Tuesday, July 22, 2008

கிருஷ்ணா கஃபே - 2

"சரண்யா! உன்ன பெங்களூர் பிராஜக்ட்டுக்கு அசைன் பண்ணி இருக்கோம், You should be ready to fly to bangalore in a short while"


திடீரென்று அவள் மானேஜர் இப்படி வந்து சொல்லவும், சரண்யாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒன்னரை வருடமாக பழகிய இடம் சென்னை….அதிலும் பள்ளியில் இருந்து, இன்று வரை அவள் தோழி ரம்யாவை பிரிந்து இருந்ததே இல்லை.


வேறு வழியின்றி, அரை மனதுடன் பெங்களூர் வந்து சேர்ந்தாள் சரண்யா.
போதா குறைக்கு லோக்கல் ஆன்சைட் என்று வேறு ஒரு கம்பனியில் போட்டு விட்டார்கள். புது ஊர், புது கம்பனி என்று எதுவுமே அவளுக்கு பிடிக்கவில்லை.


அவள் டீமோடு தான் தினமும் மதியம் சாப்பிட சென்றாள்…இரவிலும் பி.ஜி யில் ஒரு கூட்டமே இருந்தது…என்றாலும், அவள் மனதிற்க்குள் எதோ ஒரு இனம் புரியாத தனிமை. இவ்வளவு பேர் இருந்தும் தனக்கான நட்பாய் யாரையுமே தோனவில்லை அவளுக்கு…சரி இங்கு வந்து ஒரு வாரம் தானே ஆகிறது...போக, போக எல்லாம் சரி ஆகிவிடும் என்று தன்னை தானே சாமாதானப் படுத்திக் கொண்டாள்.


அப்போது தான் ஒரு நாள் எதிர்பாரா விதமாக அலுவலகத்தில் விக்னேஷை பார்த்தாள் சரண்யா. அவனை அங்கு பார்த்தவுடன், அவள் மனதிற்குள் ஒரு இன்ப அதிர்ச்சி. எப்போதோ தொலைத்த ஒரு பொருள் எதிர்பாரா விதமாக கிடைத்ததை போல் உணர்ந்தாள்.


அவளை பார்த்தவுடம், முகம் மலர்ந்து விக்னேஷ்,"ஹேய்!!! What a surprise!!! நீ எங்க இங்க?"


"என்ன லோக்கல் ஆன்சைட் இங்க போட்டுடாங்க, ஆமா நீங்க எப்டி இங்க?"


"நான் இந்த கம்பனிக்கு மாறி நாலு மாசம் ஆகுது..., அப்புறம் பெங்களூர் வாசம் எப்டி இருக்கு?"


"அதே ஏன் கேக்குறீங்க? இங்க யாருமே இல்ல, ரொம்ப போர் அடிக்குது, ஹாஸ்ட்டல்ல சாப்பாடும் சரி இல்ல"... ஒரே சோகமாக சரண்யா சொல்லவும்,


"Don’t worry...இங்க பக்கத்துல தான் கிருஷ்ண கஃபே இருக்கு, I’ll accompany you for dinner tonight"


இப்டியாக ஆபிஸிலும், கிருஷ்ணா கஃபேயிலும் பார்த்து, பேசி, பழகி ஒரு சில நாட்களிலேயே அவர்களின் நட்புப் பாலம் இறுகியது!


கிருஷ்ண கஃபே...ஒரு சனிக்கிழமை மதியம்....விக்னேஷும், சரண்யாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.


நடுவில் சரண்யா, "ATM வேற போகணும், பர்ஸ் காலி" என்றாள்.


இதை கேட்டு விக்னேஷுக்கு புரை ஏறியது, "யே! என்ன குண்ட தூக்கி போடுற? என்கிட்டயும் 50 ரூபா தான் இருக்கு!!!"


"என்ன சொல்றீங்க? என்கிட்டே மொத்தமே 20 ரூபா தான் இருக்கு!!!


"யேய் லூசு? நீ தான் எப்பயுமே எங்க கம்பனில reimbursement இருக்குன்னு சொல்லி, பே பண்ணுவே? அந்த தைரியத்துல நானும் வந்துட்டேன்...இங்க கார்டும் அக்ஸப்ட் பண்ண மாட்டாங்க. பணம் இல்லைன்னு மொதல்லையே தெரியாதா? என்ன விளையாடறயா?"


"Hello Sir.!! எனக்கென்ன தெரியும்? ஒரு பய்யன் 100 ரூபா கூட இல்லாமயா வெளிய வருவீங்க?"


"ஹய்யயோ...இப்ப என்ன பண்றது?"


