூசு…”

"யாரு லூசு? நீ தான் லூசு!!! போடா!!!”

"என்னடி சொன்ன?”

"ஹ்ம்ம்…போடா லூசுன்னு சொன்னேன்…"

"உன்னை என்ன பண்றேன்னு பாரு!!!” கதிர் துரத்த, சூர்யா ஓட, அந்த தோட்டம் முழுக்க அவங்களோட சிரிப்பு சத்தம் தான் கேட்டுச்சு….

பேங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்!!!!
எங்கயோ தூரத்துல லாரி ஹார்ன் சத்தம் கேக்கவும் தான் இந்த உலகத்துக்கு வந்தான் கதிர்!

கதிர் நினைச்ச மாதிரியே, இப்பவும் சூர்யா அதே கிணத்தடியில தான் உக்காந்துட்டு இருந்தா. இப்படி பல தடவை அவ இதே இடத்துல தனியா, மனசுல தனிமையோட உக்காந்திருக்கறத கதிரே பாத்திருக்கான். அப்பெல்லாம் ஓடிப் போய் அவ பக்கத்துல உக்காந்து அவ தலைய வருடிக் குடுக்கனும்னு அவனுக்குள்ள எழுந்த உணர்ச்சிகள்…ஆனா அத்தனை வருஷமா உள்ளுக்குள்ளயே தேக்கி, தேக்கி வச்ச அந்த உணர்ச்சிகள் எல்லாம் தீப்பிழம்பா மாறி இப்ப அவனையே பொசுக்கற மாதிரி இருந்துச்சு.
மெதுவா அவ பக்கத்துல போய் உக்காந்தான். சூர்யாவும் அவன ஒரு தடவை திரும்பி பாத்துட்டு எதுவும் பேசாமலே உக்காந்திருந்தா. எவ்வளவு நேரம் அவங்க அப்படி உக்காந்திருந்தாங்களோ, அவங்களுக்குத் தான் அது தெரியும்.

கதிர் , “சூர்யா…” ன்னு ரொம்ப சன்னமா அவனுக்கே சொல்லிக்கற மாதிரி அவ பேர சொல்லி கூப்பிட்டான்.
அந்த குரல்ல இருந்த கனிவும், குழைவும் எத்தனையோ ஜென்மத்துக்கு முன்னாடி கேட்டது போல இருந்துச்சு சூர்யாவுக்கு. எதுக்காக காத்திருக்கோம்னே தெரியாம, ஒரு வித ஏக்கத்தோடயே இருந்த அவ மனசுக்கு அப்ப தான் தெரிஞ்சது, இதுக்காகத் தான் இத்தனை நாளா தான் காத்திருந்தோம்னு.

அன்பு ததும்பும் உன் வார்த்தை ஒன்றே போதும்…
தேனில் தோய்த்த கனியாய்,
கடைந்தெடுத்த அமுதாய்,
பாலைவனத்து நீராய்,
என் ஏக்கத்தின் தா(க்)கம் தீர்க்க…

ஆனா அவ மனசுக்கு தெரிஞ்சது, பாழும் அறிவுக்கு புலப்படாதனால, அவ கண்ணுல இருந்து பொலபொலன்னு தண்ணி கொட்ட ஆரம்பிச்சுடுச்சு. அனிச்சை செயல் மாதிரி, அவனோட கைகள் அவ கண்ணீர தொட்டுத் துடைக்க நீண்டுச்சு. ஆனா அதுக்குள்ள சூர்யா அவன் கைய தட்டி விட்டுட்டா…அப்பா! எவ்வளவு திடமான வழுவான கை கதிரோடது? பூ மாதிரி இருந்த சூர்யா கைகளுக்கு அவன் கையை தட்டி விடுற அளவுக்கு எங்கிருந்து பலம் வந்துச்சு? இல்ல, அவன் கைகள் தான் எதிர்பாராம ஏற்பட்ட அந்த ஸ்பரிசத்தால செயலிழந்து போயிடுச்சா?

“சூர்யா! இப்ப என்ன நடந்துருச்சுன்னு இப்படி தனியா உக்காந்துட்டு அழுதுட்டு இருக்க?”
ஆனா அவ பதிலேதும் சொல்லாமலேயே இருக்கவும், “நீ தான் எப்பயுமே என்கிட்ட கேப்ப, இப்ப நான் கேக்கறேன்…எங்கூட பேசமாட்டியா? “

சூர்யா எதுவுமே பேசாம அவன முறைச்சு பாத்துட்டு தலைய திருப்பிகிட்டா. சூர்யகாந்தி கதிரவன பாக்காம வேற பக்கம் தலைய திருப்புற இயற்கைக்கு முரணான அந்த செயல் எத்தனை நேரம் தான் நீடிக்க முடியும்?
இந்த முறை “சூர்யா!” ன்னு தெளிவா, அதிகாரத்தோட ஒலிச்ச அவன் குரலுக்கு கட்டுப்பட்டு, முகத்துல கேள்விக்குறியோட அவன ஏறெடுத்து பாத்தா சூர்யா.

