Wednesday, November 12, 2008

அன்புள்ள பாலு…

ஒரே பொண்ணு கல்யாணத்தையும் முடிச்சாச்சுபையன், அவனும் நல்ல வேலைல கை நிறையா சம்பாதிக்கிறான்பல வருஷமா கஷ்டப்பட்டு தேடி, ஒரு நல்ல வரனா பாத்து, கல்யாணமும் பண்ணியாச்சுஅது ஆச்சு ஆறு மாசம்

 

ஒரு கட்டத்துக்கு மேல, நாம வாழ்றதே குழந்தைங்களுக்காகதாங்கற மாதிரி தோணுதில்ல? பையனும் வெளியூர்ல இருக்கான், பொண்ண கட்டி குடுத்தாச்சுரொம்ப வெறுமையா இருக்கு...யோசிச்சு பாத்தா, இவங்கெல்லாம் வாழ்கைல பாதிக்கு மேல வந்தவங்க தான? அதுக்கு முன்னாடி இருந்த என்னோட வாழ்கை, என்னோட வட்டம், என்னோட நண்பர்கள், என்னோட சந்தோஷம் இதெல்லாம் எங்க? இப்ப அதெல்லாம் இல்லைன்னு சொல்லமுடியாது, அதுக்காக முழுமையா இருக்குன்னும் சொல்லிற முடியாதே!!!

 

இதோஇன்னும் ஒரு வருஷத்துல பணி நிரந்தர ஓய்வும் வந்துடும்அதுக்கப்புறம் என்ன? அக்கடான்னு நியூஸ் பேப்பர் உண்டு, புத்தகங்கள் உண்டுன்னு உக்காற வேண்டியது தான்

 

புத்தகம்ன்னு சொன்ன உடனே ஞாபகம் வருதுஎன் நண்பன் பாலு, எப்பயும் எதாவது புத்தகத்த படிச்சிட்டு வந்து அதை பத்தி மணிக்கனக்கா பேசுவான்அதெல்லாம் அப்பங்கஅது ஒரு காலம், வேற ஊர்ல வேலை கிடச்சு, ன்னா தங்கி, சமைச்சு சாப்பிட்டு, ராத்திரி மொட்டை மாடில கதை பேசிகிட்டு...முப்பது வருஷம் இருக்குமா? ஆமா இருக்கும்...அதுக்கப்புறம் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு பாதைல...ஆனா, பாலு மட்டும் அப்டியே மாறாம தான் இருந்தான்.

 

பாலுவ பத்தி சொல்லனும்னா எத்தனையோ இருக்கு...

 

இந்தியன் வங்கில மேலாளரா இருந்தாலும், வங்கி ப்யூனுக்கு இருக்குற ஆடம்பரம் கூட இல்லாத அவன் எளிமையை சொல்றதா? இல்ல,

 

கடைல இருந்து பொட்டலம் மடிச்சு வர நூல கூட சேத்து கட்டி வச்சு, பெரிய நூல்கண்டு செஞ்சு வச்ச அவன் சிக்கனத்தை சொல்றதா? இல்ல,

 

அந்த நூல்கண்ட மறுபடியும் அந்த கடைக்காரருக்கே கொடுத்த அவன் தாராள மனச சொல்றதா? இல்ல,

 

மூணு வருத்துக்கு ஒரு தடவ, அவனே பணி இடமாற்றம் கேட்டு, ஊர் ஊரா போய், எல்லா ஊரையும், எல்லா மனிதர்களையும், தன் சொந்தமா நேசிச்ச  குணத்த சொல்றதா? இல்ல,

 

முப்பது வருஷமா, வருஷம் தவறாம, ஒவ்வொரு பொங்கலுக்கும், புது வருஷத்துக்கும், அவன் எண்ணத்திலும், வண்ணத்திலும் உருவாக்கி,  அன்பும், தனித்துவமும் நிரம்பி வழியும் வாழ்த்து அட்டைகள் அனுப்புவானே, அத பத்தி சொல்றதா?

