Thursday, March 26, 2009

மலரே மெளனமா? - 1

பகுதி - 1 (Bangalore)

ஊருக்கு ஆறழகு
ஊர்வலத்தில் தேரழகு
தமிழுக்கு ழா அழகு
தலைவிக்கு நானழகு


வைரமுத்துவின் வைர வரிகள், ரஹ்மானின் மெல்லிய இசையுடன் கலந்து, பெங்களூர் போக்குவரத்து இரைச்சலையும் மீறி, ஐ பாடின் உதவியால் என் காதுக்குள் தேனாய் கசிந்து கொண்டிருந்தது.

தமிழுக்கு ழா அழகு…இந்த வரிகளை கேட்டதும், என் உதடுகளில் மெலிதான ஒரு புன்னகை…மலருக்கு என்றுமே ழ கரம் சரியாக வந்ததில்லை. அதை வைத்து இன்று உணவு இடைவேளையின் போது, எல்லோருமா சேர்ந்து அவளை அளவுக்கதிகமாக ஓட்டி எடுத்துவிட்டோம். ஆனால், மலர் மட்டும் அவ்வளவு கேலி, கிண்டலையும் சட்டை செய்யாமல், வழக்கம் போல் பெரிதான ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக அளித்துக் கொண்டிருந்தாள். அவள் சிரிக்கும் போது, அவள் கன்னப் பதுக்கங்களில் வெகு அழகாய் தோன்றும், இரு சிறு குழிகள்.

ஒரு பெரும் அதிர்வோடு வண்டி மேலே செல்லாமல் திடுமென நிற்கவும் தான் கவனித்தேன், மலரின் கன்னக்குழியைப் பற்றி நினைத்துக் கொண்டு வந்ததில், வீட்டின் அருகே சில நாட்களாகவே இருக்கும் அந்த குழியை கவனிக்கத் தவிறி விட்டதை. ஆக்ஸிலரேட்டர் உதவியால், குழியில் சிக்கிய வண்டியை மேலெழுப்ப யத்தனிக்கையில், என் வண்டியின் உறுமல் சத்தத்தையும் மீறிக் கொண்டு ஒலித்தது என் அறை நண்பன் வினோத்தின் குரல்.

“டேய்!!! பாத்துடா…”

வண்டியை வாசலில் நிறுத்திவிட்டு, கதவருகே எனக்காக காத்து நின்ற வினோத்திடம், “என்னடா அதிசயம்? ஏழரை மணி பஸ்லையே வந்துட்டியா இன்னிக்கு?”

“ஹ்ம்ம்…ஆமா…இன்னிக்கு அவ்வளவா வேலை இல்ல…” காலை ஏழரை மணிக்கு அலுவலகம் சென்று, ஏழரை மணிக்கு திரும்புதல், அவ்வளவாக வேலை இல்லாத நாட்களின் நிலை!

“ஹே…இன்னிக்கு மலர் என்ன பண்ணாங்க தெரியுமா? ” வழக்கமான உற்சாகத்துடன் வினோத்திடம் பேச ஆரம்பித்தேன்.

“நிறுத்து! நானும் பாத்துட்டே இருக்கேன்…ரொம்ப தான் மலர் புராணம் பாடிட்டு இருக்க, வர…வர…”

“அடச்சே…போடா…”

உணவு முடிந்து எல்லோரும் படுக்கைக்கு வந்தோம். வழக்கம் போல் அன்றும் வினோத் ஆரம்பித்தான்.
“என்னடா பண்ணாங்க?”

“யாரு?”

“அவங்க தான்…இந்த ராசாவோட ரோசா…” ஒரு விஷமப் புன்னகையோடு, கண்களை சிமிட்டியபடி அவன் இப்படி கேட்கவும், எனக்கு பற்றிக் கொண்டு வந்தது.

“போடா…” திரும்பிப் படுத்துக் கொண்டேன்.


தேவையில்லாம இந்த பசங்க ஓட்றாங்க. ஆஃபிஸ்ல பேசறதோட சரி, அதத்தவிர வீட்ல வந்து என்னிக்காவது ஒரு ஃபோனாவது பண்ணியிருக்கேனா? ஒரு வருஷமா எனக்கு மலரை தெரியும். என்னுடைய டீமில் இருக்கும் ஒரே தமிழ் பெண். அது மட்டுமில்லாமல் எனக்கு ஒரு நல்ல தோழி.


ஆனால், இந்த தோழி என்பதெல்லாம் அலுவலத்தோடு சரி, அதற்கு மேல் பழக மலர் இடம் கொடுத்ததில்லை. எப்போதும் யாரும் சுலபத்தில் நெருங்க முடியாத படி, ஒரு அளவோடு தான் இருக்கும் அவளுடைய பேச்சு, செய்கை எல்லாம். இருந்தாலும், அவள் எனக்கு அதிக நெருக்கமில்லை என்று சொல்லிவிடவும் முடியாது தான். எப்போதாவது முகம் வருடி செல்லும் சுகந்தம் கலந்த தென்றலோ, விடுமுறை நாளின் மாலை வேளையில், சில்லென்று இதயம் நனையச் செய்யும் சுகமான சாரல் மழையோ, அடிக்கடி அனுபவிக்காவிட்டாலும், மனதிற்கு நெருக்கமானதில்லை என்று கொள்ள முடியுமா என்ன?


எனக்கென்னவோ மலருடைய உண்மை நிறம் இதுவல்ல என்ற சந்தேகம் எப்போதுமே உண்டு, உண்மையில் குறும்புத்தனமும் குதூகலமும் நிறைந்த ஒரு பெண், அலுவலகத்தில் மட்டும் அடக்கி வாசிப்பதை போலவே தோன்றும். இப்படி பலதும் நினைத்தபடியே உறங்கிப் போனேன்.