“இதப் பாரு சூர்யா! உங்க அப்பா எந்த நேரத்துல எப்படி மாறுவாருன்னு யாருக்கும் தெரியாது….அதனால தான்….நான்…”

சினுங்குற தனக்கு சீறவும் தெரியுங்கறத காட்டற மாதிரி சூர்யாவும், “இப்ப எதுக்கு தேவையில்லாம எங்க அப்பாவ இழுக்கறீங்க? உங்களுக்கு பிடிக்கலன்னா பிடிக்கலைன்னு சொல்லிடுங்க…அது தான உண்மை?”

“ஆமா…எனக்கு பிடிக்கல…”

சூர்யா உடனே எழுந்து போகவும், கதிர் அவ கையப் பிடிச்சு பலவந்தமா உக்கார வச்சான். அவனோட பிடியில் இருந்த உறுதி, ’உன் மேல அன்பு மட்டுமில்ல, உரிமையும் உண்டு’ன்னு அவன் சொல்லாம சொன்னது போல இருந்துச்சு.

“நான் சொல்றத முழுசா கேளு!”

“இதுக்கு மேல என்ன கேக்கனும்? ஆனா ஒன்னு மாமா! எனக்கு உங்க மேல எந்த கோவமும் இல்ல…கொஞ்சம் வருத்தம் தான்….உங்களுக்கு சொல்லித் தெரியணும்னு இல்ல, நான் உங்க மேல உயிரையே வச்சிருக்கேன். உங்களுக்கு பிடிக்கலைங்கறதுக்காக என்னை நான் மாத்திக்க மாட்டேன், ஆனா இனி உங்கள தொந்தரவு பண்ண மாட்டேன்…

“பேசி முடிச்சாச்சா? இனி, நான் பேசலாமா?” கோவத்தோட ஒலிச்சது கதிரோட குரல்.
“நான் பிடிக்கலைன்னு சொன்னது உன்னையில்ல…இப்படி புரிஞ்சுக்காம தனியா உக்காந்து அழுதுட்டு இருக்கியே…அத! என்மேல உயிரையே வச்சிருக்கேன்னு சொல்றியே, நீ என்னை புரிஞ்சிகிட்டது இவ்ளோ தானா?”

“நீங்க என்ன தான் எம்மேல எரிஞ்சு விழுந்தாலும், என்னை அடியோட வெறுக்க மாட்டீங்கன்னு தான இத்தன நாளா நினைச்சுட்டு இருந்தேன்…ஆனா, இப்ப என்னால அழாம வேற என்ன பண்ண முடியும்?”
“ஏன், அழுகறத தவிர உன்னால வேற எதுவும் பண்ண முடியாதா? உன் மனச கேட்ருந்தாலே தெரியுமே?”

“ஹ்ம்ம்…மனசு சொன்னத கேட்டுத் தான இத்தன நாளா ஏமாந்துட்டேன்…நம்ம பாசம் வச்சிருக்கறவங்க என்ன தான் நம்மள மதிக்காம காயப்படுத்தினாலும், இந்த பாழாப் போன மனசு அதையெல்லாம் அடியோட மறந்துட்டு, எப்பயோ, எந்த காலத்திலையோ அவங்களோட சந்தோஷமா பழகின நாளையெல்லாம் நினைச்சு தான ஏங்குது? வேற ஏதோ ஒரு உலகத்துல, எங்கயோ தூரத்துல இன்னும் அந்த நாளெல்லாம் தொடர்ந்துட்டே தான் இருக்குன்னு நினைச்சு அற்ப சந்தோஷம் படறத தவிர மனசுக்கு வேற என்ன தெரியும்?”

என் அன்பை நீ மறுத்தாலும்,
என்னை அடியோடு வெறுத்தாலும்,
ஏதோ ஒரு உலகத்தில்…
ஏதோ ஒரு தருணத்தில்…
வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறேன்,
நம் கடந்த காலத்தை!

“இவ்ளோ பேசுறியே! நான் உண்மையா என்ன நினைக்கறேன்னு நான் சொல்லித் தான் உனக்கு தெரியனுமா? உன் மனசுல ஒரு சின்ன மூலைல கூட என் மேல நம்பிக்கை இல்லையா?”

“என்ன சொல்றீங்க?”

