Thursday, April 16, 2009

மலரே மெளனமா? - 5

பாகம் – 5 (பெங்களூர் --> சென்னை)
பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4

செவ்வாய் கிழமை மாலை என்னுடைய தொய்ந்த முகத்தை பார்த்தும் வினோத் எதுவுமே கேட்காமல் இருந்தது ஆச்சர்யமாகத் தான் இருந்தது. படுக்கைக்கு செல்லும் போது, வினோத்தும் மற்றொரு அறை நண்பன் யாசரும் என்னை பற்றி ஏதோ பேசிக் கொள்ளும் சத்தம் கேட்டு, அறையின் கதவருகே சற்றே தயங்கி நின்றேன்.

யாசர், “நீ என்ன ஆச்சுன்னு கேக்க வேண்டியது தான?”

வினோத், “அதில்லடா…இவ்ளோ சோகமா மூஞ்சிய வச்சிட்டு இருக்கான்…என்னால பாக்க முடியல…அவனா சொல்லட்டுமேன்னு தான்…”

நான் உள்ளே நுழையும் சத்தம் கேட்டதும் இருவருமே அமைதியானார்கள்.

“மண்டி! ஊருக்கு போனியே…அம்மா, அப்பா தம்பி எல்லாம் எப்படி இருக்காங்க?” யாசரை செல்லமாய் பழமண்டி, அல்லது அதன் சுருக்கம் மண்டி என்று தான் அழைப்போம். அவன் எங்களோடு கொடைக்காணல் வந்திருக்கவில்லை.

“அதெல்லாம் இருக்கட்டும்…நீ நேத்திக்கு மலரை பாத்தியே…அது என்ன ஆச்சுன்னு முதல்ல சொல்லு…”

“ம்ம்…என்னத்தடா சொல்றது?” என்றபடி மூச்சுவிடாமல் முழுவதுமாய் சொல்லி முடித்தேன்.

வினோத், “என்னடா? ஒரே குழப்பங்கள்ஸ் ஆஃஃப் இந்தியாவா இருக்கு?”

“எனக்கும் ஒன்னுமே புரியல…கடைசியில, நான் என்ன கேட்டுட்டேன்னு அப்படி அழுதான்னு கூட புரியல…”

யாசர், “நீ சொல்றத பாத்தா, அவங்க வீட்ல தான் ஏதோ பிரச்சனை இருக்கற மாதிரி தோணுது…”

வினோத், “பேசாம அவங்க வீட்டுக்கே போய், நேரா அவ அப்பா அம்மாகிட்டயே எதாவது பிரச்சனையான்னு கேட்டுட வேண்டியது தான?”

“அவங்க அப்பா அம்மாகிட்டதான் கேக்கனும், வேற வழியில்லை…ஆனா…நான் போய்…எப்படிடா?”

“ஏன்? நீ தான் அவங்க வீட்டுக்கு ஏற்கனவே போயிருக்கியே…”

யாசர், “என்னடா முட்டாள் மாதிரி பேசுற? இவன் போய் மலர பத்தி அவங்க வீட்ல விசாரிச்சா, இவன் எதுக்கு வேலை மெனக்கெட்டு இவ்ளோ தூரம் வந்து விசாரிக்கனும், இவனுக்கு என்ன வந்துச்சுன்னு நினைக்க மாட்டாங்க? மலர பத்தியும் தப்பா நினைக்க மாட்டாங்க?”

வினோத், “இதுல என்னடா இருக்கு? ஒரு நண்பன் அக்கறையில வந்து கேக்குறான்னு தான் நினைப்பாங்க…”

“ஆமா…கிழிப்பாங்க…இத பாரு சுரேன்…அவங்க அப்பா அம்மாகிட்ட கேக்கறதெல்லாம் சரி பட்டு வராதுடா…வீணால மலருக்கும் தான் பிரச்சனை…அவங்களோட நெருங்கின தோழி யாரையாவது தெரிஞ்சா அவங்கள கேக்குறது தான் நல்லது…”

யாசர் இப்படி சொல்லவும், நான் யோசித்தவாறே, “எனக்கு யாரையும் தெரியாதேடா…”

வினோத், “இப்படி பண்ணா என்ன?”

உடனே யாசர், “வேணாம்டா சாமி…நீ எக்குத்தப்பா ஒரு ஐடியாவும் குடுக்கவேணாம்…”

“சொல்றத கேளுங்க டா…சுரேன்…இந்த வீக்கெண்டு லாங் வீக்கெண்டு தான? பேசாம இந்த வியாழக் கிழமையே நீ சென்னைக்கு கிளம்பி போ…அவங்க வீட்டுக்கும் போ…சென்னைக்கு என்ன விஷயமா வந்திருக்கேன்னு கேப்பாங்கல்ல? அங்க தான் நீ ராஜதந்திரமா பதில் சொல்லனும்!”

