அகல்யா கல்யாணம்….
விக்னேஷ் அவன் அம்மாவோடு வந்திருந்தான்…சரண்யா, அவள் பள்ளி தோழிகள் புடை சூழ வந்திருந்தாள்.
வெகு நாள் கழித்து, ரம்யாவும் சரண்யாவும் ஒன்றாக இருந்தார்கள். அதிலும், விக்னேஷ் வேறு அங்கு இருக்கவே, குறும்புக்காரியான ரம்யாவுக்கும் இன்னும் கொண்டாட்டமாக ஆகி விட்டது…
இவர்களை பார்த்து ஒரு சின்ன ஹாய் மட்டும் சொல்லி விட்டு, கல்யாணத்தையே அவன் தலையில் தாங்கி நடத்துவது போல, எதோ செய்து கொண்டிருந்தான் விக்னேஷ்.
ரம்யா சரண்யாவிடம், "அங்க பாருடி, உன் ஆள…எப்டி வேல பண்ற மாதிரி சீன போடறாரு பாரு"
"ச்சும்மா இரு ரம்மி…எப்ப பாத்தாலும் ஓட்டிகிட்டே இருக்காத…"
"நான் என்ன சும்மாவா ஓட்றேன்? கிருஷ்ணா கஃபேல தினமும் நடக்கற கதைய தான சொல்றேன்…"
"போ ரம்மி! இன்னிக்கு விக்னேஷ் வேற கொஞ்சம் டென்ஷனா இருக்க மாதிரி இருக்கு…என்னன்னே தெரியல…அவரு இன்னிக்கு எங்கிட்ட சரியா முகம் குடுத்தே பேசல…"
"எங்க முகத்த குடுக்கறது?பாரு…கல்யாணத்துக்கு கூட ரெண்டு நாள் தாடியோட வந்துருக்கார்…ஹ்ம்ம்..,எல்லாம் இந்த தேவதைய பாக்காத சோகம் தான் போல…"
"போடி! உனக்கு வேற வேலையே இல்ல…"
"நாங்க எத்தன பேத்த பாத்திருக்கோம்? இப்ப இப்டி தான்டி சொல்லுவ…கொஞ்ச நாள் கழிச்சு, நீயே வந்து…... ""
திடீர்ன்னு ரம்யாவுக்கு ஏதோ தோன, ""ஹே...விக்னேஷ் பைக் என்ன சொல்லு…"""
"அதை எதுக்கு இப்ப கேக்குறே?"
"சொல்லு ன்னா"
"CBZ"
"ஓஓ...."
"என்ன ஓஒ?"
தன் குறும்புக் குரலில் ரம்யா,
சந்திப்போமா...இருவரும் சந்திப்போமா...
கிருஷ்ணா ஃகபேயில் சந்திப்போமா...
சந்திப்போமா...இருவரும் சந்திப்போமா...
ஆபிஸ் கேஃபடிரியாவில் சந்திப்போமா...
அந்த சி.பீ.ஸீ யில் போகின்றான் தாடி வைத்த பய்யன் அவன்...
ஐய்ந்தே முக்கால் அடி உயரம், அழகிய உருவம்...
பைனாப்பிள் போலே இருப்பானே...
ன்னு பாட போற"
அவளை முறைத்துக் கொண்டிருந்த சரண்யா, "என்னது??? பைனாப்பிளா??? அந்த பாட்ல ஆப்பிள்ன்னு தான வரும்?!?!?"
"எங்களுக்கும் அது தெரியும்ல...…நீ தான எப்ப பாத்தாலும் விக்னேஷ் ரொம்ப ஷார்ப், ரொம்ப ஷார்ப்ன்னு சொல்லிடே இருப்ப? அதான் முள்லோட இருக்குற பைனாப்பிள சொன்னேன்…ஹீ ஹீ…."
"கஷ்ட காலம், நான் ஒரு நாளும் அப்டி எல்லாம் பாட மாட்டேன்…விக்னேஷ் எனக்கு ஃபிரண்டு, ஃபிரண்டு, ஃபிரண்டு மட்டும் தான்…" என்று அந்த பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாள் சரண்யா.
