பாகம் – 4 (கொடைக்காணல்)
பாகம் 1, பாகம் 2, பாகம் 3
வினோத், கேலி கிண்டல் எதுவும் இல்லாமல், அர்த்ததுடன் பேசுவது ஒரு சில தருணங்களில் தான். அதை கூட நான் சட்டை செய்யாமல், கிளம்பலாம் என்று சொல்லவும், அவனுக்கு கோபம் தலைக்கேறியது…
“என்னது? போய் பேச மாட்டியா? போடா ஆ….வாய்ல நல்லா வருது…”
“இல்லடா…அதான் அன்னிக்கே தெளிவா சொல்லிட்டாளே…மறுபடியும் மறுபடியும் போய் அவள தொந்தரவு பண்றது அநாகரீகம்…”
“பெரிய இவன்!!! தினமும் தூக்கத்துல மலர் மலர் னு உளர்றது மட்டும் ரொம்ப நாகரிகமாக்கும்?”
’என்னது? நான் அப்படியா உளர்னேன்? கண்டிப்பா இந்த பாவிப்பயல் எப்பயும் போல பொய் தான் சொல்றான்.’ என்று நினைத்துக் கொண்டாலும் இன்னொரு முறை கேட்டு அதை உண்மையென்று ஊர்ஜிதம் செய்ய விரும்பாமல், திடமான குரலில், “முடியாது டா…என்னால இன்னொரு தடவை எல்லாம் போய் பேச முடியாது! இது நானா சொல்லல, எங்கப்பா அன்னிக்கு சொன்னத தான் சொல்றேன்…”
“உங்கப்பாவா? என்ன டா புதுக் கதை?”
“அந்த பொண்ணுக்கு இஷ்டமில்லைன்னா, நீ அதுக்கு மேல அவள எந்த விதத்திலையும் தொந்தரவு பண்ணக் கூடாதுன்னு அப்பா சொன்னாரு…எனக்கும் கூட அது தான் சரின்னு படுது…”
“உங்கப்பா சொன்னது நூத்துக்கு நூறு உண்மை…ஒத்துக்கறேன்…இஷ்டமில்லாத பொண்ண தொந்தரவு பண்ணக் கூடாது தான்…ஆனா, அவ உன்னை விரும்பறா டா, வெளிய சொல்லாம மறைக்குறா…”
“பாப்பா! எப்படிடா அவ்ளோ உறுதியா சொல்ற?”
“எத்தன தடவை சொல்றது? என்னை நம்ப மாட்டியா? அவ எதுக்கு உன்னை பாத்ததும், இப்படி எல்லாத்தையும் பறிகுடுத்த மாதிரி அழுகனும்? சொல்லு…”
“ஆமால்ல…எதுக்கு அழுகனும்?”
“போடா மடையா! இது கூட புரியலையா? அன்னிக்கு ஏதோ சூழ்நிலை, இல்ல ஈகோ…நீ கேட்ட உடனே வேண்டாம்னு பிகு பண்ணிட்டு, அதுக்கப்புறம் அத நினைச்சு நினைச்சு ஃபீல் பண்றா…இந்த பொண்ணுகளே இப்படி தான் மச்சான்…சரியான தில்லாலங்கடிக…லேசுல ஒத்துக்கமாட்டாங்க…அப்புறமா நினைச்சு உருகுவாங்க…சும்மாவா சொன்னாங்க பெண் புத்தி பின் புத்தின்னு?”
“நீ வேற என்னை போட்டு குழப்பாத…அவ அழுதத நீ நிஜமாவே பாத்தியா?” மூன்றாம் முறையாய் அதே விஷயத்தை சொல்ல விருப்பமில்லாமல், வினோத் அமைதியாக நின்று கொண்திருந்தான்.
அப்பா சொன்னதை எல்லாம் மழுங்கடிக்க செய்து விட்டது, எனக்குள் மீண்டும் ஆக்கிரமிக்க துவங்கிய காதல் சாத்தான். தலையை தொங்கப் போட்டுக் கொண்டு, “இப்ப என்னடா பண்றது?” என்றேன்.