அவன் எதிர்பார்த்த முகமாற்றத்தை நாங்கள் இருவருமே குடுக்காமல் அமைதியாகவே இருக்கவும், வழக்கம் போல் அதை சட்டை செய்யாமல் வினோத்தே தொடர்ந்தான், “நான் சென்னைக்கு அப்பா அம்மாவோட பொண்ணு பாக்க வந்தேன்…பொண்ணு வீடு இங்க பக்கத்துல ரெண்டு தெரு தள்ளி தான் இருக்கு…அன்னிக்கு வந்ததுல உங்க வீடு எங்கயோ இங்க இருக்கறதா தான் ஞாபகம்… மலர்கிட்ட பேசியும் ரொம்ப நாளாச்சு… லாங் வீக்கெண்ட், ஒரு வேளை மலர் ஊருக்கு வந்திருக்கலாம்…அதான் அப்படியே ஒரு எட்டு பாத்துட்டு போகலாம்னு, எங்க அப்பா அம்மாவ ஹோட்டலுக்கும் அனுப்பி வச்சிட்டு வந்தேன்…”
“இப்படி மட்டும் சொல்லிப் பாரு…எப்படி என் ஐடியா?”

யாசர், “ஏன்டா? எதுக்கு பொண்ணு பாக்க வந்தேன்னு சொல்லனும்? நண்பன் கல்யாணத்துக்கு வந்தேன்..இல்லை ஆஃபிஸ் விஷயமா வந்தேன்…இப்படி எதாவது சொல்லலாமே?”

“அங்க தான்டா நீ என்னோட ராஜ தந்திரத்த புரிஞ்சுக்கல…என்ன தான் முற்போக்கு சிந்தனையுள்ளவங்களா இருந்தாலும், என்னடா ஒருத்தன் திடீர்ன்னு இவ்ளோ தூரம் வந்து, நம்ம பொண்ண பத்தி இவ்வளவு விசாரிக்கரானேன்னு பெத்தவங்க மனசுல ஒரு துணுக்கம் இருக்கும்னு தான நீங்க ரெண்டு பேரும் யோசிக்கறீங்க? அதுவே நீ வேற ஒரு பொண்ண பாக்க, அப்பா அம்மாவோட வந்தேன்னு சொன்னீன்னு வச்சுக்கோ, அப்பாடா! இவனோட இலக்கு நம்ம பொண்ணு இல்லைன்னு செக்யூர்டா ஃபீல் பண்ணுவாங்க…இவங்கிட்ட தைரியமா பேசலாம்னு அவங்களும் நினைப்பாங்க…”

யாசர், “பாப்பாஆஆ…எப்படி டா? எப்படி, உன்னால மட்டும், இப்படியெல்லாம்? முடியல…” என்றபடி என்னைப் பார்த்து சிரித்தான்.

உடனே நான், “டே பாப்பா…இங்க வாயேன்…”

“வேணாம்…அப்புறம் நீ என்னை திட்டுவ…”

“யேய்! வாடா…” அவனை இழுத்து, அவன் தோளில் என் கையை போட்டபடி, “உனக்கு மட்டும் எப்படிடா இப்படியெல்லாம் ஐடியா தோனுது? ஆனாலும் செம ஐடியாடா மாப்ள…”

“ஹீ ஹீ…” என்றபடி சட்டை காலைரை தூக்கிவிட்டுக் கொண்டான்.

நானும் சிரித்தபடி, “சரியான ஆள்டா…நீ, நீ தான்…உனக்கு நிகர் நீயே தான்…” யாசரும், “பாப்பான்னா பாப்பா தான்டா…மூளைக்காரன்!!!”

“ஹே…போதும் டா புகழ்ந்தது…ஓவரா புகழாதீங்க…வெக்கமா இருக்கு” என்று வழிந்தான்.

“சரியான கிரிமினல்டா நீ…”

“போதும்ன்னேன்…”

அவன் சொன்னதை காதில் வாங்கிக் கொல்லாமல் தொடர்ந்தேன், “மச்சான்…*$*$*(*&*($*$@”

“யேய்!!!”

“*(&#@‍%#@‍$!”

“*(&#@%‌@#%@‍$!”

எங்கள் மூவரின் சிரிப்பு சத்தம் அறையெங்கிலும் நிரம்பி வழிந்தோடியது.மிகவும் குஷியான நேரங்களில், இப்படி காதிலே கேட்க முடியாத இனிய சொற்களால் கொஞ்சிக் கொள்வது எங்கள் வழக்கம்.

சிறுது நேரம் சிரித்து ஓய்ந்தபின், வினோத், “டேய் தடியா!! போதும் சிரிச்சது…கொஞ்சம் சீரியஸா யோசி…இந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சப்புறம் மறுபடியும் மலர்கிட்ட உன் காதலை பத்தி பேசுற…”

அது வரை என் முகத்திலிருந்த சிரிப்பு காணாமல் போக, “என்னன்னு டா மறுபடியும் கேக்குறது?”

