Wednesday, May 27, 2009

Book Tag

வழக்கம் போல கில்ஸ் நம்மள tag பண்ணிட்டாரு…

One book that changed my life:

அப்படி எல்லாம் ஒரு புக்கும் இல்லை…ஆனா, ரொம்ப தாக்கத்த ஏற்படுத்தின, இல்லை அதிகமா discuss பண்ணின books ன்னா, பொன்னியின் செல்வன், harry potter. மணிக்கணக்கா, இடம் பொருள் ஏவல் மறந்து harry potter பத்தி நானும் ஒரு சில நண்பர்களும் discuss பண்ணுவோம்…

The book you have read more than once:

Mostly எல்லா புக்குகளுமே பிடிச்சு போய்ட்டா, கணக்கே இல்லாம படிக்கறது வழக்கம்…பொன்னியின் செல்வன் ஒரு மூணு இல்ல நாலு தடவை. மத்த கல்கி புக்ஸ் எல்லாம் ரெண்டு தடவை, Harry potter ஒரு மூணு தடவை.
kane and abel/ the prodigal daughter – ரெண்டு தடவை, அதிலையும் இந்த ரெண்டு புக்லையும், வேற வேற point of view ல வர similar part of the story ய, எத்தனையோ தடவை படிச்சிருக்கேன்.

அப்புறம் நான் எழுதின கதை எல்லாம், (அத publish பண்ணிட்டு இருக்கும் போது) – ஒரு பத்து தடவையாவது படிச்சிருவேன்…


One book you would want on dessert island:

harry potter இருந்தா போதும்…எப்படியும் ஏழாவது புக் முடிச்சிட்டு, முதல் புக் மறுபடியும் உடனே ஆரம்பிச்சா கூட thrilling ஆ தான் இருக்கும்…

One book that made you laugh:

எல்லா பதிலையுமே harry potter ன்னு போட வேண்டியதா இருக்கு…நான் என்ன பண்றது? :)

One book that made me cry:

Not one book, so many books...
1. கில்ஸ் மாதிரியே நானும் அழுதது சிவகாமியின் சபதம் கடைசியில தான்…அந்த புக்ல கடைசி பக்கம் வேற ஓரத்துல கொஞ்சம் கிழிஞ்சிருந்தது…அப்படியும் அத படிக்கும் போது, கண்ணுல நிக்காம தண்ணி வந்துட்டே இருந்தது….ஆனா அந்த சிவகாமி மட்டும் கையில கிடைச்சிருந்தா, அப்பவே அவள நாலு அறை விடலாம் போல கோவமா இருந்துச்சு :)


2. அப்புறம் harry potter, last part ல, snape சாகும் போது harry கிட்ட, “look in to my eyes” ன்னு சொல்லுவாரு…அத மறுபடியும், மறுபடியும் படிச்சு படிச்சு அழுதேன்…

3. நா.பார்த்தசாரதி எழுதின பாண்டிமாதேவின்னு ஒரு புக் – படிச்சு முடிச்சுட்டு, ஹய்யோ இத 300 ரூபாய் குடுத்து வாங்கிடமேன்னு அழுதேன் :) என்ன பண்றது, கதைக்காக வேங்கி நாட்டு சரித்தரத்த மாத்த முடியாதே!

One book you wish you had written:

பாலங்கள் – சிவசங்கரி எழுதினது…1980s ல எழுதியிருப்பாங்கன்னு நினைக்கறேன்…1901 ல இருந்து 2000 வரைக்கும் பல தலைமுறை (பிராமண) பெண்களோட கதை, பிறப்பிலிருந்து இறப்பு வரை நடக்கற எல்லா சடங்கு, சம்பிரதாயங்களும் ஒவ்வொரு காலகட்டதிலையும் எப்படி நடந்துச்சுன்னு அப்படியே தத்ரூபமா எழுதியிருப்பாங்க..பக்கத்துல இருந்து பாக்குற ஒரு effect இருக்கும்…மேலோட்டமா பாத்தா, சும்மா life history மாதிரி, கதையே பெருசா இல்லாத மாதிரி இருக்கும்….ஆனா, அதுக்கு அவங்க எவ்ளோ research பண்ணியிருப்பாங்கன்னு நினைச்சா ரொம்பவே ஆச்சர்யமா இருக்கும்….