"இன்று சொல்லிவிடலாமா, இன்று சொல்லிவிடலாமா என்று தவித்துக் கொண்டிருந்தான் விக்னேஷ். ’சரண்யா...I love you’, இல்ல இல்ல, ’சரண்...I think...I am in love with you...’ ச்சே, என்னத்த I think, கேவலமா இருக்கு...சரி இப்டி சொல்ல்லாம், ’சரண்யா...I want to spend the rest of my life with you’, ஹய்யோ, என்னடா விக்னேஷ் ஆச்சு உனக்கு? எப்ப பாரும் பேசுற தமிழ விட்டுட்டு, ஃபுல்லா இங்லிஷ்லயே ideas தோனுதே...வேற மாதிரி ஏதாவது சொல்லலாமா?? ஹ்ம்ம்...ஒன்னுமே தோன மாடேங்கறதே...சரண்யா...என் செல்ல ராட்ச்ஸி!!! எப்படீ எனக்குள்ள புகுந்த? ஹய்யோ...கொல்றியே!!! இப்படி பல மாதிரியாக அவனுக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தான்.
அவளின் புதிய தோற்றம் வேறு அவனை சஞ்சல படுத்துயது. எத்தனையோ முறை, சல்வாரிலும், ஜீன்ஸிலும் பார்த்து பழகிய பெண் தான். இருந்தாலும், இன்று அவளை முதன்முறை புடவையில் பார்க்கும் போது, ஏதோ ஒரு சொல்ல முடியாத மாற்றம் அவனுள். ஏனோ, அவனால் அன்று அவள் முகம் பார்த்தே பேச முடியவில்லை. அவன் மனதிற்க்குள், அவன் அனுமதி இல்லாமலே நுழைந்த ஒரு புதிய உறவால், திடீர் கவிஞன் ஆனான் விக்னேஷ்...
திருடிய உனக்கும் தெரியவில்லை…
திருட்டுக் குடுத்த எனக்கும் தெரியவில்லை…
காணாமல் போன என் இதயத்தை தானடி சொல்கிறேன்…
உன்னை திருடி என்று கூட பார்க்காமல்,
காலம் முழுதும் என் கைகளில்
வைத்துத் தாங்க தவம் கிடக்கிறேன்…
அருள் புரிவாயா, என் கள்ளச்சாமியே?
பொறுத்து பொறுத்து பார்த்த சரண்யா, அவளாகவே வந்து, "ஹலோ Sir! என்ன பார்த்தும் பாக்காதது மாதிரி போறீங்க? என்னையெல்லாம் உங்க அம்மாகிட்ட Introduce பண்ண மாட்டீங்களா?"
சரண்யாவே இப்படி வந்து கேட்கவும், விக்னேஷ், அவளிடம், "ஒரு நிமிஷம்" என்று சொல்லி விட்டு அவன் அம்மாவிடம் சென்றான்.
"அம்மா, அங்க yellow கலர் புடவை கட்டிட்டு இருக்காளே…அவ தான் உங்க மருமக சரண்யா!!!"
யோசிக்காமல், பட்டென்று சொல்லி விட்டான் விக்னேஷ். எப்படி தான் சரண்யாவிடம் சொல்வது, அதை விட அம்மாவிடம் எப்படி ஆரம்பிப்பது என்று பல மாதிரி யோசித்துக் கொண்டிருந்த விக்னேஷ், ’சரி…பாலாஜி, கல்யாண வேலையெல்லாம் முடிச்சுட்டு ஃபிரீ ஆகட்டும்…அவன் கிட்ட ஐடியா கேட்டுட்டு சொல்லிக்கலாம்’ என்று முடிவு செய்து வைத்திருந்தான். ஆனால், அதையெல்லாம் மறந்து விட்டு, அம்மாவிடம் உண்மையை போட்டு உடைத்து விட்டான்.
விக்னேஷின் அம்மா மாலதி, இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை, ’பையன் ஏதோ விளையாடுறான்னு நினைச்சமே, இப்ப நிஜமாவே ஒரு பொண்ண காட்றானே…’ என்று நினைத்தார்.
"என்னடா சொல்ற? வீட்ல ஏதோ விளையாட்டுக்கு சொல்றேன்னு நினச்சேன், இப்ப என்னடான்னா நிஜமாவே ஒரு பொண்ண காட்டுற, என்ன விளையாடுறியா? கல்யாணம்னா சும்மாவா? "
"எனக்கு பிடிச்சிருக்கும்மா...என் சந்தோஷத்த விட, நீங்களும் அப்பாவும் இந்த ஜாதி, ஜாதகம் எல்லாத்தையும் பெருசா நினைக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்...அதுக்கு மேல உங்க இஷ்டம்" தெளிவாக சொன்னான் விக்னேஷ்.