“இந்த தடவை நேரடியா எல்லாம் கேக்காத…பேசாம ஒரு லெட்டர் எழுதி குடுத்துடு…”

“லெட்டரா?” ஒரு சேர ஆச்சர்யம் கலந்த தொனியில் ஒலித்தது யாசரின் குரலும் என் குரலும்.

“ஆமா…அது தான் நீ இப்பெல்லாம் ஒரே கவிதையா படிச்சு தள்றியே…பேசாம அந்த மாதிரி ஒன்ன எழுதி அவங்ககிட்ட குடுத்துடு…”

“நான் எப்படா கவிதை எல்லாம் எழுதினேன்? அதெல்லாம் எனக்கு வராது…” இது வரை மனதில் தோன்றிய எண்னற்ற கவிதைகளுள் ஒன்றை கூட எழுதி வைக்கத் தோன்றியதில்லை. “நீ வேணா ஒன்னு எழுதிக்குடேன்…”

வினோத்தை மதித்து எதாவது கேட்டால், பயல் உடனே அதீத குஷியாகி விடுவான். “ஹ்ம்ம்…சரி…சூப்பர் கவிதை ஒன்னு சொல்றேன் கேளு.”

யாசர், “மொதல்ல சொல்லுடா…சூப்பரா இல்லையான்னு நாங்க சொல்றோம்…”

உன்னிடம் தொலைந்தது என் மதி
அதற்கு காரணம் என் விதியா?
இல்லை, நீ செய்த சதியா?

உன்னிடம் காதல் பாடம் ஓதி,
ஆகிவிட்டேன் காதல் கைதி,
இனி என்னவாகுமோ என் கதி?


யாசர், “டே…போதும்டா…ப்ளீஸ்…எங்க கதிய நினைச்சா பாவமா இல்லை?”
வினோத், “முழுசா கேளுடா…ஃபோலவ நடுவுல டிஸ்டர்ப் பண்ணாத…”

உன் பிரிவால் அடங்கமறுக்கிறது என் மனதின் கொதி,
அதை நீ வந்து அடக்க வேண்டும் என் தலை கோதி,
உன்னை விட்டால் எனக்கு இல்லை வேறு நாதி.

விரைவில் உன் பதியாகி,
தினமும் உன் காதல் நதியில்
நீந்த துடிக்கிறேனடி ரதி!

நானறிந்த பெண்களிலே நீ உயர்ந்த சாதி,
உன் நினைவால் நான் ஆகிவிட்டேன் பாதி,
நேரில் வந்து சொல்கிறேன் மீதி.

“எப்படிடா?” கண்களை சிமிட்டியபடி அவன் கேட்க, நான், “உன்னை இப்ப மிதிக்கப் போறேன்டா, மிதி!!!”

யாசர், “அப்புறம் தெரியுன்டா சேதி! உனக்கு ஆகப் போகுது பேதி!”

வினோத், “போடா கபோதி!”

மீண்டும் அறையெங்கிலும் வழிந்தோடியது எங்களின் சிரிப்புச் சத்தம். ’ச்சே…இப்படியே சந்தோஷமா இருந்திருக்கலாம்…சுரேன்! நல்லாத்தானடா இருந்த?’ என்ற எண்ணம் என்னுள் தலைதூக்காமல் இல்லை.

காதல்…சொன்னாலும், சொல்லாவிட்டாலும், ஏற்கப்பட்டாலும், ஏற்கப்படாவிட்டாலும்,தோற்றாலும், ஜெயித்தாலும், அது எந்த ரூபத்தில் இருந்தாலும் ஒரு பேரவஸ்த்தை தான்…ஆனால் வாழ்வில் ஒரு முறையேனும் அனுபவிக்க வேண்டிய பேரவஸ்த்தை!!!

******
சென்னையில் சில நிறுவனங்களுக்கு அன்று விடுமுறை இல்லை போலும். மலர் நடந்து கொண்ட விதம், அன்று காலை மலர் அப்பா, அம்மாவை சந்தித்தது, அவர்கள் சொன்னது, இப்படி பலவற்றை அசை போட்ட படி, அந்த பெரிய கணினி நிறுவன வளாகத்தில் சங்கீதாவுக்காக காத்துக் கொண்டிருந்தேன்.

சங்கீதா…மலரின் மிக நெருங்கிய தோழி, மலர் அம்மா சொல்லும் போதே எனக்கு இந்த பேரை மலர் சொல்லிக் கேட்டிருந்தது போல் ஞாபகம்.