One book that you wish had never been written:

college books.. specific ah numerical methods, telecommunication books.

One book you are currently reading:

Time to kill – john grisham

One book you have been meaning to read:

சுஜாதா புக்ஸ் தான் அடுத்து படிக்கலாம்னு இருக்கேன்…

One book you’ll recommend
இந்த question நானா சேத்தது…
நா. பார்த்தசாரதி எழுதின குறிஞ்சி மலர்…link இதோ
இந்த புக் பத்தி சொல்லனும்ன்னா, கொஞ்சம் இல்லை, ரொம்பவே மொக்கையா இருக்கும்…மெதுவா போகும், நடுவில பயங்கரமா போர் அடிக்கும்…ஆனா, நிறைய நல்ல நல்ல கருத்துக்கள சொல்ற சமுதாய நாவல். 1980s ல மதுரை ல நடக்கற கதை…ஒரு தடவைக்கு மேல படிக்கறது கொஞ்சம் கஷ்டம் தான்…ஆனா, கண்டிப்பா ஒரு தடவையாவது படிக்க வேண்டிய புத்தகம்…

யாரை மாட்டி விடலாம்? Blog template லயே நிறைய புக்கெல்லாம் அடுக்கி வச்சிருக்காரு, அவரை விட்டுட்டு வேற யார tag பண்றது?

அப்புறம், g3 – இது ஏன்னா நான் g3 ய இது வரைக்கும் tag பண்ணதேயில்லை…அதான் :)

Wednesday, May 6, 2009

சுயபுராணம்!

என்னை பத்தி 25 விஷயம் சொல்லனுமாம்…gils சொல்லியிருக்காரு…25 என்ன, 250 கூட சொல்லலாம், ஆனா படிக்கறவங்க நலனை கருதி, 25 யே போதும்னு விட்டுட்டேன்…

முதல்ல என்னை பத்தி…

1. எப்ப பாரும் தேவையில்லாம கெக்க பெக்கன்னு சிரிக்கறது, ஓயாம பேசுறது, நல்லா ரத்தம் வர அளவுக்கு மொக்கை போடுறது, பாரபட்சமில்லாம பல பல்புகள வாரி வழங்கறது/வாங்கிக்கறது – இப்படிபட்ட விஷயங்கள் நிறஞ்சது தான் என் அன்றாட வாழ்க்கை.

2. அப்துல் கலாம் சொல்றதுக்கு முன்னாடி இருந்தே, பல நேரம் (போர் அடிக்கறப்பெல்லாம்) கனவுகள்ல மிதக்கறது என் வழக்கம். இப்படி பகல் கனவுல தோணுறது தான் என்னோட பெரும்பாலான கதைகள். சூர்யகாந்தி கதை, ஸ்கூல் படிக்கும் போது தோணின கதை தான், அப்பெல்லாம் நான் இப்படி கதை எல்லாம் எழுதுவேன்னு நினைச்சது கூட கிடையாது.

3. கதை எழுதற மாதிரியே, எனக்கு கதை படிக்கவும் ரொம்ப பிடிக்கும்…ஒன்னாவது, ரெண்டாவதுல படிக்க ஆரம்பிச்சு, இன்னும் கதை மட்டும் (பெரும்பாலும்) தான் படிச்சிகிட்டு இருக்கேன், வளரவே இல்லை :)