மறுநாள் காலை விழித்ததற்கும், படுக்கையை விட்டு எழுந்ததற்குமான இடைவெளியில், வழக்கம் போல இன்று அலுவலகம் போகத் தான் வேண்டுமா என்று தலைதூக்கிய எண்ணத்தை, ஒருவாறு கிடப்பில் போட்டு விட்டு அலுவலகத்தை வந்தடைந்தேன்.

பத்து மணி. மலர் இன்னும் வரக்காணோம். என்னையும் மீறி, அவள் இருக்கையை ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை எழுந்து நோட்டம் விட்டபடி ஒரு மணிநேரத்தை கழித்தேன். வழக்கமாக எட்டு மணிக்கெல்லாம் வந்துடுவாங்களே!

“அவினாஷ், மலர் எங்க?”

“தெரியலையே சுரேன்! என்ன விஷயம்?”

“இல்ல… ஒரு மீட்டிங் இருக்கு…”


“ஃபோன் பண்ணிப் பாருங்க…”

“இல்ல இல்ல, ஒன்னும் அவசரமில்ல…”

பதினோரு மணி, ‘ரிங் போய்ட்டே இருக்கு, எடுக்க மாட்டேங்கராங்க.’
அப்போது திடீரென்று மலரிடமிருந்து அழைப்பு, “சொல்லுங்க மலர்…”

“சுரேன்! இன்னிக்கு நான் ஆபிஸ் வர முடியாது…”

“ஓ…என்ன ஆச்சு?”

“ஒரு சின்ன ஆக்ஸிடன்ட்…”

“என்னது ஆக்ஸிடன்டா? என்ன சொல்றீங்க? ஆர் யூ ஓகே…எங்க இருக்கீங்க?”
பதட்டத்தில் தட்டச்சுவதை போல ஒலித்தது என் குரல்.

“இல்ல…பெருசா ஒன்னும் இல்ல…படியிறங்கும் போது தடுக்கிடுச்சு…கால்ல கொஞ்சம் அடி, இப்ப தான் டாக்டர்கிட்ட போய்ட்டு வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன்…சுளுக்கு இருக்குன்னு டாக்டர் சொல்லியிருக்கார்…சுத்தமா நடக்கவே முடியல…”

“ஓஹ்ஹ்” என் குரலில் இருந்த சோர்வை உணர்ந்து, வேலை கெடுமென்று தான் நான் கவலைபடுகிறேன் என்று நினைத்து விட்டாள் போலும்…
“நான் வேணா…work from home…”

அவளை முடிக்க விடாமல் இடைமறித்தேன் “ச்சே…ச்சே… work from home எல்லாம் எதுக்கு? நீங்க ஓய்வெடுங்க மலர்…”

மலர் இல்லாத அந்த பத்து நாட்களும் பத்து யுகங்களாக கழிந்தது என்று தான் சொல்ல வேண்டும். இதற்கும், அவளுடைய வேலையையும் சேர்த்து நான் செய்து கொண்டிருந்தேன். வேறு யாராக இருந்தாலும், இப்படி செய்திருப்பேனா என்று சந்தேகம் தான்…சந்தேகம் என்ன? கண்டிப்பாக செய்திருக்க மாட்டேன். இந்த பத்து நாட்களில் எத்தனை முறை அவளை பற்றி நினைத்தேன்? கணக்கிட்டிருந்தால் எண்ணிகை தீர்ந்திருக்கும்!
இதை பற்றி அதிகம் சிந்திக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருந்த போது தான், வாலிப வயதில் அனேகருக்கும் நிகழக்கூடிய அந்த இனிய பரிமாணம் எனக்குள்ளும் நிகழ்ந்தது, என் பிறந்தநாளன்று…

துயில் கலையும் வேளையில், மலரிடமிருந்து ஃபோன். நாளை தானே விடுப்பு முடிந்து வேலையில் சேர போவதாக சொல்லியிருந்தாள், இன்று என்னவாக இருக்கும்? அனேகமாக என்னை வீட்டில் இருக்கும் போது அவள் அழைப்பது அதுவே முதல் முறை.

“சொல்லுங்க மலர்…”

“பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுரேன்!!!”

“---“

“சுரேன்!!!”

“ஓஹ்ஹ்…நன்றி மலர்…ரொம்ப நன்றி…கால் எப்படி இருக்கு? இப்ப பரவாயில்லையா?” ஆனால் என் மனம் சரியாக இல்லை!

அதன்பிறகு அவள் பேசியதெல்லாம் சரியாக காதில் விழவில்லை. என் பிறந்தநாளன்று அவள் வாழ்த்தியதை விட, அவள் நினைவில் வைத்திருக்கிறாள் என்பதே போதுமானதாய் இருந்தது. அப்போது தான் உணர்ந்தேன், மீண்டும் பிறந்ததைப் போல். அந்த வைகறை வேளையில் அழகாய் நிகழ்ந்தேறியது அந்த இனிய பரிமாணம், அது வரை என் அம்மாவுக்கு மகனாக மட்டும் இருந்த நான் ஒரு பெண்ணுக்கு காதலனாக புதுப் பிறப்பெடுத்தேன். அவளுக்கு கால் இடறிய பின் தான், என் மனம் அவளிடத்தில் என்றோ சரிந்திருந்தது எனக்கே தெரிகிறது! ஆனால் இயற்பியல் விதிக்கு மாறாக, சரிந்த மனம் உச்சத்தை நோக்கி பறக்கத் துவங்கியது.

