நண்பர்களோட பிறந்தநாள், திருமண நாளுக்கெல்லாம் எதாவது வித்யாசமா பரிசு குடுக்கனும்ங்கற ஆசை நம்மில் பல பேருக்கு உண்டு. நம்ம செலவு பண்ற காசுல/நேரத்தில, அவங்களுக்கு பிடிச்ச மாதிரி, அதே சமயம் உபயோகமா, நம்ம மனசுக்கும் திருப்தி அளிக்கக் கூடியதா இருக்கனும் அந்த பரிசு. உபயோகமா வாங்கிக் குடுக்கறேன்னு சில பேர் புத்தகங்கள், வாட்ச், எலக்ட்ரானிக் சாதனங்கள் இப்படி வாங்கிக் குடுப்போம். கல்யாணம்ன்னா கேக்கவே வேணாம், ஊர்ல இருக்கறவங்க அத்தனை பேத்தையும் சேத்துகிட்டு, எதாவது பெரிய பொருளா வாங்கிட்டு போவோம், இல்ல பெரிய தொகையை காசோலையா குடுப்போம். இந்த பரிசுப் பொருட்கள் எல்லாத்திலையுமே ஒரு ஒற்றுமை இருக்கு. அது என்னிக்காவது ஒரு நாள் இல்ல ஒரு நாள் அழிஞ்சு போய்டுங்கற ஒற்றுமை தான் அது! காலாகாலத்துக்கும் அழியாம, உங்க நண்பர் பெயர் சொல்லிட்டு, உங்க நண்பருக்கு மட்டும் பயனுள்ளதா இல்லாம, உங்களுக்கு, உங்க குடும்பத்துக்கு, உங்க ஊருக்கு, நாட்டுக்கு, ஏன் இந்த உலகத்துக்கே பயனுள்ளதா இருக்கற மாதிரி ஒரு பரிசு பொருள் இருந்தா, அப்படிப்பட்ட ஒரு பரிசை குடுக்கறவங்களுக்கும், அதை வாங்கிக்கறவங்களுக்கும் அதை விட பெரிய சந்தோஷம் இருக்கா என்ன? சரி, ரொம்ப சுத்தி வளச்சிட்டேன்னு நினைக்கறேன்…இப்படி ஒரு பரிச பத்தி உங்கள்ள பல பேருக்கு முன்னமே தெரிஞ்சிருக்கலாம். ஆனா எனக்கு சமீபமா தான் தெரிய வந்துச்சு. இத பாத்தவுடனே, எனக்குள்ள எழுந்த சந்தோஷத்துக்கும், ஆச்சர்யத்துக்கும் அளவே இல்லை. கீழ இருக்கற படத்தை பாருங்க, இது தான் காலத்துக்கும் அழியாத அந்த பரிசு.
இந்த பதிவ படிக்கறவங்க யாராது ஒருத்தர் இப்படி ஒரு பரிச குடுத்தா கூட, நம்ம நாட்டுக்கு இன்னும் ஆயிரம் மரங்கள் கிடைக்கும்…அப்படியே ஆயிரம் ஆயிரம் மரங்கள் நம்ம நாடெங்கும் பெருகி, வளங்கள் கொழிக்கட்டும்!
நன்றி: www.plant-trees.org