விக்னேஷ் பார்த்த காட்சியை முதலில் அவனால் நம்ப முடியவில்லை.அந்த இருட்டு அறையில் திடீரென்று ஒரு மெழுகுவர்த்தி எரிய, அந்த ஒளிச்சுடரில் அழகு தேவதையாய் நின்று கொண்டிருந்தாள் சரண்யா. பளபளத்த அவள் முகத்தின் ஒளி, அந்த மெழுகுவர்த்தியின் ஒளியோடு போட்டி போட்டுக் கொண்டிருந்தது.
"ஹேய்…சரண்!!! என்ன இது…?"
"ஹேப்பி பர்த்டே!!!" என்றபடி புன்னகைத்தாள் சரண்யா.
"ஹ்ம்ம்…என்ன இதுல்லாம்? இவ்ளோ பில்ட் அப்…ஒரு நிமிஷம் ஒன்னுமே புரியல…"
சரண்யா அழகாக சிரித்து, "பின்ன? கல்யாணத்தன்னிக்கு உங்க பர்த்டே வருது…இந்த மாதிரி யாருக்காவது அமையுமா? அதான், என்னால முடிஞ்ச ஒரு சின்ன சர்ப்ரைஸ்…சரி, சரி..கண்ண மூடுங்க…"
"கண்ண மூடவா??? என்ன பண்ண போற?" கண்களில் குறும்போடு விக்னேஷ் கேட்க,
"மொதல்ல கண்ண மூடுங்க, சொல்றேன்…"
விக்னேஷ் கண்களை மூடியது போல் பாவனை செய்து கொண்டு, அரை கண்களில் பார்க்கவும்,
"திருடா! கண்ண மூட சொன்னா…ஒரே ஒரு நிமிஷம்...ப்ளீஸ்…" கொஞ்சும் தொனியில் சரண்யா கேட்க,
"சரி…ஒகே…ஓகே" என்று கண்களை மூடினான் விக்னேஷ்.
அவன் கண்களை மூடியதும், சரண்யா ஒரு ப்ரேஸ்லட்டை அவன் கைகளுக்குள் நுழைத்தாள்.
கண்களை திறந்து விக்னேஷ் ஒன்றுமே சொல்லாமல் அவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்க, சரண்யா, ’என்ன’ என்பது போல் அவனை பார்த்தாள்.
"அவ்ளோ தானா? வேற ஒன்னும் இல்லயா?"
"அவ்ளோதானான்னா? வேற என்ன வேணும், ஹான்…"
விக்னேஷ் முகத்தை ரொம்ப பாவமாக வைத்துக் கொண்டு, "ஐ லவ் யு சொல்ல மாட்டியா?"
சரண்யா சிரித்துக் கொண்டே, "எப்ப பாத்தாலும் இது தானா…"
"சரி பழைய கதையெல்லாம் விடு…கல்யாணம் ஃபிக்ஸ் ஆகி இப்ப ரெண்டு மாசம் ஆச்சு…இந்த ரெண்டு மாசத்தில, ஒரே ஒரு தடவ… ஏன், ஒரு நிமிஷம் கூட உனக்கு என் மேல காதல் வரலியா?"
சரண்யாவிற்க்குள் திடீரென்று ஒரு Bhoom…ஏதோ ஒரு வார்த்தை தொண்டை வரை வந்து அடைத்துக் கொண்டது. அவன் கண்களை சந்திக்க முடியாமல் தலையை தாழ்த்திக் கொண்டாள். அவள் உதடுகளில் ஒரு நாணப் புன்னகை பூத்தது.
எதேச்சையான உன் ஸ்பரிசம்…
வித்யாசம் இல்லாத உன் பார்வை…
கபடமில்லாத உன் சிரிப்பு…
இப்படி உன் சாதாரண அசைவுகள் கூட
இப்போதெல்லாம், என்னுள் ஒரு பூகம்பத்தை ஏற்படுத்துதடா!!!
