Tuesday, July 15, 2008

கிருஷ்ணா கஃபே - 1

"யேய்ய்ய்ய்ய்ய்ய்!!! Can't you see a bike coming?" விக்னேஷ் அந்த இரண்டு பெண்களை பார்த்து கத்தினான்.

"You've come in the wrong side, and how dare you shout at us???" என்று சரண்யாவும் பதிலுக்கு கத்தினாள்.

"டேய்…நடு ரோட்ல என்னடா சண்ட? வாடா போலாம்.." இது விக்னேஷின் நன்பன் பாலாஜி.

"ச்சே…கண்னே தெரியாத குருடங்களா இருப்பாங்க போல…" சற்று இரைந்தே சொல்லி விட்டான் விக்னேஷ்.

"நாங்க ஒன்னும் குருடங்க இல்ல…நீ தான் சோடா புட்டி…" என்றவாரே ஸ்கூட்டியை வேகமாக கிளப்பிக் கொண்டு பறந்து விட்டாள் சரண்யா.

"யேய்ய்ய்ய்" என்று கைய்யை உயர்தித் கத்தியவனை, "டேய், விடு டா…நாம செஞ்சதும் தப்பு தான" என்று சாமாதானப் படுத்தினான் பாலாஜி.

"ஆனாலும் அந்த பொண்ணுக்கு ரொம்ப திமிர்டா…பாக்கறதுக்கு பாப்பா மாதிரி இருந்துட்டு என்ன பேச்சு பேசுறா பாரு…"

பாலாஜி ஒன்றும் சொல்லாமல் யோசித்துக் கொண்டே இருக்கவும், விக்னேஷ் "என்னடா ஒன்னும் சொல்ல மாட்டிங்குற?"

"அந்த பொண்ண எங்கயோ பாத்த மாதிரி இருக்குடா…எங்கன்னு தான் தெரியல…"

"ஆமா…அவ பெரிய ஐஷ்வர்யா ராய்…நியாபகம் வச்சுக்க…வாடா போலாம்…"

விக்னேஷ் சொன்னாலும், சொல்லாட்டியும் சரண்யா அழகு தான். ஒரு முறை பார்தாலே, மறு முறை பார்க்கத் தூண்டும் கொள்ளை அழகு. என்றாலும் தான் அழகு என்ற எண்ணமே துளி கூட அவள் கண்களில் தெரியாதது தான் அவளது ப்ளஸ் பாயின்ட்டே!
இப்படி துரு துரு வென்று, கண்களில் குறும்பு தெறிக்க, குழந்தைதனமான முகத்துடன் இருக்கும் ஒரு பெண்ணை பார்தும் கூட ரசிக்காமல் இருக்கும் அளவிற்க்கு, விக்னேஷ் ஒன்றும் தாடி, மீசை வைக்காத முனிவர் அல்ல.ஆனால் அன்று கோபம் அவன் கண்களை மறைத்திருந்தது. விக்னேஷ்...பார்ப்பதற்க்கு ரொம்ப வாட்ட சாட்டமாக இல்லாவிட்டாலும், அவனை பார்த்தவுடன், யாரையும் முதலில் ஈர்ப்பது, அவனுடைய கூர்மையான பார்வை தான். இவன் எதையும் சாதிக்க பிறந்தவன் என்று அவன் கண்களை பார்தாலே தெரிந்துவிடும். மனதில் பட்டதை யோசிக்காமல் பேசி விடுவதே அவனின் நல்ல குணம், ஏன் கெட்ட குணம் என்று கூட சொல்லலாம்.

விக்னேஷ், பாலாஜி இருவருமே பள்ளித் தோழர்கள். பள்ளியில் இருந்து, இப்போது சென்னை வேலை வரை, இருவரும் ஒன்றாகவே தான் இருக்கிறார்கள்.

விக்னேஷ் சரண்யாவை திட்டியது போலவே, சரண்யவும் வாய் மூடாமல் விக்னேஷை அர்ச்சித்துக் கொண்டே வந்தாள்.

சரண்யாவின் தோழி ரம்யா, "யேய்…போதும்…அவன பத்தியே எத்தன நேரம் பேசிட்டு இருப்ப?"

சரண்யா ஒன்றுமே சொல்லாமல் இருக்கவும், ரம்யா, "அதுவும்...நீ சோடா புட்டின்னு சொன்னதும், அவன் முகத்த பாக்கனுமே…" என்று சிரிக்க ஆரம்பித்தாள்.

