Friday, January 23, 2009

அழுகாச்சி காவியம்!


நெஞ்சத்துள் தேக்கி வைத்திருந்த
கோபமெல்லாம்,
கடற்கரை மணல் வீடாய்,
கரைந்தோடிப் போனது,
உன் கண்ணீர் அலைகளால்!
***


கவிதையே கவிதைமேல்
கவிதையெழுதி செல்கிறதே!
புரியவில்லையா?
உன் கண்களிரண்டும்,
கன்னத்தில் வரைந்த
நீர்க்கோலங்களைத் தான் சொல்கிறேன்!

***

தொலைந்த வார்த்தைகளை கோர்த்து
சத்தமில்லாமல் சந்ததி பாடியது
உன் விழியோர நீர்த்துளி!

***
உன்னை மறக்க நினைத்தாலும்,
நினைக்க மறக்கவில்லையென
ஒவ்வோர் இரவும் உணர்த்துகிறது
என் நனைந்த தலையணை!

***


அற்பாயுளில் மடிந்தாலும்,
மோட்சைத்தை தான் அடைந்தது,
உன் அதரங்கள்
சுவைத்து நிறுத்திய
என் கண்ணீர்!
***



44 comments:

சொல்லரசன் said...

கவிதையில் ஒரு நிழ்ற்படம்,புதிய முயற்சி வாழ்த்துகள்

G3 said...

:))))))))))))))))


Ellamae top class :)

//மறக்க நினைத்தாலும்,நினைக்க மறக்கவில்லை//

Ennama velayaadareenga vaarthaigala vechchu :))

Divya said...

Divyapriya...........kalakkals kavithai!!

ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க, பாராட்டுக்கள்:))))

Divya said...

\\கவிதையே கவிதைமேல்
கவிதையெழுதி செல்கிறதே!\\


அசத்தல் வரி.......!!!

Nimal said...

நல்லாருக்கு... வரிகள், வார்தைகள் அழகு..!

ஆனா படிச்சதும் ஒரே அழுகாச்சியா பீல் ஆவுது :(

மேவி... said...

nalla irukkunga....

athu eppadi..... varigalakku etha picture ah u getting....

orey lovevangi feelings irukku...
words are being prefectly being used....
i expect more like this in ur blog

Vijay said...

சில நாட்களாக ஏன் இப்படி எல்லோருரம் ஸ்லோவா சோலோ வயலின் வாசிக்கறாங்க?
உற்சாகமா ஒரு 30 வயலின் வாசிக்கவேண்டியது தானே?

இருந்தாலும் கவிதையெல்லாம் சோகத்தில் உருவாகும் போலிருக்கிறது.

\\நெஞ்சத்துள் தேக்கி வைத்திருந்த
கோபமெல்லாம்,
கடற்கரை மணல் வீடாய்,
கரைந்தோடிப் போனது,
உன் கண்ணீர் அலைகளால்!\\
இந்த உவமை சூப்பர்.

ஆயில்யன் said...

//உன்னை மறக்க நினைத்தாலும்,
நினைக்க மறக்கவில்லையென
ஒவ்வோர் இரவும் உணர்த்துகிறது
என் நனைந்த தலையணை!//

நல்லா இருக்குங்க !

Raghav said...

//மறக்க நினைத்தாலும்,நினைக்க மறக்கவில்லை//

Fentastic lines...

கலக்குறீங்க..

புதியவன் said...

முதல் தடவையா உங்களோட கவிதைகளைப் படிக்கிறேன்...

//தொலைந்த வார்த்தைகளை கோர்த்து
சத்தமில்லாமல் சந்ததி பாடியது
உன் விழியோர நீர்த்துளி!//


ரொம்ப நல்ல இருக்கு...

Anonymous said...

அட அட அட...இதல்லவோ அழுகாச்சி காவியம்.. அசத்திட்டேள் போங்கோ...
படங்களும் அருமை..

வார்த்தைகளில் இப்படியெல்லாம் விளையாடலாம்னு இப்போ தான் தோணுது. நீங்க ஏன் நம்ம கம்பெனியில ஒரு செஷன் நடத்தக்கூடாது...??? கவிதை எழுதுவது எப்படின்னு :)

தாரணி பிரியா said...

//உன்னை மறக்க நினைத்தாலும்,
நினைக்க மறக்கவில்லையென
ஒவ்வோர் இரவும் உணர்த்துகிறது
என் நனைந்த தலையணை!///

ரொம்பவே நல்லா இருக்குது திவ்யா

தாரணி பிரியா said...