கதிர் எதுவும் பேசாம, சூர்யாகிட்ட ஒரு நோட்ட குடுத்தான். சூர்யா அத வாங்காமையே, “என்னதிது?” ன்னு கேக்கவும், கதிர், “முதல்ல அத திறந்து பாரு…”

தோட்டத்து காத்துல படபடத்த நோட்டு தாள்களுக்கு நடுவே, எதோ ஒரு காஞ்ச பூ இருந்துச்சு. அந்த பூ வாடியிருந்தாலும், ’கதிர்வேல் சூர்யாகாந்தி’ ன்னு அவங்க பேர் மட்டும் வாடாம இன்னும் வாசம் வீசிட்டு தான் இருந்துச்சு!

நீ சூடி வந்த பூக்களின் வாசத்தைக் கூட மறக்க முடியவில்லை,
பின்பு எப்படியடி நீ அள்ளித் தெளித்த நேசத்தை மறப்பேன்?

நிறம் மாறினாலும் மனம் மாறவில்லையடி இந்த பூக்கள்
உன் சுவாசத்தை இன்னும் சுமந்து கொண்டு தான் இருக்கிறது!

ஆச்சர்யத்தில் விரிஞ்சு, ஆனந்ததில் கசிந்த கண்களோட சூர்யா அந்த பூவை வாஞ்சையோட தடவிக் கொடுக்க, கதிர் அது நாள் வரையில் மனசுல பதுக்கி வச்சிருந்த அன்பையெல்லாம் அவனோட விரல்களுக்கு தூதனப்பி, சூர்யா விரல்களுக்கு எதோ ரகசிய செய்தி சொல்ல ஆரம்பிச்சான்!

ஒரு விரல் எனைத் தீண்ட,
என் வசம் நான் தோற்று…
மறுவிரல் வந்து தீண்டவும்,
என்னிடமிருந்து விடைபெற்று…
உன் விரல்கள் ஆடிய நர்த்தனத்தில்,
உன்னிடமே தஞ்சமடைந்தேன்!

முகம் மலர்ந்திருந்தாலும், சூர்யா கண்ணுல இருந்து தண்ணி வர்றது மட்டும் நின்ன பாடில்லை.

“யேய் ரெட்டை வாலு! அழுதது போதும்டீ…வா, வீட்டுக்கு போவோம்……..உங்க வீட்டுக்கு…”

மேலும் மேலும் இன்ப அதிர்ச்சி தாக்க, சூர்யா, “என்னது???? எங்க வீட்டுக்கா??? நிஜமாவா?”

“ஆமா…நிஜம்…மா…என்ன பண்றது? பேய கட்டிகிட்டா புளிய மரத்துல ஏறித் தான ஆகணும்” ன்னு கதிர் பொய்யா சலிச்சிக்கிட்டான்.

“யாரு பேயி? பாருங்க…ரெண்டு காலு இருக்கு…”சூர்யா அவ பாதங்கள காட்டவும்,

“ஆஹா…பூ மாதிரி இருக்கற இந்த பாதங்கள இனிமே எப்படி என் உள்ளங்கைல வச்சு தாங்குறேன்னு பாரு….”

“ஹய்யோடா…இப்பயே இறங்கி தோட்டத்துல மண்ணுல தான் மாமா நடக்கனும்!!!”

“நீ மட்டும் ’ம்ம்’ ன்னு ஒரு வார்த்தை சொல்லு, வீடு வரைக்கும் உன்னை தூக்கிட்டே போறேன்…போய் உங்கப்பாகிட்ட நேருக்கு நேர் கேக்கக் போறேன், பொண்ண நீங்களே கட்டிக் குடுக்கப் போறீங்களா, இல்ல இப்படியே தூக்கிட்டு போய்டவான்னு…”

“ஹூக்கூம்…நினைப்பு தான்…”

“ஆமா…நினைப்பு தான்…உன் மேல…”

கதிரவனை பார்த்து தலை நிமிர்ந்தது அந்த சூர்யகாந்தி!
கதிரை பார்த்து தலை கவிழ்ந்தாள் இந்த சூர்யகாந்தி!

[முற்றும்]

54 comments:

Badri said...

me first

Badri said...

me also second...already read this part...un photo oda potrundha foreword innum super....innum evlo pera kavuka pora ;-)

Divyapriya said...

Badrinarayanan said...
//me also second...already read this part...un photo oda potrundha foreword innum super....innum evlo pera kavuka pora ;-)//

அடப்பாவி!!! how did u read it? கடவுளே! இதையெல்லாம் திருட்டு வி.சி.டி ல release பண்ணிட்டாங்களா?? :((

Divyapriya said...

Badrinarayanan said...
//me also second...//

wat is this loosuthanam? :D

கார்த்தி said...

Nalla irunthuchunga.. but aana konjam seekirama mudicha maathiri irukku....

Badri said...
This comment has been removed by the author.
Badri said...