உடனே சரண்யாவின் முகம் மாறியது, "ரொம்ப ஒவரா பேசிட்டனோ?"

"யேய் போதும், யாரோ ஒருத்தன், விடு அவன..."

"இல்ல ரம்மி…அவன எங்கயோ பாத்த மாதிரி இருக்கு, எங்கன்னு தான் தெரியல…"

"ஹ்ம்ம்ம்…போன வாரம் ஜோடி நம்பர் ஒன்ல வந்தானே…பாக்கல" என்று ரம்யா நக்கலடிக்கவும்,
"ஹேய்…போடி…" அதற்க்கு பிறகு, விக்னேஷை பற்றின பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் சரண்யா.

இந்த சண்டை நடந்து இரண்டே வாரங்கள் கழித்து மீண்டும் இரு நன்பர்களும் சரண்யாவை ரெயில்வே ஸ்டேஷனில் பார்த்தனர். முதலில் விக்னேஷ் தான் சேரன் எக்ஸ்பரஸ் கதவருகே சாய்ந்து நின்றிருந்த சரண்யாவை பார்த்தான்.

விக்னேஷ், "பாஜி…அங்க பாரேன்…அந்த ஸ்கூட்டி பெப் அங்க நிக்குது…" என்றான்.

அதற்க்கு பாலாஜி, "என்னது? பிளாட்ஃபார்ம்ல ஸ்கூட்டி பெப்பா? அதெல்லாம் கூட இங்க பார்க் பண்ண விடுவாங்களா?" என்று அப்பாவியாக கேட்க,
விக்னேஷ், "டேய்…மொக்கைய போடதடா…அன்னிக்கு அடையார் பக்கத்துல பாத்தோமே, அந்த ஸ்கூட்டி பெப் பொண்ணு, நம்ம கோச் தான் போல, ஒரு வழி பண்றேன் இன்னிக்கு அவள"

"ச்சும்மா இருடா…அப்பறம் இன்னிக்கும் வாங்கி கட்டிக்க போற…"

பாலாஜி இப்படி சொல்லவும், விக்னேஷிற்க்கு நன்றாக ஏத்தி விட்டது போல ஆகிவிட்டது. ஃபோன் மணி அடிக்கவும் பாலாஜி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

விக்னேஷ் சரண்யா நின்றிருந்த கதவருகே சென்று, "Excuse me…எனக்கு கண்ணு தெரியாது…கொஞ்சம் வழி விட்றீங்களா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.

சத்தம் கேட்டு திரும்பிய சரண்யாவிற்க்கு நக்கல் சிரிப்புடன் நின்றிருந்த விக்னேஷை பார்த்ததும், ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை, பின்பு தான், அன்று அவள் ஹாஸ்டல் பக்கத்தில் நடந்த சம்பவம் நினைவுக்கு வர, சிரிப்பு வந்த்து. ஏனோ அவன் மேல் அன்று அவளுக்கு கோபம் வரவில்லை, ’ச்சே..ஆனாலும் அன்னிக்கு நாம சோட புட்டின்னு சொல்லி இருக்க கூடாது" என்று மனதிற்க்குள் நினைத்துக் கொண்டாள்.

சரண்யா ஒன்றுமே பேசாமல் அவள் கம்பார்ட்மெண்டில் வந்து உற்காந்தாள். விக்னேஷும் அவளுக்கு எதிரில் வந்து அமர்ந்தான். ஆனால், சரண்யா அவனை பார்காதது போல, ஒரு புத்தகத்தை எடுத்து வைத்து படிக்க ஆரம்பித்தாள். என்றாலும் மனம் புத்தகத்தில் ஒட்டவில்லை, இவன எங்கயோ பாத்திருக்கோமே என்று மறுபடியும் யோசித்துக் கொண்டிருந்தாள்.

பின்பு அவனை பார்த்து, "அன்னிக்கு கொஞ்சம் அஃபன்ஸிவா பேசிட்டேன்…ஐ ம் சாரி…" என்று ஒரு வழியாக சொல்லி முடித்தாள்.