எல்லாமே கலக்கல்ஸ் கவிதை

பாசகி said...

எல்லாமே நல்லா இருந்ததுங்க...

//தொலைந்த வார்த்தைகளை கோர்த்து
சத்தமில்லாமல் சந்ததி பாடியது
உன் விழியோர நீர்த்துளி!// - என்னோட favorite இதுதான்.

வாழ்த்துக்கள்!!!

சிம்பா said...

oye padangal ellam nalla irukku...

anbudan vaalu said...

இரண்டாவதாக அமைந்த வரிகளும் அருமை......படமும் அருமை......

நட்புடன் ஜமால் said...

எப்படி மிஸ் பன்னேன் நான்.

ச்சே படங்களுக்கே தனி பரிசு கொடுக்கலாம் போல ...

நட்புடன் ஜமால் said...

\\நெஞ்சத்துள் தேக்கி வைத்திருந்த
கோபமெல்லாம்,
கடற்கரை மணல் வீடாய்,
கரைந்தோடிப் போனது,
உன் கண்ணீர் அலைகளால்!\\

தொடக்கமே அசத்தல் ...

நட்புடன் ஜமால் said...

\\கவிதையே கவிதைமேல்
கவிதையெழுதி செல்கிறதே!
புரியவில்லையா?
உன் கண்களிரண்டும்,
கன்னத்தில் வரைந்த
நீர்க்கோலங்களைத் தான் சொல்கிறேன்!\\


அட அட அடா - ச்சே கிளப்புறீங்க ...

நட்புடன் ஜமால் said...

\\அற்பாயுளில் மடிந்தாலும்,
மோட்சைத்தை தான் அடைந்தது,
உன் அதரங்கள்
சுவைத்து நிறுத்திய
என் கண்ணீர்!\\

தட்டச்சும் என் விரல்கள் சில நேரம் நின்றுவிட்டன என் கண்கள் அசையும் வரை.

Raghav said...

சூரியகாந்தி எப்ப மலரும் ?

gils said...

pinnings..pedalings..adichings.. kalkings kavithais

gils said...

//மறக்க நினைத்தாலும்,நினைக்க மறக்கவில்லை//

toppppu

நாகை சிவா said...

GOOD :)

Muthusamy Palaniappan said...

கவிதை கவிதை பிரமாதம்...அத்துனையும் அருமை

gayathri said...

kaithai varikal anithum arumai padangalum nalla iruku

Divyapriya said...

@sollarasan

முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி! தொடர்ந்து படிங்க...

---

@G3

thanks g3 :))

---
Divya

நன்றி Divya

---
நிமல்-NiMaL

சோகத்திலையும் ஒரு சுகம் இருக்கு :))

---
MayVee
//athu eppadi..... varigalakku etha picture ah u getting...//

எனக்கு தேடவே தெரியல, ஏதோ கிடைச்சத போட்ருக்கேன் :((

---
விஜய் said...
//
சில நாட்களாக ஏன் இப்படி எல்லோருரம் ஸ்லோவா சோலோ வயலின் வாசிக்கறாங்க?
உற்சாகமா ஒரு 30 வயலின் வாசிக்கவேண்டியது தானே?//

ஹா ஹா :D வாசிச்சிட்டா போச்சு :))

Divyapriya said...


ஆயில்யன்

நன்றி ஆயில்யன்

---
Raghav

thanks raghav...கூடிய சீக்கரம் சூர்யகாந்தி வந்து டார்ச்சர் பண்ணும் :))

---
புதியவன்

கதைக்கு நடுவுல கவிஜ எதுதறதோட சரி, தனியா எல்லாம் ரொம்ப எழுதறதில்லை :))

---
மதி

ஆமா, recession time ல நல்ல ஐடியா தான் குடுக்கறீங்க :))
விளையாட யாருமில்லைன்னு தான் வார்த்தையோட விளையாடிப் பாப்பமேன்னு ஒரு ஆசை ;)

---
தாரணி பிரியா

நன்றி தாரணி

---
பாசகி

நன்றி பாசகி...

---
சிம்பா

படங்கள் எல்லாம் சுட்டது தான் :))

---
anbudan vaalu

முதல் வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி...தொடர்ந்து படிங்க...

---
நட்புடன் ஜமால்

//தட்டச்சும் என் விரல்கள் சில நேரம் நின்றுவிட்டன என் கண்கள் அசையும் வரை.//

பாராட்டுக்கு நன்றி ஜமால்...