Divyapriya said...

Badrinarayanan said...
//me also second...//

wat is this loosuthanam? :D


Ellam sagavasa dhosham dan :P

Anonymous said...

அடடா முடிஞ்சு போச்சே.. வழக்கமான ஃபீல் குட் கதை. இன்னும் சூர்யா அப்பாவோட காரெக்டருக்கு குடுத்த பில்டப் கதையோட ஒன்றாத மாதிரி ஒரு ஃபீல். அவர் காதலை எதிர்க்கறதா இருந்து.. போராடி.. ஜெயிக்கற மாதிரி இருந்தா இன்னும் நல்லாயிருந்திருக்கும்..

ஏகப்பட்ட படங்க பாத்த பழக்கதோஷம்...ஹிஹி..

வாழ்த்துகள்... அடுத்த கதை எப்போ..??

Thamarai said...

eppada last part varum nnu,check panna vacha oru nalla kadhai..

Keep up the good work!!

Mohan R said...

"நம்ம பாசம் வச்சிருக்கறவங்க என்ன தான் நம்மள மதிக்காம காயப்படுத்தினாலும், இந்த பாழாப் போன மனசு அதையெல்லாம் அடியோட மறந்துட்டு, எப்பயோ, எந்த காலத்திலையோ அவங்களோட சந்தோஷமா பழகின நாளையெல்லாம் நினைச்சு தான ஏங்குது? வேற ஏதோ ஒரு உலகத்துல, எங்கயோ தூரத்துல இன்னும் அந்த நாளெல்லாம் தொடர்ந்துட்டே தான் இருக்குன்னு நினைச்சு அற்ப சந்தோஷம் படறத தவிர மனசுக்கு வேற என்ன தெரியும்?”"

Cute lines

Orey romance thaan ponga indha part fulla... Officela mood maathi vittutinga ha ha ha :D.....

Adutha kadhai eppo...... Nalla college storya podunga Konjam naanga college days revisit pannikurom ;)

Raghav said...

அட அட.. திவ்யப்ரியா திவ்யப்ரியா கலக்கலோ கலக்கல்.. என்னத்த சொல்லுவேன்.. என் மனது என்னிடம் இல்லை.. அப்புடியே சூர்யா கிட்ட தான் இருக்கு.. ஹும் சூர்யா.. சூர்யா

Raghav said...

ஆத்தி முதல்ல உனக்கு நீயே சுத்திப் போட்டுக்க தாயி.. என்னோட கண்ணு மொத்தமும் பட்டுருக்கும்.. :)

ரொம்பவே கலக்கல்.. சின்னக் கலைவாணின்னு சும்மாவா சொன்னேன்.

Raghav said...

//"ஹ்ம்ம்…போடா லூசுன்னு சொன்னேன்…"//

இந்த ஒரு வார்த்தையில தான்ப்பா பையங்க கவுந்துர்றாங்க...

Raghav said...

// எந்த காலத்திலையோ அவங்களோட சந்தோஷமா பழகின நாளையெல்லாம் நினைச்சு தான ஏங்குது? //

என் மனதை கொள்ளை கொண்ட வரிகள்.

சந்தனமுல்லை said...

திவ்யா..நல்லபடியா சேர்த்து வைச்சுட்டீங்க..டயலாக் எல்லாம் நல்லா ரசிக்க வைச்சது.நல்ல வார்த்தை பிரயோகம்..எதை விடறது..எதை சொல்றதுன்னு தெரியலை..ஆனா நடுநடுவுல வர்ற கவிதை வரிகள்..அட்டகாசம்! கண்டிப்பா காலேஜ் டைம்ல படிச்சு அணு அணுவா ரசிச்சிருக்க வேண்டிய ஸ்டோரி..எங்க நேரம்..ரமணி சந்திரனை பிடிச்சு தொங்கிக்கிட்டிருந்தோம்! :-)ஆனா நல்ல ஐடியாங்க..பூவுல பேரு எழுதறது.;-)

இன்னும் இது போல பல கதைகள் எழுத வாழ்த்துகள்..:-).

Divyapriya said...


மதி
நேரமின்மை காரணமா கதைய வெட்னதால இந்த நிலைமை ;)

அடுத்த கதை ரெடியா இருக்கு...சீக்கரத்துல தொடரும் :)

----------
Thamarai said...

// eppada last part varum nnu,check panna vacha oru nalla kadhai..//

எப்படா முடியும் காத்திருந்தீங்களா? ;) அடக்கடவுளே! :(
----------
இவன்

நன்றி இவன்...
அடுத்த கதை சூர்யகாந்தியோட 1s complement :))
----------
ராகவ்

ராகவ்...ராகவ்...நன்றி நன்றி :D
உங்க முதல் கமெண்ட்ட படிக்கும் போது குணா தான் ஞாபகம் வந்துச்சு :))

Divyapriya said...