காற்றில் மிதந்தபடியே அன்றைய தினம் கழிந்தது. வீட்டிற்கு விரைந்தோடி வந்தேன். காதலியிடம் சொல்வதை விட, அதற்கு முன் நண்பனிடம் காதலைச் சொல்வது அழகான தருணம் தான்! இந்த பாவிப்பயல், என் நீண்ட நாள் நண்பன், வினோத் இன்னும் வரக்காணோம்.

இரவு அவன் வீட்டிற்கு வந்து, உண்டு முடித்து, படுக்கைக்கு வரும் வரை காத்திருந்தேன்.

“வினோத்!!!”

என் முகத்தில் இருந்த ஆயிரம் வாட்ஸ் ஆர்வத்தை பார்த்து அவனே, “என்னடா? மலர் இன்னிக்கு ஆபிஸ் வந்துட்டாங்களா?”

“அது இல்லடா மச்சான்…”

“அப்புறம் என்ன உன் முகம் இத்தன பிரகாசமா இருக்கு? என்ன விஷயம்?”

“சொல்லுவேன்…ஆனா ஓட்டக் கூடாது…”

“நான் எப்படா உன்னை ஓட்டியிருக்கேன்?” மனசாட்சியே இல்லாமல் பொய் சொன்னான்.

“நான்…நான்…லவ் பண்றேன்னு நினைக்கறன்டா…”

“அப்படி போடு அரிவாள!!! இத தான்டா ரொம்ப நாளா நானும் நினைச்சேன்…இப்பவாவது உண்மைய ஒத்துகிட்டையே…பொண்ணு யாரு? அந்த சொர்ணா தான?” சொல்லிவிட்டு கண்களை வேறு சிமிட்டினான். உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உணர்ச்சிகளை போட்டு உடைப்பதற்கு இவனுக்கு நிகர் இவன் தான். சொர்ணா எங்கள் வீட்டை பெருக்கித் துடைக்கும் பெண்!

“டேய்!!! சீரியஸா பேசிட்டிருக்கும் போது காமெடி பண்ண…அப்புறம் நீ சீரியஸ் ஆயிடுவ…சொல்லிட்டேன்…”

“ஓகே…ஓகே…எப்ப சொல்ல போற...அதான் உன் மலர் கிட்ட?”

நான் எதுவும் சொல்லாமல் இருக்கவும், “ஏய்…இதே மாதிரி டன் கணக்குல அவங்க கிட்டயும் போய் வழிஞ்சிடாதடா…ஹ்ம்ம்…எப்படியோ…உன் பிறந்தநாளன்னிக்கே காதல் ஆனிவர்சரியும் வந்துடுச்சு…கலக்குற போ…”

“இன்னிக்கு ஆனிவர்சரின்னு எப்படிடா சொல்றது? இன்னிக்கு நான் என் காதலை உணர்ந்த நாள்…அவ்ளோ தான்…ஆனா, மலர் என்னிக்கு எனக்குள்ள நுழைஞ்சான்னே தெரியலையே!!!”

“ஒரு மார்கமாத் தாண்டா இருக்க…”

பதிலேதும் சொல்லத் தோன்றாமல், கைகளை தலையனையாக்கி படுத்தபடி எங்கள் அறையில் மேல் கூரையைப் பார்த்து புன்னகைத்தேன். அன்றைய இரவு படிகம் போன்றதொரு ஒளிநுழை (transparent) இரவாக தான் மாறியிருந்தது! அறையின் மேல் கூரையையும் தாண்டி, அந்த வானமும், அதில் மின்னும் நட்சத்திரங்களும், அவ்வப்போது தலை காட்டும் கோள்களும், வின்மீண்களும், எங்கள் அறைக்கு அழையா விருந்தாளியாய் வந்து என் கண்களுக்கு விருந்தளித்துக் கொண்டிருந்தது. ஆனால் அந்த விருந்தாளிக் கூட்டத்தில் நிலவதனை மட்டும் காணவில்லை! சொன்னேனே, அன்றிரவு ஒரு ஒளிநுழை இரவென்று? மாசு மருவற்ற வெண்மை நிலவென ஒளிரும் மலரின் முகம், என் மனதிற்குள்ளிருந்ததைப் பார்த்து நிலா வெட்கித் திரும்பி விட்டது போலும்!

என்னுடைய இந்த அதீத கற்பனையின் பயனாய் பெரிதாய் மலர்ந்த புன்னகையை அருகிலிருந்த நண்பன் பார்க்காத வண்ணம் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டேன். உடனே சடாரென போர்வையை விலக்கி என் முகத்தை ஒரு கணம் உற்றுப் பார்த்தான் வினோத். ’ச்சை! சிரிச்சத பாத்திருப்பானோ?’ உள் எழுந்த ஏதோ ஒரு உணர்ச்சி, அதற்கு பேர் தான் வெட்கமோ? அதை மறைத்து, முகத்தை நேராக வைத்துக் கொண்டு, “என்னடா?” என்றேன்.

“சுரேன்!!! நீ ஒரு ஃபோட்டோ கூட காட்டினதில்லையே! எப்படிடா இருப்பாங்க மலர்?” ஆர்வமிகுதியில் கேட்டவனை பார்த்து சிரித்தபடி படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்தேன்.

“எப்படி இருப்பான்னா…ம்ம்…என்ன சொல்றது? அழகா இருப்பா…” என் மனக்கண் முன் ஒரே ஒரு வினாடி எப்போதாவது பூக்கும் அவள் புன்னகை தோன்றி மறைந்தது. அழகு என்ற வார்த்தையை உச்சரிக்கும் போதே நினைவில் வரும்…அவ்வளவு அழகு அவள் சிந்தும் புன்னகை!

