Wednesday, January 28, 2009

சூர்யகாந்தி - 1

மிக நீண்ட ஒரு முன்குறிப்பு!


இந்த கதைய எழுத ஆரம்பிச்சது , April 2007 !!! அப்ப இந்த வலைப்பூ கூட ஆரம்பிக்கல. இந்த கதைய போடறதுக்காகத் தான் இந்த வலைப்பூவையே ஆரம்பிச்சேன். நடுவுல எனக்கே போர் அடிக்க, அதுக்கு நடுவுல வேற பல கதைகள் எழுத, இப்படி பல தடைகள தாண்டி (?!?!) ஒரு வழியா சூர்யகாந்திய இப்ப சில பேர் படிக்கப் போறத நினைச்சா எனக்கு உண்மையிலையே ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு :)) ஆனா இன்னும் சூர்யகாந்திய முழுசா டைப் அடிச்ச பாடில்லை :( அதனால கதைய பாதியா வெட்டி, படிக்கறவங்கள இம்சிக்காம ஒரு 7 பார்ட்டுக்குள்ள முடிக்கலாம்னு இருக்கேன். 7 பார்ட்டையும் படிச்சுட்டு, எப்படி இருக்குன்னு சொல்லுங்க...


பாகம் 1


கற்பனைச் சுமைகள் – 1
***
சில்லென்ற ஓர் மழைநாளில்,
உன் கையோடு கை கோர்த்து நடந்த
அந்த மாலை பொழுதின் நினைவுகள்…

உன் சட்டையில் முகம் புதைத்து,
ஈரத்தோடு சேர்த்து காதலையும் உள்வாங்கிக் கொண்ட
அந்த ஈரமான நிமிடங்கள்…

காதலோடு கலந்திட்ட உன் மூச்சுக்காற்று என் மேல் மோத,
என்னையே நான் மறந்த
அந்த ரம்யமான நொடிகள்…

நான் விலகி ஓட,
நீ பிடித்து உடைந்து, சொர்கம் புகுந்த,
என் கண்ணாடி வளைத் துண்டுகள்…

இப்படி ஆயிரம் ஆயிரம் கற்பனைகளையும்,
உன்னோடு சேர்த்து சுமந்து கொண்டு தான் இருக்கிறேன்…
உன்னை நினைவில் சுமந்த நாள் முதலாய்…
***


"கதிரு! தம்பி கதிரு…"

"ஏனாத்தா?" ன்னு கேட்டுக்கிட்டே நடவைக்கு வந்தான் கதிர்வேல். துடிப்பான கண்களும், கருத்த முகத்துல முருக்கி விட்ட அடர்ந்த மீசையும், திமுரும் தோள்களும், மடிச்சு விட்ட சட்டையுமாய், சட்டென முதல் பார்வைக்கு கிராமத்து இளவட்டம் போல தான் இருந்தான், ஆனாலும் ஏதோ ஒன்னு அவனை வித்யாசமாக தான் காட்டிச்சு. அவன் அறிவின் ஆழம், ஆற்றல், செயல் திறன், முடிவு எடுக்கறதுல அவனுக்கு இருக்கற வேகம், தெளிவு, எடுத்த முடிவுல நிலைச்சு நிக்குற உறுதி, அந்த வயசுக்கே உரிய வேகம், துணிவு, ஆண்மை…ஏன், அந்த வயசுல பொதுவா பல பேத்துக்கு வாய்க்காத பொறுமை, அடக்கம், கனிவு…இது மட்டும் இல்லாம, இன்னும் பல பல கதைகள கூர்மையான அந்த ரெண்டு கண்களே பேசுச்சு.

"அந்த ஆட்டுக்கு புள்ளு வச்சாச்சா? தண்ணி காட்டியாச்சா? அந்த முருகன் பையன் எங்க போனான்?" இப்படி அவன அதிகாரம் பண்ணிட்டு இருந்தது வேற யாரும் இல்ல, கதிரோட அப்பா வழி பாட்டி தான்.

"நாளைக்கு சாக போற ஆடு மேல உனக்கு எதுக்கு இவ்ளோ விசனம்?" நமட்டு சிரிப்போடு கேட்டான் கதிர்.

"ஆருடா இவன்? சுத்த வெவெரம் கெட்ட பயலா இருக்கான்! சாமிக்கு நேந்து விட்ட ஆட்ட சாக்கரதையா பாத்துக்கோனும் டா…இல்லன்னா, சாமி குத்தம் வந்து சேரும்"

"ஹூம்…அதெல்லாம் வச்சாச்சு…"

"சரி, சரி, ஆமா…ஊர்ல இருந்து உன் மாமன், அவன் கூட்டமெல்லாம் வருதா இல்லியா? இன்னிக்கு ஜாமமே கிளம்ப போறோம், பொழுதாச்சு…இன்னும் காணோம்?"