Raghav said...
//
// எந்த காலத்திலையோ அவங்களோட சந்தோஷமா பழகின நாளையெல்லாம் நினைச்சு தான ஏங்குது? //

என் மனதை கொள்ளை கொண்ட வரிகள்.//

நிஜத்துல நானும் இத எந்த காலத்திலையோ (ஒரு ரெண்டு வருஷங்களுக்கு முன்னால்) எழுதிய வரிகள் :)) நன்றி ராகவ்...

--------
சந்தனமுல்லை

நன்றி முல்லை...காலேஜ்ல தான் படிக்கனுமா? இன்னும் கொஞ்ச காலத்துக்கு இது மாதிரி கதைகள் படிக்கலாமே ;)

gils said...

:(( i d 19th...ipothaiku attendance..appalika padichtu kamentaren

MSK / Saravana said...

Me the 20.. :)

MSK / Saravana said...

படிக்கல திவ்யப்ரியா.. நாளைக்கு வந்து மொத்தமா ஆறு பகுதிகளையும் படிச்சிட்டு மிக விரிவா எழுதறேன்.. ஓகே வா?

//மொத்தம் ஏழு பகுதின்னு வழக்கம் போல தப்பான கணக்கு சொல்லிட்டேன். ஆறு தான்.//

ROTFL.. ;)

சிம்பா said...

எப்பா ஒருவழியா முடிவு தெரிஞ்சிருச்சு...

இனி ஆரம்பத்துல இருந்து முழுசா படிக்கலாம்...

எப்பாடி நம்பளால சஸ்பன்ஸ் எல்லாம் தாங்க முடியாது...

நாகை சிவா said...

//இந்த பகுதியில கவிஜ ஆக்கரமிப்பு கொஞ்சம் அதிகமாய்டுச்சு.//

கொஞ்சம் தானா? :)

// மொக்கையா இருந்தா நேரடியா இங்கயே திட்டுடுங்க ;)//

!@#$@%#%#%!!

// இது வரை அட்டண்டண்ஸ் போடாம யாராவது இருந்தா இதுலையாவது போடவும் :(//

போட்டாச்சு ! போட்டாச்சு!

ஜியா said...

kalakkals of Bengaluru... kathai nalla nadai... oru punnagai kathaiya padichu mudikkumpothu.. athuthaane intha kathaiyoda vetri?? ;))

BTW, avunga appa ponna koduthaara illaiyaa?? atha paththi onnume sollala??

mvalarpirai said...
This comment has been removed by the author.
mvalarpirai said...

//கதிரவனை பார்த்து தலை நிமிர்ந்தது அந்த சூர்யகாந்தி!
கதிரை பார்த்து தலை கவிழ்ந்தாள் இந்த சூர்யகாந்தி!//
Divyapriya... நீங்க எங்கோ...யோ போயீட்டீங்க ! :) :)
நல்ல தொடர்கதை ! ..

Divya said...

\\இது வரை அட்டண்டண்ஸ் போடாம யாராவது இருந்தா இதுலையாவது போடவும் :(\\


so sorry Dp.......last part & this final part ,rendukkum serthu comment potudurein,attendence note panikanga:))

Divya said...

neengalum 'LINK WITHIN ' add panirukireengla......good good:))


wonderful flow of writing......kavithais are xlnt!!!

Keep going Dp:))

தமிழ் said...

//அன்பு ததும்பும் உன் வார்த்தை ஒன்றே போதும்…
தேனில் தோய்த்த கனியாய்,
கடைந்தெடுத்த அமுதாய்,
பாலைவனத்து நீராய்,
என் ஏக்கத்தின் தா(க்)கம் தீர்க்க…/

/என் அன்பை நீ மறுத்தாலும்,
என்னை அடியோடு வெறுத்தாலும்,
ஏதோ ஒரு உலகத்தில்…
ஏதோ ஒரு தருணத்தில்…
வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறேன்,
நம் கடந்த காலத்தை!/

/ஒரு விரல் எனைத் தீண்ட,
என் வசம் நான் தோற்று…
மறுவிரல் வந்து தீண்டவும்,
என்னிடமிருந்து விடைபெற்று…
உன் விரல்கள் ஆடிய நர்த்தனத்தில்,
உன்னிடமே தஞ்சமடைந்தேன்!//


அத்தனையும் அருமை

வாழ்த்துகள்

புதியவன் said...

அழகான கவிதைகளோட ரொம்ப அழகா கதைய முடிச்சிருக்கீங்க...

//நீ சூடி வந்த பூக்களின் வாசத்தைக் கூட மறக்க முடியவில்லை,
பின்பு எப்படியடி நீ அள்ளித் தெளித்த நேசத்தை மறப்பேன்?