"ஒன்னும் பண்ண முடியாது, ரெண்டு பேறும் கிருஷ்ண கஃபே இட்லி ரகசியத்த இன்னிக்கு தெரிஞ்சுக்கலாம்..."


விக்னேஷ் தலையில் அடித்துக் கொண்டே, "கஷ்டம்...உன்னோட எல்லாம் சாப்ட வந்தேன் பாரு, என்ன சொல்லணும்..." என்றபடி அவன் நண்பனுக்கு ஃபோன் செய்தான்.


சாப்பிட்டு முடித்தவுடன் சரண்யாவின் பீ.ஜி யை நோக்கி இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.


"ச்சே...உன்னால இன்னிக்கு என் மானமே போச்சு! என் ரூம் மேட் வேற எதுவுமே பேசாம பணத்தைக் குடுத்துட்டு, நக்கலா ஒரு லுக்கு விட்டுட்டு போய்ட்டான்...ரூம்ல போய் என்ன ஓட்டித் தள்ளப் போறான்.."


இது எதுவுமே கேட்காதது போல் சரண்யா எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள், "வாவ்…அங்க பாருங்களேன்…அந்த டெட்டி எவ்ளோ அழகா இருக்கு!!!" ஒரு கடையில் இருந்த டெட்டி பியர் பொம்மையை பார்த்து வியந்து போய் சொன்னாள் சரண்யா.


"கஷ்ட காலம்…இந்த பொண்ணுகளுகெல்லாம் ஏன் இப்டி ஒரு weird ஆன டேஸ்ட்? இல்ல, நான் தெரியாம தான் கேக்கறேன்…உனக்கென்ன மனசுல இன்னும் குழந்தைன்னு நினப்பா?"


"See…taste always differs, உங்களுக்கு ஒன்னு பிடிக்கலன்னா அது ரொம்ப மட்டமானதாயிடுமா?"


"சரி…ஓகே…ஓகே…கூல்…கூல், நாளைக்கு பாப்போம்…"


இந்த சம்பவம் (cashless lunch ) நடந்து, கிட்டதட்ட ஒரு மாதம் இருக்கும். அன்று சரண்யாவின் பிறந்த நாள்.


இரவு, 12 மணிக்கு யாரோ ரூம் கதவை தட்டினார்கள். திறந்தால் ஹௌஸ் கீப்பீங் பெண் கைய்யில் ஒரு கவர், மற்றும் போக்கேவுடன் நின்றிருந்தார்.
"Happy Birthday!!!" என்று சொல்லி விட்டு அவர் செல்லவும்,


"யாரு இவ்ளோ பெரிய கவர் அனுப்ச்சிருக்காங்க…" சரண்யா யோசித்தவாறே திருப்பி திருப்பி பார்க்க, எதிலுமே பெயர் எழுதி இருக்கவில்லை.


கவரை பிரித்துக் கொண்டிருக்கும் போதே, ஃபோன் அடித்தது. அவள் தோழி ரம்யா தான்.


"சரண்…Happy B'day, Many many more happy returns of the day"


ரம்யாவின் குரலில் இருந்த உற்சாகம் அவளுக்கும் ஒட்டிக் கொண்டது…"Thanks ரம்மி…எப்பயும் போல நீ தான் இன்னிக்கும் முதல்ல விஷ் பண்ண…"


"ஹ்ம்ம்…அப்புறம்? வேற யாரு பண்ணுவா? ம்ம்…சொல்லு, wats the plan for tommorow?"


கவரை பிரித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்த சரண்யா, அதனுள் இருந்த பரிசை பார்த்ததும் திக்கு முக்காடி போனாள். அன்று அவள் கடையில் பார்த்து வியந்த அதே டெட்டி. விக்னேஷை போலவே அழகாய் சிரித்துக் கொண்டிருந்தது.


"ரம்மி…யாரோ கால் வெய்ட்டிங்ல இருக்காங்க…அப்புறம் கூப்டட்டா?"
"ஒகே…யு கேரி ஆன்…பை பை"


ரம்யா ஃபோனை வைத்ததும், சரண்யா உடனே விக்னேஷிற்க்கு ஃபோன் செய்தாள்.


அவன், "என்ன மேடம்? B'day அதுவுமா நீங்களே எனக்கு கால் பண்ணீட்டீங்க….ஹ்ம்ம்…great…anyways, happy b'day" என்றான்.


"விக்னேஷ்! Thank you so much for the gift, நான் except பண்ணவே இல்ல…such a thoughtful gift…thank you sooooo much"


"ஹேய்….போதும், போதும், thanks எல்லாம் கொஞ்சம் மிச்சம் வச்சுக்கோ…"
"ஆமா…இத எப்ப வாங்கினீங்க?"