"எல்லாம் வருவாங்க ஆத்தா…நீ கொஞ்சம் கம்முன்னு இரு, தலைக்கு மேல வேல கிடக்கு…"
வேக வேகமாய் வீட்டுக்குள்ள போனான் கதிர், அவனோட சேந்து நாமளும் அவங்க வீட்டுக்குள்ளார போவோமா?
அந்த காலத்து வீடா இருந்தாலும் கொஞ்சம் பெரிய வீடு தான், பசுஞ்சானத்தால் அழகா மெழுகி இருந்ச்சு.

"டேய் முருகா! தோப்புல இருந்து வாழ எல கொண்டார சொல்றா…அப்டியே கொஞ்சம் மஞ்ச கொத்தும் வேனும்"

கரண்டியும் கைய்யுமாக செல்லாத்தா, அடித்தொண்டையில் இருந்து கத்திகிட்டு இருந்தாங்க. பாவம் அவங்களும் என்ன தான் செய்வாங்க? ஒத்த மகன் பெரிய படிப்ப முடிச்சுட்டு வந்ததும், கெடாய் வெட்டி, பொங்கல் வெக்கறதா வேண்டினாலும் வேண்டினாங்க, இதோ அதோன்னு ரெண்டு வருஷம் ஒடி போச்சு….இப்ப தான் எல்லாம் கூடி வந்துருக்கு, ரெண்டு புள்ளை இருந்தும், ஒத்தாசைக்கு ஆளில்லாம தனியா கிடந்து அல்லாட வேண்டியதா இருக்கு, பையன் என்னடான்னா, அவங்க அப்பா மாதிரியே தோட்டம் தொரவுன்னு என்னேரமும் பம்பரமா சுத்திட்டு இருக்கான். பொண்ணு...ஹூம், அத சொல்லி குத்தமில்ல, அவங்க அப்பா செல்லம் கொஞ்சி இன்னும் சின்ன புள்ளையாட்டம் திரிஞ்சுட்டு கிடக்கு.

“முருகாஆஆ!!! முருகாஆஆ!!! நான் ஒருத்தி இங்க கிடந்து கத்திகிட்டு இருக்கேன், ஏன்னு கேக்க நாதி இல்ல…”

அவசர அவசரமா தோள்ள இருந்த துண்டை கையில இறக்கி பிடிச்சபடி ஓடி வந்தான் முருகன், அந்த வீட்டில பல வருசமா வேலையாள், தோட்டத்தில கூட அவன் தான் எல்லாம். “அம்மா! சொல்லுங்கம்மா…ஆத்தா கூப்டிச்சு, அதான்…” ன்னு இழுத்தான் முருகன்.

“சரி, சரி…வாழ எல வேணும், அப்படியே…”

“மஞ்ச கொத்து தான? இதோ, பத்து நிமிஷத்துல கொண்டாறேன்…”

“அப்படியே அய்யாவையும் கையோட கூட்டிபோட்டு வா…”

முருகன் அந்த பக்கம் நகந்ததும், தேன்மொழி பக்கம் திரும்பியது செல்லாத்தாவோட கவனம்.
“தேனு! ஏய் தேனு…இன்னும் குளிக்காம என்னடி பண்ணிட்டு இருக்க? எல்லாரும் வரும் போது குளிக்காம கொள்ளாம அப்படியே நில்லு…பாத்துக்கறேன் உன்ன!!!”

“கத்தாத மா! தோ போறேன்…” சலித்துக் கொண்டே அலமாரியை நோக்கி அன்ன நடை நடக்க ஆரம்பிச்சா தேனு, தேன்மொழி! பேருக்கு ஏத்த மாதிரியே தேன் குரலுக்கு சொந்தகாரி, கதிர்வேலோட ஒரே தங்கச்சி, ராமசாமி ஐயாவின் ஒரே செல்ல மகள்…டவுன் காலேஜில படிச்சிட்டு இருக்கா. அவளுக்கும் மத்த புள்ளைங்க மாதிரி தினுசு, தினுசா துணி மணி போட்டுக்கனும்ன்னு ஆசை தான். ஆனா அவங்கண்ணன் கதிருக்கு அதெல்லாம் கட்டோட பிடிக்காது. அதனால எப்பவும், சுடிதாரும், பாவட தாவணியும் தான்.

“தேனு! அந்த பட்டுப் பாவாடைய எடுத்து போட்டுக்கோ கண்ணு!”

“சரி! சரி! போட்டுத் தொலையறேன்…”

தேன்மொழி அந்த பக்கம் நகந்தது தான் தாமதம், “தேனு! தேனு!” ன்னு கத்திகிட்டே, ஓடியாந்தா, இல்ல இல்ல, துள்ளி குதிச்சு புள்ளி மான் போல ஓடியாந்தா சூர்யா…
செக்கச் செவேல்னு, மூக்கும் முழியுமா, செதுக்கி வெச்ச அம்மன் சிலை ஒன்னு தேர்வலம் வர மாதிரி, அவ வீட்டுக்கும் ராமசாமி அய்யா வீட்டுக்கும் நடையா நடையா நடக்கறத தவிர, பெருசா வேலைன்னு சொல்லிக்க ஒன்னும் இல்ல…கண்ணக்குழி சிரிப்பால ஊர்ல இருக்க பாதி பசங்க தூக்கத்த கெடுக்கறத தவிர.