“அப்படி வா வழிக்கு…ஒரு பொண்ணு நம்மள உயிருக்கு உயிரா காதலிக்குறா…ஆனா, அத வெளிய சொல்லாம மறைக்குறான்னா என்ன தெரியுமா பண்ணனும்?”
“என்ன பண்ணனும்?”
“சொல்லுவேன்…ஆனா, சொன்னா திட்டுவ…” என்று அவன் இழுக்க,
“நான் எப்படா உன்னை திட்டியிருக்கேன்?” மனசாட்சியை தூரப் போட்டு விட்டு புளுகினேன்.
“சரி…கேளு! அவ எதிர்பாக்காதப்ப சடார்ன்னு அவள இழுத்து, அப்படியே நச்சுன்னு ஒரு …”
“டேய்ய்ய்ய்!” இவனை பாவிப்பயல் என்று சொல்வது மிக மிகத் தவறு. படுபாவிப்பயல்!!!
“அடச்சே…எங்கிருந்துடா உனக்கு இந்த மாதிரி ஐடியாவெல்லாம் கிடைக்குது?”
“ஹீ…ஹீ…இந்த ரமணி சந்திரன்* புத்தகத்தில எல்லாம் இப்படி தான்டா வரும்” தலையை சொறிந்த படி, சிரித்துக் கொண்டே சொன்னான்.
“ரமணி சந்திரனா? இந்த பொண்ணுங்கெல்லாம் படிப்பாங்களே? அதைப் போய் நீ எங்கடா படிச்ச?”
“எங்கம்மா படிப்பாங்க…அப்படியே நானும் கொஞ்சம் கொஞ்சம்…”
“டேய்…நடக்கற மாதிரி எதாவது யோசனை சொல்லுடான்னா…”
“வேற எதுவும் வழி இல்ல, நீயா நேர்ல போய் பேச வேண்டியது தான்…”
“ம்ம்…ஆமா…நீ சொல்றதும் சரி தான்…அவகிட்ட போய் பேசத் தான் போறேன்…ஆனா, இதப் பத்தி இல்ல…அதுக்கு முன்னாடி வேற ஒரு முக்கியமான விஷயம் பேசனும்…”
அப்போதே மணி எட்டாகியிருந்ததால், அன்றிரவு அங்கேயே தங்கி, நாளையே அவளை சந்தித்து பேசி விடுவது என்ற ஒரு முடிவோடு கடையின் வாசலை நோக்கி வேகமாக நடக்கத் துவங்கினேன். என் பின்னாலேயே வந்த வினோத்,
கையில் வைத்திருந்த கவிதை புத்தகத்துடனே நான் கடையின் வாசலை நோக்கி நடக்க முற்படவும், வினோத், “டேய்…அந்த புக்க வச்சுட்டு வாடா…”
“இத வாங்கப் போறேன்…”
“ரொம்ம்ம்ப முக்கியம் இப்ப!!!”
வினோத்தும் மற்ற நண்பர்களும் உடனே பேருந்தை பிடிக்க கிளம்ப வேண்டும் என்பதால், வேகமாய் வண்டியை கிளப்பினேன். நான் ஓட்டிக் கொண்டிருக்க, வினோத் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டு அந்த புத்தகத்தில் இருந்த கவிதைகளை கிண்டலடித்துக் கொண்டே வந்தான்.
மனதிற்குள் நினைத்துக் கொண்டேன், ’நானும் காதல் வர வரைக்கும் இப்படி தான்டா இருந்தேன்!!! ம்ம்ம்…என்ன பண்றது? அவ ஒரு சதிகாரி!!!’ சோகத்துடன் கூடிய ஒரு புன்னகை மலர்ந்தது…
“மச்சான்ன்!!! இங்க பாருடா…சிச்சுவேஷன் கவிதை!!!”
“என்னது?”
“படிக்கறேன்…கேளு…”
உன்னைப் பார்த்ததும்,
உள்ளத்தில் ஊற்றெடுத்த
உணர்ச்சிகளை ஊமையாக்கி,
நடிக்கத் தான் நினைத்திருந்தேன்…
என்றாலும்,
கன்னத்துப் பரப்பில்,
உண்மை ஊற்றாய் வெளிப்பட்டது
கண்ணீர் கவிதைகளாய்!