 

பாலு எனக்கு எழுதின கடிதங்களயே ஒரு புஸ்தகமா போடலாம்அப்டி ஒரு ரசிகன்...அவன், பார்த்த, ரசிச்ச, அனுபவிச்ச ஒவ்வொரு விஷயத்தையும் ஒன்னு விடாம எழுதி அனுப்புவான்

அந்தந்த ஊர் காரங்க கூட, அவ்ளோ அழகா அந்த ஊற பத்தி வர்ணிப்பாங்கன்னு சொல்ல முடியாது...அவன எனக்கு வால்பாறை பாலுவா தெரியும்,  தென்காசி பாலுவா தெரியும், காரைக்குடி பாலுவா தெரியும், சென்னை பாலுவா தெரியும், ஏன்? டெல்லி பாலுவா கூட தெரியும்...இப்ப கொஞ்ச நாளா அவன் மதுரை பாலு...வயசு ஆயிடுச்சு, பொண்ணுங்க படிப்பு வேற, ஸ்கூல் மாதிரி காலேஜ் எல்லாம் மாத்த முடியாது...அதான், போதும்டா ஊர் சுத்தினதுன்னு மதுரைலையே இருந்துட்டான்.

 

'அன்புள்ள ரகு' ன்னு ஆரம்பிச்சு இந்த முப்பது வருஷமா அவன் எனக்கு எழுதின கடிதங்கள், அனுப்பின வாழ்த்து அட்டைகள் ஏராளம்...இன்னும் எல்லாமே பத்திரமா வச்சிருக்கேன்...

இந்த அவசர உலகத்துல யாரு கடுதாசி எல்லாம் போடுறா? நான், அவன் அனுப்பின பாதி லெட்டருக்கு தான் பதில் எழுதுவேன். மத்தபடி எப்பயாச்சும், ஃபோன்ல நலம் விசாரிக்கதோட சரி.

 

இப்படி பல வருஷமா விடாம தொடர்ந்த எங்க நட்பு மேல கொஞ்சம் பெருமை தாங்க எனக்குஅந்த ஒரே ஒரு சம்பவத்த தவிரஅதை நினச்சா எனக்கே என் மேல கோவம் கோவமா தான் வருதுசரி, நானும் மனுஷன் தானே?

அப்டி என்ன தான் நடந்துச்சுன்னு பாக்றீங்களா? இதோ…

 

"பாலு! எப்படி இருக்க?"

 

"சொல்லு ரகு...நான் நல்லா இருக்கேன்...வீட்ல எல்லாரும் சௌக்கியமா?

என்ன திடீர்ன்னு ஃபோன்?"

 

"என் பொண்ணு கல்யாணம் முடிவு ஆய்டுச்சு...மாப்ளை யு.எஸ். ல வேலையா இருக்கார்...இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம்"

 

"ரொம்ப சந்தோஷம் பா, நீயும் ரொம்ப நாளா தேடினதுக்கு, இப்ப நல்ல வரனா அமைஞ்சிருக்கு...சந்தோஷம்"

 

"நான் அடுத்த மாசம் மதுரை பக்கம் வருவேன்...அப்ப நேர்ல வந்து பத்திரிக்கை வெக்கறேன்"

 

"ஹ்ம்ம்...கண்டிப்பா"

 

கல்யாண வேலை எல்லாம் ஆரம்பிச்சு கொஞ்ச நாளைக்குள்ள, பேரிடியா வந்துச்சு, திடீர்ன்னு சம்பந்திக்கு உடல்நிலை மோசமான செய்தி. ஆண்டவன் மேல பாரத்த போட்டுட்டு, கல்யாண வேலைய ஆரம்பிச்சேன். இருந்தாலும் கடைசி நேரத்து பரபரப்பு, பதட்டம் இப்படி பல காரணங்களால என்னால மதுரைக்கு போக முடியல...பாலுவுக்கு ஃபோன் பண்ணி நிலைமைய சொல்லவும், பாலுவே, 'என்ன ரகு, இதுக்கெல்லாம் கவலை பட்டுகிட்டு, நீ பத்திரிக்கைய தபால்ல அனுப்பி விடு...அது போதும். ன்னு சொல்லவும், சரி தான்னு தபால்லையே பத்திரிக்கைய அனுப்பி வச்சேன்...

 

நல்லா சிறப்பா கல்யாணமும் முடிஞ்சுது. ஒரு சில பேர் தவிர கல்யணத்துக்கு அழைப்பு குடுத்த அத்தன பேரும் வந்து கலந்துகிட்டு, வாழ்த்திட்டு போனாங்க.

ஆயிரம் பேத்துக்கு மேல கல்யாணதுக்கு வந்திருந்தாங்க. ஆனா பாலு மட்டும் வரவே இல்ல…அத பத்தி, எனக்கு கொஞ்சம் இல்ல, ரொம்பவே ஆதங்கம் தாங்க. வரேன்னு சொல்லிட்டு கடைசி நேரத்துல வரல! ஆயிரம் வேலை இருக்கட்டுமே, கல்யாணம் முடிஞ்சப்புறம் ஒரு ஃபோன் பண்ணி பேசக் கூடாது? இந்த ஒரு வருத்தம் தான் எனக்கு.