துடுக்குத் தனம் - அதுக்கு வேற பேர் வைக்கனும்னா, சூர்யான்னு வைச்சா பொருத்தமா இருக்கும்…அவ இருக்குற இடத்துல சிரிப்பு சத்ததுக்கோ, கலகலப்புக்கோ கொஞ்சம் கூட பஞ்சம் இருந்ததில்ல. இப்படி சொல்லிட்டதால, அவ எப்ப பாரும் சிரிச்சிகிட்டே இருப்பான்னு நினச்சுக்காதீங்க, அழுமூஞ்சினாலும் அது சூர்யா தான். ஒரு வார்த்தை கேக்கறதுக்குள்ள முணுக்குன்னு கண்ணுல தண்ணி விட்டுடுவா, ஆனா சரியான அழுத்தக்காரி. ஆக மொத்ததுல, பாசமோ, பகையோ…சிரிப்போ, அழுகையோ…சந்தோஷமோ, துக்கமோ எல்லாமே கொஞ்சம் அதிகப்படியா சேந்த கலவை தான் சூர்யா…சூர்யகாந்தி. அவள பத்தி, இவ்ளோ பெரிய விளக்கம் குடுத்ததுல, புள்ளி மான் கணக்கா ஓடி வந்தவ இப்ப என்ன பண்ணிட்டு இருக்கான்னு பாக்க மறந்துட்டமே! ஹய்யய்யோ!! என்னதிது?

“அம்மாஆஆஆ…” யாரோ அலர்ற சத்தம் கேட்டு, தல தெறிக்க ஒடி வந்தாங்க செல்லாத்தா. பரப்பி வச்சிருந்த நெல்லுக்கு நடுவால நெட்டுக்க விழுந்து கிடந்தா சூர்யா!!!
அவளோட கோலத்த பாத்து, பொங்கி வந்த சிரிப்ப கஷ்டப் பட்டு அடக்கிட்டு, “ஏண்டி! நெல்லு காய போட்டுருக்கறது கூட தெரியாம, இப்படியா கண்ணு, மண்ணு தெரியாம ஓடி வருவ?”

“ஏங்கத்த! நடு வீட்லயா நெல்லு காயப் போடுவீங்க?”

“உங்கண்ணு என்ன பொடனீலையா இருக்கு?”

அப்போது தான் அங்கே வந்த கதிர், “விடும்மா! மகாராணி எப்பவுமே தரைல நடக்க மாட்டாங்க, வானத்துல தான் மிதந்துகிட்டு இருப்பாங்க…”

அவனை பாத்ததும், அவசர அவசரமா சுதாரிச்சு, தரையில ஊனி எழுந்து நின்னு, “ஹூக்கூம்…நான் ஒன்னும் மிதக்கல…” ன்னு அவ பதில் சொல்ல ஆரம்பிக்கறதுக்குள்ள அந்த இடத்தை விட்டே போய்ட்டான் கதிர்.
அவன் போன திக்கையே எப்பவும் போல வெறிச்சு பாக்க ஆரம்பிச்சவள, இந்த உலகத்துக்கு இழுத்துட்டு வந்துச்சு, “என்னடி ரோசன?” ன்ன அவ அத்தையோட குரல்.
சட்டென்று சுதாரிச்சவளா, “ஆமா…தேன எங்கைங்த்த கானோம்?”

“நாள் மூச்சூடு சும்மா இருந்துட்டு, இப்ப தான் குளிக்க போயிருக்கா…”

“ஓ…..ஆமா….ஊர்ல இருந்து உங்கண்ணெல்லாம் வராங்களா?”

“வராம பின்ன? வந்துகிட்டே இருக்காங்க…இன்னும் சித்த நேரத்தில இங்க வந்துருவாங்க…”

“அந்த பொண்ணு ஐசுவரியா! அதுவும் வருதா?” குரல்ல தெரிஞ்ச ஆர்வத்த அடக்க அவ செஞ்ச முயற்சி அப்பட்டமா தெரிஞ்சுது.