இதற்கு என்ன பெயர் வேண்டுமோ நீயே வைத்துக்கொள்…
அதை விடுத்து, என்னிடமே ஏன் கேட்கிறாய்?
என் முகத்தை பார்த்தால் தெரியவில்லையா? இல்லை,
என் கண்களின் மொழி தான் புரியவில்லையா?
"போர் அடிக்குது விக்னேஷ்! இந்த பெருந்துறையவே எத்தன தடவ தான் பாக்கறது?"
"சரி…உனக்கு எங்க போகனும்ன்னு சொல்லு…போலாம்…"
"பெங்களூர் போலாம்…"
"பெங்களூரா? எப்டியும் லீவ் முடிஞ்சப்புறம் அங்க தான போக போறோம்? அதுக்குள்ள என்ன?"
"இல்ல…அங்க போய், முதல்ல ஒரு முக்கியமான இடத்துக்கு போகனும்…"
"எங்க???"
"கிருஷ்ணா கஃபே…"
"என்னது கிருஷ்ணா கஃபேயா? அடிப்பாவி! உனக்கு சமைக்க தெரியாதா? நான் கூட, இனிமே பொன்டாட்டி கையால சாப்டலாம்...கிருஷ்ணா கஃபே பக்கமே தல வச்சு படுக்க வேணாம்ல நினச்சேன்…"
"கிருஷ்ணா கஃபே போறோம்…ஆனா சாப்டறதுக்கு இல்ல…"
"அப்றம்"
"பேசறதுக்கு…"
"என்ன சொல்ற? "
"நாம முதல்ல அங்க போறோம்…நீங்க என்கிட்ட, ’இப்பவாவது என்ன லவ் பண்றேன்னு சொல்லு சரண்யா’ ன்னு கேக்கனும்".
"என்னது? என்ன பாத்தா கிண்டலா இருக்கா உனக்கு? மறுபடியும் அரேஞ்சுடு மேரேஜ் அது, இதுன்னு சொல்லி என்ன டென்ஷன் பண்ணாத!"
குறும்பு சிரிப்போடு சரண்யா, "இல்ல…ஹ்ம்ம் ஹ்ம்ம்…ஆமா.."
"என்ன இல்ல, ஆமா?"
"அரேஞ்சுடு மேரேஜ் இல்ல…இப்ப என்கிட்ட கேட்டீங்கன்னா ஆமான்னு சொல்லுவேன்…"
ஒன்றுமே புரியாமல், திரு திரு வென்று முழித்தான் விக்னேஷ்.
"அகல்யா கல்யாணத்தன்னிக்கு நைட்டு யோசிச்சு பாத்தப்ப தான் எனக்கே தெரிஞ்சுது…எனக்கே தெரியாம நானும் உங்கள விரும்பறேன்னு…அதான்,அன்னிக்கே எங்கம்மா கிட்ட நடந்ததெல்லாம் சொல்லிடேன்…ஏனோ, நானும் உங்கள லவ் பண்றேன்னு அம்மாகிட்ட சொல்றதுக்கு மட்டும் தைரியம் வர்ல...ஹாஸ்ப்பிட்டலுக்கு போலாம்ன்னு அம்மாவே சொல்லவும், சரி, அங்க வந்து உங்களையும், உங்க ஃபேமலியையும் அம்மா பாத்தப்புறம் சொல்லாம்ன்னு இருந்தேன்...அதுக்குள்ள ரெண்டு பேர் வீட்லையும் கல்யாணமே அரேஞ் பண்ணிட்டாங்க..."
விக்னேஷ் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்…"இவ்ளோ பெரிய ஆளா நீ? கல்யாணம் ஃபிக்ஸ் ஆனப்புறம் நான் எத்தன தடவ கேட்டேன்? சொன்னியா நீ?"
"அப்ப சொன்னா ஒரு சஸ்பென்ஸ் இருக்காதே…அதான் சொல்லல…"
"கல்யாணத்துக்கு முதல் நாள் கூட எப்டி கெஞ்சினேன்…அப்பயாச்சும் சொல்லி இருக்கலாம்ல..."