Divyapriya said...


gils said...
//
pinnings..pedalings..adichings.. kalkings kavithais//

nantrings :))

---
நாகை சிவா

முதல் வருகைக்கு ரொம்ப நன்றி! தொடர்ந்து படிங்க...

---
Muthusamy

நன்றி Muthusamy

---
gayathri

thanks gayathri...

MSK / Saravana said...

திவ்யப்ரியா.. என்னாச்சி உங்களுக்கு .. நல்லாதானே இருந்தீங்க.. ஏன் இந்த கொலைவெறி திடீர்னு..

MSK / Saravana said...

நல்லாத்தான் இருக்கு கவிதைகள்..

ஆனா உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்பதால், நான் அப்பிடியே ஷாக் ஆயிட்டேன்..

Divyapriya said...

Saravana Kumar MSK said...

//நல்லாத்தான் இருக்கு கவிதைகள்..

ஆனா உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்பதால், நான் அப்பிடியே ஷாக் ஆயிட்டேன்..//

எல்லாம் நம்ம நண்பர்கள் சிலரோட பதிவுகள படிச்ச பாதிப்பு தான்னு நினைக்கறேன் ;)

Unknown said...

//உன்னை மறக்க நினைத்தாலும்,
நினைக்க மறக்கவில்லையென
ஒவ்வோர் இரவும் உணர்த்துகிறது
என் நனைந்த தலையணை!//

Liked it a lot.. :)))

Unknown said...

//அற்பாயுளில் மடிந்தாலும்,
மோட்சைத்தை தான் அடைந்தது,
உன் அதரங்கள்
சுவைத்து நிறுத்திய
என் கண்ணீர்!//

அழகான வார்த்தை பிரயோகம் அக்கா :)))

நவீன் ப்ரகாஷ் said...

அழகான அழுகாச்சி திவ்யப்ரியா...:)))

நவீன் ப்ரகாஷ் said...

//உன்னை மறக்க நினைத்தாலும்,
நினைக்க மறக்கவில்லையென ஒவ்வோர் இரவும் உணர்த்துகிறது
என் நனைந்த தலையணை! //

ரசித்த்த்த்தேன்... மிகவும்...:))

//அற்பாயுளில் மடிந்தாலும்,
மோட்சைத்தை தான் அடைந்தது,
உன் அதரங்கள்
சுவைத்து நிறுத்திய
என் கண்ணீர்!//

ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு... :)))

குறும்புதான் திவ்யப்ரியாவுக்கு...:)))

Karthik said...

//ஒவ்வோர் இரவும் உணர்த்துகிறது
என் நனைந்த தலையணை!

ரொம்ப நல்லாருக்கு. :))

ஜியா said...

//கவிதையே கவிதைமேல்
கவிதையெழுதி செல்கிறதே!
//

adade... aacharyakuri..

kavithaigalaiyum vittu vaikalaiyaa? kalakkunga...

Divyapriya said...


ஸ்ரீமதி

நன்றி ஸ்ரீ...

---
நவீன் ப்ரகாஷ்

நன்றி நவீன்...
//ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு... :)))

குறும்புதான் திவ்யப்ரியாவுக்கு...:)))//

ஹா ஹா :-D

---
karthik

thanks karthik...

---
ஜி

:))) நம்ம க(கொ)லை சேவைய எல்லா இடத்துக்கும் பாரபட்சம் இல்லாம பரப்பலாமேன்னு ஒரு நல்லெண்ணம் தான் ;)

Princess said...

//உன்னை மறக்க நினைத்தாலும்,
நினைக்க மறக்கவில்லையென
ஒவ்வோர் இரவும் உணர்த்துகிறது
என் நனைந்த தலையணை!//

கண்களில் ஈரம் ஊறச் செய்த வரிகள்

கவிதை அத்தனையும் ரொம்ப அருமை...இன்னும் உங்க கதையப் படிக்கல படிச்சதும் சொல்றேன்.

அன்பு சினேகிதி
ஸாவரியா

Smriti said...

Pretty different and something unexpected out of Divyapriya I felt :) But great going Div.... Sad kavidhai layum expertise pannara nu niroobichittiye :)

Smriti said...

And indha picture pottu post podradhu yaaroda idea adicha nu enakku theriyume :P

Anonymous said...

Romba nalla irundhunga.. super..
Padangalum azhaga irundhudu :)

மயாதி said...

நல்லாருக்கு
கற்பனைகள் அற்புதம் ஆனாலும் கவிதை நடையில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும்
வாழ்த்துக்கள்