ஆனா ஏதேதோ யோசனையில இருந்த செல்லாத்தா, அதெயெல்லாம் கவனிக்கவே இல்ல, “அவ இந்த வருசத்தோட படிப்ப முடிச்சிட்டா இல்ல? அவளும் தான் வர்றா…பாத்து எத்தன நாளாச்சு…ஹ்ம்ம்…சரி சரி…நீ வா! அடுப்புல கொஞ்சம் வேலை இருக்கு”

“நீங்க போங்கத்த…நான் வரேன்…”

“சரி, சரி, வெசையா வா…”

இந்த வரவு செலவு கணக்கு வழக்கெல்லா தினமும் சரியா எழுதி வச்சு, பைசல் பண்ணலைன்னா கதிருக்கு அந்த நாள் முடிஞ்ச மாதிரி இருக்காது. அன்னைக்கு கோயிலுக்கு கிளம்பறதால, அப்பவே எழுத ஆரம்பிச்சுட்டான். பின்னால ஆள் வந்து நின்னது கூட தெரியாம மும்பரமா எழுதிட்டு இருந்தானோ, இல்ல வேணும்ட்டே கண்டுக்காம இருந்தானோ, அது அவனுக்கு தான் தெரியும்.
சூர்யாவும் அவனுக்கு பின்னாடி கொஞ்ச நேரம் அமைதியா நின்னு பாத்தா, அப்புறம் ’ஹ்க்…ஹ்ம்ம்’ ன்னு லேசா தொண்டைய செறுமி பாத்தா…வளையல ஆட்டி ஆட்டி சத்தம் குடுத்து பாத்தா…ஹூம்ஹூம் ஒன்னத்துக்கும் மசியற மாதிரி இல்ல. அதுக்கு மேல பொறுக்க மாட்டாம, “என்ன மாமா எழுதிட்டு இருக்கீங்க?”

அவள ஒரு தடவ திரும்பி பாத்துட்டு மறுபடியும் எழுத ஆரம்பிச்சுட்டான் கதிர்.

“மாமா!”

“ஏய்! எத்தன தடவடீ சொல்றது? என்ன மாமான்னு கூப்டாதன்னு…”

“நானும் எத்தன தடவ சொல்லி இருக்கேன், என்ன வாடி போடின்னு கூப்படாதீங்கன்னு?”

“ஆமா! இவ பெரிய எலிசபத் மகாராணி! மரியாத குடுத்து கூப்படறதுக்கு…இப்ப எதுக்கு இங்க வந்த?”

“எங்க மாமா வீடு…நான் வந்தேன்…”
“சும்மா மொறைக்காதீங்க, உங்கள ஒன்னும் சொல்லல, என்னோட தாய் மாமா, உங்க அப்பாவ சொன்னேன்…”

“வீட்டுக்கு ஏன் வந்தேன்னு கேக்கல…என் ரூமுக்குள்ள ஏன் வந்தேன்னு தான் கேட்டேன்…”

“ஏதோ முக்கியமா எழுதிட்டு இருந்தீங்களே…உதவி பண்ணலாமேன்னு தான் வந்தேன்…”

“யாரு? நீ…யா? இங்கிலீஷ் எழுத்துக் கூட்டி படிக்கவாவது தெரியுமா உனக்கு?”

“எல்லாம் எனக்கு தெரியும், நானும் B.A இங்கலீஸு தான் படிக்கறேன்…”

“ஆமா…கரஸ்பாண்டன்ஸ்ல எட்டாங்களாஸ் பெயிலானவன் கூட தான் படிக்கறான்…”

“நான் ப்ளஸ் டூல உங்கள விட மார்க்கு ஜாஸ்தி…தெரியுமா?”

“இருந்துடு போ! யாரு இல்லன்னா…”

“அந்த ஐசுவரியா மட்டும் என்ன? அவளும் B.A இங்கலீஸு தான படிக்கறா?”

எதோ பெரிய தமாச கேட்ட மாதிரி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டான் கதிர்.
“யேய்! அவ சென்னை லயோலா காலேஜுல படிக்கறா…உன்ன மாதிரி காமராஜர் திறந்த வெளி பல்கலைகழகம் இல்ல…நீ அவ கால் தூசிக்கு பெற மாட்ட…”

முணுக்குன்னு சூர்யா கண்ணுல தண்ணித்துளி ஒன்னு வரவும், தேன்மொழி அங்க வரவும் சரியா இருந்துச்சு.

“ஏன்ணா! சூர்யாவ கிண்டல் பண்றத தவிர உனக்கு வேற வேலபொழப்பே கிடையாதா? நீ வாடி!”
கண்ணுல எட்டி பாத்த தண்ணிய அவ கஷ்டப்பட்டு அடக்க நினச்சாலும், கன்னத்துல கோடு போட்டுச்சு அந்த பாழாப்போன கண்ணீர் துளி.