வினோத் கொடுத்த ஐடியா, மலர் பெற்றோரிடத்தில் மிக நன்றாகவே வேலை செய்தது என்று தான் சொல்ல வேண்டும். அவர்களிருவருமே எந்த வித தயக்கமுமில்லாமல், மனதில் இருந்ததையெல்லாம் என்னிடம் சொன்னார்கள். மலர் கடைசியாக சென்னைக்கு வந்தது அன்று நாங்கள் எல்லோரும் சென்னை வந்த அன்று தான். அதன் பிறகு, திடீரென்று காரணம் எதுவும் சொல்லாமலே வேலை மாற்றிக் கொண்டு சென்று விட்டதாகவும், மூன்று மாதங்களாகியும் வீட்டிற்கே வரவில்லை என்றும் அவள் அம்மா சொன்னதில் எனக்கு எந்த ஆச்சர்யமும் ஏற்படவில்லை. ஏதோ பிரச்சனை என்று அவள் முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது…உயிராக நினைக்கும் பெற்றோரிடம் கூட சொல்ல முடியாத அளவிற்கு, மலருக்கு பிரச்சனைகள் ஏதேனும் இருக்கக் கூடும் என்று என்னால் நம்ப முடியவில்லை. என்னவென்று சொன்னால் தானே எதாவது செய்ய முடியும்? எல்லாவற்றையும் விட இவளின் இந்த மெளனமே என்னை அதிகம் வாட்டிக் கொண்டிருந்தது.

என்னை தேடி நீ வரும் வரையில் நான் காத்திருப்பேனா?
இல்லை, காற்றிலே கறைந்து மறைந்திருப்பேனா?

என் உயிரின் ஓசை உனக்கு கேட்கவில்லையா?
அது, உன் உயிரிலே கலந்து எதிரொலிக்கவில்லையா?

உன் பிரிவு கொடுக்கும் வலியையும் மிஞ்சுகிறதடி உன் மெளனம்…
உன் மெளனம் கலையும் நாள் தான் எப்போது?

அது வரையில் நான் காத்திருப்பேனா?
இல்லை, காற்றிலே கறைந்து மறைந்திருப்பேனா?

நாங்கள் ஒரு முறை கொடைக்காணல் சென்றபோது கூட அவள் எங்களுடன் சரியாகவே பேசவில்லை என்று சொல்லும் போது அவள் அம்மா உடைந்து அழுதுவிட்டாள். பெண்களாவது பரவாயில்லை, மனதை அழுத்தும் பாரத்தை கண்ணீரால் கரைத்துக் கொள்ளலாம். ஆனால் அவள் அப்பா? அவர் முகத்தை பார்க்கவே முடியவில்லை என்னால். மரியாதைக்குறிய அவர் தோற்றமும், அன்பு ததும்பும் முகமும் முதல் சந்திப்பிலேயே எனக்கு அவர் மேல் மிகுந்த மரியாதையை ஏற்படுத்தி இருந்தது. அப்படிப் பட்ட மனிதர், மனதின் பாரம் உள்ளே அழுத்தினாலும், அதை மறைத்து, போலியாய் புன்னகைத்து என்னை வரவேற்று உபசரித்ததை என்னால் மறக்கவே இயலவில்லை. அவருக்காகவாவது எதாவது செய்ய வேண்டும் என்ற உத்வேகம் என்னுள் எழுந்ததன் பயணாய் தான், மாலை வரை கூட காத்திருக்காமல், உடனடியாக சங்கீதாவை சந்திக்க, நேரே அவள் அலுவத்திற்கே வந்து விட்டேன்.
******
“ஹாய்…நான் சுரேன்…சுரேந்தர்…மலரோட…”

“பழைய டீம்லீட்!” பட்டென்று அவளிடமிருந்து பதில் வந்தது. ’இவளுக்கு என்னை தெரிந்திருக்கிறது…மலர் ஒரு வேளை எல்லாவற்றையும் சொல்லியிருப்பாளோ? அப்படி சொல்லியிருந்தால், மலரை பற்றி விசாரிக்க இவளை விட சிறப்பானதொரு ஆளை கண்டுபிடிக்க முடியாது.’

“ஓகே…சந்தோஷம்…அறிமுகம் தேவையில்லை…நேரடியா விஷயத்துக்கே வரேன்…மலருக்கு அப்படி என்ன பிரச்சனை? எதுக்காக வேற ஏதோ ஒரு ஊர்ல, அதுவும் ஒரு ஸ்கூல்ல வேலை செய்யனும்?”