"அப்ப சொல்லலாம்ன்னு தான் நினச்சேன்…ஆனா…." அன்று தான் வெட்கப்பட்டு வழிந்ததை கூட புரிந்து கொள்ளாத மாங்க மடைய கணவனை நினைத்து தனக்கு தானே சிரித்துக் கொண்டாள் சரண்யா.
"என்ன சிரிப்பு?"
"இல்ல…என் மனசுல என்ன இருக்குன்னு நான் சொல்லித் தான் உங்களுக்கு தெரியனுமா…? இப்ப கூட பெங்களூர் போய் தான் சொல்லாம்ன்னு நினச்சேன்…ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு தடவ கூட ’ஐ லவ் யு’ சொல்லு, சொல்லுன்னு நீங்க கேக்கவே இல்லையா…அதான் பாவப்பட்டு இப்பயே சொல்லிடேன்..."
"எங்க சொன்ன? இன்னும் சொல்லவே இல்லயே…"
"என்னது?"
"அதான்…ஐ லவ் யு ன்னு"
"ஹ்ம்ம்…எங்க சொல்றது? நீங்க மட்டும் என்னவாம்? எத்தன தடவ கேட்டாலும், நான் அழகா இருக்கனால தான் லவ் பண்றேன்னு சொல்றீங்க…" செல்ல சினுங்களுடன் சரண்யா கேட்க,
"இப்பயும் அதே தான் சொல்றேன்…வேற என்ன சொல்றது?"
அவனை பொய் கோபத்துடன் முறைத்த சரண்யா, "இல்ல…நீங்க சும்மா சொல்றீங்க...எனக்கு தெரியும்…"
"இல்லம்மா…பொய் எல்லாம் இல்ல…உண்மைதான்" சற்றே தலையை சாய்த்து அவளை பார்த்து சிரித்தான்.
"என்ன?"
என்னை பார்த்ததும் மலரும் உன் விழிகள்!
கோபத்தில் அழகாய் சுருங்கும் உன் நெற்றி!
என் சீண்டல்களால் வெட்கிச் சிவக்கும் உன் கன்னம்!
நான் விரும்புவதை மட்டுமே பேசும் உன் உதடுகள்!
நான் பேசுவதை கேட்கத் துடிக்கும் உன் காது!
என்னை நேசிப்பதற்காகவே சுவாசிக்கும் உன் நாசி!
அன்பால் நிறைந்து பூத்திருக்கும் உன் இதயம்!
இப்படி உன்னில் என்னை தொலைத்த காரணங்கள் பல இருக்க…
உன் அழகில் நான் தொலைந்தேனா…இல்லை,
என் அன்பால் நீ அழகாய் மலர்ந்தாயா என்று தெரியாமல் நான் குழம்பித் தவிக்க…
’என் அழகை தான் காதலிக்கிறாயா?’ என்று நீ கேட்டால்,
’ஆம்’ என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது…
என் அன்புக் காதலியே…
சரண்யா வெட்கி புன்னகைத்தாள்!
***சுபம்***
40 comments:
அப்பாடி...எப்படியோ துரோகம் அது இதுன்னு கொண்டு போகாம இருந்ததுக்கு மிக்க நன்றி... அழகாய் கவிதையுடன் முடித்திருக்கிறீர்கள்..
அது சரி.. திருமண நாளன்று தான் அவன் பிறந்தநாளுமென்றால் நண்பர் கூட்டம் சும்மாவா விட்டுருக்கும்.. :)
அட்டா என்ன இரு முடிவு.. கவிதையா கதையா என்று பிரிக்க முடியவில்லை. அழகான முடிவு திவ்யப்பிரியா. ரொம்ப ரசிச்சேன். சூப்பரோ சூப்பர். திவ்யப்பிரியான்கிற பேருக்கேத்த மாதிரி திவ்யமா எழுதுறீங்க.. வாழ்த்துக்கள் பல..
hmmmm... :))))
a feel good story....