"அன்னிக்கே வாங்கிட்டேன்…ஆனா இத எங்க ரூம்ல மறச்சு வைக்கறதுக்குள்ள படாத பாடு பட்டுட்டேன்"


பிறகு ஃபோனை வைக்கவே மனமின்றி இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.


பாலாஜியின் தங்கை அகல்யா திருமணம் பற்றி பேசுவதற்காக விக்னேஷ், சரண்யாவுக்கு ஃபோன் செய்தான். எடுத்தவுன் சரண்யா ஒரே சோகமாக பேச, விக்னேஷ் அவன் சொல்ல வந்ததயே மறந்து விட்டு, "என்ன சரண்யா? டல்லா பேசுற? என்ன ஆச்சு…"


"புஜ்ஜி மேல காஃபி கொட்டிடுத்து, அதான் அத குளிக்க வச்சு, காய வச்சிருக்கேன்…மறுபடியும் அது பழைய மாதிரி ஆகுமான்னு தெரியல…"

"அந்த பொம்மைய எதோ ஆசப்பட்டியேன்னு வாங்கி குடுத்தா…இதெல்லாம் உனக்கு ஓவரா தெரியல? அதுல காஃபி கொட்டிச்சுன்னு ஒரு சோகம்…இதுல அதுக்கு புஜ்ஜின்னு ஒரு பேரு வேற…வேணாம்…நான் எதாவது சொல்லிட போறேன்….ஆமா"

"உங்களுக்கு என்ன தெரியும்? அது எவ்ளோ அழகா இருந்துச்சு…தண்ணி பட்டப்புறம் இப்ப பாக்க எப்டி இருக்கு தெரியுமா?"


"ஏன்? உன்ன மாதிரி இருக்கா???" என்று சொல்லி விட்டு சிரித்த விக்னேஷ், "ஹேய்…நீ பண்ண அலப்பரைல நான் சொல்ல வந்ததே மறந்துட்டேன்…அகல்யாக்கு கல்யாணம், தெரியுமா?"

"ஹ்ம்ம்ம்…நேத்து தான் அவ ஃபோன் பண்ணி சொன்னா…பத்திரிக்கை கூட அனுப்பறேன்னா…"

"ஓஹ்…நீயும் வரல்ல?"

"ஹ்ம்ம்ம்…தெரியல...எங்களுக்குள்ள ஸ்கூலுக்கு அப்புறம் அவ்ளவா டச்சே இல்ல, அதுவும் மத்த ஸ்கூல் ஃபெரண்ஸ் யாரும் வராங்களான்னு தெரியல…"


"ஹேய்…கம் ஆன்…இதுல என்ன இருக்கு? அதான் உன் ஃபெரண்ட் ரம்யா இருக்காளே, ரெண்டு பேரும் சேந்து வாங்க…வீக்கெண்டு, அதுவும் நம்ம ஊர்லயே நடக்குது…ரிசெப்ஷன் மட்டும் தான? ரெண்டு பேரும் வாங்க…"


விக்னேஷ் இப்படி வற்புறுத்திச் சொல்லவும், சரண்யா, "சரி, அப்ப நான் ரம்யாகிட்ட கேட்டுட்டு சொல்றேன்…"


அகல்யா திருமண நாளும் நெருங்கி வந்தது. ஒரு நாள் முன்னதாகவே விக்னேஷ் கிளம்பி சென்று விட்டான். வெள்ளி இரவு சரண்யா தனியாக ரெயில்வே ஸ்டேஷன் சென்று ட்ரெய்ன் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தாள்.


பெங்களூரில் இருந்து ஈரோட்டிக்கு ட்ரைய்ன் பயனம்…இது வரை ஒரு முறை கூட தனித்து பயனித்ததில்லை அவள். எப்போதுமே விக்னேஷ் அவளுடன் இருந்திருக்கிறான். நான்கு மணிக்கெல்லாம் ட்ரையின் ஈரொடை சென்று அடைந்து விடும் என்பதால், விக்னேஷ்ற்க்கு ட்ரைனில் பயனிப்பதே பிடிக்காது...இருந்தாலும் சரண்யாவிற்காக, பஸ்சில் செல்லாமல் அவளுடன் வருவான்.


இந்த ஆறு மாதங்களாக, அதுவரை பழகிய நண்பர்கள் யாருமே இல்லாத ஒரு ஊரில், தனித்து இருந்த ஒரு உணர்வே அவளுக்கு வரவில்லை. இப்போது விக்னேஷ் இங்கு இல்லாததை நினைத்தால், யாருமே இல்லாதது போல் தோன்றியது அவளுக்கு. 'ச்சே...இப்டி ஒரு நண்பன் கிடைக்க தான் கடவுள் நம்மள பெங்களூர் அனுப்சு வச்சிருக்கார்’ என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள். சென்னை ரெயில்வேய் ஸ்டேஷனில் அவளை பார்த்தவுடன், "Excuse me, எனக்கு கண்ணு தெரியாது, கொஞ்சம் வழி விடறீங்களா?" என்று அவன் கேட்டது நினைவுக்கு வந்து, அவள் உதடுகளில் ஒரு சிறு புன்னகை ஒட்டிக் கொண்டது.