 

என் மனைவி என்னடான்னா, “நீங்க நேர்ல போய் கூப்பிடலைன்னு கோபம், அதான் அவர் வரலை” ங்கறா.

 

ச்சே, ச்சே…பாலு அப்படி பட்டவன் இல்ல. ஏதோ முக்கியமான வேலை இருந்திருக்கும்…இல்லன்னா வராமா இருந்திருக்க மாட்டான்…அட, என்ன தான் வேலை இருக்கட்டுமே, ஒரு ஃபோன் பண்ணி பேசி இருக்கலாமே…சரி, அவனா ஃபோன் பண்ணி பேசுற வரைக்கும்,  நானா அவனுக்கு பேசப் போறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன். நான் பண்ணது எவ்ளோ பெரிய தப்புன்னு பின்னாடி தான் புரிஞ்சுது.

 

கல்யாணம் முடிஞ்சு ரெண்டு மாசத்துக்கு அப்புறம் பாலுகிட்ட  இருந்து ஒரு கடிதம்.

 

அன்புள்ள ரகு,

நலம், நலமறிய அவா. மகள் திருமணம் சிறப்பாக நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். பெண்ணிற்க்கும், மாப்பிளைக்கும் என் வாழ்த்துக்களை சொல்லி விடு. தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக, என்னால் திருமணத்திற்கு வர முடியவில்லை. சரியாக, கல்யாணச் சமயத்தில், அம்மா தவறி விட்டார்கள். இவ்வளவு தாமதமாக சொல்வதற்க்கு மன்னிக்கவும். உடனே உன்னிடம் சொல்லி, உன் சந்தோஷத்தை குறைக்க விரும்பவில்லை. அதற்க்காகத் தான் இந்த இரண்டு மாத இடைவேளை. அம்மாவின் கடைசி நாட்களை பற்றி

 

 அதுக்கு மேல என்னால படிக்க முடியலைங்க.

 

ச்சே, பெரிய தப்பு பண்ணிட்டனே…பாலுவ பத்தி தெரிஞ்சிருந்தும் கூட இப்படி நினைச்சுட்டேனே…நானாவது ஒரு ஃபோன் பண்ணி இருக்க கூடாது? மனைவி எதோ சொன்னா, அத அப்படியே கேட்கனுமா? எனக்கு எங்க போச்சு புத்தி…இல்ல, மனைவி சொன்னதெல்லாம் ஒரு காரணம் இல்ல… எல்லாம் இந்த வேண்டாத வரட்டு கெளரவம் தான், நான் ஏன் இறங்கி வரனும்ங்கற பிடிவாதம் தான்… சரி, ஆனது ஆய்டுச்சு, இப்ப புலம்பி என்ன பண்றது? வயசானா புத்தி மழுங்கிடும்ன்னு சொல்லுவாங்களே, அப்படி ஆய்டுச்சோ?

 

சரிங்க, பேசிட்டே இருந்ததுல நேரம் போனதே தெரியல, நான் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்துருச்சு. நான் எங்க போய்ட்டு இருக்கேன்னா கேக்குறீங்க? பாலு பொண்ணு கல்யாணத்துக்கு தான்…பொண்ணு கல்யாணம் அவசரமா முடிவாயிடுச்சுன்னு சொல்லி, ரெண்டு வாரத்துகு முன்னாடி தான் பத்திரிக்கை அனுப்பினான்.  நிறைய முஹூர்த்தம் இருக்கறதால நேரடி ரயில்ல சீட்டு கிடைக்கல…அதான், காலைல நேரமே கிளம்பி, ரயில் பஸ்ஸுன்னு மாறி, மாறி, சுத்தியடுச்சுட்டு போய்ட்டு இருக்கேன். ’இந்த வயசான காலத்துல, எதுக்கு இப்படி கஷ்டப்படறீங்க?’ ன்னு என் மனைவி கூட கேட்டாங்க… பாலுவுக்காக இத கூட செய்ய மாட்டேனா என்ன? என்ன நான் சொல்றது? கரெக்ட்டு தான? சரி, அப்ப பாப்போமா?

 

P.S: எப்பவும் தொடர் கதையே எழுதிட்டு இருந்த நான், ஒரு கதை போட்டிக்காக எழுதிய முதல் சிறுகதை இது. கதை கரு கிடைக்காததால், என் அப்பாவின் கதையையே சுட்டு விட்டேன். என் அன்பு அப்பாவும், அவர் நண்பர் பாலு மாமாவும் தான் இந்த கதையில் வரும் அன்பர்கள்.

