கற்பனைச் சுமைகள் – 1
சில்லென்ற ஓர் மழைநாளில்,
உன் கையோடு கை கோர்த்து நடந்த
அந்த மாலை பொழுதின் நினைவுகள்…
உன் சட்டையில் முகம் புதைத்து,
ஈரத்தோடு சேர்த்து காதலையும் உள்வாங்கிக் கொண்ட
அந்த ஈரமான நிமிடங்கள்…
காதலோடு கலந்திட்ட உன் மூச்சுக்காற்று என் மேல் மோத,
என்னையே நான் மறந்த
அந்த ரம்யமான நொடிகள்…
நான் விலகி ஓட,
நீ பிடித்து உடைந்து, சொர்கம் புகுந்த,
என் கண்ணாடி வளைத் துண்டுகள்…
இப்படி ஆயிரம் ஆயிரம் கற்பனைகளையும்,
உன்னோடு சேர்த்து சுமந்து கொண்டு தான் இருக்கிறேன்…
உன்னை நினைவில் சுமந்த நாள் முதலாய்…
கற்பனைச் சுமைகள் – 2
உன் தோள் பற்றி என் உள்ளங்கை கனிந்திருக்க,
உன் முதுகோடு என் கன்னம் கதை பேச,
என் ஈரக் கூந்தல் காற்றில அலைபாய,
அதற்கு போட்டியாய் என் மனமும் அலைபாய,
உன்னை விட்டு விலக எச்சரித்த வெட்கம் அகல,
நம்மிடையே புக முடியாத காற்றைப் பார்த்து சிரித்தபடி,
உன்னோடு பின்னிருக்கையில் அமர்ந்து பயணிக்க,
அனுதினமும் நான் ஏங்கும் ஏக்கம்,
உன் வண்டிக்கு கூட தெரிந்திருக்கிறது
அதில் தினமும் பயணிக்கும் உனக்கு இன்னுமா புரியவில்லை?
கற்பனைச் சுமைகள் – 3
ஆற்றங்கரையின் மணற்திட்டில்,
நாம் விட்டமர்ந்த மிகச்சிறு இடைவெளியே
நம் நெருக்கம் பேச…
நீ பார்க்காத போது, உன் முகம் பார்த்து நானும்,
நான் பார்க்காத போது, என் முகம் பார்த்து நீயும்,
ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம்…
என் நெஞ்சில் கனத்துக் கொண்டிருக்கிறது
வெறும் கற்பனையாய்…
கற்பனைச் சுமைகள் – 4
நீ என்னவன் என்று பறைசாற்ற
உன் கரம் பற்றி,
பெருமிதம் பொங்க,
இந்த தெருவில் நடப்பது போலவும்,
உன்னை வழியனுப்பிய பிறகும்
வீட்டினுள் செல்ல மனமின்றி,
இந்த தெருவில் பதிந்த உன் கால் தடங்களில்
என் பார்வை தேங்கி நிற்பது போலவும்,
மாலை, உன் வரவுகாக
வீட்டு வாயிலருகே காத்து நின்று,
இந்த தெருவில் ஏக்கப் பார்வைகள்
பதிப்பது போலவும்,
இந்த தெருவை அடைத்து
நான் போடும் கோலத்தை ரசிப்பதாய் சாக்கிட்டு,
காலைப் பணியோடு சேர்த்து,
என்னை நீ ரசிப்பது போலவும்,
இப்படி ஆயிரமாயிரம் கற்பனைகள்,
ஒவ்வொரு முறை
உன் வீட்டுத் தெருவை கடக்கும் போதும்
என்னுள் தோன்றி மறைகிறதே…
என் வீட்டுத் தெருவை
கடக்கும் போது,
ஒரே ஒரு முறையேனும்
என் நினைவாவது
உன்னுள் மலர்கிறதா?
கற்பனைச் சுமைகள் – 5
நம் கண்கள் நான்கும்
உரசிக் கொண்ட
அந்த வசந்த வினாடி,
நீண்டு கொண்டே இருக்க வேண்டுமென்ற
என் நெஞ்சத்து தகிப்பெல்லாம்
வெட்கத் தவிப்பாய் உருமாறி,
என்னை ஆட்கொண்டு,
நான் தலை தாழ்த்திக் கொண்ட
அந்த வேளையில்…
மென்மையாய் என் முகம் நிமிர்த்தி
பொங்கி வழியும் என் வெட்கத்தை
உன் கண்களால் நீ பருக
வேண்டுமென்ற குறுகுறுப்பு,
எனக்கு மட்டும் தானா?
உனக்கில்லையா?
33 comments:
நான் தான் ஃப்ர்ஸ்ட்... எப்புடி??
ரொம்ப நாளா ஆளே காணோம்?? இவ்வளவு பெரிய போஸ்ட் போடவா??
ஒரே காதல் கவிதையாக இருக்கு.. எனக்கு இந்த காதலே பிடிக்காது.. ஹி ஹி.. ஆனாலும் மூணாவது சூப்பரு
சிங்கம் என் ப்ளாக்குக்கு வாங்க
இப்ப கமென்ட் போடுறது இன்னொரு கார்த்திக்! ஒகே?
எப்பூடி? :)
ரொம்ப நாலா ஆளைக் காணோம்?? இவ்வளவு கவிதை எழுதவா??
ஒரே காதல் கவிதையாக இருக்கு.. காதலுக்கு என்னைப் பிடிக்காது.. ஹி ஹி.. ஆனாலும் மூணாவது சூப்பரு
சிங்கம் என் ப்ளாக்குக்கு வாங்க, நாளைக்கு! :)
@கார்த்திக், மெசேஜ் க்கு ரிப்ளை பண்ணலைனா இப்பிடித்தான்! :))
me the 10!