சரண்யா அவனை தெரியாதது போல காட்டிக் கொண்டதால், ரொம்ப திமிர் பிடித்த பெண் போல என்று நினைத்துக் கொண்டவனுக்கு, அவளாகவே வந்து சாரி கேட்கவும், அதற்க்கு மேல் பொருக்கவில்லை."ச்சே..ச்சே…நீங்க எதுக்கு சாரி எல்லாம் கேட்டுகிட்டு, நான் தான் அன்னிக்கு ராங் சைட்ல வந்து உங்க வண்டி மேல மோதிட்டேன்…ஐ ம் சாரி…" என்றான்.

"தட்ஸ் ஓகே…ஆமா...நீங்க கோயம்புத்தூரா?"

"இல்ல, இல்ல, நான் பெருந்துரை போகனும்…ஈரோட்ல இறங்கி, அங்கிருந்து அப்புறம் பஸ்…"

"ஓ…நீங்களும் பெருந்துரையா???" பெருந்துரை என்றவுடன் தான், சரண்யாவிற்க்குள் பொரி தட்டியது.

"ஆமா…நீங்க Infant Jesus ஸ்கூல் தான?" என்று கேட்டாள்.

""ஹேய்…ஆமா...உங்களுக்கு எப்படி?"

"உங்க பேரு விக்னேஷ் தான?"

""ஹேய்…ஆமா!!!"

"நானும் அதே ஸ்கூல் தான், அன்னிக்கே உங்கள எங்கயோ பாத்த மாதிரி இருக்கேன்னு நினச்சிட்டு இருந்தேன்…இப்ப தான் நியாபகம் வந்த்து,,,நீங்க தான ஸ்கூல் ஃபர்ஸ்ட் வாங்கினீங்க?"

விக்னேஷ் சிரித்துக் கொண்டே, "அப்பா…பயங்கரமா நியாபகம் வச்சிருக்கீங்க? என் ஃபிரெண்டு பாலாஜி கூட, அன்னிக்கு உங்கள எங்கயோ பாத்த மாதிரி இருக்குன்னு சொல்லிட்டு இருந்தான்…"

"பாலாஜி…ஹான்…அவர் தங்கச்சி கூட என் கிலாஸ் மேட் தான், அகல்யா…இப்ப தான் நியாபகம் வர்ரது…"

"ஓஹ்…அகல்யா கிலாஸ் மேட்டா நீ?" வசதியாக ஒருமைக்கு மாறினான் விக்னேஷ்.

அதற்க்கு பிறகு இருவரும் சேர்ந்து ஸ்கூல் கதை, வேலை…என்று அரைட்டயை ஆரம்பித்தார்கள்.
ஃபோன் பேசி முடித்து விட்டு கம்பார்ட்மெண்டில் நுழைந்த பாலாஜிக்கு ஒன்றுமே புரியவில்லை, "இவள ஒரு வழி பண்ண போறேன்னு சொல்லிட்டு வந்தான், இங்க என்னடான்னா, முப்பத்து ரெண்டு பல்லையும் காட்டிட்டு இருக்கானே?"

பாலாஜியை பார்த்த்தும் விக்னேஷ், "டேய்…இது சரண்யா…நம்ம அகல்யாவோட கிளாஸ் மேட் டா…இங்க தான் சென்னைல வேல பண்ணிட்டு இருக்கா.." என்று அறிமுக படுத்தினான்.

பாலாஜி, "ஓஹ்ஹ்…சரண்யா…எங்கயோ பாத்த மாதிரி இருக்கேன்னு நினச்சுட்டே இருந்தேன்…எப்டி இருக்கீங்க? ஷாந்தி மேம் எப்டி இருக்காங்க?"

அவன் ஸ்கூல் டீச்சரை பத்தி அவளிடன் ஏன் விசாரிக்கிறான் என்று புரியாமல் முழித்துக் கொண்டிருந்த விக்னேஷிடம், பாலாஜி, "டேய்…நம்ம ஷாந்தி மேம் பொண்ணு டா…மறந்துட்டியா?"

விக்னேஷ் சரண்யாவிடம், "ஓஹ்!!!நீ சொல்லவே இல்லயே…மேம் எப்டி இருக்காங்க?"

"ஹ்ம்ம்…நல்லா இருக்காங்க…அகல்யா எப்டி இருக்கா?"