"இருந்தாலும், பொண்ணோட குடும்பம்...அவங்க அப்பா...அம்மா...இதெல்லாம் பாக்க வேண்டாமா? உங்கப்பா வேற என்ன சொல்லப் போறாரோ?”
"சரண்யா எங்க இங்கிலிஷ் மேம் பொண்ணு தான், அப்பாவ நான் பாத்துக்கறேன், உங்களுக்கு முதல்ல பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க..."
மிக அழகாக சிரித்து பேசிக் கொண்டிருந்த சரண்யாவை பார்த்ததும் ரொம்பவே பிடித்து விட்டது மாலதிக்கு.
"டேய்...எனக்கு பொண்ண ரொம்ப புடிச்சிருக்கு டா, இங்க கூட்டிட்டு வாயேன், நான் கொஞ்சம் பேசுறேன்..."
சரண்யாவை அம்மாவிடம் அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கும் போதே, பாலாஜி எதற்கோ கூப்பிட விக்னேஷ் ரிஸப்பஷன் வரை சென்றான்.
அதற்குள் "உங்கப்பா என்னம்மா பண்றார், கூட பிறந்தவங்க எத்தன பேர்" என்று சரண்யாவுடன் மிக வாஞ்சையாக பேச ஆரம்பித்தார் மாலதி.
பிறகு மாலதி, "வீட்ல சொல்லிட்டியாம்மா?"
"என்னது ஆண்ட்டி?
"உங்க கல்யாணத்த பத்தி தான்...எங்க வீட்ல எந்த பிரச்சனையும் இல்ல, எங்க விக்னேஷுக்கு பிடிச்சிருந்தா போதும், எங்களுக்கு முழு சம்மதம்...எனக்கும் உன்ன ரொம்ப புடிச்சிருக்கு..."
மாலதி பேசி முடுக்கவும், விக்னேஷ் அங்க வரவும் சரியா இருந்துச்சு...
"என்ன விக்னேஷ் இதெல்லாம்? I didn’t expect this from you" சரண்யா கோபமாய் கேட்க, அம்மா குழப்பமாய் முழிக்க, விக்னேஷுக்கு என நடந்திருக்கும் என்று ஒரு நொடியில் தெரிந்து விட்டது...'ஐயோ...அம்மா...ஆர்வக் கோளாறுல சொதப்பிட்டீங்களே!!!'
விக்னேஷ் வாயை திறப்பதற்கு முன், முழித்துக் கொண்டிருந்த மாலதியிடம் சரண்யா, "எனக்கு இத பத்தி எதுவும் தெரியாது ஆண்ட்டி...என்ன தப்பா நினைக்காதீங்க" என்று சொல்லி விட்டு வாசலை நோக்கி வேக வேகமாக நடக்க ஆரம்பித்து விட்டாள்.
என்ன செய்வதென்றே தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருந்த விக்னேஷிடம் அவன் அம்மா, "என்னடா இதெல்லாம்? அந்த பொண்ணு கிட்டயே இன்னும் சொல்லலையா? அதுக்குள்ள ஏன்டா என்கிட்ட வந்து, மருமக அது இதுன்னு சொன்ன?"
"ஐயோ...அம்மா...நான் அவகிட்ட சொல்லலாம்னு தான் இருந்தேன்...நீங்க அதுக்குள்ள...தோ, வரேன்..." என்றபடி வேக வேகமாக அவனும் சரண்யாவை பிடிக்க ஓடினான்.
"சரண்யா!!! நில்லு...நான் சொல்றத கொஞ்சம் கேழு...ப்ளீஸ்"
"ப்ளீஸ் விக்னேஷ்...எனக்கு எதுவும் கேக்க வேண்டாம்...இப்டி கத்தி சீன் க்ரியேட் பண்ணாதீங்க!" இன்னும் வேகமாக நடக்க ஆரம்பித்த சரண்யா, மண்டபத்தின் கேட் வரை சென்று விட்டாள்.