அதற்குள் நாங்கள் தங்கியிருந்த அறை வந்துவிட, "யாரோ, யாரையோ நினைச்சு எழுதினது கூட நமக்கே நமக்காக எழுதின மாதிரி பொருத்தமா இருக்கே...ஹ்ம்ம்...அது தான்டா காதல்!!!"
"முடியலடா பாப்பா...கொஞ்சம் மொக்கைய போடாம சீக்கரம் கிளம்பு!"
******
சோகமே வடிவாய் அமைதியாய் வரப் போகிறாள் என்று நினைத்த எனக்கு பெருத்த ஏமாற்றமே பரிசாக கிடைத்தது. நான்கைந்து பள்ளிக் குழந்தைகளுடன் குதூகலமாய் பேசிச் சிரித்த படி பேருந்தை நோக்கி வந்து கொண்டிருந்தாள் மலர். பேருந்தின் அருகே நான் காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், அவள் முகத்திலிருந்த சிரிப்பு உடனே மாயமாய் மறைந்தது, அல்லது மறைக்கப்பட்டது. இவனுக்கு இவ்வளவு போதும் என்று அளந்து வைத்ததை போல் ஒரு சிறு புன்னகையை இதழ்களில் தவழ விட்டாள். அலுவலகத்தில் வழக்கமாக அவள் என்னை பார்க்கும் போது சிரிக்கும் அளவிலிருந்து, பல சென்டிமீட்டர்களை அன்று குறைத்திருந்தாள். இந்த வினோத் சொன்னது தப்பே இல்லை, ஒரு நொடிக்குள் எத்தனை வித முகபாவங்கள், எத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தன் மனதை வேறொருவர் அறியவே முடியாதபடி? சரியான தில்லாங்கடிகள் தான் இந்த பெண்கள்!
“என்ன சுரேன், இந்த பக்கம்? தெரிஞ்சவங்க யாராச்சும் படிக்கறாங்களா?” அப்பாவியைப் போல் அவள் கேட்கவும்,
‘ஹூம்…நம்ம ரெண்டு பேருக்கும் பிறக்க போற குழந்தைக்கு அட்மிஷன் வாங்க வந்தேன்!!!’ எரிச்சலில் வாய் வரைக்கும் வந்த வார்த்தைகளை சிரமப்பட்டு அடக்கினேன்.
“உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் மலர்…”
“அச்சோ! பஸ் இன்னும் ஐஞ்சு நிமிஷத்துல எடுத்துருவாங்களே…”
“அப்ப உங்க வீட்டு விலாசம் குடுங்க…அங்க வரேன்…”
இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காததால், என்ன சொல்வதென்று தெரியாமல் அவள் அமைதி காக்கவும், “மலர்! நான் என்னை பத்தியோ, என்னோட உணர்வுகள பத்தியோ பேச வரலை…உங்கள பத்தி தான் பேச வந்திருக்கேன்…உங்கள இவ்வளவு நாள் தெரிஞ்ச ஒரு நண்பன்ங்கற முறையில…தயவு செய்து ஒரு பத்து நிமிஷம் எங்கயாவது உக்காந்து பேசலாம்…அந்த அளவுக்கு கூட என்னை நீங்க மதிக்கலைன்னா சொல்லிடுங்க, இப்பயே போய்டுறேன்…”
“இங்க பக்கத்துல பார்க் இருக்கு…அங்க போலாம்…”
பூங்காவை நோக்கி மெல்ல நடை பயின்ற அந்த ஐந்து நிமிடங்களில், வழி நெடுகிலும் கொட்டிக் கிடந்த காய்ந்து சருகுகளை எங்கள் பாதங்கள் கலைத்ததால் ஏற்பட்ட சத்தத்தை தவிர, வேறு சத்தமே அங்கு எழவில்லை. என் இதயம் ’தடக், தடக்’ என்று அடித்துக் கொண்ட சத்தம் வெளியே கேட்டிருக்கக் கூடும். ஆனால் அவள் தான் என் உணர்வுகளை புரிந்து கொள்ள விரும்பாத அழுத்தக்காரியாயிற்றே? அதனால், அவள் என் இதயம் துடிக்கும் சத்தம் கேட்டும், கேளாததை போல் நடித்துக் கொண்டிருந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.