ஹிம்ம்ம்ம் கலக்கலாவே முடிச்சிட்டீங்க...சூப்பரா எழுதறீங்க திவ்யபிரியா..வாழ்த்துக்கள்..மென்மேலும் நீங்கள் கதைகள் எழுத வாழ்த்துக்கள்
\\இப்படி உன்னில் என்னை தொலைத்த காரணங்கள் பல இருக்க…உன் அழகில் நான் தொலைந்தேனா…இல்லை,என் அன்பால் நீ அழகாய் மலர்ந்தாயா\\
அருமை :))
Feel good story :-))
ரொம்ப நல்லாயிருந்தது இந்த பகுதி:))
அழகான முடிவு.......காதலுடன் கவிதையும் கலந்து அசத்திட்டீங்க, வாழ்த்துக்கள் திவ்யப்ரியா!!
கதையில் ஆரம்பித்து கவிதையில் முடித்து அசத்தி விட்டீர்கள் . கலக்கல்
//பளபளத்த அவள் முகத்தின் ஒளி, அந்த மெழுகுவர்த்தியின் ஒளியோடு போட்டி போட்டுக் கொண்டிருந்தது.//
அழகி படத்துல வர்ற, "ஒளியிலே தெரிவது தேவதையா"ங்கிற பாட்டு ஞாபகத்துக்கு வருது.
//"கண்ண மூடவா??? என்ன பண்ண போற?" கண்களில் குறும்போடு விக்னேஷ் கேட்க//
//எதேச்சையான உன் ஸ்பரிசம்…
அதே அதே..
//என் கண்களின் மொழி தன் புரியவில்லையா?//
காதலை சொன்ன கவிதையில் கால் காணாமல் போய் விட்டதே (புரிஞ்சுச்சாப்பா ?)
//மாங்க மடைய கணவனை//
என்ன ஜி வந்து இன்னும் கண்டிக்க காணோம்..
தி.பி, உங்க கவிதைய, பாடி பதிவு பண்ணி போட்டா இன்னும் ஜூப்பரா இருக்குமே..
இதுக்கு ஏதாவது மொக்கை காரணம் சொல்லாம புதுசா சொன்னா நல்லா இருக்கும்
\\எதேச்சையான உன் ஸ்பரிசம்…வித்யாசம் இல்லாத உன் பார்வை…கபடமில்லாத உன் சிரிப்பு…இப்படி உன் சாதாரண அசைவுகள் கூடஇப்போதெல்லாம், என்னுள் ஒரு பூகம்பத்தை ஏற்படுத்துதடா!!! இதற்கு என்ன பெயர் வேண்டுமோ நீயே வைத்துக்கொள்…அதை விடுத்து, என்னிடமே ஏன் கேட்கிறாய்?என் முகத்தை பார்த்தால் தெரியவில்லையா? இல்லை, என் கண்களின் மொழி தன் புரியவில்லையா?\\
Literally Amazing :-)
கடைசி பாகம் ரொமான்டிக் சிருங்கார நடை. நவரசத்தில் எல்லா ரசத்தையும் ஊற்றி ஒரு சூப்பர் விருந்தை பரிமாறி விட்டீர்கள்.
கதையும் கவிதையுமா கலந்து கலக்கிட்டீங்க.. வாழ்த்துக்கள்...!!
என்னுடைய பளாகிற்க்கு வந்தீங்கன்னா உங்களுக்கு ஒரு வேலை வெச்சிருக்கேன் ..என்னான்னு தெரிஞ்சிக்கலாம் :)
@மதி
//அப்பாடி...எப்படியோ துரோகம் அது இதுன்னு கொண்டு போகாம இருந்ததுக்கு மிக்க நன்றி... அழகாய் கவிதையுடன் முடித்திருக்கிறீர்கள்..