4. எனக்கு இந்த childish pranks எல்லாம் கொஞ்சம் இல்லை, ரொம்பவே பிடிக்கும்…உதாரணத்துக்கு, வீட்டுக்குள்ள யாருக்கும் தெரியாம நுழைஞ்சி, உள்ள இருக்குறவங்க பயப்பட மாட்டாங்கன்னு தெரிஞ்சும், அவங்க பின்னாடி போய் நின்னு ’ப்பே’ ன்னு சத்தமா கத்துறது, சும்மா நடந்து போகும் போது, உக்காந்திருக்கவங்க காதுக்குள்ள, “கூ…க்க்கூ….” ன்னு காட்டு கத்தல் கத்துறது…இப்படி பல…

5. அப்புறம் நான் ஒரளவுக்கு ராக்கோழி, காலையில எந்திரிக்கறதுன்னா ரொம்ப கஷ்டம், ஆனா நைட்டு எத்தனை நேரம் வேணா முழிச்சிருப்பேன்.

6. கில்ஸ் சொல்லியிருந்தாரு, அவரால ரெண்டு நேர் கோடுகள வரைய முடியாதாம், அத படிச்சவுடனே எனக்கு இது தான் நினைவுக்கு வந்தது, என்னால சரியா ஒரு நேர் கோட்டுல நடக்க முடியாது :) பசங்க மாதிரி நடக்கறேன், ரெளடி மாதிரி நடக்கறேன், இப்படி பல பாராட்டுகள் கிடைக்கும் என் அன்ன சாரி வாத்து நடைக்கு…

7. பொதுவா எல்லா வேலையும் வேக வேகமா செய்வேன்…பதறிய காரியம் சிதறிப் போகும்னு சொல்லுவாங்களே, அதுக்கு நல்ல உதாரணமா என்னை சொல்லலாம். வேகமா நடந்து இல்லைன்னா ஓடி, வழுக்கி விழுகறது, எதுலையாவது இடிச்சுக்கறது, இப்படி பல…ஆனா, என்னவோ தெரியல, இப்ப கொஞ்ச நாளாவே, எல்லா விஷயத்திலையும் ஒரு நிதானம் (இல்ல மந்தமா?) ஏதோ ஒன்னு…வயசு ஆயிடுச்சுன்னு நினைக்கறேன் :)

நாமகரணங்கள் (Self damage!)

8. எனக்கு நானே வச்சிகிட்டா, இந்த பேரெல்லாம் வச்சுக்குவேன்
வாயாடி/ஓட்டை வாய்/ அவசர குடுக்கி/ fm radio

9. என் நண்பர்கள் மற்றும் குடும்பம் எனக்கு சூட்டிய செல்ல பெயர்கள்
Water bottle/ தினதந்தி/ ராவல்பிண்டி express/ பத்மனாபா/ மொக்கைராணி

10. திவ்யபிரியா aka பத்து
no. 10 மாதிரி படிச்சிடாதீங்க…bathu, இது தான் pronunciation – இது தான் என் வீட்டு பேர், திவ்யபிரியா காட்டு பேர் தான் ;)
நான் பிறக்கும் போது, எங்க அக்காவுக்கு ரெண்டு வயசு, அவ எங்கயோ கேட்டுட்டு வந்து, என்னை பத்துன்னு கூப்பிட இந்த பேரே நிலைச்சு போய்டுச்சு…நான் பாய் கட் அடிச்சிருந்த போது, அதை மாத்தி, நண்பர்கள் எல்லாம் எனக்கு பத்மனாபான்னு பேரு வச்சுட்டாங்க :(

பிசிராந்தையார் வகை நட்பு வட்டங்கள்

11. ப்ளாகர் நண்பர்கள்
தனிமையை கொல்றதுக்காக கதை எழுத ஆரம்பிச்சு, அப்புறம் ப்ளாக் தொடங்கி, கதை எல்லாம் அதுல போட ஆரம்பிச்சு, மெதுவா நிறைய முகம் தெரியாத நண்பர்கள இந்த ரெண்டு வருஷத்துல சம்பாதிச்சாச்சு. இப்பெல்லாம் ஆர்குட்லையும், ஜி-மெயில்லையும் ப்ளாக் நண்பர்களோட தான் பெரும்பாலான உரையாடல்கள் நடக்குது, அப்புறம் இருக்கவே இருக்கு நம்ம பின்னூட்ட கும்மிகள்…நினைச்சு பாத்தா ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. ஆனா இதுவும் ரொம்ப நல்லா தான் இருக்கு :)