ஜோடியாய் வந்தும் முகத்தில் இருக்கத்துடன், எதுவும் பேசாமலேயே பூங்காவிற்குள் நுழைந்த எங்களை பார்த்து, அங்கிருந்த காதல் பறவைகள் “கீ…கீ…” என கூச்சலிட்டு எங்களை பரிகாசம் செய்தன.
“சொல்லுங்க சுரேன்… திங்கட்கிழமை அதுவுமா இங்க என்ன பண்றீங்க? ஆஃபிஸ் போகல? அப்படி என்ன முக்கியமான வேலை?”
“ஆமா…முக்கியமான வேலை தான்…நான் ஒருத்தங்க மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருந்தேன்…அவங்க ரொம்ப புத்திசாலின்னு நினைச்சேன்…என்னை மதிக்கறாங்கன்னும் நினைச்சேன்…”
“சுரேன்! Stop it! சுத்தி வளைக்காம நேரா விஷயத்துக்கு வாங்க…”
“சரி…நல்லது…இப்ப சொல்லுங்க…எதுக்காக திடீர்ன்னு ஒரு ஸ்கூல்ல வந்து வேலை பாத்துட்டு இருக்கீங்க? நான் என்னவோ நீங்க சென்னையிலேயே வீட்ல இருந்த படி எதாவது ஒரு நல்ல கம்பனில வேலை பாத்துட்டு இருப்பீங்கன்னு நினைச்சேன்…அன்னிக்கு அனூப் கிட்ட மீட்டிங்குல கூட அப்படி தான சொன்னீங்க?”
“ஏன் ஸ்கூல்ல வேலை பாக்குறதுல என்ன கேவலம்?”
“நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்ல…இவ்ளோ நாள் வேலை செஞ்ச பெங்களூரையும் விட்டுட்டு, அப்பா அம்மா இருக்குற சென்னையையும் விட்டுட்டு, எதுக்காக இந்த ஊர்ல வந்து, உங்க படிப்புக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லா…”
“சுரேன்! போதும்…”
“முடியாது மலர்…என்ன காரணம்னு நீங்க சொல்லாம நான் இங்கிருந்து போக மாட்டேன்…எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா? என்னால தான் நீங்க வேலையை விட்டுட்டு போனீங்கன்னு எனக்கு தெரியும்…ஆனா, நீங்க….இங்க வந்து…இப்படி தனியா? என்னால முடியல மலர்…முடியல…ஊருக்கு கூட போகாம உங்ககிட்ட பேசனும்னு தான் இங்கயே இருக்கேன்….எனக்கு நேத்திக்கெல்லாம் தூக்கமே வரலை… என் மேல இருக்கற கோவத்துல நீங்க இப்படி அதிரடியான முடிவு எடுப்பீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கலை…”
“நீங்க தப்பா நினைச்சிட்டு இருக்கீங்க…உண்மையை சொல்லனும்னா, எனக்கு உங்க மேல எந்த கோவமும் இல்ல…இந்த முடிவு நான் யோசிச்சு எடுத்தது தான், எந்த கோபத்திலையும் எடுக்கல…” ஆனால் இப்படி சொல்லும் போது கூட அவள் கண்களில், கோபமும், சோகமும் ஒரு சேர மிண்ணியதைப் போல உணர்ந்தேன்.