“ஏதோ ஒரு ஊரில்லை…சின்ன வயசுல அவ படிச்ச ஸ்கூல் தான்…திடீர்ன்னு வாழ்க்கை இயந்தரத்தனமா மாறின மாதிரி ஒரு எண்ணம் அவளுக்குள்ள…அதனால தான், ஒரு மாற்றத்துக்காக அங்க வேலையில இருக்கா…”

அவளுடைய பதில் தான் இயந்திரத்தனமாக இருந்தது! குரலில் அழையாமலே வந்து ஒட்டிக் கொண்ட கடுமையுடன், “போதும் சங்கீதா…இந்த பதிலை கேக்கறதுக்காக நான் வேலை மெனக்கெட்டு சென்னை வரல…”

அவளும் சூடாகியிருக்க வேண்டும், “நானும் ஒன்னும் வேலை வெட்டியில்லாம இங்க உக்காந்துட்டு இருக்கல…”

சற்றே தணிந்த குரலில், “சாரி….சாரி சங்கீதா! தயவு செஞ்சு சொல்லுங்க…மூனு மாசமா அவங்க வீட்டுக்கும் வரலை…ஃபோன்ல பேசினாலும் சரியா பேசறதில்லைன்னு அவங்க அம்மா…”

என்னை இடைமறித்தவள், “தெரியும்…இதெல்லாம் எனக்கும் தெரியும்! சரி, அவளுக்கு பிரச்சனை இருக்குன்னே வச்சுக்குவோம்…ஆனா அதையெல்லாம் நான் ஏன் உங்ககிட்ட சொல்லனும்? நீங்க யாரு?”

என்ன பதில் சொல்வது இதற்கு? ’அவளுக்கு நான் யாரும் இல்லை தான்…ஆனால் அவள் தான் எல்லாமும் எனக்கு…’ என்றா சொல்லமுடியும்?

நான் வாயடைத்து அமைதியாய் இருப்பதைப் பார்த்து, எரியும் கொள்ளியில் எண்ணையை ஊற்றுவதைப் போல், “You are neither her friend right now, nor her lover…” என்றாள்.

எனக்குள் கொழுந்து விட்டெரிந்த நெருப்பின் ஜுவாலை கண்களில் தகதகக்க, “ஆமா! உண்மை…நான் அவங்களோட காதலன் இல்ல…அவங்கள ஒரு தலையா காதலிச்சு நிராகரிக்கப் பட்ட ஒரு தலை காதலன் தான்! ஒத்துக்கறேன்…ஆனா, உங்களுக்கு ஒன்னு தெரியுமா சங்கீதா? ஒரு காதலன், பின்னாடி அன்புக் கணவனா மாறி, காலப்போக்குல ஒரு சராசரி கணவனா கூட மாறிடுவான்….ஆனா, ஒரு நிராகரிக்கப்பட்ட காதலன், என்னிக்குமே அதே அன்போட தான் இருப்பான்…”

என்னுடைய இந்த நீண்ட உறையை விரும்பாமல், ’உஸ்ஸ்’ என்று மிகச்சன்னமாக ஒரு ஒலியெழுப்பியபடி வேறு பக்கம் பார்க்கத் துவங்கினாள் அந்த காதல் எதிரி…முக்கால் வாசி தமிழ் பெண்கள் காதலை கொலை குற்றம் போல் பாவிக்கும் விந்தை மட்டும் எனக்கு இன்று வரை விளங்கியதில்லை!!!

இருந்தும் விடாமல் தொடர்ந்தேன், “பரஸ்பர அன்பை விட, ஒரு தலை அன்பு ஆழமானது தெரியுமா? ரெண்டு பேருக்குள்ளையும் இருக்க வேண்டிய அன்பு, ஒரு பக்கமே தேங்கி கிடக்கறது தான் அதுக்குக் காரணம்…அவ தன்னோட இருந்தா எவ்ளோ சந்தோஷமா இருப்பாளோ, வேற எங்க இருந்தாலும், அவ அதை விட பல மடங்கு சந்தோஷமா இருக்கனும்னு நினைக்கறது தான் உண்மையான காதல்…and நான்…மலரை உண்மையா நேசிக்கிறேன்!!!”
சொதப்பலாக ஆரம்பித்தாலும், அசத்தலாகத் தான் பேசி முடித்து விட்டேன் போலும், சங்கீதா முகத்தில் இருந்த ஆயாசம் மாறி, ஒரு சிறு பரிதாபம் தெரிந்தது.

“சரி சங்கீதா…அவங்க பிரச்சனைய பத்தி நீங்க எங்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்…நான் வேற ஒரு கேள்வி கேக்குறேன்…அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க…”

“என்ன?”

“மலர் இப்ப சந்தோஷமா இருக்காங்களா? இல்லையா? இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க…”

ஒரு கணம் தயங்கியவள், “இல்லை…” என்றபடி தலையை குணிந்து கொண்டாள்.

“ஹ்ம்ம்…சரி…அப்ப சொல்லுங்க…என்ன பண்ணலாம்?”

“நான் அவ கிட்ட எவ்வளவோ பேசிப் பாத்துட்டேன்…உண்மையில சொல்லப் போனா, அவங்க வீட்ல எந்த பிரச்சனையுமே இல்ல…அவ தான் அவளோட பிரச்சனையே…அவளுக்கு எப்படி புரிய வைக்கறதுன்னு எனக்கு சத்தியமா தெரியல…”

“நீங்க அவங்களோட பேசினீங்களா? நேர்ல போயா?”