ரெயில்வேய் ஸ்டேஷனில், வேக வேகமாக சரண்யாவை கடந்து செல்லும் பல தரப்பட்ட மக்கள்....அழும் குழந்தைகள்…தகவல் ஒலிபெருக்கியின் அலறல்...பக்கத்து பிளாட் ஃபார்மில் எதோ ஒரு ட்ரைய்ன் கிளம்பும் சத்தம்...இத்தனை இரைச்சலுக்கு மத்தியில் தனக்கென ஒரு உலகை ஷ்ரிஷ்ட்டித்துக் கொண்டு அதில் மூழ்கி போய்யிருந்தாள் சரண்யா. அந்த உலகத்தில் அவளுடன் இருந்த அந்த இன்னொருவன் யார் என்று சொல்லவும் வேண்டுமா என்ன?


விக்னேஷ் இல்லாத அந்த ஒரு பயனத்தையும், பெரும்பாலும் அவன் நினைவுகளுடனேயே பயனித்து முடித்தாள் சரண்யா.


ஊரில் விக்னேஷோ சரண்யாவை பார்க்காத அந்த ஒரு நாளில் பல விதமாக யோசித்துக் கொண்டிருந்தான். வெகு நாட்களாக அவனுக்குள் மருகிக் கொண்டிருந்த ஒரு உணர்வு, அவனையே ஆட்கொள்வது போல உணர்ந்தான். மிகுந்த சந்தோஷமா? இல்லை, சொல்ல முடியாத துக்கமா? இல்லை, இரண்டுமே கலந்த ஒரு உணர்வா? எதுவாக இருந்தாலும், அந்த உணர்வை...அந்த சுகமான வலியை...ஒதுக்கித் தள்ளவும் முடியவில்லை...ரசித்து அனுபவிக்கவும் முடியவில்லை.


விக்னேஷிற்கு முதல் best friend அவன் அம்மா தான், அப்படி இருக்கும் போது, இப்படி மந்திரித்து விட்ட கோழி மாதிரி அவன் இருந்தால் அவன் அம்மா கண்டு பிடிக்க மாட்டார்களா என்ன?


மகனை இப்படி பார்த்தே பழக்கப் பட்டிறாத மாலதி, அவனிடமே, "என்னப்பா? ஒரு மாதிரியா இருக்க?" என்று கேட்டு விட்டார்.


"அதெல்லாம் ஒன்னும் இல்லமா" என்று சொல்லி அப்போதைக்கு மழுப்பி விட்டான்.


அகல்யா திருமணத்திற்க்கு கிளம்புவதற்க்கு முன், சாதாரணமாக கேட்பது போல் விக்னேஷ் அவன் அம்மாவிடம், "ஏன்மா! நீங்க Love marriage பத்தி என்ன நினக்கறீங்க?" என்று சாது போல கேட்டான்.


விக்னேஷின் அம்மா அதற்க்கு, "ஏன்டா திடீர்ன்னு இப்டி கேக்குற?"
"இல்ல..ச்சும்மா தான்…இப்ப…நானே ஒரு பொண்ண லவ் பண்றேன்னு வச்சுக்கோங்க…நீங்க என்ன சொல்லுவீங்க?"


"போடா! கிறுக்குப் பயலே…இப்ப எதுக்குடா உனக்கு கல்யாணத்த பத்தி யோசனை? இன்னும் ரெண்டு வருஷத்துல நானே உனக்கு ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வக்கறேன்…"


"இல்ல மா…அது வந்து, நான்…ஒரு பொண்ண…" என்று விக்னேஷ் இழுப்பதற்குள், அவன் அப்பா கிருஷ்ணன் அங்கு வந்து, "கல்யாணத்துக்கு கிளம்பாம அம்மாவும், பய்யனும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க? உங்கள டிராப் பண்ணிட்டு நான் வேற ஒரு கல்யாணம் அட்டெண்ட் பண்ணனும், சீக்ரம்…" என்று சொல்ல, எதுவும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் விக்னேஷ்.

[தொடரும்]

65 comments:

Vijay said...

திவ்யப்ப்ரியா,
Teddy is really cute.