"ஹ்ம்ம்…நல்லா இருக்கா…"

சிறிது நேரம் பேசிவிட்டு, மூவரும் தூங்க சென்று விட்டனர், மருநாள் காலை நான்கு மணிக்கெல்லாம் ட்ரெய்ன் ஈரோடு சென்றடைந்தது. "ஓகே…பாக்கலாம்…பை.." என்று கிளம்பிய சரண்யாவிடம், விக்னேஷ் "ஏய்…இரு, எப்டி போக போற? தனியாவா போற?"

"இல்ல, எங்கப்பா வெய்ட் பண்றாரு…"

"சரி, ஓகே…அப்ப பாக்கலாம், பை, பை" என்றபடி விக்னேஷும், பாலாஜியும் சென்று விட்டனர்.

அவர்கள் போன பிறகு தான் சரண்யா, "ச்சே, இத்தன நேரம் ஊர் கதை, உலக கதை எல்லாம் பேசிட்டு ஒரு மெயில் ஐ.டி, ஃபோன் நம்பர் கூட வாங்க மறந்துட்டனே…" என்று நொந்து கொண்டாள்.

பல நாட்கள் சென்றது, அவர்கள் பார்த்துக் கொள்ளவே இல்லை…அப்போது தான், அவர்கள் பள்ளியில் பழைய மாணவர்களுக்கான get-together மின்னஞ்சல் வந்த்து. அதை பார்த்து விட்டு, சரண்யாவுன் தோழி ரம்யா. "சரண்…அந்த கெட் டுகெதர் மெய்ல பாத்தியா?"

"இல்லயே, ஏன்?"

"அடுத்த வீக்கெண்ட், நம்ம ஸ்கூல் கெட்டுகதெர் இருக்கு, நாமளும் போகலாம் சரண்…"

"போ ரம்மி…ஒரே போர்…அவ்ளோ தூரம் போய் மறுபடியும் உன் முகத்த தான் பாக்கனும், நான் வரல…"

"ஹேய்…இல்ல, இந்த தடவ பெரிய கெட்டுகதர் அரேஞ் பண்ணி இருக்காங்க…எப்பயும் மாதிரி இல்ல…"

"போ!பெரிய இந்த கெட்டுகெதர்...நான்லாம் வரலை, நான் ரொம்ப பிஸி…"

"ச்சே…வேஸ்ட்டு சரண் நீ…நான் கூட இந்த தடவ கெட்டுகதர்க்கு போய் சீனியர்ஸ், ஜூனியர்ஸ் எல்லாரையும் ரொம்ப நாளைக்கபுறம் பாக்கலாம்னு நினச்சேன்…"

"என்னது சீனியர்ஸ் எல்லாருமா? எப்டி டீ? நம்ம கிலாஸ் மட்டும் இல்லயா?"

"அதான் சொன்னேனே, இந்த தடவ பெருசா அரேஞ் பண்ணி இருக்காங்க…லாஸ்ட் டென் ஸெட்ல இருந்து எல்லாருக்கும் ஒரே சமயத்துல இன்வைட் அனிப்பி இருக்காங்க…"

"நிஜமாவா…ஹேய்…அப்ப நம்மலும் போகலாம் ரம்மி…ப்ளீஸ்"

"அடிப் பாவி, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சீன போட்ட??? இப்ப இப்டி பல்டி அடிக்குற???ஹ்ம்ம்… Something fishy…"

ஸ்கூல் கெட்டுகதெர்…கழுத்து வலிக்க தேடியும் சரண்யாவால், விக்னேஷை பார்க்க முடியவில்லை. பின்பு, "ச்சே…நாம எதுக்காக அவன தேடனும்" என்று தன்னை தானே சாமாதானப் படுத்திக் கொண்டாள்.

கெட்டுகதெர் முடிந்து சென்னைக்கு திரும்பிய சரண்யாவிற்க்கு அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

[தொடரும்]

21 comments:

Raghav said...

மீ த பர்ஸ்ட் கமெண்டர்..

Raghav said...

கதை நல்லா இருக்கு. ஓவியம் சூப்பர். நீங்க தான் ஓவியப்படுத்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

Raghav said...

ஹலோ, அது என்ன விக்னேஷ் ஓவியத்துல மட்டும் உங்க கையெழுத்து இல்லை..

Divya said...

ரொம்ப இயல்பான உரையாடல்களில் ஒரு அழகான தொடக்கம் திவ்யப்ரியா!!