“இல்ல…நான் ஆஸ்ட்ரேலியாவில இருந்து போன வாரம் தான் வந்தேன்…அது வரைக்கும் ஃபோன்லயும், ச்சேட்லையும் தான்…”

யாரிடமும் மனம் விட்டு பேசாமல் மனதிற்குள்ளே மலர் மறுகித் தவிப்பது தான் இதற்கு முழு முதல் காரணம் என்று தெள்ளத் தெளிவாக விளங்கியது, ஆனால் இத்தனை பிரச்சனைகளின் மூலம் என்னவென்று இவள் வாயிலிருந்து வருவதாய் தெரியவில்லை.
“சரி…ரொம்ப நன்றி சங்கீதா! உங்கள வேலை நேரத்துல தொந்தரவு பண்ணதுக்கு மன்னிச்சிடுங்க…நான் கிளம்பறேன்…”

திடீரென்று பாதியில் நான் விடைபெற்றதை சற்றும் எதிர்பார்க்காதவள், “சுரேந்தர்….நான் தான் உங்ககிட்ட மன்னிப்பு கேக்கனும்…ப்ளீஸ் உக்காருங்க…எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல…இந்த விஷயத்துல மலர்கிட்ட நேரா போய் பேச முடியலையேன்னு எனக்கே ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு…அவள ஊருக்கு வர சொன்னாலும் வர மாட்டிங்குறா…எனக்கு இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம்…என்னை கொடைக்காணலுக்கெல்லாம் வீட்ல விட மாட்டாங்க…”

“ஓஹ்ஹ்…வாழ்த்துக்கள்…” என்றபடி மீண்டும் அவளெதிரில் அமர்ந்து, அவள் கண்களை பார்த்து, “சரி…என் மேல நம்பிக்கை இருந்தா மட்டும் என்ன விஷயம்னு எங்கிட்ட சொல்லுங்க…நான் மலர் கிட்ட போய் பேசுறேன்…”

“அவங்க குடும்ப பிரச்சனை…நாம என்ன பண்ண முடியும்?”

“நீங்க மலரோட நெருங்கிய தோழி…நான் மலரோட நலம் விரும்பி…அப்ப நாம ரெண்டு பேரும் பண்ணாம வேற யார் என்ன பண்ண முடியும்?”

“சரி…சொல்றேன்…எப்படி சொல்றதுன்னு தெரியல…உங்கள எனக்கு தெரியாது…ஆனா, மலர் உங்கள பத்தி ரொம்ப உயர்வா என்கிட்ட சொல்லியிருக்கா…அந்த நம்பிக்கையில தான் சொல்றேன்…”

“அந்த நம்பிக்கைய நான் கட்டாயம் காப்பாத்துவேன்…சொல்லுங்க…”

“மலரோட அப்பா இருக்காரில்லை? ஆக்சுவலா, அவரு அவ அப்பா இல்லையாம்…நிஜத்துல அவரு அவளோட சித்தப்பாவாம்!”

“என்ன???” அதிர்ச்சியில் அதற்கு மேல் வார்த்தைகள் வெளிவரவில்லை.

“அவங்க அம்மா மூனு மாசமா இருக்கும் போதே, அவ அப்பா அவங்கள விட்டுட்டு எங்கயோ… வேற யாரோடையோ போய்டாராம்... அதனால மலர் பிறக்கற சமயத்துல, அவங்க தாத்தா பாட்டியே அவங்க ரெண்டாவது பையன அவங்க அம்மாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க…இந்த விஷயம் போன முறை ஊருக்கு வந்தப்போ தான் எப்படியோ மலருக்கு தெரிஞ்சுருக்கு…அதனால தான் அவ ரொம்பவே அப்ஸெட்டா இருக்கா…”

அன்பு ததும்பும் மலர் அப்பாவின் முகம் என் மனக்கண் முன் நிழலாடியது!

[தொடரும்]

46 comments:

Raghav said...

ஐ.. நான்தான் ஃபர்ஸ்ட்...

MSK / Saravana said...

me the second.. :)

MSK / Saravana said...

படிச்சிட்டேன். செமையா இருக்கு..

MSK / Saravana said...

அடுத்த பகுதி எப்போ??

G3 said...

Avvvv.. romba suspense veikkareengalae.. :(((

Raghav said...

இப்போ தான் படிச்சு முடிச்சேன்.. நல்லாருந்துச்சுங்க..

Raghav said...

சுரேனை விட வினோத் கலக்குறாப்புல.. ஒரு வழியா 5வது பகுதியில உண்மையான பிரச்சனையை சொல்லிட்டீங்க.. எப்புடி முடுக்கிறீங்கன்னு பார்ப்போம்..

Raghav said...