\\"என்ன லோக்கல் ஆன்சைட் இங்க போட்டுடாங்க,\\
கொடிது கொடிது சாஃப்ட்வேர் வேலையில் பெரிய கொடியது

\\வேறு வழியின்றி, அரை மனதுடன் பெங்களூர் வந்து சேர்ந்தாள் சரண்யா\\
நேரம் தானே வெந்து உருகற சென்னையிலிருந்து பெங்களுர்ருக்கு மாற்றினால் அரை மனதுடன் தான் வரணுமா?


\\"Don’t worry...இங்க பக்கத்துல தான் கிருஷ்ண கஃபே இருக்கு, I’ll accompany you for dinner tonight"\\
இன்றைக்கே கிருஷ்ணா கஃபேக்கு சென்றுக்கு சென்று இந்தப் பதிவை ஒட்டிவிடுகிறேன். கிருஷ்ணா கஃபேக்கு இலவச விளம்பரம். ஆனாலும் தமிழ் நாட்டு சாப்பாடு வேறெங்கும் நல்லா இல்லை.


\\"என்ன சொல்றீங்க? என்கிட்டே மொத்தமே 20 ரூபா தான் இருக்கு!!!\\
எந்தப் பொண்ணு ரூபாய் எடுத்துக்கிட்டு வெளியிலே வந்திருக்கு?


\\"புஜ்ஜி மேல காஃபி கொட்டிடுத்து, அதான் அத குளிக்க வச்சு, காய வச்சிருக்கேன்…\\
நானா இருந்தா நேர்ல வந்து இரண்டு சாத்து சாத்திருப்பேன். புஜ்ஜியாம் அதுல காப்பி கொட்டிடுத்தாம். அதுக்கு சோகமாம். அதுக்கு ஷேம்பூ போட்டு குளியல் வேற :)


\\"இல்ல..ச்சும்மா தான்…இப்ப…நானே ஒரு பொண்ண லவ் பண்றேன்னு வச்சுக்கோங்க…நீங்க என்ன சொல்லுவீங்க?"\\

விளக்குமாத்துக் கொண்டைக்கு பட்டுகுஞ்சலம் கேக்குதோ?
செருப்பாலே அடிப்பேன்னு போட்டிருந்தா நன்னா இருக்குமே :)

Very interesting!!!

Divyapriya said...

@ விஜய்

விஜய்!!! ROTFL comment :-D
thanks for imm. response, btw :))

முகுந்தன் said...

திவ்யப்ரியா ,

கதை ரொம்ப நல்லா இருக்கு...

முகுந்தன் said...

@ விஜய்
//நேரம் தானே வெந்து உருகற சென்னையிலிருந்து பெங்களுர்ருக்கு
மாற்றினால் அரை மனதுடன் தான் வரணுமா?//

யாருப்பா அது ? சென்னையை பத்தி தப்பா சொன்னா கீசிடுவேன் :-)

முகுந்தன் said...

@ விஜய்
//நேரம் தானே வெந்து உருகற சென்னையிலிருந்து பெங்களுர்ருக்கு
மாற்றினால் அரை மனதுடன் தான் வரணுமா?//

யாருப்பா அது ? சென்னையை பத்தி தப்பா சொன்னா கீசிடுவேன் :-)

Raghav said...

ஜூப்பர்.. கிருஷ்ணா கஃபேல எனக்கும் இந்த மாதிரி ஒரு தடவை ஆச்சு.. "யான் பெற்ற இன்பம் எல்லாருக்கும் கிடைச்சுருக்குன்னு நினைக்கிறேன்..

எனக்கென்னவோ கதைகளுக்கு நடுவில் பாட்டு வந்தா நல்லா இருக்குமோன்னு தோனுது..

ஓவியங்கள் ஏன் போடலை... இதுக்கு என் மென்மையான கண்டணங்கள்..

Raghav said...

//முகுந்தன் said...
யாருப்பா அது ? சென்னையை பத்தி தப்பா சொன்னா கீசிடுவேன் :-)//

ராகவன் : பொறாமை !!! ???
முகுந்தன் : ஹே.. ஹே.. லைட்டா !!

முகுந்தன் said...

//ராகவன் : பொறாமை !!! ???
முகுந்தன் : ஹே.. ஹே.. லைட்டா !!//

என்னது ? சிருபிள்ளயாட்டமா :-)

Ramya Ramani said...

திய்வப்ப்ரியா வாழ்துக்கள் :)))அடிச்சு ஆடரீங்க...நடக்கட்டும்..:))


\\
\\வேறு வழியின்றி, அரை மனதுடன் பெங்களூர் வந்து சேர்ந்தாள் சரண்யா\\
நேரம் தானே வெந்து உருகற சென்னையிலிருந்து பெங்களுர்ருக்கு மாற்றினால் அரை மனதுடன் தான் வரணுமா?\\

அட சிங்கார சென்னை என்ன தான் வெயில் கொளுத்தினாலும்..அருமையான ஊருங்க...