அது சரி.. திருமண நாளன்று தான் அவன் பிறந்தநாளுமென்றால் நண்பர் கூட்டம் சும்மாவா விட்டுருக்கும்.. :)//
நண்பர்கள் எல்லாம் ஒரு நாள் சரண்யாவிற்காக விட்டு குதுத்துட்டாங்க :-))
@ஜி
//hmmmm... :))))
a feel good story....//
Thanks ஜி…
@Ramya Ramani
//ஹிம்ம்ம்ம் கலக்கலாவே முடிச்சிட்டீங்க...சூப்பரா எழுதறீங்க திவ்யபிரியா..வாழ்த்துக்கள்..மென்மேலும் நீங்கள் கதைகள் எழுத வாழ்த்துக்கள்//
மென்மேலும் நான் கதை எழுதறேன் ரம்யா…நீங்க தொடர்ந்து படிக்கனும்
@வெட்டிப்பயல்
//Feel good story :-))//
ஜியும் நீங்களும் சொல்லி வச்ச மாதிரி commentaa…feel good comment actually ;-))
@Divya
// ரொம்ப நல்லாயிருந்தது இந்த பகுதி:))
அழகான முடிவு.......காதலுடன் கவிதையும் கலந்து அசத்திட்டீங்க, வாழ்த்துக்கள் திவ்யப்ரியா!! //
@முகுந்தன்
//கதையில் ஆரம்பித்து கவிதையில் முடித்து அசத்தி விட்டீர்கள் . கலக்கல்//
@Alb
//கதையும் கவிதையுமா கலந்து கலக்கிட்டீங்க.. வாழ்த்துக்கள்...!! //
:-)))) கவிதை, காதல் கதை ரெண்டுமே அழகு தானே !
@Raghav
//அட்டா என்ன இரு முடிவு.. கவிதையா கதையா என்று பிரிக்க முடியவில்லை. அழகான முடிவு திவ்யப்பிரியா. ரொம்ப ரசிச்சேன். சூப்பரோ சூப்பர். திவ்யப்பிரியான்கிற பேருக்கேத்த மாதிரி திவ்யமா எழுதுறீங்க.. வாழ்த்துக்கள் பல..//
Thanks so much raghav…
//மாங்க மடைய கணவனை//
என்ன ஜி வந்து இன்னும் கண்டிக்க காணோம்..//
அதானே??? இதை வேணுன்னே தான் எழுதினேன் ;-)
//தி.பி, உங்க கவிதைய, பாடி பதிவு பண்ணி போட்டா இன்னும் ஜூப்பரா இருக்குமே..
இதுக்கு ஏதாவது மொக்கை காரணம் சொல்லாம புதுசா சொன்னா நல்லா இருக்கும்//
ஏங்க, என் ப்ளாகுக்கு வர கொஞ்ச நஞ்ச பேரும், என் பாட்ட கேட்டு ஓடி போறதுக்கா?? ஆனா நீங்க சொன்ன மாதிரி, நிஜமாவே, ஒரு பாடல் எழுதி அத பாடியும் வச்சிருக்கேன்…ஆனா, அத கதைல எல்லாம் போடறதா, சத்தியமா எந்த ஒரு விபரீத எண்ணம்மும் இல்ல :))
@விஜய்
//Literally Amazing :-)
கடைசி பாகம் ரொமான்டிக் சிருங்கார நடை. நவரசத்தில் எல்லா ரசத்தையும் ஊற்றி ஒரு சூப்பர் விருந்தை பரிமாறி விட்டீர்கள்//
குளிரில் ரச சாதம் சாப்ட்ட effectaaa??? :))
நன்றி விஜய்…
//ஏங்க, என் ப்ளாகுக்கு வர கொஞ்ச நஞ்ச பேரும், என் பாட்ட கேட்டு ஓடி போறதுக்கா?? ஆனா நீங்க சொன்ன மாதிரி, நிஜமாவே, ஒரு பாடல் எழுதி அத பாடியும் வச்சிருக்கேன்…ஆனா, அத கதைல எல்லாம் போடறதா, சத்தியமா எந்த ஒரு விபரீத எண்ணம்மும் இல்ல :))//
அட அட என்ன ஒரு தன்னடக்கம்(முடியல :)). ஏன் எப்பவும் விபரீதமா யோசிக்கிறீங்க. சப்போஸ் கூட்டம் அதிகமானா நல்லது தானே. அட்லீஸ்ட் பாட்டைக் கேட்டுட்டு திட்டுறதுக்காகவாவது நாலு பேர் வர மாட்டாங்களா ?