உரையாடல்கள் எளிமையா இருக்கு.. கதையின் ஓட்டம் ரொம்பவே நல்லாருக்கு..

mvalarpirai said...

T.R style நண்பர்கள் வசனம் அருமை... ! கதையில் இப்ப பாலசந்தர் வாசனை அடிக்குது :)
நான் புதன் கிழமை உங்க வலைப்பதிவை இந்த பகுதிக்காக அடிக்கடி refresh பண்ணி பார்த்து இருந்தேன்...
லேட்டா வந்தாலும் நல்ல வந்திருக்கு இந்த பதிவு ...:)

FunScribbler said...

யப்பாடியோவ்... உங்க கதைய படிச்சா மனசு மட்டும் அல்ல, வயிறும் கலங்குது.... அப்படி ஒரு suspense filled story. கடைசி நான்கு ஐந்து வரிகளை எவ்வளவு வேகமா படிச்சேன் தெரியுமா... ரொம்ம்ப thrillingஆ இருக்கு... ரொம்ப நாள் வேட் பண்ண வைக்காம சீக்கிரம் அடுத்த பகுதிய போட்டுடுங்க அக்கா!:)

anbudan vaalu said...

யதார்த்தமான டயலாக்ஸ்....கதை சூப்பரா போகுது...
வாழ்த்துக்கள் :))

gils said...

avvv...top 15la en kament

gils said...

nice twist..romba yatharthamaana twist..aana malar reaction thaan konjam overa iruku..sivakaminu per vachirukalam :D

gils said...

inum evlo part poda poreenga :))

Nimal said...

ரொம்ப நல்லா இருக்கு, நண்பர்களுக்கிடையில் நல்ல கலகலப்பான உரையாடல்கள்.

எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தோட முடிச்சிருக்கிறீங்க...

மதி said...

கடைசியில குடுத்த ஜெர்க்.. சூப்பரா இருக்கு.

ஜியா said...

:)) first friends talk and last twist is nice... intha twista naan ethir paakave illa.. my guess about the twist is wrong :(( innum evlavu naal kazichu aduththa part poduveenga??

வெட்டிப்பயல் said...

appakita thaan ethoa prechanai irukunu ninaichen.. but intha twist ethirpaakala... Good going.

Prechanai therinjiduchi.. inime solution kondu varathu easy thaan... Kalakala poayitu iruku...

ஆயில்யன் said...

//உன்னிடம் தொலைந்தது என் மதி
அதற்கு காரணம் என் விதியா?
இல்லை, நீ செய்த சதியா?

உன்னிடம் காதல் பாடம் ஓதி,
ஆகிவிட்டேன் காதல் கைதி,
இனி என்னவாகுமோ என் கதி?//

எங்க ஊருக்கார புள்ள டி.ராஜேந்தர்ல கண்ணு முன்னாடி வந்து நிக்கிறாரு :)

ஆயில்யன் said...

//அங்க தான்டா நீ என்னோட ராஜ தந்திரத்த புரிஞ்சுக்கல…என்ன தான் முற்போக்கு சிந்தனையுள்ளவங்களா இருந்தாலும், என்னடா ஒருத்தன் திடீர்ன்னு இவ்ளோ தூரம் வந்து, நம்ம பொண்ண பத்தி இவ்வளவு விசாரிக்கரானேன்னு பெத்தவங்க மனசுல ஒரு துணுக்கம் இருக்கும்னு தான நீங்க ரெண்டு பேரும் யோசிக்கறீங்க? அதுவே நீ வேற ஒரு பொண்ண பாக்க, அப்பா அம்மாவோட வந்தேன்னு சொன்னீன்னு வச்சுக்கோ, அப்பாடா! இவனோட இலக்கு நம்ம பொண்ணு இல்லைன்னு செக்யூர்டா ஃபீல் பண்ணுவாங்க…இவங்கிட்ட தைரியமா பேசலாம்னு அவங்களும் நினைப்பாங்க…”///


ராஜ தந்திரம் நல்லாத்தான் இருக்கு :)

ஆயில்யன் said...

//காதல்…சொன்னாலும், சொல்லாவிட்டாலும், ஏற்கப்பட்டாலும், ஏற்கப்படாவிட்டாலும்,தோற்றாலும், ஜெயித்தாலும், அது எந்த ரூபத்தில் இருந்தாலும் ஒரு பேரவஸ்த்தை தான்…ஆனால் வாழ்வில் ஒரு முறையேனும் அனுபவிக்க வேண்டிய பேரவஸ்த்தை!!!//

ரைட்டு!

ஆயில்யன் said...

//ஒரு நிராகரிக்கப்பட்ட காதலன், என்னிக்குமே அதே அன்போட தான் இருப்பான்…”
//

”நச்” வரிகள்

ஆயில்யன் said...

கடைசி டுவிஸ்ட் எதிர்ப்பார்க்கல!