“மலர் ப்ளீஸ்…என்னை நீங்க ஒரு பர்சென்டாவது உங்க நண்பனா…இல்ல…மனுஷனா மதிச்சீங்கன்னா சொல்லுங்க…”
அவள் இதழ்களோடு சேர்த்து இம்முறை அவள் கலங்கிய விழிகளும் பேசின,
“எங்கிட்ட எதுவும் கேக்காதீங்க சுரேன்…ப்ளீஸ்…போய்டுங்க…”
அவள் கண்கலங்குவதை பார்க்க சக்தியற்று அந்த இடத்தை விட்டு எழுந்தபடி, “போறேன் மலர்…போறேன்…இங்கயே இருந்து உங்கள தொந்தரவு பண்ண மாட்டேன்…ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்…நீங்க எவ்ளோ துன்பப் படறீங்களோ அதை விட பல மடங்கு அதிகமா, உங்களோட இந்த நிலைக்கு நான் தான் காரணமோன்னு நினைச்சு நினைச்சு துன்பப் படுவேன்னு மட்டும் மறந்துடாதீங்க…” வேகமாக எட்டு வைத்து நடக்கத் துவங்கிய என் கைகளைப் இறுகப் பற்றினாள். அந்த முதல் தீண்டலை ரசித்து இன்புறும் மனநிலையில் கூட அப்போது நான் இல்லை.
“சுரேன்! ப்ளீஸ்…புரிஞ்சிக்கோங்க…எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல…எனக்கு உங்க மேல இப்ப மட்டும் இல்ல, எப்பயுமே எந்த கோவமும் இருந்ததில்லை. உங்கள நான் ஒரு நல்ல நண்பரா தான் இப்பயும் நினைக்கறேன்…நீங்களா என்னோட பேசாம இருந்தப்ப கூட, உங்க விருப்பம் அது தான்னு நினைச்சு தான் நானும் விலகிக் போனேன்…இப்ப நான் இங்க வந்து இருக்கறதுக்கும் உங்களுக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை…”
இன்னும் என்னை பற்றிக்கொன்டிருந்த அவளுடைய கரங்களை மெல்ல விலக்கினேன், “சரி…நான் காரணமில்லை, சந்தோஷம்…ஆனா, என்ன காரணம்னு சொல்லுங்க மலர்!”
“பர்சனல்” என்றாள் எங்கோ வெறித்தபடி.
அப்போது அவளின் முகவாட்டத்தை பார்த்ததும், அன்று அவள் இதே போல் இருந்த போது, அவளுடைய தந்தை அதை அரை நொடியில் கண்டு கொண்டு, அவள் தலை வருடியது சட்டென்று நினைவுக்கு வந்தது. “சரி…எங்கிட்ட சொல்ல வேண்டாம்…அட்லீஸ்ட் உங்க அம்மா அப்பாகிட்டயாது சொன்னீங்களா, இல்லையா?”
அருவி போல் மாறிவிடும் அபாயம் அவள் கண்களில் தெரியவே, சின்னக் குழந்தையிடம் சொல்வது போல், “மலர் தான் அப்பா கிட்ட ரொம்ப க்ளோஸ் ஆச்சே? அப்பாகிட்டையாவது பேசலாமே…” என்றேன்.
உடனே கைகளால் முகத்தை மூடிக் கொண்டு பெருங்குரலெடுத்து கதறி அழத் துவங்கினாள்.
அவளை அப்படியே வாரி, என் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு,
’உன் கண்ணீர் துளிகள் ஈட்டியாய் என் இதயத்தை குத்திக் கிழிக்கும் சத்தத்தை முதலில் கேளடி! அதற்கு பின் அழுது கொள்ளலாம்…’
என்று சொல்லத் தோன்றியும், அதை செயலில் காட்ட முடியாத நாகரீகக் கோழையாய், அவள் அவ்வாறு அழுவதை அதற்கு மேலும் சகித்துக் கொள்ளும் சக்தியற்று, அக்கணமே கனத்த இதயத்துடன் அவ்விடத்தை விட்டு அகன்றேன்.
[தொடரும்]
ரமணி சந்திரன் fans கோவிச்சுக்காதீங்க…இது சும்மா காமடி தான் :)
40 comments:
Me the firstaa?
As usual...