"சரண்யா...ப்ளீஸ்மா..புரிஞ்சிக்கோ...நான் உன்கிட்ட சொல்லனும்னு தான் கொஞ்ச நாளா நினச்சுகிட்டு இருந்தேன்...நான் சொல்றது கொஞ்சம் கேழு"
எதிரே வேகமாக வந்த காரை அவர்கள் இருவருமே கவனிக்கவில்லை.
சரண்யா ஒரு அடி முன்னால் எடுத்து வைக்க, அவள் பின் வேகமாய் வந்து கொண்டிருந்த விக்னேஷ், "அம்மா!!" என்று அலறியபடி கீழே சரிந்தான்.
Sunday, July 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
50 comments:
firstaa??? poi kathaiya padichittu varren... :))
ம்ம்ம்ம்.... வித்தியாசமா காதல அப்படியோ சொல்லிட்டான் விக்னேஷ்.... அடுத்த ஸீன் ஹாஸ்பிட்டலா?? அதுக்கப்புறம் லவ் வருமோ?? அப்படி வந்தா அது பரிதாபக் காதல் ஆயிடாது?? ;)))
சும்ம சஸ்பென்ஸ ஒடக்கலாமேன்னுதான் :)))
கதைக்குள்ள கவிதை போடுறதுதான் இப்ப ஃபேஷன் போல.... அடுத்தது நாமளும் ஸ்டார்ட் பண்ணிட வேண்டியதுதான் :)))
ஆஹா, ஜி முந்திட்டாப்புலயே. இப்பதான் வெளில சுத்திட்டு வாரேன். கதய படிச்சுப்புட்டு, புட்டு புட்டு கமென்டுறேன்
//போடி! உனக்கு வேற வேலையே இல்ல…"
//
இன்னும் சரண்யாவுக்கு லவ் வரலைன்னு இந்த லைன்லய தெரியுதே.. எப்புடின்னா, லவ் இருந்திருந்தா, "இந்த வரிய சொல்லும் போது, முகம் சிவந்திருக்கனுமே"..
ரீமிக்ஸ் பாட்டு அருமை. இத படிக்கும் போது, லைட்டா சிரிச்சுகிட்டே படிச்சேன். மனசில "ஞாபகம் வருதே" பாட்டு தான் தோனிச்சு.
//எப்ப பாரும் பேசுற தமிழ விட்டுட்டு, ஃபுல்லா இங்லிஷ்லயே ideas தோனுதே...//
எல்லாம் ஒரு பந்தா தான். நான் என்னோட காதலை சொன்னப்போ, எனக்கு வந்த பதில்....????
//அருள் புரிவாயா, என் கள்ளச்சாமியே?//
கள்ளச்சாமியா ?? அப்போ அததான் சுருக்கி, "கள்ளி"ன்னு பயலுக சொல்லுறாங்களா?
//அப்பாவ நான் பாத்துக்கறேன், உங்களுக்கு முதல்ல பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க..."
//
ம் என்ன செய்ய.. அப்பாக்கள எல்லாம்
எங்க மதிக்குறாங்.. எல்லா அப்பாக்களுக்கும் கேஷவ் மாதிரி ஒரு பையன் கிடைக்கனும்னு (வாழ்த்துக்கள் முகுந்தன் சார்) வேண்டிப்போம்
//ரம்யா சரண்யாவிடம், "அங்க பாருடி, உன் ஆள…எப்டி வேல பண்ற மாதிரி சீன போடறாரு பாரு"
//
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்.. அது என்ன எல்லா படத்திலயும் வர்ற மாதிரி இதுலயும் ஹீரோயினுக்கு ஒரு தோழி, அதுவும் இந்த மாதிரி ஏத்தி உடுறது. தோழிகளுக்காக வருத்தப்படுவோர் சங்கம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். அதுக்கு "ரம்யா" (கதையில் வரும் தோழி ரம்யா கிடையாது :)) தலைமை ஏத்துக்கனும்னு எல்லார் சார்பிலயும் கேட்டுக்கிறேன்.
சூப்பர்...கலக்கல்ஸ் மேடம்...
ரம்யா பாடினாமாதிரி நீங்க போட்ட பாட்டும் சூப்பர்
கவிதை எல்லாம் கலக்கறீங்க..திவ்யபிரியா எப்படி இப்படி எல்லாம்..
ரொம்ப சஸ்பென்ஸ் எல்லாம் வெக்காம நல்ல புள்ளையா அடுத்த பார்ட் சீக்கிரமே போடுங்க
பிச்சு உதற்ரீங்க. கவிதையெல்லாம் சூப்பரோ சூப்பர்.