நிறம் மாறினாலும் மனம் மாறவில்லையடி இந்த பூக்கள்
உன் சுவாசத்தை இன்னும் சுமந்து கொண்டு தான் இருக்கிறது!
//

வெகு அழகு...

நட்புடன் ஜமால் said...

\\அன்பு ததும்பும் உன் வார்த்தை ஒன்றே போதும்…
தேனில் தோய்த்த கனியாய்,
கடைந்தெடுத்த அமுதாய்,
பாலைவனத்து நீராய்,
என் ஏக்கத்தின் தா(க்)கம் தீர்க்க…\\

அழகான கவிதைகள் அனைஹ்தும்.

நட்புடன் ஜமால் said...

கதையும் நல்லா போகுது ...

Vijay said...

\\இருந்த கனிவும், குழைவும் எத்தனையோ ஜென்மத்துக்கு முன்னாடி கேட்டது போல இருந்துச்சு சூர்யாவுக்கு.\\

யப்பா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் புல்லரிக்கி :-)

கதையை முடித்த விதம் அருமை. கிராமத்து மணம் கமழ, ஒரு கள்ளிக்காட்டுக் காதல் க(வி)தை.

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் அம்மணி!!!!
கிராமத்தில் சூர்யகாந்தின்னு பெயர் வைப்பாங்க. ஆனால், சூர்யான்னு ஸ்டைலாவா கூப்பிடுவாங்க.

G3 said...

Kalakkiteenga :))))

G3 said...

//இந்த பகுதியில கவிஜ ஆக்கரமிப்பு கொஞ்சம் அதிகமாய்டுச்சு.//

indha buildupkku nijamavae konjam neraya kavuja edhirpaathen.. kammiya thaan irukku :( aana irukkaradhadhellam sema toppu :D

G3 said...

//ஒரு விரல் எனைத் தீண்ட,
என் வசம் நான் தோற்று…
மறுவிரல் வந்து தீண்டவும்,
என்னிடமிருந்து விடைபெற்று…
உன் விரல்கள் ஆடிய நர்த்தனத்தில்,
உன்னிடமே தஞ்சமடைந்தேன்!//

Avvvvvv.. Room pottu yosipeengalo.. chancae illae.. sema supera irukku :D

gils said...

avvvvvvvvvvvvv..........kathia pullarichidichi :)) Poo padam mathiri iruku...kadisi line punch chancela..piniteenga...chanceleenga..nallarunthichi..kavithais ovonum top...kalakiteenga

மேவி... said...

"விஜய் said...
\\இருந்த கனிவும், குழைவும் எத்தனையோ ஜென்மத்துக்கு முன்னாடி கேட்டது போல இருந்துச்சு சூர்யாவுக்கு.\\

யப்பா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் புல்லரிக்கி :-)

கதையை முடித்த விதம் அருமை. கிராமத்து மணம் கமழ, ஒரு கள்ளிக்காட்டுக் காதல் க(வி)தை.

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் அம்மணி!!!!
கிராமத்தில் சூர்யகாந்தின்னு பெயர் வைப்பாங்க. ஆனால், சூர்யான்னு ஸ்டைலாவா கூப்பிடுவாங்க."

periya repeat uu.......

மேவி... said...

"நட்புடன் ஜமால் said...
\\அன்பு ததும்பும் உன் வார்த்தை ஒன்றே போதும்…
தேனில் தோய்த்த கனியாய்,
கடைந்தெடுத்த அமுதாய்,
பாலைவனத்து நீராய்,
என் ஏக்கத்தின் தா(க்)கம் தீர்க்க…\\

அழகான கவிதைகள் அனைஹ்தும்."

periya repeat u.......

மேவி... said...

kadai nalla irundhuchu

மேவி... said...

உங்க உள்ள இருக்கிற ஒரு ரமணி சந்திரன் யை கண்டுபிடிசிடிங்க போல் இருக்கே ......

kadhai super

MSK / Saravana said...

படிச்சிட்டேன்.. மொத்தமா ஏழு.. சாரி. ஆறு பகுதிகளையும் படிச்சிட்டேன்.. :)

கலக்கல் திவ்யப்ரியா.. செம கலக்கல்.

உண்மையில் கொஞ்சம் விமர்சன நோக்கோடுதான் படித்தேன்.. இருப்பினும் குறைகளெல்லாம் இல்லை. ஒற்று பிழைகள், சந்தி பிழைகள் தவிர்த்தல் நலம்..
அவ்ளோதான்..

கதை ரொம்ப தெளிவா இருந்தது.. நிறைய கதாபாத்திரங்கள் வைத்து குழப்பாமல்..
நடை தோய்வடையவில்லை எங்கும்.