சூப்பரா போகுது கதை :-)
thanks for quick post Will read and comment :)
’உன் கண்ணீர் துளிகள் ஈட்டியாய் என் இதயத்தை குத்திக் கிழிக்கும் சத்தத்தை முதலில் கேளடி! அதற்கு பின் அழுது கொள்ளலாம்…’
என்று சொல்லத் தோன்றியும், அதை செயலில் காட்ட முடியாத நாகரீகக் கோழையாய்,
Alaga solli irukeenga
மனதிற்குள் நினைத்துக் கொண்டேன், ’நானும் காதல் வர வரைக்கும் இப்படி தான்டா இருந்தேன்!!! ம்ம்ம்…என்ன பண்றது? அவ ஒரு சதிகாரி!!!’ சோகத்துடன் கூடிய ஒரு புன்னகை மலர்ந்தது…
unmainga unmai....ethana punnagai parthuttom :)
அவள் முகத்திலிருந்த சிரிப்பு உடனே மாயமாய் மறைந்தது, அல்லது மறைக்கப்பட்டது. இவனுக்கு இவ்வளவு போதும் என்று அளந்து வைத்ததை போல் ஒரு சிறு புன்னகையை இதழ்களில் தவழ விட்டாள். அலுவலகத்தில் வழக்கமாக அவள் என்னை பார்க்கும் போது சிரிக்கும் அளவிலிருந்து, பல சென்டிமீட்டர்களை அன்று குறைத்திருந்தாள். இந்த வினோத் சொன்னது தப்பே இல்லை, ஒரு நொடிக்குள் எத்தனை வித முகபாவங்கள், எத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தன் மனதை வேறொருவர் அறியவே முடியாதபடி? சரியான தில்லாங்கடிகள் தான் இந்த பெண்கள்!
itheye naanga sonna magalir kalagam sandaikku vandhurukkum Ponnu manasu ponnuku thaan theriyumnu prove pannureenga
கதை அருமையாக போகுது...
" இந்த பொண்ணுகளே இப்படி தான் மச்சான்…சரியான தில்லாலங்கடிக…"
அப்படியா DP ?.. :) :)
// அவள் முகத்திலிருந்த சிரிப்பு உடனே மாயமாய் மறைந்தது, அல்லது மறைக்கப்பட்டது. இவனுக்கு இவ்வளவு போதும் என்று அளந்து வைத்ததை போல் ஒரு சிறு புன்னகையை இதழ்களில் தவழ விட்டாள். அலுவலகத்தில் வழக்கமாக அவள் என்னை பார்க்கும் போது சிரிக்கும் அளவிலிருந்து, பல சென்டிமீட்டர்களை அன்று குறைத்திருந்தாள்.//
சான்ஸே இல்லை...கலக்கீட்டீங்க ! ...பக்கா...
// என் இதயம் ’தடக், தடக்’ என்று அடித்துக் கொண்ட சத்தம் வெளியே கேட்டிருக்கக் கூடும்.//
மிகைப்படித்தி சொல்லுவதாக நினைக்கவேண்டாலம்..உண்மையில் இந்த வரிகளை படித்த போது.. இதயத்தில்..தட்க் தடக்..
நீங்கள் எழுதிய கவிதைகள் எல்லாம் தொகுத்து வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்..பின்னாடி புத்தகமா போடலாம்..
அசத்தீறீங்க DP..
//பூங்காவை நோக்கி மெல்ல நடை பயின்ற அந்த ஐந்து நிமிடங்களில், வழி நெடுகிலும் கொட்டிக் கிடந்த காய்ந்து சருகுகளை எங்கள் பாதங்கள் கலைத்ததால் ஏற்பட்ட சத்தத்தை தவிர, வேறு சத்தமே அங்கு எழவில்லை.//
ஆஹா...visualஆ வேற போட்டு தாக்குறீங்க! சூப்பர் :)
//வேகமாக எட்டு வைத்து நடக்கத் துவங்கிய என் கைகளைப் இறுகப் பற்றினாள்.//
யாருப்பா அங்க...ஒரு backgrd theme music ஒன்னு போடுங்க:)
4த் கியர் போட்டு டாப்ல தூக்குவீங்கனு பார்த்தா செண்டிமெண்ட்ல தாக்கிட்டீங்க!
//சரி…எங்கிட்ட சொல்ல வேண்டாம்…அட்லீஸ்ட் உங்க அம்மா அப்பாகிட்டயாது சொன்னீங்களா, இல்லையா?”