“அது தான் நீ ஊத்தறத பாத்தாலே தெரியுதே…வேற எதாவது குறிப்பா சொல்லுடா…”

அவளைப் எப்படி வர்ணிக்கலாம் என்று நினைத்ததுமே, எனக்கு தெரிந்த அந்த ஒரே ஒரு கவிதை நினைவுக்கு வந்தது.

நிலவைப் பிடித்துச் - சிறு
கறைகள் துடைத்துக் - குறு
முறுவல் பதிந்த முகம்,
நினைவைப் பதித்து - மன
அலைகள் நிறைத்துச் - சிறு
நளினம் தெளித்த விழி


*குறிஞ்ச மலர் புத்தகத்தில் நா. பார்த்தசாரதி எழுதியது.

எனக்கு மிகவும் பிடித்ததால், என்றுமே நினைவில் தங்கிய அந்த வரிகளுடன், என் கற்பனையும் கலந்து கொள்ள,
“குறிப்பான்னா என்ன சொல்றது? ம்ம்ம்…சரி, சொல்றேன்…கேளு! அந்த நிலாவ எடுத்து அதில படிஞ்சு இருக்கற கருப்பு கறைகளை எல்லாம் துடைச்சு, தாமரைப் பூவை அரைச்சி, அதோட கலவையை கொஞ்சம் கலந்து, அப்புறம்…அப்புறம்…கொஞ்சம் வெண்னையை சேத்து, பிரம்மன் ஓவர் டைம் போட்டு செஞ்ச சிலை மாதிரி இருப்பா…” எனக்கு கூட இவ்ளோ கவித்துவமா பேச வருமா? அன்று வரை நானே இதை அறிந்திருக்கவில்லை.
ஆனால் வினோத் முகத்தில் தான் ஈயாடவில்லை. ’ஒரு வேளை நாம வர்ணிச்சத கேட்டு பயந்துட்டானோ?’
“என்னடா? எதுவும் சொல்ல மாட்டிங்கற?”

“நல்லாத் தானடா இருந்த?”

“ஏன்டா? இப்ப என்ன?”

“போடா வெண்ட்ரு!!! என்னவோ நிலாவாம், அதுக்கு ஃபேஷியல் பண்ணுவாராம், அப்புறம் தாமரை கூழாம்….அதெல்லாம் கூட பரவாயில்ல…கடைசியில எதுக்குடா வெண்னைய போட்டு பிசைஞ்ச? முறுக்கு சுடவா?”

“டேய்ய்ய்ய்…” என் அடியிலிருந்து லாவகாமாய் தப்பிக் கொண்டான் பாவிப்பயல். “அதில்லடா…ரொம்ப ஸாஃப்ட்டுன்னு சொல்ல வந்தேன்…”

“வேணாம்…எதாவது சொல்லிடப் போறேன்….நீ கனவ கண்டின்யூ பண்ணு, நான் தூங்கறேன்…” சொல்லிவிட்டு விளக்கை அணைத்தான். ஆனால் என் மனதிற்குள் ஒளிப்பிழம்புகளின் உருவாய் உலவிக் கொண்டிருந்த ஒருத்தி, அன்றிரவு என்னை தூங்க விடவில்லை. அப்போது நான் அறிந்திருக்கவில்லை, உண்மையில் அவை ஒளிப்பிழம்புகள் அல்ல, தீப்பிழம்புகள் என்று!

******

மறுநாள் விழித்ததும் வினோத் என்னிடத்தில் கேட்ட முதல் கேள்வி, “என்னடா? மலர் இன்னிக்கு ஆபிஸ் வந்துடுவாங்கல்ல?”

“ஆமா..ஏன் கேக்கற?”

“எப்ப சொல்லப் போற? அதுக்கு தான் கேட்டேன்…”

“இப்ப இல்ல வினோத்….ஊருக்கு போய்ட்டு வந்தப்புறம் தான்…”

“அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்?”

“என்னடா இப்படி சொல்ற? எங்கப்பாவ கேக்க வேண்டாமா?”

“என்னது???”

[தொடரும்]

63 comments:

Smriti said...

ME THE FIRST

gayathri said...

anna enga kanom anna me they 2nd

நட்புடன் ஜமால் said...

இருக்கேன் இருக்கேன் ...

gayathri said...

ஊருக்கு ஆறழகு
ஊர்வலத்தில் தேரழகு
தமிழுக்கு ழா அழகு
தலைவிக்கு நானழகு

en thalaivanuku naan than azaku

நட்புடன் ஜமால் said...

\\ஊருக்கு ஆறழகு
ஊர்வலத்தில் தேரழகு
தமிழுக்கு ழா அழகு
தலைவிக்கு நானழகு\\

ஆரம்பமே அழகு

gayathri said...

நட்புடன் ஜமால் said...
\\ஊருக்கு ஆறழகு
ஊர்வலத்தில் தேரழகு
தமிழுக்கு ழா அழகு
தலைவிக்கு நானழகு\\

ஆரம்பமே அழகு

ama azako azaku

gayathri said...

kathai nalla irukuga next partsekaram podunga

நட்புடன் ஜமால் said...

\\“என்னடா இப்படி சொல்ற? எங்கப்பாவ கேக்க வேண்டாமா?”

“என்னது???”\\

எங்களையும் கேட்க்க வைத்துவிட்டது

‘என்னது'

நல்லாயிருக்குங்க ...

புதியவன் said...