இடையிடை கவிதைகள் அட்டகாசம்.. ரொம்ப நல்லா இருந்தது. ரசித்தேன்.. :)

முழு கதாசிரியர் ஆகிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.. :)

வெட்டிப்பயல் said...

kathai nalla irunthuthuma.. but expectation athigam... athai fulfill pannuchanu theriyalai...

//நேரமின்மை காரணமா கதைய வெட்னதால இந்த நிலைமை ;)//

ivvalavu kashtapattu ezhuthitu ippadi kadaisiya avasara pattu mudichitenu sollalama?

blogla avasareme illai.. 20 - 30 part ezhuthanalum thodarnthu padika aal irukaanga...

Ezhuthu nadai abaaram... expecting more from u :)

All the best for the next story

Divyapriya said...

சிம்பா said...
// எப்பா ஒருவழியா முடிவு தெரிஞ்சிருச்சு...

இனி ஆரம்பத்துல இருந்து முழுசா படிக்கலாம்...//

grrrrr :((

--------
நாகை சிவா

இத்தன சொல்லிட்டு, நல்லா திட்டிட்டு கதைய பத்தி ஒன்னுமே சொல்லாம போய்ட்டீங்களே :((

---------
ஜி

நன்றி ஜி...
சூர்யா அப்பாக்கு குடுத்த பில்டப் படி, அவரு கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாரு...அப்புறம் எல்லா படத்திலையும் வர மாதிரி கடைசியில அவங்க சேந்துடுவாங்க...பாவம் அவங்கள இதுக்கு மேல படுத்துவானேன்னு தான் நானும் பாதியிலயே விட்டுட்டேன் :)))

----------
mvalarpirai

மிக்க நன்றி வளர்பிறை...நான் எங்கயும் போகல, இங்கயே இருந்த் இன்னும் சில கதைகள் போடத் தான் போறேன்...நீங்களும் எங்கயும் போய்டாம கண்டிப்பா படிங்க...

-----------
Divya said...

// neengalum 'LINK WITHIN ' add panirukireengla......good good:))//

ஆனா திவ்யா..உங்க ப்ளாக பாத்து தான் நானும் இதை வெச்சேன் :))

பாராட்டுக்கு ரொம்ப நன்றி திவ்யா...

------------
திகழ்மிளிர்

மிக்க நன்றி திகழ்மிளிர்

Divyapriya said...


புதியவன்

பாராட்டுக்கு மிக்க நன்றி புதியவன்...

----------
நட்புடன் ஜமால் said...
// கதையும் நல்லா போகுது .//

போகுதா? :)) முடிஞ்சிருச்சுங்க :))
பாராட்டுக்கு நன்றி ஜமால்
----------
விஜய் said...
//யப்பா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் புல்லரிக்கி :-)//

ஏன் விஜய்? பார்க்ல உக்காந்து படிச்சீங்களா?

//கிராமத்தில் சூர்யகாந்தின்னு பெயர் வைப்பாங்க. ஆனால், சூர்யான்னு ஸ்டைலாவா கூப்பிடுவாங்க.//

திருநெல்வேலில விஜயகுமார்னு பேர் வச்சவங்கள, நாமெல்லாம் விஜய் னு கூப்பிடறதில்லையா? அது மாதிரி தான் :)))
jus kidding :)
இருந்தாலும், ஒவ்வொரு தடவையும் காந்தியையும் சேத்து கூப்ட்டா, நீளமா இருக்குனு சுருக்கிட்டாங்க :)
----------
G3

உங்க தொடர் பாராட்டு நிஜமாவே ரொம்ப ஊக்கமளிக்குது G3...thanks a lot...
----------
gils

மிக்க நன்றி gils...கடைசி வரிகள் என்ன்வோ காமடியா இருந்த மாதிரி தோனுச்சு...அது நல்லாயிருக்கா? நன்றி :)
----------
MayVee

தவனை முறையில பின்னூட்டம் போட்டு பாராட்டினதுக்கு நன்றி மேவி...:))
----------
Saravana Kumar MSK

ஆணிகளுக்கு நடுவே எல்லா பகுதியையும் மொத்தமா படிச்சதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சரவணா...
//
முழு கதாசிரியர் ஆகிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.. :)//

இது தான் உச்சகட்ட பாராட்டு...சந்தோஷமா இருக்கு...ரொம்ப நன்றி :)

---------
வெட்டிப்பயல்
நீங்க சொல்றது சரி தான்ண்ணா...நிறைய பகுதி போட்டா தொடர்ந்து படிக்கறவங்க கூட படிக்க மாட்டாங்களோன்னு நானே நினைச்சுகிட்டேன் :)
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி...அடுத்த கதை ஏற்கனவே முடிச்சாச்சு :)) அதுல நிச்சயமா expectation fulfill ஆகும்னு நினைக்கறேன் :)

நட்புடன் ஜமால் said...