கதை இப்போ தான் டாப் கியர்'ல போகுது. போட்டு தாக்குங்க :)
\\ஐய்ந்தே முக்கால் அடி உயரம், அழகிய உருவம்...
பைனாப்பிள் போலே இருப்பானே...\\
இந்த உவமை சூப்பர்
\\இன்று அவளை முதன்முறை புடவையில் பார்க்கும் போது\\
ஆஹா நமக்கெல்லாம் இந்த மாதிரி கொடுப்பினை இருந்ததில்லையே. என்ன தான் சுடியிலும் பிடியிலும் பார்த்திருந்தாலும், அம்மாவிடம் அறிமுகப்படுத்தும் போது ஒரு புடவையில் தன் மனம் கவர்ந்தவளைப் பார்ப்பதென்னவோ ஹ்ம்ம்ம்ம், நடக்கட்டும் நடக்கட்டும்
\\திருடிய உனக்கும் தெரியவில்லை…
திருட்டுக் குடுத்த எனக்கும் தெரியவில்லை…\\
Literally Amazing.
ஒரு கவிஞர் சொன்னாராம், கவிதை எழுத வேண்டுமா,
"காதலித்துப்பார், கவிதை வரும்.
இன்னும் வரவில்லையா,
காதலில் தோற்றுப்பார்,
கட்டாயம் கவிதை வரும்"
அப்போ அடுத்த பாகத்தில் விக்னேஷ் தாடி வளர்த்துண்டு நிறைய சொKஅப் பாட்டு பாடப்போறானா?
சீக்கிரமா அடுத்த பாகம் எழுதி விடுங்கள் :)
வாழ்த்துக்கள்
இந்த கதையில் வரும் சம்பவங்களில் ஆணியத்தை கொஞ்சூண்டு சாடி எழுதியுள்ளதால் எனது கொஞ்சூண்டு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
குறிப்பாக....
// ரம்யா சரண்யாவிடம், "அங்க பாருடி, உன் ஆள…எப்டி வேல பண்ற மாதிரி சீன போடறாரு பாரு" //
இது கொஞ்சம் கண்டிக்கத்தக்கது....
// "எங்க முகத்த குடுக்கறது?பாரு…கல்யாணத்துக்கு கூட ரெண்டு நாள் தாடியோட வந்துருக்கார்…ஹ்ம்ம்..,எல்லாம் இந்த தேவதைய பாக்காத சோகம் தான் போல…" //
இது கொஞ்சம் + கொஞ்சம் கண்டிக்கத்தக்கது....
//ஐய்ந்தே முக்கால் அடி உயரம், அழகிய உருவம்...
பைனாப்பிள் போலே இருப்பானே...//
முக்கியமாக விக்னேசை சொறி பிடித்த பைனாப்பிள் பழத்தோடு ஒப்பிட்டது...
இது கொஞ்சம் + கொஞ்சம் + கொஞ்சம் கண்டிக்கத்தக்கது....
அத்துடன் கடைசியாக விக்னேசை கொலை முயற்சி செய்தது...
இது கொஞ்சம் + கொஞ்சம் + கொஞ்சம் + வன்மையாக கண்டிக்கத்தக்கது....
// "நான் என்ன சும்மாவா ஓட்றேன்? கிருஷ்ணா கஃபேல தினமும் நடக்கற கதைய தான சொல்றேன்…" //
பில் பே பன்றது பத்தி சரியான நேரத்தில் கூறிய ரம்யாவிற்கு எனது வாழ்த்துக்கள்...
// திருடிய உனக்கும் தெரியவில்லை…
திருட்டுக் குடுத்த எனக்கும் தெரியவில்லை…
காணாமல் போன என் இதயத்தை தானடி சொல்கிறேன்… //
இங்கதான் ...
ச்ச்சும்மா நச்ச்னு கவிதை...
சூப்பர் திவ்யா...
இந்த பகுதி கதையில முதல்ல கொஞ்சம் மெதுவாதான் இருக்கு. ஆனா முடிவு பழைய அதே வேகம்....
ம்ம் .....ம்ம்.... அசத்துங்க....
ம்ம் .....ம்ம்....
...
...
...
...
ம்ம் .....ம்ம்....என்னமோ மறந்துட்டேனே...