உடனே தேன்மொழி, “ஏய் லூசு! எதுக்குடீ நல்ல நாளும் அதுவுமா, இப்படி கண்ண கசக்கிட்டு நிக்குற?”“அதில்ல தேனு! உங்கண்ணனுக்கு என்னய கண்டாலே சுத்தமா பிடிக்கல…”

“ஐயோ! அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல…அண்ணன் சும்மானாச்சிக்கு உங்கூட வெளையாடுது…”

வாசல்ல கார் சத்தம் கேக்கவும், அந்த பேச்ச அத்தோட விட்டுட்டு, நடவ பக்கம் போனாங்க ரெண்டு பேரும். பேண்டு, சட்டை, பூட்ஸுமா முதல்ல இறங்கினது, செல்லாத்தாவோட அண்ணன் ஆறுமுகம். அவருக்கப்புறம் காருக்குள்ள இருந்து ஒயிலாட்டம் இறங்கின ஐஷ்வர்யாவ பாத்து மயக்கமே வந்துடுச்சு சூர்யாவுக்கு!



[தொடரும்]


51 comments:

G3 said...

first :)

G3 said...

aarambamae asaththala irukku... hmm.. 7 part mudiyaravaraikkum neenga eppo adutha part podaporeengannu thavamai thavamirukkanum pola ;)

konjam manasu vechu ella partaiyum seekiram publish pannunga :)

சந்தனமுல்லை said...

திவ்யா..அந்த பொண்ணு சூப்பர்!
ஆரம்பக் கவிதையே அசத்தல் கவிதை!! ம்ம்..கண்டிப்பா 7 பார்ட்டும் படிக்கறேன்..சோகமா முடிச்சு கண்ணீர் கடல்ல விட்டுடாதீங்க!! :-))

Raghav said...

திவ்யப்ரியாயாயாயாயாயா...

கதை ஆரம்பத்தின் முதல் வரியே இழுக்குது.. அதான் பின்னூட்டம் பர்ஸ்ட்..

Nimal said...

நல்ல ஆரம்பம்...

உரையாடல்கள் எல்லாம் வித்தியாசமாக இருக்கிறது... ஏதோ வட்டார வழக்கு போல இருக்கு(?)

Raghav said...

//ராமசாமி அய்யோவின் ஒரே செல்ல மகள்//

அய்யோவா??... அவரு மேல உனக்கு என்ன கோவம் தாயி..

Raghav said...

//கண்ணக்குழி சிரிப்பால ஊர்ல இருக்க பாதி பசங்க தூக்கத்த கெடுக்கறத தவிர.//

ஹும்ம்ம்... என்னத்த சொல்ல...

Raghav said...

//துடுக்குத் தனம் - அதுக்கு வேற பேர் வைக்கனும்னா, சூர்யான்னு வைச்சா பொருத்தமா இருக்கும்…//

ஹி ஹி.. இன்னொரு பேரு கூட வைக்கலாம்.. அத எங்கக்கா.. தாரணிப்பிரியா வந்து சொல்லுவாங்க :)

Raghav said...

//“உங்கண்ணு என்ன பொடனீலையா இருக்கு?”//

ம்.. வார்த்தைப் பிரயோகம் நல்லாருக்கு..

Raghav said...

//“சரி, சரி, வெசையா வா…” //

வெரசா வான்னு சொல்லி கேள்விப்பட்டுருக்கேன், இது என்ன?

Raghav said...

//பழ்கலைகழகம் //

ஆஹா, என்னதிது.. பல்கலைக்கழகம் திருத்திருங்க... :)

Raghav said...

//“ஏன்ணா! சூர்யாவ கிண்டல் பண்றத தவிர //

ஏண்ணே ன்னு வரும்னு நினைக்கிறேன்.. கிராம வழக்கில் பெண்கள் அண்ணான்னு சொல்ல மாட்டாங்க, அண்ணேன்னு தான் சொல்வாங்கன்னு நினைக்கிறேன்..

Raghav said...

முதல் பகுதி அருமைப்பா.. கலக்குங்க..

Divyapriya said...


G3

Thanks G3...கண்டிப்பா சீக்கரம் போட்டு முடிச்சிடறேன் இந்த கதைய :)

---
சந்தனமுல்லை

சோகமெல்லாம் இல்லை :))

---
நிமல்-NiMaL

ஏதோ வட்டார வழக்கு இல்ல, பிரசித்தி வாய்ந்த எங்கூரு கொங்குத் தமிழ் :)

---
ராகவ்

நன்றி ராகவ்....

//வெரசா வான்னு சொல்லி கேள்விப்பட்டுருக்கேன், இது என்ன?//

விசைங்கறத தான் பேச்சு வழக்குல வெசைன்னு சொல்லிக் கேட்ருக்கேன்...

//ஏண்ணே ன்னு வரும்னு நினைக்கிறேன்..//

அது மதுரை பக்கம் இல்லையா? நான் எங்க ஊர்ல (அதான் கோயமுத்தூர்ல) இந்த மாதிரி அண்ணேன்னு சொல்லிக் கேட்டதில்லை...அண்ணா தான் :)) தாரணி அக்கா நீங்களும் சொல்லுங்க :)

Anonymous said...