//
சிச்சுவேஷனுக்கேத்த கரெக்டான கொஸ்டீன் ! பாவம் மலர் மனசுல என்னா இருக்கோ...?
வெயிட் பண்றோம்....!
// Thamizhmaangani said...
//வேகமாக எட்டு வைத்து நடக்கத் துவங்கிய என் கைகளைப் இறுகப் பற்றினாள்.//
யாருப்பா அங்க...ஒரு backgrd theme music ஒன்னு போடுங்க:)
///
தானே தானனே தானாஆஆஆஆஆஆஆ
(பாஸ் ஒ.கேவா கண்டினியூ பண்ணட்டுமா...?!)
:))))))))))
\\இந்த பொண்ணுகளே இப்படி தான் மச்சான்…சரியான தில்லாலங்கடிக\\
ஹா ஹா ஹா
என்ன திவ்யா ...
சரி சரி சில நேரங்கள்ல உண் ...
\\உன்னைப் பார்த்ததும்,
உள்ளத்தில் ஊற்றெடுத்த
உணர்ச்சிகளை ஊமையாக்கி,
நடிக்கத் தான் நினைத்திருந்தேன்…
என்றாலும்,
கன்னத்துப் பரப்பில்,
உண்மை ஊற்றாய் வெளிப்பட்டது
கண்ணீர் கவிதைகளாய்!\\
அழகான கவிதை.
துள்ளல் இருக்கின்றது
காதலில் துடிப்பு இருக்கின்றது
மிக அருமையாக போகின்றது
-------------------------
காதலை ஏனோ சொல்லாமல் தவிப்பது போல் தெரிகிறது.
கலக்கல்ஸ் திவ்யா..
//இது நானா சொல்லல, எங்கப்பா அன்னிக்கு சொன்னத தான் சொல்றேன்…”//
எனக்கு ஞாபகமறதி அதிகமாயிருச்சுன்னு நினைக்கிறேன்.. சுரேன் அப்பா பாத்திரமே மறந்து விட்டது.. :)
// தினமும் தூக்கத்துல மலர் மலர் னு உளர்றது மட்டும் ரொம்ப நாகரிகமாக்கும்?”//
கி கி கி.. காதல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..
//திங்கட்கிழமை அதுவுமா இங்க என்ன பண்றீங்க? ஆஃபிஸ் போகல? அப்படி என்ன முக்கியமான வேலை?”//
ரொம்பத்தான்..
முக்கியமான கேள்வி.. அடுத்த வாரமாவது மலரின் மெளனம் கலையுமா ?
கதை அருமையா போய்ட்டிருக்கு திவ்யப்ரியா.....தொடருங்கள்:))
\உன் கண்ணீர் துளிகள் ஈட்டியாய் என் இதயத்தை குத்திக் கிழிக்கும் சத்தத்தை முதலில் கேளடி! அதற்கு பின் அழுது கொள்ளலாம்…’\
நச்சுன்னு இருக்கு வரிகள்...!
இந்த பாகத்தைப் படிச்சு முடிச்சுட்டு ஆஆஆஆன்னு கத்தணும் போல இருக்கு. பின்ன எவ்வளவு தான் சஸ்பென்ஸ் தாங்கறது???
loe storyla suspensea...kalakreenga dp...oodala oru kavithai topppuu...kalakunga..as usual top 20la edam kedaikala :(
நல்லா போகுது.. ஆனா இந்த பாகத்துல ஏதோ கொறஞ்ச மாதிரி ஒரு ஃபீல்...
azhavechiteenga :(((
//உன்னைப் பார்த்ததும்,
உள்ளத்தில் ஊற்றெடுத்த
உணர்ச்சிகளை ஊமையாக்கி,
நடிக்கத் தான் நினைத்திருந்தேன்…
என்றாலும்,
கன்னத்துப் பரப்பில்,
உண்மை ஊற்றாய் வெளிப்பட்டது
கண்ணீர் கவிதைகளாய்!//
இந்த கண்ணீர் கவிதை அருமை...