//என் பிறந்தநாளன்று அவள் வாழ்த்தியதை விட, அவள் நினைவில் வைத்திருக்கிறாள் என்பதே போதுமானதாய் இருந்தது. அப்போது தான் உணர்ந்தேன், மீண்டும் பிறந்ததைப் போல். அந்த வைகறை வேளையில் அழகாய் நிகழ்ந்தேறியது அந்த இனிய பரிமாணம், அது வரை என் அம்மாவுக்கு மகனாக மட்டும் இருந்த நான் ஒரு பெண்ணுக்கு காதலனாக புதுப் பிறப்பெடுத்தேன்.//


கதையின் இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்...அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்...

புதியவன் said...

//இயற்பியல் விதிக்கு மாறாக, சரிந்த மனம் உச்சத்தை நோக்கி பறக்கத் துவங்கியது.//

இது காதல் விதியா...?

ஆயில்யன் said...

//இயற்பியல் விதிக்கு மாறாக, சரிந்த மனம் உச்சத்தை நோக்கி பறக்கத் துவங்கியது.
//

இயற்பியல் விதிகள் மாறி மனதில் வேதியியல் வினைபுரிதல்கள் ஆரம்பமாகும் கட்டம் - காதல்

சூப்பரூ !:)))

ஆயில்யன் said...

//டேய்!!! சீரியஸா பேசிட்டிருக்கும் போது காமெடி பண்ண…அப்புறம் நீ சீரியஸ் ஆயிடுவ…சொல்லிட்டேன்…”//


டென்ஷனான எல்லா ப்ரெண்ட்ஸும் இந்த வார்த்தைகள் தான் யூஸ் பண்ணுவாங்க போல....!

ஆயில்யன் said...

//அன்றிரவு ஒரு ஒளிநுழை இரவென்று? மாசு மருவற்ற வெண்மை நிலவென ஒளிரும் மலரின் முகம், என் மனதிற்குள்ளிருந்ததைப் பார்த்து நிலா வெட்கித் திரும்பி விட்டது போலும்!
///

அழகாய்,அசத்தலாய் வார்த்தைப்பிரயோகம்! சூப்பர்!

நிலா வெட்கி சென்றது
மலர் முகம் கண்டு...!

ஆயில்யன் said...

///என்னடா இப்படி சொல்ற? எங்கப்பாவ கேக்க வேண்டாமா?”

“என்னது???”//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!


அடுத்த வரிகளில்

நண்பா நீ தெய்வம்டான்னு இருக்குமோ..... ???
:))))))))))

Gnanz said...

என்ன!!!
அதுக்குள்ள அப்பா-வா!!!?

ஆயில்யன் said...

மீ த பைஞ்சு :)))

ஆயில்யன் said...

//ஆயில்யன் said...
மீ த பைஞ்சு :)))
//

இல்ல :(

FunScribbler said...

ஹீரோயின் பெயர் போலவே அழகான தலைப்பு!:)

//ஏழரை மணிக்கு அலுவலகம் சென்று, ஏழரை மணிக்கு திரும்புதல், அவ்வளவாக வேலை இல்லாத நாட்களின் நிலை!//

பரபரப்புமிக்க வாழ்க்கை சூழலை அழகாய் படம்பிடித்து காட்டிவிட்டீர்கள்:)

FunScribbler said...

//அடிக்கடி அனுபவிக்காவிட்டாலும், மனதிற்கு நெருக்கமானதில்லை என்று கொள்ள முடியுமா என்ன?//

எப்படிங்க இப்படியலாம் யோசிச்சு எழுதுறீங்க. ரொம்ம்ப கிரேட்ங்க!

FunScribbler said...

//பத்து நாட்களும் பத்து யுகங்களாக கழிந்தது//

ஐயோ பாவம்:)

//அது வரை என் அம்மாவுக்கு மகனாக மட்டும் இருந்த நான் ஒரு பெண்ணுக்கு காதலனாக புதுப் பிறப்பெடுத்தேன்//

டாப்! டாப்!

FunScribbler said...

//சொர்ணா எங்கள் வீட்டை பெருக்கித் துடைக்கும் பெண்!//

haahaa...காமெடி சூப்பர்ங்க:)

//கடைசியில எதுக்குடா வெண்னைய போட்டு பிசைஞ்ச? முறுக்கு சுடவா?”//

ஹாஹா..i tell you priya, this was the best. the highlight of the whole story. i laughed so much man!:)

Raghav said...

இப்போ அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டுக்குறேன்.. அப்பால வாறேன்

G3 said...

Sema livelya pogudhu story :)))

Kalakkareenga :)))

Anegama ennoda indha pinnootatha save panni vechikkanumnu nenaikkaren.. ella partukkum podanumilla ;)

G3 said...

//என் வண்டியின் உறுமல் சத்தத்தையும் மீறிக் கொண்டு ஒலித்தது என் அறை நண்பன் வினோத்தின் குரல்.

“டேய்!!! பாத்துடா…”//

avvvvvvv.. adhu varaikkum naan nu soldrappo andha positionla ungala karpanai panni padichitirundhen.. dagaalnu paiyannu solliteenga :)))

G3 said...

//மறுநாள் காலை விழித்ததற்கும், படுக்கையை விட்டு எழுந்ததற்குமான இடைவெளியில், வழக்கம் போல இன்று அலுவலகம் போகத் தான் வேண்டுமா என்று தலைதூக்கிய எண்ணத்தை,//

enakkum daily ippadi thaan thonudhu :)

Mohan R said...