ஒரு வழியா சூர்யகாந்தி ஆரம்பிச்சாச்சு. முதல் பாகமே சர்ருன்னு ஜெட் வேகத்தில்.. கதாபாத்திர வர்ணனைகளும் வசனங்களும் அருமை. அப்படியே கிராமத்தை கண் முன் நிறுத்தின மாதிரி. இவ்ளோவும் பண்ணிட்டு அந்த ஐஷ்வர்யாவையும் கொஞ்சம் விலாவரியா வர்ணிங்கோ.. :)

ஆரம்பக்கவிதை சூர்யாவின் படம் அசத்தல். தொடருங்கள்.. ப்இன் தொடர காத்திருக்கிறோம்.

அப்படியே சூர்யா விழுந்ததில சிதறுன நெல்லுமணிகளைப்போல ஆங்காங்கே எழுத்துப்பிழைகளையும் கொஞ்சம் கவனியுங்கோ

Divya said...

அசத்தலான ஆரம்பம் திவ்யப்ரியா:))

எந்த ஊரு தமிழ் இது??? ரொம்ப ரியலிஸ்டிக்கா இருக்கு உரையாடல்கள் :))
அதுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு உங்களுக்கு:))

முதலில் வரும் கவிதை சூப்பர்ப் !!!

நீங்க வரைந்திருந்த படம் சூப்பரோ சூப்பர் :)))

தமிழ் said...

தாங்கள் வரைந்திருந்த படம்.
இந்தத் தமிழைக் கேட்டு தான்
எத்தனை நாள்கள் ஆயிற்று.

இந்த உரையாடல்களைப் பார்க்கும்பொழுதும் இவை எல்லாம்
என் உதடுகள் உச்சரித்தாக தான் உணரத் தோன்றுகிறது.

வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

படம் முயற்சி நல்லாயிருக்கு.

7 பார்ட்டா ...

அருமைங்க.

பொருமையா எல்லாத்தையும் படிக்கனும்

உங்கள் தமிழும் அழகு.

கவிதை வரிகள் ரொம்ப அருமை.

வாழ்த்துக்கள்.

புதியவன் said...

ஆஹா...அசத்தலான ஒரு கிராமியக் கதை கவிதையோட ஆரம்பிச்சிருக்கீங்க...
வட்டாரத் தமிழ் இனிக்குது (இது கொங்குத் தமிழா...?)...நீங்க வரைந்த படம் அழகு...கதையின் அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்...

Vijay said...

என்ன சொல்லறதுன்னே தெரியலை. திவ்யப்ரியாவுக்குள் இவ்வளவு அற்புதமான கதாசிரியரா? வாவ்.

வட்டாரத்தமிழில் கதை. அப்படியே கதிர் விட்டுக்கே கூட்டிட்டுப் போய் கண் முன்னாடி நடக்கற மாதிரி இருக்கு :-)

அடுத்த பாகம் சீக்கிரமா போடுங்க.

/விஜய்

Vijay said...

நிறைய பேர் இண்டர்நெட்டிலிருந்து சுட்டுத்தான் தன் கதைக்குப் படம் போடுவாங்க. ஆனால் நீங்க, தானே படமும் வரைந்து தள்ளியிருக்கீங்க. அசத்தல்.

Smriti said...

Posted AT LAST ! Phew !

gils said...

!!! aaaha...unga blogla poda neengalay padam drawingsa...superunga..kalakareenga..kathai kavithai padam varaithal karadi kazhuthai nerithal...wow!! pinreenga..evlo thermais unga kita

gils said...

7 parta!! ovonum ivlo perusa!! peasma booka poatu pdfa anupidungalen..asathalana tamizhnga ungalthu..nalaruku post

மேவி... said...

story is very good.
the picture is awesome....
since its in th village slang finding it little difficult to read.....
waiting for the next part....

Anonymous said...

semma local flair in the new blog...enna ma slang use paniruka..,,i had read this part in your note but when i read now only i m able to see the typical conversations which we get to see in our villages...very well done..

தாரணி பிரியா said...

திவ்யா நீங்க ஸ்கிராப் போடும்போது நான் இங்க இந்த கதையை தான் படிச்சிக்கிட்டு இருந்தேன் :)

தாரணி பிரியா said...

நம்மூரு பாஷை சும்மா பிச்சி உதறி இருக்கிங்க. படிக்க படிக்க ரொம்ப சந்தோசமா இருக்குங்க. இப்ப எங்க இங்க ஊருல்ல கூட யாரும் இந்த மாதிரி பேசறது இல்லைங்க. பெறவு வேற யாரு பேசறது. இந்த மாதிரி நாலு பேரு எழுதி அத படிச்சாதான் உண்டு போல.

தாரணி பிரியா said...