Ramya Ramani said...

\\"ரம்மி…யாரோ கால் வெய்ட்டிங்ல இருக்காங்க…அப்புறம் கூப்டட்டா?"
"ஒகே…யு கேரி ஆன்…பை பை"\\

எதார்த்தம்..

Teddy நல்லா இருக்கு..கதைக்காக குளித்ததா இல்லை Monthly Dose of குளியலா??

Ramya Ramani said...

இந்த பளாக் ரூல்ஸ் எல்லாம் விடுங்க..அடுத்த பாகம் இந்த Weekend-குள் போடுங்க பா :)

Raghav said...

//முகுந்தன் said...
என்னது ? சிருபிள்ளயாட்டமா :-)
//

விளையாட வயசு முக்கியமா முகுந்தன்.. எனக்கும் சென்னை பிடிச்ச அளவுக்கு பெங்களூரோ.. இல்லை இப்போ பாஸ்டனாகட்டும் ம்கூம்... 12C பஸ்ல வடபழனிலருந்து கிளம்பி, நந்தனம் ஆபீஸ் போய்ட்டு வந்த கஷ்டம் இருந்தாலும்.. வெய்யில் மயக்கமடைய வைச்சாலும் சென்னைல இது என் வீடு என்னும் உணர்வே மகிழ்ச்சியை கொடுக்கும்.. ஆனால் பெங்களூரில்.. எப்பொழுதும் ஏதோ ஒரு அன்னிய தேசத்தில் இருப்பது போன்ற உணர்வு தான் இருக்கும்..

என்ன பண்ண, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலையும், டவுன் பஸ்ஸையும் ரொம்ப மிஸ் பண்ண தான் செய்றேன்..

Divya said...

திவ்யப்ரியா...........சும்மா டாப் கியர்ல கதை சூப்பரா போகுது,

Divya said...

டயலாக்ஸ் எல்லாமே ரொம்ப இயல்பா....யதார்த்தமா இருப்பது உங்கள் கதையின் ஓட்டத்திற்கு அழகு சேர்க்குது!!

Divya said...

\\யேய் லூசு? நீ தான் எப்பயுமே எங்க கம்பனில reimbursement இருக்குன்னு சொல்லி, பே பண்ணுவே? அந்த தைரியத்துல நானும் வந்துட்டேன்...\\

இல்லீனாலும்.....அப்படியே பில் பே பண்ற மாதிரிதான்:))

ப்ரவாயில்ல....ஒசி டின்னர் சாப்பிட வந்தாலும், டெடி பியர் எல்லாம் ஆசையா வாங்கி கொடுத்திருக்கிறான் பையன், ஸோ குட் பாய் தான்!!

Divya said...

\"Excuse me, எனக்கு கண்ணு தெரியாது, கொஞ்சம் வழி விடறீங்களா?" என்று அவன் கேட்டது நினைவுக்கு வந்து, அவள் உதடுகளில் ஒரு சிறு புன்னகை ஒட்டிக் கொண்டது.\\


you have written these lines in a very cute way.....liked it;)))

Divya said...

நிஜம்மாவே ஒரு டெடி படமெல்லாம் போட்டு அசத்திட்டீங்க திவ்யா,

ஓவியம் தான் மிஸ்ஸிங்....அடுத்த பகுதில கண்டிப்பா போடுங்க சரியா?

முகுந்தன் said...

//வெய்யில் மயக்கமடைய வைச்சாலும் சென்னைல இது என் வீடு என்னும் உணர்வே மகிழ்ச்சியை கொடுக்கும்.. //

நச்சுன்னு சொன்னீங்க .

Divyapriya said...

@முகுந்தன்

//கதை ரொம்ப நல்லா இருக்கு... //

நன்றி Mukunthan…

Divyapriya said...

@Raghav
//ஓவியங்கள் ஏன் போடலை... இதுக்கு என் மென்மையான கண்டணங்கள்..//

ஓவியங்கள் போடாததுக்கு ஒரே ஒரு reason தான்…நானே எதோ கைக்கு வந்த மாதிரி வரஞ்சிட்டு இருக்கேன்…மறுபடியும் அடே முகங்கள, வேற ஒரு போஸ்லயும், வேற ஒரு Expression லயும் வரையுர அளவுக்கு நமக்கு திறமை போதாதுங்க :(

Divyapriya said...