12. ஹீரோ சார்
எனக்கு ஒரு friend, U.S ல இருக்கறதால, நாங்க அதிகமா ஃபோன்லையோ, நேர்லையோ பாத்து பேசுக்கறதில்லை, பெரும்பாலும் மெயில்லையும், எப்பவாவது chat லையும் தான்…ஆனா, எத்தன நாள் கழிச்சு, random ஆ எந்த விஷயத்தை பத்தி பேசினாலும் continuity மட்டும் miss ஆகவே ஆகாது…

என் சந்தோஷங்கள பகிர்ந்துக்குற நல்ல இதயம்,
என் புலம்பல்கள பொறுமையா கேக்குற பாவப்பட்ட காதுகள்,
நான் என்ன ஜோக் அடிச்சாலும், ‘மொக்கைய போடாதீங்க சார்’ ன்னு உடனே வர்ற நக்கல் கமெண்ட், என் நீண்டகால stress buster…
இதெல்லாம் தான் ஷிவா…

ஷிவா! என் புலம்பல்களுக்கெல்லாம், காரணமே சரியா தெரியாட்டி கூட, எனக்கு எத்தனையோ solutions குடுத்திருக்க! And u know wat? Most of ur solutions did workout for me da…thanks நண்பா!
அதென்ன ஹீரோ சார் ன்னு யாரும் யோசிக்கறீங்களா? நண்பனோட அருமை பெருமையெல்லாம் சொல்லிட்டு, இத சொல்லாட்டா எப்படி? இந்த கதையோட ஹிரோ இவர் தான்….shiva sir, I know u won’t mind…ஏன்னா, நீங்க ரொம்ப நல்லவர் சார் ;)

சரி, 12 ஆச்சு…இதுக்கு மேல முடியாது…நம்ம கதைலையே கவிதை போட்டு மொக்கை போடறோம், இது போடாட்டா எப்படி? எண்ணிப் பாத்துக்கோங்க…இதுல 13 வரி இருக்கு….

கனவுகளில் சஞ்சரிக்கப் பிடிக்கும்,
அன்றே கோபங்களை மறக்கப் பிடிக்கும்,
என்றும் சந்தோஷத்தில் திளைக்கப் பிடிக்கும்…

சிரிப்பொலிகள் நிரம்பிய பகல்களும்,
பேச்சொலிகள் நிரம்பிய இரவுகளும்,
நித்திரையில் சயனிக்கும் மதிய வேளைகளும்,
தனிமை தோய்ந்த மாலை பொழுதுகளும் பிடிக்கும்…

சின்ன சின்ன செல்ல சண்டைகளும்,
சிறுபிள்ளைத் தனமான குறும்புகளும்,
சினுங்கள்களும், சீண்டல்களும் பிடிக்கும்…

கவிதைகள் சூடிய கதைகள் பிடிக்கும்,
கதைகள் நிறைந்த கனவுகள் பிடிக்கும்,
கனவுகள் முளைக்கும் தூக்கம் பிடிக்கும்…

இதோட போதும், இதுக்கும் மேல போனா, படிக்கறவங்களுக்கு பைத்தியம் பிடிக்கும் :-)

சரி, யாரை மாட்டி விடறது? வேற யாரு, நம்ம வானிலை அறிக்கை வாசிப்பாளர் தான்…’தல’ ஜியா. (ஜி! உங்க பதிவுல பின்னூட்டத்துக்கு reply பண்ணலைன்னா, tag பண்ணிருவேன்னு தான் சொன்னேன், ஆனா reply பண்ணீங்கன்னா, tag பண்ண மாட்டேன்னு சொல்லவே இல்லையே ;))