மலர் இல்லாத அந்த பத்து நாட்களும் பத்து யுகங்களாக கழிந்தது என்று தான் சொல்ல வேண்டும். இதற்கும், அவளுடைய வேலையையும் சேர்த்து நான் செய்து கொண்டிருந்தேன். வேறு யாராக இருந்தாலும், இப்படி செய்திருப்பேனா என்று சந்தேகம் தான்…சந்தேகம் என்ன? கண்டிப்பாக செய்திருக்க மாட்டேன்

Nalla theliva eluthi irukeenga... Romba unmaingoooo

G3 said...

//அன்றைய இரவு படிகம் போன்றதொரு ஒளிநுழை (transparent) இரவாக தான் மாறியிருந்தது! //

Eppadinga ippadi ellam?? Lighta oru thamizh aaraichiyae nadathuveengalo ?

Mohan R said...

என்னுடைய இந்த அதீத கற்பனையின் பயனாய் பெரிதாய் மலர்ந்த புன்னகையை அருகிலிருந்த நண்பன் பார்க்காத வண்ணம் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டேன். உடனே சடாரென போர்வையை விலக்கி என் முகத்தை ஒரு கணம் உற்றுப் பார்த்தான் வினோத். ’ச்சை! சிரிச்சத பாத்திருப்பானோ?’ உள் எழுந்த ஏதோ ஒரு உணர்ச்சி, அதற்கு பேர் தான் வெட்கமோ

:) :) :)

Mohan R said...

“போடா வெண்ட்ரு!!! என்னவோ நிலாவாம், அதுக்கு ஃபேஷியல் பண்ணுவாராம், அப்புறம் தாமரை கூழாம்….அதெல்லாம் கூட பரவாயில்ல…கடைசியில எதுக்குடா வெண்னைய போட்டு பிசைஞ்ச? முறுக்கு சுடவா?”

Vinod rasikar mandram irundha sollunga :D

நாகை சிவா said...

ரைட்!!! அப்பால சந்திப்போம்!

Anonymous said...

அப்பாடா ஒரு வழியா ரொம்ப நாள் கழிச்சு உங்க கதை...

சுரேனை விட வினோத் பஞ்ச் எல்லாம் சூப்பர்..

கடைசி வசனத்துல என்னைய பாத்துக்கிட்ட மாதிரி இருந்துச்சு.. ஹிஹி...

சீக்கிரம் தொடருங்க

gils said...

emmmmmmmmaaaaaaaadddddddiiiiiooooooooovvvvvv....embutu peria post..part 1 matum ivlo perusa..ila ela partum ithey sizea...weekend padichitu varen kathiaya..starting matum padichen...michathaiyum padichitu commentaren

Karthik said...

சூப்பர்ப் ஆரம்பம். :)

அப்புறம் அந்த டயலாக்ஸ் அப்பப்ப சிரிச்சிக்கிட்டே இருந்தேன். :))

Raghav said...

//மலரே மெளனமா?
பகுதி - 1 (Bangalore) //

ம்ம்.. புரியுது புரியுது.. :)

Raghav said...

// எல்லோருமா சேர்ந்து அவளை அளவுக்கதிகாக ஓட்டி எடுத்துவிட்டோம். //

// என்னுடைய டீமில் இருக்கும் ஒரே தமிழ் பெண்.//

லாஜிக் இடிக்குதே.. ஒருவேளை பக்கத்து டீம் தமிழ் நண்பர்களும் சேர்ந்து கிண்டல் பண்ண வருவாங்களோ ??

- ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்தவர் திருவாளர் இராகவன். :)

Raghav said...
This comment has been removed by the author.
mvalarpirai said...

As usual ..DP Rocks !

ஒரு சிறந்த எழுத்தாளருக்கான எழுத்து நடை ..கற்பனை திறன்.. பக்கா !

// "ஊருக்கு ஆறழகு
ஊர்வலத்தில் தேரழகு
தமிழுக்கு ழா அழகு
தலைவிக்கு நானழகு

ரஹ்மானின் மெல்லிய இசை " //

வைரமுத்துவின் பெயரை நீங்க குறிப்பிடாமல் போனது எனக்கு வருத்தம்..இப்படிதான் ரஹ்மானின் சிறந்த இசை கவிஞரின் பல வைர வரிகளை தூக்கி சாப்பிட்டு விடுகிறது :) :)

// அவளுடைய வேலையையும் சேர்த்து நான் செய்து கொண்டிருந்தேன். வேறு யாராக இருந்தாலும், இப்படி செய்திருப்பேனா என்று சந்தேகம் தான்…சந்தேகம் என்ன? கண்டிப்பாக செய்திருக்க மாட்டேன் //

- நியாமா இது :) விருப்பத்துடன் செய்திருப்பேனா ? என்று தான் கேள்வி இருக்கனும்..ஏன்னா ஒரு டீம் மெம்பர் உடல் நிலை சரியில்லைனா நம்ம கண்டிப்ப அவங்க வேலை செய்வோம்..என்ன கொஞ்சம் முனகி கிட்டே செய்வோம்..சரிதானே ? :)

// மாசு மருவற்ற வெண்மை நிலவென ஒளிரும் மலரின் முகம், என் மனதிற்குள்ளிருந்ததைப் பார்த்து நிலா வெட்கித் திரும்பி விட்டது போலும்! //
அருமை !

// “நல்லாத் தானடா இருந்த?” //

- மொளனம் பேசியதே சூர்யா டச்

உங்கள் சிறகுகள் மேலும் மேலும் விரிந்து உயர பறங்க ! வாழ்த்துக்கள் !

சந்தனமுல்லை said...

நல்லாருக்குப்பா ஸ்டோரி..நடுநடுல வர்ற கவிதை வரிகளும், இளமை துள்ளும் நடையுமே உங்க எழுத்துக்கு ப்ளஸ் பாயிண்ட்!!