இன்ப அதிர்ச்சிதான் சரண்யாவிற்கு காத்திருக்கிறது என்ற நம்பிக்கையுடன் அடுத்த பகுதிக்காக வெயிட்டீங்.....!!

[விட்னேஷிடம்,- > எழுத்துப் பிழை , சரி செய்துக் கொள்ளுங்க திவ்யப்ரியா]

Divya said...

காட்சிகளை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது உங்கள் எழுத்து நடை, வாழ்த்துக்கள்!!

ஓவியங்கள் இரண்டும் சூப்பர்!!

நீங்க வரைந்ததா திவ்யப்ரியா??

Divya said...

BTW template superrrrrrr!!

Ramya Ramani said...

திவ்யப்ரியா அழகான படங்கள்..இயல்பான வசனங்களுடன் கதை நல்ல வேகத்தில் பயணிக்கின்றது :))

சரண்யாவிற்க்கும்,விக்னேஷிக்கும் ஒரு உருவத்தை கொடுத்து மனதில் பதிய வைத்துவிட்டீர்கள்..வாழ்த்துக்கள்...

Vijay said...

திவ்யப்ரியா,
உங்க கதை நல்லா இருக்கு, நடை நல்ல இருக்கு அப்படியெல்லாம் நான் சொல்லவே மாட்டேன்.

ஆமாம், பின்ன சுஜாதா கல்கி ஷான்டில்யன் கிட்ட போய் நீங்க சூப்பரா எழுதறீங்கன்னு சொல்ல முடியுமா?

"கிருஷ்ணா கஃபே"ன்னு போர்டு போட்டுட்டு இப்படி சென்னையில் கதை நடப்பது மாதிரி பண்ணிட்டீங்களே.

அப்புறம் இந்த படங்களெல்லாம் நீங்களே வரைஞ்சது தானே. அது(!) நல்லா சூப்பரா இருக்கு!

ஹ்ம்ம்(!) கதைகளில் தான் நாம பார்த்து ரசித்த பொண்ணு பையனெல்லாம் சேர்ந்து ட்ரெயின் பஸ்ஸுனு போறாங்க.

எல்லாரும் ஒரே மாதிரி கடைசியில் சுபம்னு டைடில் கார்ட் போடற மாதிரி கதை எழுதறாங்க. நீங்களாவது ஒரு tragedy கொடுங்க.

பின்ன tragedy இல்லாம ஒரு Love story'ஆ?

உங்கள் அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்நோக்கும்,
விஜய்

தமிழ் said...

ஓவியம் இரண்டும் அருமை

Divyapriya said...

//Raghav said
மீ த பர்ஸ்ட் கமெண்டர்..//

ரொம்ப நன்றி ராகவ்…

//Raghav said
கதை நல்லா இருக்கு. ஓவியம் சூப்பர். நீங்க தான் ஓவியப்படுத்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.//

நான் வரஞ்சது தான்…thanks ராகவ்...விக்னேஷ் படத்துல scan பண்ணும் போது கையெழுத்து விட்டு போய்டுச்சு…

Divyapriya said...

//Divya said
காட்சிகளை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது உங்கள் எழுத்து நடை, வாழ்த்துக்கள்!!

ஓவியங்கள் இரண்டும் சூப்பர்!!

நீங்க வரைந்ததா திவ்யப்ரியா??//

மிகவும் நன்றி திவ்யா…நான் வரஞ்சது தான்…ஆனா சில வருஷங்களுக்கு முன்…இப்ப இத உபயோயகப்படுதிட்டேன் :))

//Divya said
இன்ப அதிர்ச்சிதான் சரண்யாவிற்கு காத்திருக்கிறது என்ற நம்பிக்கையுடன் அடுத்த பகுதிக்காக வெயிட்டீங்.....!!//

இன்ப அதிர்ச்சி இல்லாவிட்டாலும், இன்பம் தரப் போற அதிர்ச்சி தான் :))

//Divya said
[விட்னேஷிடம்,- > எழுத்துப் பிழை , சரி செய்துக் கொள்ளுங்க//

கதையில் சில எழுத்து பிழைகளை திருத்திட்டேன்…நான் பிழை இல்லாம எழுதற வரைக்கும்,தொடர்ந்து இந்த ஆதரவ தாங்க :))

Divyapriya said...

//@ Ramya

ஊக்கத்துக்கு நன்றி ரம்யா…இனி தட தடவென பயனிக்கும் கதை :)

Divyapriya said...