தமிழ்மண வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

அட இப்பதாங்க முழசா பார்த்தேன்.

முடிஞ்சது என்பதை.

இருப்பினும் வேறு ஏதாவது தொடர் போடுங்கள்

‘திவ்யா’ இந்த பெயர் ராசி -

நல்ல தொடர்கதைகள்

தாரணி பிரியா said...

சுபமா முடிச்சதுக்கு நன்றி திவ்யப்பிரியா. நல்லா இருக்கு இந்த பாகமும். ஆனா ஏனோ அவசரப்பட்டு முடிஞ்ச மாதிரி இருக்கு. ஆனாலும் சூப்பர் :)

Anonymous said...

உங்களோட அனைத்து கதைகளும், எழுத்துநடையும் மிகவும் அருமை. "சூர்யகாந்தி"- படித்து உங்க விசிறியாக ஆயிட்டேன். அடுத்த கதைக்காக வெயிட்ங்.
//இது வரை அட்டண்டண்ஸ் போடாம யாராவது இருந்தா இதுலையாவது போடவும் :(//
இந்தமாதிரி பீல் பண்ணாதிங்க . அட்டண்டண்ஸ் போடலைனாலும் உங்க கதைய படிச்சிகிட்டு தான் இருப்போம் (என்னை மாதிரி நிறைய பேர் அட்டண்டண்ஸ் போடாம இருப்பாங்கனு நினைக்கிறேன்).

சிம்பா said...

சூரியகாந்தி ஆரம்பம் முதல் நிறைவு வரை மிகவும் ரசிச்சு படிச்சும் முடிச்சாச்சு..

நிஜமா சொல்றேன் நம்புங்க சாமி,,படிச்சதுக்கு அத்தாட்சியா இரண்டாவது பாகத்துல லயோலா கல்லூரி ஐஸ் பெயரை குறிப்பிடும் இடத்தில் எழுத்துப்பிழை உள்ளது..

character introduction மிகவும் அருமை.. முக்கியமா சூர்யாவோட இடத்தில இருந்து பின்னாடி போறது... super...

முருகன் முதல் ஐஸ் அப்பா வரை ஒவ்வொரு காய் நகர்த்தலும்.. ச்சே இத வச்சு ஒரு மகா சீரியல் போலாம்..

காதல் மலரும் இடமும் அது வெளிப்படும் இடமும் மிகவும் நேர்த்தி.. நெசமாலுமே சூரியகாந்தி பூவுல பேரு எழுத முடியுமா..

என்னமோ தெரியலை, கசைசீ பகுதியை மிகவும் அவசரமாக முடித்தது போல் இருக்கு..

சுபம் அருமை.. பழைய கால நினைவுகளில் நீந்தி நீச்சல் அடுச்சு வந்த மாதிரி ஒரு பீலிங்.

கொசுறு... கொங்கு பாசை, கதை நடை அருமையோ அருமை..

சிம்பா said...

என்ன ஒரு coincidence.. மீ த 50th... :)))))

Anonymous said...

கதை நல்லா இருந்துச்சுங்க. ஆனா சீக்கிரமாவே முடிச்சிட்டீங்க. ஆனா இந்த மாதிரி ஒரு கதைய எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு.but wherenu தான் தெரியல். ஹே இது பூ படத்தோட உல்டா தான

பாசகி said...

நல்லபடியா சுபமா முடிச்சுட்டீங்க, வாழ்த்துகள்!

முதல் நாலு பகுதிலயும் கதைல என்னமோ இருக்குனு ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கிட்டு, கடைசில சப்புனு முடிச்சிட்டீங்க. அதுவும் இல்லாம கதை கிட்டதட்ட ஐந்தாவது பகுதிலயே முடிஞ்சமாதிரி இருக்கு. இது ஒரு வாசகனா என்னோட கருத்து, படைப்பை விமர்சிக்கற அளவுக்கு எனக்கு தகுதியில்லை. தப்பா நினைச்சுக்காதீங்க :)

நாகை சிவா said...

அதுக்கு ஏங்க சோகம். கதை நல்லாவே இருக்கு... தொடர்ந்து எழுதுங்க.. அப்ப அப்ப வந்து கமெண்ட் வேன்... ஆனால் ரீடர்ல படிச்சுடுவேன்...

Sakthi said...

தொடர்ந்து வாசித்து வந்தேன், இன்று தான் பின்னூட்டமிடுகிறேன்..
அழகான எழுத்து நடை...
இன்னும் எழுதுங்கள் :)
வாழ்த்துக்கள்