ஆங்.... ஜீ மாம்ஸ் பஸ்ட்டா கமேண்டுறேனு போயி கதையில வர நமக்கு எதிரான சொற்களையெல்லாம் படிச்சுட்டு நல்லா இருக்குன்னு சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்....
ஓஹோ.,., இந்த பக்கமா ஓடுதா தண்ணி.. ஆகட்டும் ஆகட்டும்.. ;0 ;) நடுவுல கவிதயெல்லாம் போட்டு கதைக்கு கலர் அடிச்சிடீங்கபா.. சூப்பரு.. !! வாழ்த்துக்கள்.. மறக்காம தொடரும் போட்ருக்கீங்க போல.. ;) ;)
திவ்யப்ரியா,
ரம்யா-சரண்யா டயலாக்ஸ் சூப்பர்.....இயல்பா, கியூட்டா இருந்தது!!
சந்திப்போமா.....பாட்டு எல்லாம் போட்டு அசத்திட்டீங்க!! சூப்பர்!!!
\\திருடிய உனக்கும் தெரியவில்லை…
திருட்டுக் குடுத்த எனக்கும் தெரியவில்லை…
காணாமல் போன என் இதயத்தை தானடி சொல்கிறேன்…\\
அசத்தல்....அட்டகாசம்.....அருமை!!!
ரொம்ப அழகாயிருக்கு கவிதை!!
[ சாப்பிட்ட டின்னருக்கு காசு கொடுக்கமாட்டாராம்......திருடு போன இதயத்துக்கு இம்புட்டு ஃபீலிங்ஸா???]
\"அம்மா, அங்க yellow கலர் புடவை கட்டிட்டு இருக்காளே…அவ தான் உங்க மருமக சரண்யா!!!"\
இந்த டெக்னிக் நல்லாயிருக்குதே!!
\\"சரண்யா...ப்ளீஸ்மா..புரிஞ்சிக்கோ...நான் உன்கிட்ட சொல்லனும்னு தான் கொஞ்ச நாளா நினச்சுகிட்டு இருந்தேன்...நான் சொல்றது கொஞ்சம் கேழு"\
அச்சோ பாவம் ......எப்படி கெஞ்சுறான்:((
அந்த ப்ளீஸ் கூட.....ஒரு 'மா' போட்டு 'ப்ளீஸ்மா' அப்படின்னு போட்டதும்......என்னமோ தெரில விக்னேஷ் பில் பே பண்ணாத கஞ்சம் + ஓசி சாப்பாட்டுராமன்னாயிருந்தாலும்.......அய்யோ பாவம்னு தோனுது:((
\\நீ தான எப்ப பாத்தாலும் விக்னேஷ் ரொம்ப ஷார்ப், ரொம்ப ஷார்ப்ன்னு சொல்லிடே இருப்ப? அதான் முள்லோட இருக்குற பைனாப்பிள சொன்னேன்…ஹீ ஹீ…."\\
:)))
பைனாப்பிள் உவமை.....புதுசு கண்ணா புதுசு!!
சூப்பர் திவ்யப்ரியா:))
@ஜி
//அடுத்த ஸீன் ஹாஸ்பிட்டலா?? அதுக்கப்புறம் லவ் வருமோ?? //
எப்டி ஜி இப்டி? இதுல பாதி கரீட்டு :))
@ Raghav
//ரீமிக்ஸ் பாட்டு அருமை. இத படிக்கும் போது, லைட்டா சிரிச்சுகிட்டே படிச்சேன்.//
thanks raghav, லைட்டா சிரிச்சீங்களா? கதைய படிக்கறவங்க முகத்துல அந்த மெல்லிய புன்னகை தான் எனக்கும் வேணும் :))
//ம் என்ன செய்ய.. அப்பாக்கள எல்லாம் எங்க மதிக்குறாங்..//
அம்மாவ முதல்ல சரி பண்ணிட்டா, அப்பறம் மேலிடத்த ஈசியா correct பண்ணிடலாமே ;-)
@Ramya Ramani
//சூப்பர்...கலக்கல்ஸ் மேடம்...
ரொம்ப சஸ்பென்ஸ் எல்லாம் வெக்காம நல்ல புள்ளையா அடுத்த பார்ட் சீக்கிரமே போடுங்க//
Thanks Ramya, சரிங்க மேடம். சீக்ரம் போட்டுடறேன் :)
@விஜய்
//பிச்சு உதற்ரீங்க.