பட் இதெல்லாம் இந்தளவுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்துமா? அதுலேர்ந்து எப்படி மலரை மீட்டெடுக்கிறது இப்படியான விசயமெல்லாம் உங்க அடுத்த பாகத்துல தான் பாக்கணும் ஸோ வெயிட்டீங்க :)

Ramya Ramani said...

ஹல்லோ கலக்கறீங்க..சூப்பரு,,,

Expecting to read the next part sooner

தாரணி பிரியா said...

அப்பாடா இந்த தடவை கொஞ்சம் பெரிசா எழுதி இருக்கிங்க திவ்யா நன்றி

டி.ஆர்.நடை நல்லா இருக்கே. டயலாக்ஸ் இயல்பா இருக்கு. ம் வினோத்தோட டயலாக்ஸ் ரொம்ப நல்லா இருக்கு. இனி அடுத்த புதன் வரைக்கும் வெயிட் செய்யணுமா இதுதான் கொடுமை திவ்யா :)

தாரணி பிரியா said...

25வது கமெண்ட் போட்டா அடுத்த பாகத்தை மெயில்ல அனுப்புவிங்களாமே நிஜமா திவ்யா :)

Divya said...

unexpected twist Divyapriya:))

kathai supera poitiruku......thodarunga!

Unknown said...

super dialogues akka. enakku irukara few very entertainments la unga blog stories ku thaan first place :)

Karthik said...

sema .. sema.. surprise! i didnt expect it. :)

the frendz kalaikkira part is superb. :)))

Karthik said...

next part a konjam seekiram potunga plz.

புதியவன் said...

//யாசரை செல்லமாய் பழமண்டி, அல்லது அதன் சுருக்கம் மண்டி என்று தான் அழைப்போம்//

இந்த மாதிரி செல்லப் பேரு வைக்கிறதில நீங்க பெரிய ஆள் தான் போல...

புதியவன் said...

// நீ வேற ஒரு பொண்ண பாக்க, அப்பா அம்மாவோட வந்தேன்னு சொன்னீன்னு வச்சுக்கோ, அப்பாடா! இவனோட இலக்கு நம்ம பொண்ணு இல்லைன்னு செக்யூர்டா ஃபீல் பண்ணுவாங்க…//

நல்ல ராஜதந்திரம் தான்...எப்படிங்க இப்படியெல்லாம்...?

புதியவன் said...

//உன்னிடம் தொலைந்தது என் மதி
அதற்கு காரணம் என் விதியா?
இல்லை, நீ செய்த சதியா?

உன்னிடம் காதல் பாடம் ஓதி,
ஆகிவிட்டேன் காதல் கைதி,
இனி என்னவாகுமோ என் கதி?//

ஹா...T.R படம் பார்த்த மாதிரி இருக்கு...

புதியவன் said...

//காதல்…சொன்னாலும், சொல்லாவிட்டாலும், ஏற்கப்பட்டாலும், ஏற்கப்படாவிட்டாலும்,தோற்றாலும், ஜெயித்தாலும், அது எந்த ரூபத்தில் இருந்தாலும் ஒரு பேரவஸ்த்தை தான்…ஆனால் வாழ்வில் ஒரு முறையேனும் அனுபவிக்க வேண்டிய பேரவஸ்த்தை!!!//

மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை...

புதியவன் said...

//உன் பிரிவு கொடுக்கும் வலியையும் மிஞ்சுகிறதடி உன் மெளனம்…//

அருமை...

புதியவன் said...

//ஒரு காதலன், பின்னாடி அன்புக் கணவனா மாறி, காலப்போக்குல ஒரு சராசரி கணவனா கூட மாறிடுவான்….ஆனா, ஒரு நிராகரிக்கப்பட்ட காதலன், என்னிக்குமே அதே அன்போட தான் இருப்பான்…”//

நச்...வரிகள்...

புதியவன் said...

எதிர் பார்க்காத திருப்பத்தோட இந்த பகுதிய முடிச்சிருக்கீங்க...கதையின் அடுத்த (கடைசி...?) பகுதிக்காக வெயிட்டிங்...

Vijay said...

I am going to hack your PC and get the full story right now. Just can't bear the suspense :-)

anand said...

Hi DP, I cannot just mention a line...each n every line is touching..Really Hats Off.keep up the gud work...waiting for the next part...
kathai Padithaen..pala padi thaen..

Unknown said...

enna serious aaiduchu katha..

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
சுபானு said...

இன்றுதான் படிக்கக்கிடைத்தது.. நல்லாயிருக்கு.. :)

Divyapriya said...
This comment has been removed by the author.
வெட்டிப்பயல் said...

when is the next part?

Divyapriya said...

வெட்டிப்பயல் said...
//when is the next part?//

naalaikku idhe time naa...vandhu padichidunga :)) next part is the final part, adha indha partla poda marandhutten

மேவி... said...

romba feeling ah irukku