கவிதை சிறகை காற்றினில் விரித்து பறப்பது போல், பாடல்கள் பலவிதம் பரவட்டும். அரங்கன் அருள்வான்.
//ஏங்க, என் ப்ளாகுக்கு வர கொஞ்ச நஞ்ச பேரும், என் பாட்ட கேட்டு ஓடி போறதுக்கா?? //
மொக்கை காரணம் சொல்லாதிங்கன்னு சொன்னா, எல்லாரும் வழக்கமா சொல்ற அதே வசனம்...
//அதானே??? இதை வேணுன்னே தான் எழுதினேன் ;-) //
காதலனுக்கும், காதலிக்கும் நடுவில் நடக்கும் செல்லச் அழைப்புகள். இதெல்லாம் ஆண்களுக்கு எதிரான வார்த்தைகள்னு சொல்லப்படாது.... பெண்ணியக் கொள்கைகள் இந்த பகுதியில் இல்லாத காரணத்தினாலேயே குரல் எழுப்பப்பட வில்லை என்பதனையும் இங்கு தெளிவு படுத்த விரும்புகிறேன் :))
good try and good story ..
ithu nadanthathu entha krishna cafela..
un kathai pa(i)dithappin
vazhvilum vasantham athu veesaatho
thenilum thithippaai kaantha sukhmathu ,
krishna cafe kofee manamathil
ennakkum bill pay master yaarum varaaro
then madurai thedi sendru naanum sila kaathal kana kaaneno!!
tooo goood.....
இப்போதான் மொத்தமா 5 பகுதியையும் படிச்சேன்..
அட.. ரொம்ப அழகா இருந்துது கதை.
:)
முதல் பகுதியில் அந்த பெண் ஓவியம் உங்கள் கைவண்ணமா??
மிக அழகு..
நீங்க ஒரு PROFESSIONAL ஓவியரா??
என்ன மாதிரியான ஓவியங்கள் வரைவீர்கள்??
நீங்கள் PENCIL ART-ல் மிக சிறப்பாய் கவனம் செலுத்தலாம்.. நன்றாக வரைகிறீர்கள்..
:)
அழகான கதை அழகான முடிவு..
அந்த accident scene மட்டும் இல்லாம இருந்திருந்தா கதை ரொம்ப நேச்சுரலா இருந்திருக்கும்னு தோனுது.
நல்லா எழுதிருக்கீங்க, வாழ்த்துக்கள் திவ்யப்ரியா!
@ஜி
// பெண்ணியக் கொள்கைகள் இந்த பகுதியில் இல்லாத காரணத்தினாலேயே//
பெண்ணியக் கொள்கைகளா? அப்டீன்னா என்ன??? அது எதுவும் எந்த பகுதிலயுமே இல்லயே :-(
@Raghav
//மொக்கை காரணம் சொல்லாதிங்கன்னு சொன்னா, எல்லாரும் வழக்கமா சொல்ற அதே வசனம்...//
சரி, தூங்கிட்டு இருந்த சிங்கத்த தட்டி எழுப்பிட்டீங்க…நான் பாடின பாட்ட ஒரு தனி போஸ்ட்டா போடறேன், போடறேன் , போடறேன்!!! அப்டியே உங்க link கயும் குடுக்கறேன்…திட்றவங்க எல்லாம் அங்க வந்து திட்ட தான் :-D
ஆனா இப்ப தொண்டையில் கொஞ்சம் கிச், கிச்…so, wait and see :-))
@Aanandh
Thanks Aanandh, kavidhai super…அதென்ன தேன் (இல்ல தென்) மதுரை தேடி சென்று கனா ;-)
@ M.Saravana Kumar
//நீங்க ஒரு PROFESSIONAL ஓவியரா??//
என்ன வச்சு comedy, keemedy ஒன்னும் பண்ணலயே ;-)
// என்ன மாதிரியான ஓவியங்கள் வரைவீர்கள்??//
எல்லா மாதிரியான ஓவியங்களும் வரைவேன்…இப்டி சொல்ல ஆசை தான்…ஆனா என்ன பண்றது? உண்மை அதில்லையே!!! :-((
எனக்கு mostly பொண்ணுங்க படம், அப்புறம் சாமி படம் மட்டும் தான் வரைய வரும்…பசங்கள வரஞ்சாலும், பொண்ணுக்கு பையன் வேஷம் போட்ட மாதிரி தான் இருக்கும் :-((
நான் பசங்க படம் வரைஞ்சு சுமாரா வந்த ஒரே ஒரு படம், நம்ம ஹீரோ விக்னேஷ் மட்டும் தான் :-))
@ நாடோடி
//அழகான கதை அழகான முடிவு..