//‘ஹூம்…நம்ம ரெண்டு பேருக்கும் பிறக்க போற குழந்தைக்கு அட்மிஷன் வாங்க வந்தேன்!!!’ எரிச்சலில் வாய் வரைக்கும் வந்த வார்த்தைகளை சிரமப்பட்டு அடக்கினேன்.//
மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை...
//உன் கண்ணீர் துளிகள் ஈட்டியாய் என் இதயத்தை குத்திக் கிழிக்கும் சத்தத்தை முதலில் கேளடி! அதற்கு பின் அழுது கொள்ளலாம்…’//
அருமை...
கதையின் அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்...
வாவ், பின்ரீங்க. சூப்பர்ப்பா போகுதுங்க. லென் த்தை பீல் பண்ணவே இல்லை. :)
:) ;( :D :P =)) ;) :(
அக்கா... என் மேல எதாவது கோவம்னா சொல்லிடுங்க.. நான் வேணா தொடர்கத கூட எழுதுறேன்.. ஏன் இப்டி ஒரு எழுத்தில் கமெண்ட்?? அவ்வ்வ்வ் :( நான் உங்க கிட்ட இருந்து நிறய எதிர்பாக்குறேன்.. உன் ப்ளாக்க விசிட் பண்றதே பெர்சு.. போடானு உங்க உள்மனசின் குரல் எனக்கு கேக்குது.. நேக்ஸ்ட் மீட் பண்றேன்
//“என்னது? போய் பேச மாட்டியா? போடா ஆ….வாய்ல நல்லா வருது…”//
nalla varudu thaane.. aprom en solla maatengireenga???
//சரி…கேளு! அவ எதிர்பாக்காதப்ப சடார்ன்னு அவள இழுத்து, அப்படியே நச்சுன்னு ஒரு …”//
iccc nu onnu koutha aprom anda ponnu nach nu onnu koduppa.. thevaiya??
//சரியான தில்லாங்கடிகள் தான் இந்த பெண்கள்!//
deivame deivame.. nandri solven theivame...
To be frank... You are damn good in story writing.. each and every line made me smile.. made me laugh.. made me cry... pala thadava repeat pottu izaiththa kavithai maathiri... sema kalakkals...
//நாகரீகக் கோழையாய்//
Italic in this particular words... impressive...
I guessed a climax.. lets see.. if it matches :))
இதுவரை இந்த கதைக்கு பின்னூட்டம் போடவில்லை என்பதால், படிக்கவில்லை என்று கொள்ள கூடாது.. படிச்சிட்டு தான் இருக்கேன்..
இந்த கதை செம விறுவிறுப்பா போகுது.. டயலாக்ஸ் எல்லாம் சூப்பர்..
:)
அப்பறம்.. அந்த ரெண்டு புள்ளைங்களையும் ஒழுங்கு மருவாதையா சேர்த்து வைக்கவும்.. இந்த கதையில், காதல் தோல்வியடைந்தால், வீட்டிற்கு ஆட்டோ அனுப்பப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்..
இப்படிக்கு
காதலில் தோல்வியை வெறுக்கும் சங்கம்..
அடுத்த பகுதியை உடனே வெளியிடவும்..
\\Blogger விஜய் said...
இந்த பாகத்தைப் படிச்சு முடிச்சுட்டு ஆஆஆஆன்னு கத்தணும் போல இருக்கு. பின்ன எவ்வளவு தான் சஸ்பென்ஸ் தாங்கறது???\\
Exactly DP You are really proving that you have become a successful story writer :) !Kudos and expecting more
"விஜய் said...
இந்த பாகத்தைப் படிச்சு முடிச்சுட்டு ஆஆஆஆன்னு கத்தணும் போல இருக்கு. பின்ன எவ்வளவு தான் சஸ்பென்ஸ் தாங்கறது???"
periya repeat.....
satyama suspense thanga mudiyavillai
intha kadhaiyil irunthu naan notes niraiya yethu irukkiren....
ethunnu ketkathinga....
enakku shy shy aa irukku
valakkam pol kalakkal thaanunga
me th 40th
Post a Comment