அப்படியே எங்க வூட்டு பக்கமிருக்கற ஒரு தோட்டத்துக்காரர் வூட்டுக்கு போன மாதிரி இருக்குங்க திவ்யா. சூர்யாவோட படம் சூப்பருங்க. கதிர் தேனு எல்லாமும் கூட சூப்பர். அப்பத்தா ஒவரா சவுண்ட் விடுது போல. சரி விடுங்க எல்லாம் நம்ம வூடு போலதானே

தாரணி பிரியா said...

அப்புறம் அந்த கவிதை வரிகள் என்ன சொல்லறது.

சூப்பரா கவிதை எழுதற, கதை எழுதற, மொக்கையும் போடற, சிரிக்கவும் வெக்கற. அடுத்த தடவை ஊருக்கு வரும் போது ஆத்தாகிட்ட சொல்லி சுத்தி போட சொல்லு தாயி :)

தாரணி பிரியா said...

// Raghav said...
//துடுக்குத் தனம் - அதுக்கு வேற பேர் வைக்கனும்னா, சூர்யான்னு வைச்சா பொருத்தமா இருக்கும்…//

ஹி ஹி.. இன்னொரு பேரு கூட வைக்கலாம்.. அத எங்கக்கா.. தாரணிப்பிரியா வந்து சொல்லுவாங்க ://

என்ன பேரு வெக்கலாம் ராகவ்? தி- இந்த எழுத்துல ஆரம்பிச்சா நல்லா இருக்கும்தானே. அப்புறம் சூர்யா மாதிரியே யா- ல முடிஞ்சா இன்னும் நல்லா இருக்கும். நடுவில இருக்கற ஒரு எழுத்தை நீங்க சொல்லுங்க :)

தாரணி பிரியா said...

// Divyapriya said


விசைங்கறத தான் பேச்சு வழக்குல வெசைன்னு சொல்லிக் கேட்ருக்கேன்...

அது மதுரை பக்கம் இல்லையா? நான் எங்க ஊர்ல (அதான் கோயமுத்தூர்ல) இந்த மாதிரி அண்ணேன்னு சொல்லிக் கேட்டதில்லை...அண்ணா தான் :)) தாரணி அக்கா நீங்களும் சொல்லுங்க :)//

நாங்க வெசையா இல்லைன்னா வெடுக்குனு அப்படின்னுதான் சொல்லுவோம்.

அப்புறம் அதே போல அண்ணாதான் அண்ணே இல்லை ராகவ்

Anonymous said...

Superb Divya:)
I love the way you introduced the characters:)
Eagerly waiting for the upcoming posts!!!

-Mathu

Raghav said...

//தாரணி பிரியா said...
என்ன பேரு வெக்கலாம் ராகவ்? தி- இந்த எழுத்துல ஆரம்பிச்சா நல்லா இருக்கும்தானே. அப்புறம் சூர்யா மாதிரியே யா- ல முடிஞ்சா இன்னும் நல்லா இருக்கும் //

பாட்டுக்குப் பாட்டுல சொல்ற மாதிரி, தி, தா எதுல வேணும்னாலும் தொடங்கலாம்.. கடைசி எழுத்து ’யா’ நடுவுல எத்தனை எழுத்து வேணும்னாலும் வரலாம் :)

Raghav said...

// Divya said...
அசத்தலான ஆரம்பம் திவ்யப்ரியா:))

எந்த ஊரு தமிழ் இது???//

கி கி கி.. உள்ளூர்க்காரவுகளுக்கே கண்டுபிடிக்க முடியலையா :))

மேவி... said...

story is nice reading for 2nd time

தாரணி பிரியா said...

//Raghav said...
//தாரணி பிரியா said...
என்ன பேரு வெக்கலாம் ராகவ்? தி- இந்த எழுத்துல ஆரம்பிச்சா நல்லா இருக்கும்தானே. அப்புறம் சூர்யா மாதிரியே யா- ல முடிஞ்சா இன்னும் நல்லா இருக்கும் //

பாட்டுக்குப் பாட்டுல சொல்ற மாதிரி, தி, தா எதுல வேணும்னாலும் தொடங்கலாம்.. கடைசி எழுத்து ’யா’ நடுவுல எத்தனை எழுத்து வேணும்னாலும் வரலாம் :)
//

தம்பி என்ன இது. இப்படியெல்லாம் சொன்னா எப்படிப்பா எப்படி. :)

பாசகி said...

//7 பார்ட்டையும் படிச்சுட்டு, எப்படி இருக்குன்னு சொல்லுங்க...//

நீங்களே சொல்லிட்டதால ஏழும் படிச்சிட்டுதான் சொல்லுவேன் :)

எனக்கு நீங்க வரைஞ்சிருந்த படம் ரொம்ப பிடிச்சிருந்தது...

அப்பறம் நம்மூர் பேச்சு அங்கங்க காணாம போறமாதிரி தெரியுது, கொங்கு தமிழை இன்னும் ஆழமாக்குங்க...

Divyapriya said...


மதி said...