வெட்டிப்பயல் said...

Kalakal.. kalakal...

appadiye top gearla poama...

வெட்டிப்பயல் said...

// Raghav said...
// எல்லோருமா சேர்ந்து அவளை அளவுக்கதிகாக ஓட்டி எடுத்துவிட்டோம். //

// என்னுடைய டீமில் இருக்கும் ஒரே தமிழ் பெண்.//

லாஜிக் இடிக்குதே.. ஒருவேளை பக்கத்து டீம் தமிழ் நண்பர்களும் சேர்ந்து கிண்டல் பண்ண வருவாங்களோ ??
//

Question 1 : Teamla Thamizh pasanga iruka koodatha? ;)

Question 2 : Englishla oota koodatha?

ஜியா said...

என்னாது???

வர்ணனைகள் அருமை!! கலக்கிருக்கீங்க...

//மலருக்கு என்றுமே ழ கரம் சரியாக வந்ததில்லை.//

மலருக்கு லகரம் தானே வரனும்னு யோசிச்சிட்டு இருக்கும்போதே, ஹீரோயினி பேரு மலர்...

ஜியா said...

//இயற்பியல் விதிகள் மாறி மனதில் வேதியியல் வினைபுரிதல்கள் ஆரம்பமாகும் கட்டம் - காதல்
//

Anne... engeyo poyitteenganne!!

*இயற்கை ராஜி* said...

appava kekkaratha???!!!??!!

Divyapriya said...


Smriti
actually smitu...u the last :) mostly நமக்கு தெரிஞ்ச எல்லாரும் already இந்த புக்க படிச்சிட்டாங்களே ;)

---------
gayathri
நன்றி gayathri...சீக்கரமே அடுத்த பார்ட் போட்டுட வேண்டியது தான்...

---------
நட்புடன் ஜமால் said...
//
என்னது'

நல்லாயிருக்குங்க ...//

:))
---------
புதியவன் said...
//
//இயற்பியல் விதிக்கு மாறாக, சரிந்த மனம் உச்சத்தை நோக்கி பறக்கத் துவங்கியது.//

இது காதல் விதியா...?
//

அப்படி தான் போல ;) நன்றி புதியவன்....

---------

ஆயில்யன் said...
//
இயற்பியல் விதிகள் மாறி மனதில் வேதியியல் வினைபுரிதல்கள் ஆரம்பமாகும் கட்டம் - காதல்//

இது இன்னும் கலக்கலா இருக்கே!!

//அடுத்த வரிகளில்

நண்பா நீ தெய்வம்டான்னு இருக்குமோ..... ???//

அப்படி இருக்காது...அப்பாவுக்கும் மகனுக்கும் உள்ள புரிதலா அடுத்த பகுதி காட்டும்னு நினைக்கறேன் :)

Divyapriya said...


Gnanz

என்ன பண்றது Gnanz? பையன் கொஞ்சம் ரொம்ப நல்லவன் :)

---------
Thamizhmaangani

பாராட்டுக்கு ரொம்ப நன்றி Thamizhmaangani...

//ஹாஹா..i tell you priya, this was the best. the highlight of the whole story. i laughed so much man!:)//

எனக்கு பிடிச்ச வசனம் கூட இது தான் :)
---------
G3

Thanks a lot G3...
என்னை நினைச்சிட்டீங்களா? :)) இது சுரேனோட கதை :)

//enakkum daily ippadi thaan thonudhu :)//

எனக்கும் இதே தான் தோணுது...அதனால தான் இந்த line a extra வா add பண்ணி இருக்கேன் :)

---------
இவன்

நன்றி இவன்...

//Vinod rasikar mandram irundha sollunga :D//

வினோத் காரெக்டருக்கு இன்னும் நிறையா build up இருக்கு, பாருங்க :)
---------
நாகை சிவா said...
//ரைட்!!! அப்பால சந்திப்போம்!//


சந்திப்போம்...:)

---------
மதி said...
//அப்பாடா ஒரு வழியா ரொம்ப நாள் கழிச்சு உங்க கதை... //

:))

---------
gils
மொத படிங்க :)

Divyapriya said...


Raghav said...
//மலரே மெளனமா?
பகுதி - 1 (Bangalore) //

ம்ம்.. புரியுது புரியுது.. :)
//

உங்களுக்கு என்ன புரிஞ்சுதுன்னு எனக்கு புரியலையே ராகவ்? என்னதது? :))

//லாஜிக் இடிக்குதே.. ஒருவேளை பக்கத்து டீம் தமிழ் நண்பர்களும் சேர்ந்து கிண்டல் பண்ண வருவாங்களோ ?? //

இந்த கேள்விக்கு பாலாஜி அண்ணா பதில் சொல்லிட்டாங்க...:) இருந்தாலும் நானும் சொல்றேன், பக்கத்துக்கு டீம் ல இருக்கறவங்க எல்லாரும் சேந்து கூட்டமா டீ குடிக்க போறாங்களாம் :)

Thanks so much for the corrections raghav...

----------
mvalarpirai

உங்க பாராட்டு ரொம்ப ஊக்கமளிக்குது...நன்றி
valarpirai
----------

சந்தனமுல்லை

Thanks முல்லை

----------
வெட்டிப்பயல்

Thanks அண்ணா

//Question 1 : Teamla Thamizh pasanga iruka koodatha? ;)

Question 2 : Englishla oota koodatha?//

super questions :)))
----------
ஜி

நன்றி ஜி
//மலருக்கு லகரம் தானே வரனும்னு யோசிச்சிட்டு இருக்கும்போதே, ஹீரோயினி பேரு மலர்...//

:))
----------
இய‌ற்கை said...