அந்த accident scene மட்டும் இல்லாம இருந்திருந்தா கதை ரொம்ப நேச்சுரலா இருந்திருக்கும்னு தோனுது.
நல்லா எழுதிருக்கீங்க, வாழ்த்துக்கள் திவ்யப்ரியா!//
ரொம்ப நன்றி நாடோடி, அடுத்து இன்னும் ரெண்டு, மூணு கதைகள் அனிவகுப்புல இருக்கு :-)) தொடர்ந்து படிங்க…
accident scene, சரண்யா யோசிப்பதற்காக சேத்த ஒன்னு…அப்புறம் இருக்கவே இருக்கு, நம்ம suspense matter. அதுக்காகவும் தான்…இனி வர கதைகள்ள இப்படி ஆகாம பாத்துக்கறேன்…
//நான் பசங்க படம் வரைஞ்சு சுமாரா வந்த ஒரே ஒரு படம், நம்ம ஹீரோ விக்னேஷ் மட்டும் தான் :-))//
விக்னேஷ் படம் 1970's கமல் மாதிரி இருக்கு..
:)
//எல்லா மாதிரியான ஓவியங்களும் வரைவேன்…இப்டி சொல்ல ஆசை தான்…ஆனா என்ன பண்றது? உண்மை அதில்லையே!!! :-((
எனக்கு mostly பொண்ணுங்க படம், அப்புறம் சாமி படம் மட்டும் தான் வரைய வரும்…பசங்கள வரஞ்சாலும், பொண்ணுக்கு பையன் வேஷம் போட்ட மாதிரி தான் இருக்கும் :-(( //
உண்மையிலேயே அந்த பெண்ணின் படம் மிக சிறப்பாய் இருந்தது..
நீங்க ஏன் Art of Pencil Drawing-ல் கவனம் செலுத்தக்கூடாது..(in ur free time) ??
@M.Saravana Kumar
ரொம்ப நன்றி சரவணன், இந்த படமெல்லாம் நான் காலேஜ் படிக்கும் போது வரைஞ்சது, இந்த கதைக்கு வகையா மாட்டிகிச்சு :-D
அப்ப அதுல இருந்த interest, இப்ப கொஞ்சம் கொஞ்சமா, glass painting, blogging ன்னு drift ஆய்டுச்சு…இப்ப sketching எல்லாம் ரொம்பவே touch விட்டு போச்சுன்னு தான் சொல்லனும் :-(
ஹ்ம்ம்ம்ம்
கதை முடிஞ்சதும் இப்படி பெரு மூச்சு தாங்க வந்தது! கவிதையிட்டு முடித்தது அழகு!
....$Vignesh
//ஹ்ம்ம்ம்ம்
கதை முடிஞ்சதும் இப்படி பெரு மூச்சு தாங்க வந்தது! கவிதையிட்டு முடித்தது அழகு!//
பெரு மூச்சா? ஏன்? ;)
Excellent.......
poignant and poetic love story.....
intha kathaya mani rathnam kitta kodutha alaipayuthey part 2 edupparu....
Very simple, neat lovely and beautiful story, Enjoyed fully.
Sri
Nice Keep it Up !
Post a Comment