:)))))))))))
Aanalum kadaisi 2 paagathula vandha kavithaigalai meelpathivu seyyadhadhai vanmaiyaaga kandikkiren !!! :)
//நீ பார்க்காத போது, உன் முகம் பார்த்து நானும்,
நான் பார்க்காத போது, என் முகம் பார்த்து நீயும்//
யான் நோக்குங்கால் நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும். :)
//நீ என்னவன் என்று பறைசாற்ற
உன் கரம் பற்றி,
பெருமிதம் பொங்க,
இந்த தெருவில் நடப்பது போலவும்//
கைத்தலம் பற்றக் கனாக் கண்ட ஆண்டாளின் கவிதை போல் உள்ளது.. சூப்பர்
சுமக்க வேண்டிய சுமைகள் தான் ஒவ்வொன்றும்.. அருமை.
விருது வாங்க வாங்க.
http://tharanipriyacbe.blogspot.com/2009/07/blog-post_26.html
I like the fourth one. ;-)
Ore unarchi poorvame iruke...Phoenix ku poi edhavadhu 'Mudhal mazhai' la nenanchutiya :D
ஆஹா....அற்புதமான காதல் கவிதைகள்
முதல் காதலை நினைவுபடுத்துகின்றன
ஹுக்கும்.. இது ஆவுறது இல்லை.
நல்லா இருங்க :)
உன் சட்டையில் முகம் புதைத்து,
ஈரத்தோடு சேர்த்து காதலையும் உள்வாங்கிக் கொண்ட
அந்த ஈரமான நிமிடங்கள்…
]]
superb ...
என் வீட்டுத் தெருவை கடக்கும் போது, ஒரே ஒரு முறையேனும் என் நினைவாவது உன்னுள் மலர்கிறதா?]]
nalla kelvi.
nice :-)
எல்லாமே கலக்கல் ரகம் திவ்யா..
முன் பக்கத்தில் தெரியும் பதிவுகளின் எண்ணிக்கையை குறைக்க முடியுமா? லோட் ஆக லேட் ஆகுது.. 5 பதிவுகள் வரை வச்சிக்கோங்களேன்.. ரொம்ப நல்லா எழுதறிங்க.. புதுசா வரவங்களுக்கு ப்ளாக் ஓபன் ஆகறதுல சிக்கல் இருந்தா அடுத்தவாட்டி வரமாட்டாங்க..
(சாரி ஃபார் த அதிகபிரசங்கித் தனம்)
avvvvvvvvvvvvv....athukullara 23 kaments !!! all anchu kavithais dp...phoneix poitu kavithai mazhai kotuthu pola :D
//நான் விலகி ஓட, நீ பிடித்து உடைந்து, சொர்கம் புகுந்த, என் கண்ணாடி வளைத் துண்டுகள்//
Edhu Dilse maari erukkey LOL
//உன் முதுகோடு என் கன்னம் கதை பேச//
Edhu cool :)
// நீ பார்க்காத போது, உன் முகம் பார்த்து நானும், நான் பார்க்காத போது, என் முகம் பார்த்து நீயும், ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம்//
yeah ellarum edhay panniruppanga correcta solli kalakareenga :)
//நீ என்னவன் என்று பறைசாற்ற உன் கரம் பற்றி, பெருமிதம் பொங்க, இந்த தெருவில் நடப்பது போலவும்,//
Very very sweet!
//மாலை, உன் வரவுகாக வீட்டு வாயிலருகே காத்து நின்று//
Endha maari ponnungala kavidhaila dhaan pakka mudiyudhu hehe. Eppa ellam serial pathuttu erukaanga, adhu mudinjaa dhaan husbandkku soru :)
//நான் தலை தாழ்த்திக் கொண்ட அந்த வேளையில்… மென்மையாய் என் முகம் நிமிர்த்தி பொங்கி வழியும் என் வெட்கத்தை உன் கண்களால் நீ பருக வேண்டுமென்ற குறுகுறுப்பு//
Very very classy and romantic
Romba nalla erundhudhu rendu moonu murai padichen , rasithen :)
Keep such lovely ones coming.
அமெரிக்கா போய் முதல் கவிதையா?
ரொமான்ஸ் ரசம் வழிந்து ஓடுகிறதே!!!!
orey kaadhal rasam thenai sottucha? mothama padichu thihatuthunga......nalla kavithaikal...romba,romba romba romba nalla irundhuchu.....
hi dp..
http://rainbowstreet-karthik.blogspot.com/2009/07/blog-post_28.html
sorry for the vilamparam. seems i have given you an award. i'd be happy if u can receive and share with six other interesting bloggers. :)
Nice kavidhaingo
சிங்கம் கிளம்பிடுச்சு :))
cute kavithais.....ellame superu
ஆஹா அற்புதம்!
மீண்டும் உங்கள் படைப்பைப் படிக்கப்பெற்றதில் மகிழ்ச்சி.
வலைப்பதிவிற்க்கு மீண்டும் உங்களை வறவேற்ப்பதில் மகிழ்ச்சி.
''என் நெஞ்சில் கனத்துக் கொண்டிருக்கிறது
வெறும் கற்பனையாய்…''
''எனக்கும் சிறகுகள் இருப்பதை உணர்ந்தேன்,
தயக்கங்கள் தகர்த்து மெல்ல
சிறகை விரித்து பறந்தேன்,
இளங்காற்று மோத துள்ளி திரிந்தது மனம்...''
நினைவுகள் அற்புதம்!!!
Post a Comment