@Ramya Ramani

//திய்வப்ப்ரியா வாழ்துக்கள் :)))அடிச்சு ஆடரீங்க...நடக்கட்டும்..:))
Teddy நல்லா இருக்கு..கதைக்காக குளித்ததா இல்லை Monthly Dose of குளியலா??//

Thanks Ramya…கதைக்காக டெட்டி குளிக்கல, Teddy குளிச்சனால கதைல இந்த part add ஆய்டுச்சு ;-)
and btw, teddy monthly dose of குளியல் எல்லாம் இல்ல, yearly dose of குளியல் :-D

Divyapriya said...

@Divya
//திவ்யப்ரியா...........சும்மா டாப் கியர்ல கதை சூப்பரா போகுது,
you have written these lines in a very cute way.....liked it;)))

ஓவியம் தான் மிஸ்ஸிங்....அடுத்த பகுதில கண்டிப்பா போடுங்க சரியா?//

Thanks Divya…ஒவ்வொரு lineaa ரசிச்சு படிச்சதுக்கு special thanks…ஒரு கதைக்கு ஒரு ஓவியம் போடறேன்..சரியா?

Divyapriya said...

@Raghav

//வெய்யில் மயக்கமடைய வைச்சாலும் சென்னைல இது என் வீடு என்னும் உணர்வே மகிழ்ச்சியை கொடுக்கும்.. //

@முகுந்தன்
//யாருப்பா அது ? சென்னையை பத்தி தப்பா சொன்னா கீசிடுவேன் :-)//

@Ramya
//அட சிங்கார சென்னை என்ன தான் வெயில் கொளுத்தினாலும்..அருமையான ஊருங்க…//


சென்னைய விட பெங்களூர் Climate நல்லா இருக்கும்…தண்ணி கஷ்டம் கிடையாது…இப்டி எவ்வளவோ இருக்கு தான்…ஆனா, சொர்கமே என்றாலும் நம்மூரு போலாகுமா…???

நச்சுன்னு சொன்னீங்க ராகவ்…பேசாம வடபழனி To நந்தனம் ன்னு ஒரு கதைய எழுத ஆரம்பிங்க :)

Raghav said...

//Divyapriya said...
நச்சுன்னு சொன்னீங்க ராகவ்…பேசாம வடபழனி To நந்தனம் ன்னு ஒரு கதைய எழுத ஆரம்பிங்க :)
//

ஹலோ.. மீ ஒன் ஸ்மால் சின்னப் பையன். நாங்கல்லாம் (என்னை நானே மரியாதையா சொல்லிக்கிட்டேன்) கமெண்ட், கருத்து, காமெடி, காலை வாரி விடுறது.. etc இததான் பண்ணுவோம்... சிறகே இல்லை அப்புறம் எங்கே அது விரிஞ்சு பறக்குறது.

இப்போதைக்கு, கண்ணன் பாடல்கள் பத்தி நிறைய எழுதனும். அப்புறம் எனை ஆளும் அப்பன் வரதராஜப் பெருமாள் பத்தி எழுதனும். அதையும் விட சீக்கிரம் இந்தியா வரனும்.

முகுந்தன் said...

//அதையும் விட சீக்கிரம் இந்தியா வரனும்.//

Super. me too.

//இப்போதைக்கு, கண்ணன் பாடல்கள் பத்தி நிறைய எழுதனும். அப்புறம் எனை ஆளும் அப்பன் வரதராஜப் பெருமாள் பத்தி எழுதனும். //

எனக்கு நிறைய கோவிலுக்கு போகனும்னு இருக்கு. பார்ப்போம்

Shiva.G said...

yeppaaa saami.. kadhai padikaradhoda comments padikkaradhuku romba time aagudhu .. n interesting too :)
gr8 going!!
teddy bear ku badhila Tajmahal pottirukalaam ;)
but coffeela kotti tajmahal azhagu poidum nu nenachu podala nu nenakkaren .. :)
heeheee..
btw.. yaaarappa andha teddy bear kudutha dhuradhista saali :D :D

Alb said...

திவி... கதை ரொம்ப பிடிச்சிருந்தது.. ;) ;).. வாழ்த்துக்கள் ... ;) நம்ம ஊர் இப்டி இருக்கும் அப்டி இருக்கும்னு நெனச்சுட்டு போகும் போது பாதி வழில உன் ஊர் இது தானு இறக்கி விட்ட மாதிரி எனக்கு ஒரு உணர்வு.. இன்னும் ரெண்டு எபிசொட் போட்டு எங்கள ஏங்க விட்ருக்கலாம்...!! உங்கள் சிறகு இன்னும் விரிந்து வாசகர் மத்தியில் பறந்து மகிழ வாழ்த்துக்கள்..!!

Divyapriya said...