Saturday, November 1, 2008

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா வருவோம்ல!

என்னைய மாட்டி விட்டது யாரு?              சரவண குமார்

என்னவாம்?                                           சினிமா கேள்விகளுக்கு பதில்  போடனுமாம்...

ஓஹ் போட்டாச்சா?                                மேல, இல்ல இல்ல, கீழ படிங்க

சரி, நான் யார மாட்டி விடப் போறேன்?    அது அப்பால…


1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

அதெல்லாம் நியாபகம் இல்ல...ஒன்னு மட்டும் எங்க அம்மா  இன்னும் சொல்லி சிரிப்பாங்க...முதல் முறையா தியேட்டர் போனப்பவே, அங்கிருந்த அத்தன பேரையும்  என்னை திரும்பி பாக்க வச்சுட்டோம்ல? “ஹய்யோ!!! இவ்ளோஓஓஓ பெரிய்ய்ய வீடா? இது யாரு வீடும்மா?” ன்னு சத்தமா கேட்டா எல்லாரும் பாக்க மாட்டாங்களா என்ன?

 

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

"பொய் சொல்ல போறோம்." அந்த படத்த பாக்க போறதுக்கு நான் சொன்ன பொய் எனக்கு தான் தெரியும் ;) ஐ செக்கப்புன்னு பொய் சொல்லிட்டு (ஐ, பொய்…ஹை ரைமிங்கு ;) ), ஆபிஸ்ல இருந்து அப்ஸ்காண்ட் ஆனோம்.

 

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

தீபாவளி அன்னிக்கு சன் டீ.வில சந்தரமுகி…தலைவர் படத்த, எத்தன முறை, எந்த விதமான ஊடகத்துல பாத்தாலும், தலைவர் படம், தலைவர் படம் தான்னு உணர்ந்தேன்…

அதுக்காக பாபா படத்த எத்தன தடவ பாத்தேன்னு எல்லாம் கேக்க கூடாது, ஆமா!

 

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

தாக்கிய படம்ன்னா, வாழ்க்கைல இது வரைக்கும் ஒன்னே ஒன்னு தான்…”வீரம் விளைஞ்ச மண்ணு!” கூட்டமா குடும்பத்தோட குதூகலமா போறமேன்னு, அவசரத்துல என்ன படம்ன்னு பாக்காம ஒரு பத்துப்  பன்னென்டு பேரு கும்பலா தியேட்டர் உள்ள ஓடிட்டோம்.அப்புறம், அத்தன பேரும் குத்துயிரும்  குழையுயிருமா தான் வெளிய வந்தோம்.

 

நல்ல விதமா தாக்கிய படங்களோட பட்டியல் நீளம்…ஆனா ரொம்ப பாதிச்ச படம், “லஜ்ஜா”. மனிஷா கொய்ராலா சந்திக்கற பல பெண்கள் வாழ்க்கைல நடக்குற கொடுமைகளை பத்தி பேசுற படம். அதுல மாதுரி கூட இருப்பாங்க…அந்த படம் பாத்து, ஒரு நாள் முழுக்க கோவமா, சோகமா இருந்துச்சு. சாரி லஜ்ஜா, ஹிந்தி சினிமா, தமிழ் சினிமான்னு இருக்குது கேள்வி! (கேள்விய சரியா படிக்காம, அவசர அவசரமா தெரிஞ்சதை எல்லாம் எழுதற பழக்கம் இன்னும் போகல) இப்ப தான் பாத்தேன்…தமிழ்ல glycerin substitute படம்ன்னா அது அஞ்சலி…

 

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

அப்படி எல்லாம் பெருசா ஒன்னும் இல்ல, தலைவர் ஒரு அரசியல் கட்சிக்கு சார்பா அறிக்கை விட்டு, அப்புறம் அவங்க தோத்ததும், எல்லோரும் தலைவர கிண்டல் பண்ணப்ப தான் கொஞ்சூண்டு வருத்தமா இருந்துச்சு…எப்படியோ, “காய்க்கற மரத்துக்கு தானே கல்லடி படும்?” ;)  அதனால மனச தேத்திகிட்டேன்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

 

தசாவதாரம்...தொழில் நுட்பம் பல இருந்தாலும், அந்த கதையோட ப்ளாட்ட தான்  பாத்து தான் பிரமிச்சேன்.

 

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

எப்பவாச்சும், 
வாரமலர் நடுப்பகுதி, அப்புறம் லைட்ஸ் ஆன், இத தவிர வேற எதுவும் வாசிக்கறது கிடையாது.

 

7.தமிழ்ச்சினிமா இசை?