Thanks vijay...
\\திருடிய உனக்கும் தெரியவில்லை…
திருட்டுக் குடுத்த எனக்கும் தெரியவில்லை…
Literally Amazing. //
பயங்கரமா போர் அடிச்ச ஒரு மீட்டிங்கல திடீர்ன்னு தோனுச்சு ;-)
@J J Reegan
ROTFL :-D செம comments...இந்த பெண்ணியவாதி மாதிரி பசங்களுக்கு ஏதாவது இருந்தா அது நீங்க தான் :-)) எப்டி, இப்டி எல்லாம்??? கலக்கறீங்க :-D
@Alb
//ஓஹோ.,., இந்த பக்கமா ஓடுதா தண்ணி.. ஆகட்டும் ஆகட்டும்.. ;0 ;) நடுவுல கவிதயெல்லாம் போட்டு கதைக்கு கலர் அடிச்சிடீங்கபா.. சூப்பரு.. !! வாழ்த்துக்கள்.. மறக்காம தொடரும் போட்ருக்கீங்க போல.. ;) ;)//
Thanks Alb...தொடரும் மறக்காம போட்டுட்டேனா...உங்க commenta பாத்தப்புறம் தான் doubt வந்துச்சு :-)
@Divya
பாவம் விக்னேஷ். எதோ தெரியாம ஓ.ஸி ல சாப்ட்டுட்டான்...சரண்யா மன்னிச்சாலும், நீங்க மன்னிக்க மாட்டீங்க போல :-))
//சந்திப்போமா.....பாட்டு எல்லாம் போட்டு அசத்திட்டீங்க!! சூப்பர்!!!//
//அசத்தல்....அட்டகாசம்.....அருமை!!!
ரொம்ப அழகாயிருக்கு கவிதை!!//
thanks divya...இந்த கதையே ஒரு கவிதைல தான் முடியும்...அத தவிர, இப்ப நடுல இன்னும் கொஞ்சம் கவிதை add பண்ணதெல்லாம் உங்க influence தான் :-))
//இந்த டெக்னிக் நல்லாயிருக்குதே!!//
//பைனாப்பிள் உவமை.....புதுசு கண்ணா புதுசு!!//
ஒஹ்...நல்லா இருக்குதா? ஆனா நம்ம ரீகன் தான் சொரி புடிச்ச பைனாப்பிள் ன்னு சொல்லிட்டாரு :-)
கோரமங்களா கிருஷ்ணா கபே
முழுச் சாப்பாடு :-
வீகேண்ட் நாட்களில் - 80 ரூபாய்
மற்ற நாட்களில் - 60 ரூபாய்
குறிப்பு : பார்சல் 5 ரூபாய் எக்ஸ்ட்ரா
இன்னக்கி புல்லா
கும்மி...கும்மி...கும்மி...கும்மி...
கும்மிதான்.......
இந்த பாகத்திற்கு தகதகக்கும் பட்டுப்புடவையில் சரண்யா கண்ணைக்கசக்கிக் கொண்டு வெளியேறுவதும் அவளைப் பிந்தொடர்ந்து விக்னேஷ் போவதுமாக ஒரு ச்கெட்ச் போட்டிருக்கலாமே!!
கவிதையெல்லாம் டக்கராகீது...
அதுலேயும் அந்த காதல ப்ரபோஸ் பண்ண ரிகர்சல்...இங்கிலீஷில்..
கலக்கல்ஸ்...
//ஆங்.... ஜீ மாம்ஸ் பஸ்ட்டா கமேண்டுறேனு போயி கதையில வர நமக்கு எதிரான சொற்களையெல்லாம் படிச்சுட்டு நல்லா இருக்குன்னு சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்....//
எலே ரீகனு... போன கிருஷ்னா கஃபே ல ரெண்டு பேரு மாத்தி மாத்தி ஒரண்ட இழுத்துட்டே இருந்தாவ... நீங்க ஒரு பயலாவது வந்தீயளால... அப்புறம்.. எப்டீல உங்கள எல்லாம் நம்பி சவுண்டு உடுறது?? :)))
//விக்னேஷ் பில் பே பண்ணாத கஞ்சம் + ஓசி சாப்பாட்டுராமன்னாயிருந்தாலும்.......அய்யோ பாவம்னு தோனுது:((
//
தன் குட்டு வெளிப்பட்டதை உணராமல் மறுபடியும் தன் சுயரூபத்தை வெளிபடுத்தியிருக்கும் திவ்யாவின் அறியாமையை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது...