//pava kekkaratha???!!!??!!//

பின்ன? கேக்க வேணாமா? :)

சிம்பா said...

இவளோஒ ஒ ஒ ஒ ஒ ஒ பெரிய பதிவா....

சிம்பா said...

இது சரிபடாது சாமி....

சிம்பா said...

எப்பவும் போல கடைசெயா வந்து முழுசா படிச்சிக்கிறோம்....

சிம்பா said...

வந்தது வந்தாச்சு... வழக்கம் போல சொல்லிடறேன்....

பதிவு ஜூப்பர்... ;)

சிம்பா said...

மீ த 47th to 51st....

மேவி... said...

ஆமா..ஏன் கேக்கற?”

“எப்ப சொல்லப் போற? அதுக்கு தான் கேட்டேன்…”

"“இப்ப இல்ல வினோத்….ஊருக்கு போய்ட்டு வந்தப்புறம் தான்…”

“அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்?”

“என்னடா இப்படி சொல்ற? எங்கப்பாவ கேக்க வேண்டாமா?”

“என்னது???”"

sema kalakkalana varigal.....

மேவி... said...

pothuva oru friend kitta than lover patri sollum pothu antha penoda characteryai praise panni thaan pesuvanga.....

மேவி... said...

erndu roomates la oruthanukku love vantha .....
antha room la sema galatta va irukkum (sontha anupavam thaan)
innum youthness add pannunga divapriya.....

innum kathai kalakkalaai irukkum....
antha kavithai varigal arumai....
avan avalai patri describe pannura idam super o super....


totally kalakkitinga...
keep rocking

Mohan R said...

Yerkanave eluthi mudicha kadhai kooda oru varathukku oru thadavai thaana :(

3 days oncenu rules mathikalame :) :) :)

Divya said...

அசத்தலான ஆரம்பம் திவ்யப்ரியா:)))

டயலாக்ஸ் எல்லாமே அல்டிமேட்!!

தொடரட்டும்....மலரின் மெளனம்!

அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்:))

Vijay said...

\\மாசு மருவற்ற வெண்மை நிலவென ஒளிரும் மலரின் முகம், என் மனதிற்குள்ளிருந்ததைப் பார்த்து நிலா வெட்கித் திரும்பி விட்டது போலும்!\\

வாவ் :-)

மீண்டும் ஒரு அசத்தலான காதல் கதை!!! நல்ல கதாபத்திரப் படைப்பு. கவிதையும் அழகு. நீங்க தான் எழுதினீங்க என்று நினைத்தேன்.
கதை கவிதையாகப் பயணிக்கிறது. சீக்கிரம் அடுத்த பாகம் எழுதுங்கள். தாமதத்திற்கு மன்னிக்கவும். :-)

Divyapriya said...


சிம்பா
சரி...நீங்க கடைசியிலையே படிங்க :))

----------
Mayvee

Thanks a lot Mayvee...

----------
Divya

நன்றி Divya...மலரின் மெளனம் கடைசி பகுதி வரைக்கும் தொடரும் :)

----------
இவன்

அடுத்த பகுதி போட்டாச்சு...இனிமே சீக்கரம் போட்டுடறேன் :)

----------
விஜய்

wat a bingo விஜய்...இன்னிக்கு காலையில தான் அடுத்த பகுதி போடலாம்னு யோசிக்கும் போது, யாரோ முக்கியமான நபர் கமெண்ட் மிஸ் ஆகுதேன்னு யோசிச்சேன் :) அட விஜய் இன்னும் ஏன் படிக்கலைன்னு நினைச்சுகிட்டே ஆபிஸ்ல வந்து பாக்கறேன், உங்க கமெண்ட்!!! டெலிபதி வேலை செய்யுதுன்னு நினைக்கறேன் :))

நாகை சிவா said...
This comment has been removed by the author.
Divyapriya said...


@ நாகை சிவா
அந்த பதிவை தூக்கற idea முதல்ல இல்லை...சில நண்பர்கள் சொன்னதால அத தூக்கிட்டேன், அவ்ளோ தான் :)

நாகை சிவா said...

//நாகை சிவா
அந்த பதிவை தூக்கற idea முதல்ல இல்லை...சில நண்பர்கள் சொன்னதால அத தூக்கிட்டேன், அவ்ளோ தான் :)//

:))) கமெண்ட் தூக்கிட்டேன். உங்க இஷ்டம் அதை ஏன் நோண்டிக்கிட்டு னு ஆனா உங்களுக்கு மெயில் வந்துடுச்சு போல.

அதும் இல்லாம அடுத்த பதிவு சொன்னது தாரணி பிரியா போஸ்டை உங்க போஸ்ட் னு நினைச்சு இரண்டு பதிவுனு சொல்லிட்டேன்.

தவறு என்னது. :(

தவறு என்னது.

Unknown said...

appa kitta kekka poraan..rombaaa nallavaaaaaan pola..

Karthik Lollu said...

:D :) :( ;) ;( :P


அக்கா... என் மேல எதாவது கோவம்னா சொல்லிடுங்க.. நான் வேணா தொடர்கத கூட எழுதுறேன்.. ஏன் இப்டி ஒரு எழுத்தில் கமெண்ட்?? அவ்வ்வ்வ் :( நான் உங்க கிட்ட இருந்து நிறய எதிர்பாக்குறேன்.. உன் ப்ளாக்க விசிட் பண்றதே பெர்சு.. போடானு உங்க உள்மனசின் குரல் எனக்கு கேக்குது.. நேக்ஸ்ட் மீட் பண்றேன்