A.R.ரஹ்மான் பாடல்கள்ல வரும் குழலோசை ரொம்ப பிடிக்கும்…

ஹாரிஸ் பாடல்கள்ல வரும் கிட்டார் ரொம்ப பிடிக்கும்…

முழுக்க முழுக்க தமிழ்ல இருக்க பாடல் வரிகள் பிடிக்கும்…

ஐஸ்கீரிம் போல் உருகும், சோனு நிகம், ஸ்ரீநிவாஸ் பிடிக்கும்… 

ஆனா பிடிச்ச விஷயங்கள யாராவது கொலை செய்வாங்களா? எனக்கு அதுவும் பிடிக்கும்…

நாள் முழுக்க ஏதோ ஒரு பாட்ட பாடி/முனு முனுத்து அத கொல்லவும் பிடிக்கும் ;)

 

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தமிழ் தவிர னா, பெரும்பாலும் ஹிந்தி, அப்புறம் சில தெலுகு, மலையாளம், கன்னடம், இந்த படங்கள் எல்லாம் பாத்திருக்கேன்.

 

ஸ்கூல் படிக்கும் போது,ஞாயிரு மதியம் தூர்தர்ஷன்ல alphabetical order ல போடும் ரீஜனல் நேஷனல் அவார்ட் படங்கள அப்படி ஒரு ஆர்வத்தோட பாத்துருக்கேன்…காலண்டர்ல, தமிழ், கன்னட படங்கள் எப்போ வருதுன்னு குறிச்சு வச்சுகிட்டு, மறக்காம பாத்துடுவோம். அப்படி பேர் தெரியாம பாத்த நல்ல நல்ல கன்னட படங்கள் எத்தனையோ! காலேஜ் படிக்கும் போது, தமிழ் சேனல்கள் போர் அடிச்சால் உதயா டீ.வி கூட பாத்திருக்கேன்…ஆனா, இங்க வந்து இத்தன வருஷத்துல ஒரே ஒரு கன்னடப் படம் கூட பாத்ததில்லை. ஒரு வேளை, உள்ளூர் மக்களே அத அதிகம் விரும்பாதது ஒரு காரணமா, இல்ல, போஸ்ட்டர்கள பாத்ததால வந்த பயமா, தெரியல :)

 

அப்படி அதிகம் தாக்கின சில கன்னட படங்கள் இருக்கு…ஆனா பேரு தான் தெரியல.

இங்கிலீஷ் படமெல்லாம் நாம அவ்வளவா பாக்கறது இல்ல…சில பல நண்டு - சிண்டு, அப்புறம் ஜாக்கி சான் படங்கள தவிர…ஆனா, ஹாரி பாட்டர் படமெல்லாம் மனப்பாடம் தான் ;)

 

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

எங்க பாட்டியோட, ஒன்னு விட்ட தம்பியோட, சித்தப்பாவோட, ஒன்னு விட்ட மாமாவோட  பேரனுக்கு கூட, சினிமா உலகுடன் நேரடி என்ன, மறைமுக தொடர்பு கூட கிடையாது. எனக்கும் சினிமா உலகுக்கும் அவ்ளோ தூரம் தான்.

 

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

படத்த அவங்களே டி.வீ.டி ல ரிலீஸ் பண்ணா பிழைச்சுக்குவாங்க :)


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு பெரிய கஷ்ட்டமெல்லாம் இல்ல…ஒரு வருஷத்துக்கு இரண்டு, இல்ல மூணு தடவை தான் தியேட்டருக்கே போவேன்…மத்தபடி, உலக தொலைகாட்சிகளில் முதன் முறையா பாக்குறது தான்…அப்படி பாத்தே காலத்த ஓட்டலாம்…அப்புறம் அபிக்கு போட்டியா, இன்னும் சில பேரு சீரியலுக்கு வந்துடுவாங்க…அவங்களோட சேந்து அழ வேண்டியது தான்.

 

தமிழர்களுக்கு என்ன ஆகும்? படம் பாக்குற டைம்ல நம்ம ப்ளாகயெல்லாம் படிப்பாங்க ;) அப்புறம் இன்ன்ம் நிறைய ப்ளாகர்ஸ் வருவாங்க…

 

ஹப்பா, ஒரு வழியா டெஸ்டு முடிஞ்சிருச்சு…

 

சரி, நான் யார மாட்டி விடப் போறேன்?                ஹ்ம்ம், யாரு? யாரு? யாரும் இல்ல…

ஏன்,ஏன், ஏன்?                                                  ஏன்னா…நான்  ரொம்ப நல்லவ ;