//சந்திப்போமா...இருவரும் சந்திப்போமா...
ஆபிஸ் கேஃபடிரியாவில் சந்திப்போமா...
அந்த சி.பீ.ஸீ யில் போகின்றான் தாடி வைத்த பய்யன் அவன்...
ஐய்ந்தே முக்கால் அடி உயரம், அழகிய உருவம்...
பைனாப்பிள் போலே இருப்பானே...//
namma office cafeteriala paadunadhu thaane? Nee yaara pathi padnengradum gnayabagam irukku ;-)
//namma office cafeteriala paadunadhu thaane? Nee yaara pathi padnengradum gnayabagam irukku ;-)//
இது என்ன புது கதை ?? திவ்யப்பிரியா சொல்லவே இல்ல.??
//namma office cafeteriala paadunadhu thaane? Nee yaara pathi padnengradum gnayabagam irukku ;-)//
paththa vatchittiye parattai... ;)))
appo ithu unmai kathaiyaa?? very good.. very good...
\\ ஜி said...
//விக்னேஷ் பில் பே பண்ணாத கஞ்சம் + ஓசி சாப்பாட்டுராமன்னாயிருந்தாலும்.......அய்யோ பாவம்னு தோனுது:((
//
தன் குட்டு வெளிப்பட்டதை உணராமல் மறுபடியும் தன் சுயரூபத்தை வெளிபடுத்தியிருக்கும் திவ்யாவின் அறியாமையை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது...
\\
ரொம்ப பாவப்படவேணாம்,
என்ன குட்டு.......லட்டு....????
விளக்கம் ப்ளீஸ்....
Nalla Irukku Kathai...
@Divya
//என்ன குட்டு.......லட்டு....????
விளக்கம் ப்ளீஸ்....//
haa haa…Hilarious Divya…மறுபடியும் discussion சூடு பிடிக்குது போல :-)
@Sen22
//Nalla Irukku Kathai…//
Thanks Sen
@Vishnu
*#*((^W#Q&$(#)#Q
:))
@Raghav
//இது என்ன புது கதை ?? திவ்யப்பிரியா சொல்லவே இல்ல.??//
புது கதை எதுவும் இல்ல…பாட்டு மட்டும் கொஞ்சம் பழைய பாட்டு…அவ்ளோ தான் :))
@ஜி
//appo ithu unmai kathaiyaa?? very good.. very good... //
உண்மை கதை எல்லாம் இல்லீங்னா…நானே கோரமங்களா கிருஷ்ணா கஃபே க்கு ஒரே ஒரு தடவ தான் போயிருக்கேன் :-(
// ஜி said...
எலே ரீகனு... போன கிருஷ்னா கஃபே ல ரெண்டு பேரு மாத்தி மாத்தி ஒரண்ட இழுத்துட்டே இருந்தாவ... நீங்க ஒரு பயலாவது வந்தீயளால... அப்புறம்.. எப்டீல உங்கள எல்லாம் நம்பி சவுண்டு உடுறது?? :))) //
தவறுக்கு மன்னிக்கவும் எனது அருமை மாப்பி...
அடுத்த கிருஷ்னா கஃபே ல நாமதான் Opening Batsmangalaga இறங்குவோம்...
gr8 going.. !!!
@jj reegan
எல்லா போஸ்டும் படிச்சிட்டு கமெண்ட்ஸ் போட்டு தாக்கினதுக்கு ரொம்ப நன்றி. தொடர்ந்து தாக்குங்க :-)
@Shiva.G
gr8 going.. !!!
ஷிவா அவர்களே! வருகைக்கு நன்றி...மீண்டும் வாங்க. அடுத்த தடவ வரும் போது, சாம்பார் சாதம் செஞ்சு வெக்கறேன் ...வந்து சாப்டுட்டு போங்க :-D LOL
ஆமா கிருஷ்ணா கபே திரும்ப எப்ப ஓபன் பண்ணுவீங்க ....
:-))
இங்க வரிசைல நிக்கிறோம்ல....
very good story
very good story
@gbmadvocate
//very good story//
Thank you so much...keep reading :))
Post a Comment