//Vijay said
ஆமாம், பின்ன சுஜாதா கல்கி ஷான்டில்யன் கிட்ட போய் நீங்க சூப்பரா எழுதறீங்கன்னு சொல்ல முடியுமா?//

பாத்து விஜய்…யாராவது சண்டைக்கு வந்துட போறாங்க :))

//Vijay said
"கிருஷ்ணா கஃபே"ன்னு போர்டு போட்டுட்டு இப்படி சென்னையில் கதை நடப்பது மாதிரி பண்ணிட்டீங்களே.//

இல்ல, இல்ல, நம்ம கோரமங்களா கிருஷ்ணா கஃபே தான்…கூடிய சீக்கரத்துல வந்துடும் :))

//Vijay said
பின்ன tragedy இல்லாம ஒரு Love story'ஆ?//

பாவம் கதைலயாவது சேரட்டுமே!!! ஏதோ blog நண்பர்களால பண்ண முடிஞ்ச ஒரு நல்ல காரியம்…எல்லா கதையயும் சுபமா முடிச்சு வெக்கறது:-D

Divyapriya said...

//திகழ்மிளிர் said...
ஓவியம் இரண்டும் அருமை//

Thanks திகழ்மிளிர்

Raghav said...

ஆஹா, நம்ம கோரமங்களா கிருஷ்ணா கஃபேயா ? 5 வருஷமா போய்க்கிட்டு இருக்கேன். உங்க கதைய போலவே அங்க டிபன் சூப்பரா இருக்கும்..

Raghav said...

திவ்யப்பிரியா, என்னோட முதல் பதிவு, கண்ணனை பற்றிய ஒரு பாடல் பதிந்துள்ளேன்.. வந்து, படிச்சு, கேட்டு கருத்து சொல்லுங்க..

http://kannansongs.blogspot.com/2008/07/blog-post.html

Prabakar said...

ரொம்ப நல்ல இருக்குங்க ,, அதுவும் நம்ப ஈரோடு , பெருந்துறை என்று கலக்கிறிங்க போங்க

வாழ்த்துக்கள் !!

Anonymous said...

good one.. adutha part kaga waiting...

Divya said...

ammani eppo adutha partuuuuuuu???

eagerly waitinguuu:))

Raghav said...

ஏனுங்க ஒரு அளவே இல்லயா.. சீக்கிரம் அடுத்த பார்ட் போடுங்கோ... பாஸ்டன் வந்ததிலருந்து கிருஷ்ணா கபே
(ஹோட்டல்) தான் அப்பப்போ ஞாபகம் வருது..

Divyapriya said...

//Raghav said...
ஆஹா, நம்ம கோரமங்களா கிருஷ்ணா கஃபேயா ? 5 வருஷமா போய்க்கிட்டு இருக்கேன். உங்க கதைய போலவே அங்க டிபன் சூப்பரா இருக்கும்..//
கிருஷ்ணா கஃபே ல நடக்குற ஒரு கற்பனை கதை :)

//Prabakar Samiyappan said...
ரொம்ப நல்ல இருக்குங்க ,, அதுவும் நம்ப ஈரோடு , பெருந்துறை என்று கலக்கிறிங்க போங்க
வாழ்த்துக்கள் !!//

Thanks Prabakar…பெருந்துறை spelling தப்பா போட்டுடேன்…நான் அப்பயே நினச்சேன்…உங்க comment பாத்தப்புறம் தான் தெரியுது...சரி, இனி வர்ர பார்ட்ல correct பண்ணிடறேன்...
//Out of World - Oxy said...
good one.. adutha part kaga waiting...
Divya said...
ammani eppo adutha partuuuuuuu???

eagerly waitinguuu:))

Raghav said...
ஏனுங்க ஒரு அளவே இல்லயா.. சீக்கிரம் அடுத்த பார்ட் போடுங்கோ... பாஸ்டன் வந்ததிலருந்து கிருஷ்ணா கபே
(ஹோட்டல்) தான் அப்பப்போ ஞாபகம் வருது..//

அடுத்த பார்ட் ready thaan…blogging principles படி, வாரம் ஒரு பார்ட் போடலாம்ன்னு தான் :) and btw, இது தான் என்னோட முதல் கதை…அதனால 5 parts உம் எப்பயோ ready.