//அந்த ஐஷ்வர்யாவையும் கொஞ்சம் விலாவரியா வர்ணிங்கோ.. :)//

செஞ்சிட்டா போச்சு ;)

---
Divya
//எந்த ஊரு தமிழ் இது???//

சொன்னது நீ தானா? சொல்…சொல்…அவ்வ்வ்வ்வ் :(

---
திகழ்மிளிர்

நன்றி திகழ்மிளிர்

----
நட்புடன் ஜமால்

நன்றி ஜமால்

---
விஜய்
//வட்டாரத்தமிழில் கதை. அப்படியே கதிர் விட்டுக்கே கூட்டிட்டுப் போய் கண் முன்னாடி நடக்கற மாதிரி இருக்கு :-)//

அப்ப அடுத்த பார்ட்ல ஒரு கோவிலுக்கு போன மாதிரி இருக்கான்னு சொல்லுங்க :D

--
Smriti
ஆமா, உங்களை எல்லாம் தாண்டி ஒரு வழியா போட்டாச்சு :)

Divyapriya said...


gils said...
// 7 parta!! ovonum ivlo perusa!!//

உங்களுக்கு பெரிய பதிவுகளே அலர்ஜி போல ;)
---
MayVee

Thanks Mayvee
---
Badri

Thanks bad
---
தாரணி பிரியா

//ஆத்தாகிட்ட சொல்லி சுத்தி போட சொல்லு தாயி :)//

சுத்திய கால்ல போட சொல்றீங்களா தாரணி? ;)

//நாங்க வெசையா இல்லைன்னா வெடுக்குனு அப்படின்னுதான் சொல்லுவோம்.
அப்புறம் அதே போல அண்ணாதான் அண்ணே இல்லை ராகவ்//

அப்படி சொல்லுங்க :)
---

Mathu Krishna

Thanks a lot mathu Krishna…keep reading
---
Raghav said...

//பாட்டுக்குப் பாட்டுல சொல்ற மாதிரி, தி, தா எதுல வேணும்னாலும் தொடங்கலாம்.. கடைசி எழுத்து ’யா’ நடுவுல எத்தனை எழுத்து வேணும்னாலும் வரலாம் :)//

ஹா ஹா, இது நல்லா இருக்கே ;)
---
MayVee said...

//story is nice reading for 2nd time//

ஊஹ்…thanks a lot…

Divyapriya said...
This comment has been removed by the author.
Divyapriya said...

பாசகி

நன்றி பாசகி...ஏதோ எனக்கு தெரிஞ்ச கொங்குத் தமிழ போடறேன் :)

MSK / Saravana said...

//இந்த கதைய எழுத ஆரம்பிச்சது , April 2007 !!! அப்ப இந்த வலைப்பூ கூட ஆரம்பிக்கல. இந்த கதைய போடறதுக்காகத் தான் இந்த வலைப்பூவையே ஆரம்பிச்சேன். //

உங்க லட்சிய கனவு கதை என்பதால் கொஞ்சம் விமர்சன நோக்கோடு படித்தேன்.. :)

MSK / Saravana said...

சும்மா சொல்ல கூடாது.. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.. அதுவும் நேட்டிவிட்டி தமிழோட.. எப்படீங்க அது..??

MSK / Saravana said...

//, அவனோட சேந்து நாமளும் அவங்க வீட்டுக்குள்ளார போவோமா?//
//அவள பத்தி, இவ்ளோ பெரிய விளக்கம் குடுத்ததுல, புள்ளி மான் கணக்கா ஓடி வந்தவ இப்ப என்ன பண்ணிட்டு இருக்கான்னு பாக்க மறந்துட்டமே! ஹய்யய்யோ!! என்னதிது?//

இந்த இரண்டு வரிகளும் தேவை இல்லை என்று கருதுகிறேன்.. கதைக்குள் இருக்கும்போது யாரோ என்னை வெளியே இழுத்து போட்டுவிட்டு மீண்டும் கதைக்குள் கூட்டிசென்றதை போல் இருக்கு.. இந்த இரண்டுவரிகளும் அதைதான் செய்கின்றன..

MSK / Saravana said...

அப்பறம்.. எப்போ அடுத்த பாகம் எழுதுவீங்க..??

MSK / Saravana said...

சூர்யா sketch நல்லா இருந்தது..

Princess said...

பேச்சுத் தமிழ்ல உங்க கிராமியக் கதை ரொம்ப அழகு....நடு நடுவே வரும் கவிதைகள் இன்னும் அழகு...2 பகுதியும் படிச்சுட்டேன்...அடுத்த பகுதி எப்போ???

ஜியா said...

athukkulla rendu partaa? innum vaasikala... tomorow officela poi padikiren :))

ஜியா said...

oru 5oyaa vachikonga

ஜியா said...

:)) first kathaiyaa?? athaan sema scenaa irukku.. athuvum vattaara vazakku.. kalakura Piryaa... ;))