//Raghav
இப்போதைக்கு, கண்ணன் பாடல்கள் பத்தி நிறைய எழுதனும். அப்புறம் எனை ஆளும் அப்பன் வரதராஜப் பெருமாள் பத்தி எழுதனும்.//

"வாழ்த்துக்கள் ராகவ். இந்த மார்கழிக்குள்ள 30 பாடல்கள் எழுதிடுங்க…உங்க பாமாலைகளை கண்ணனுக்கு சூட்டிடலாம்.
நீங்க கண்ணன் பாடல்கள் தவிர வேற எதுவும் எழுத மாட்டேன்னு சொன்னதும் எனக்கு இந்த வரிகள் தான் நியாபகம் வருது…
""கண்ணன் முகம் கண்ட கன்கள், மன்னர் முகம் காண்பதில்லை...
கண்ணனுக்கு தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை...""
எத்தனை முறை கேட்டாலும், கண்களில் நீர் சுரக்க வைக்கும் ஒரு பாட்டு..."

Divyapriya said...

//முகுந்தன்
எனக்கு நிறைய கோவிலுக்கு போகனும்னு இருக்கு. பார்ப்போம் //

இங்க ஒரு spiritual கூட்டணி சேந்துடுச்சு :-) வாழ்த்துக்கள்…

Divyapriya said...

@Shiva
//teddy bear ku badhila Tajmahal pottirukalaam//

taajmahal is reserved for ur story :-)

//btw.. yaaarappa andha teddy bear kudutha dhuradhista saali :D :D//

யாரும் குடுக்கல, அது என்னோட புஜ்ஜி…

Divyapriya said...

//@Alb
திவி... கதை ரொம்ப பிடிச்சிருந்தது.. ;) ;).. வாழ்த்துக்கள் ... ;) //

thanks so much Alb…வருகைக்கு, அழகான உங்க comment க்கும்…

//இன்னும் ரெண்டு எபிசொட் போட்டு எங்கள ஏங்க விட்ருக்கலாம்...!! //

ஹய்ய்ய்யோ…கதை இன்னும் முடியல…sorry…தொடரும் போட மறந்துட்டேன்…ஹீ…ஹீ…:-D
இன்னும் 3 பார்ட்ஸ் இருக்கு, படிச்சுட்டு சொல்லுங்க, பஸ் உங்க ஊருக்கு correctaa போய் சேந்துதான்னு...

முகுந்தன் said...

//
இங்க ஒரு spiritual கூட்டணி சேந்துடுச்சு :-) வாழ்த்துக்கள்…

//
நன்றி...

நான் எப்பவுமே நிறைய கோவிலுக்கு போவேன் . மாட்ரிட்ல ஒவ்வொரு ஞாயிறும் கோவிலுக்கு போற பழக்கம்.

ஊருக்கு திரும்பினதும் எங்கியாவது போகனும்னு நினைத்து கொண்டிருக்கிறேன்....

ஜி said...

aiyo!!! kalakkareenga Ammani... Ilamai thullum kaathal thodar kathai.. superaa poguthu... epdi ivlavu naal unga bloga miss pannennu theriyala...

second half konjam avasaramaa ezuthuneengalo?? neraya spelling mistakes irunthathu :)))

aduththa partkaaga waiting

ஜி said...

//இல்லீனாலும்.....அப்படியே பில் பே பண்ற மாதிரிதான்:))//

ஆண்களை குறிவைத்து வீசிய இக்கடுஞ்சொற்களைக் கண்டித்து பெண்ணியவாதி திவ்யாவை கன்னா பின்னாவாக கண்டமானிக்கு கண்டிக்கிறேன்... :))))

ஜி said...

Ennoda pona comment Manasukkul Maththaappu divyavainga... ungala illa...

aiyo... ippadi ellaarume ore peru vatchirunthaa conpuse aaguthulla...

Ramya Ramani said...

Where is the Next Part?? Ore the Waiting inge divyapriya madam ??

Anonymous said...

// ஜி said...

//இல்லீனாலும்.....அப்படியே பில் பே பண்ற மாதிரிதான்:))//

ஆண்களை குறிவைத்து வீசிய இக்கடுஞ்சொற்களைக் கண்டித்து பெண்ணியவாதி திவ்யாவை கன்னா பின்னாவாக கண்டமானிக்கு கண்டிக்கிறேன்... :)))) //

என்னோட மனசுல இருந்ததை ரொம்ப கரீக்டா சொல்லியிருக்க ஜி மாமு.... என்னோட சார்பா உனக்கு மட்டும் நன்றி...

J J Reegan said...

ரொம்ப வேகமான கதை எழுதுறீங்க...
வாழ்த்துக்கள்....

J J Reegan said...

மனசுக்குள் மத்தாப்பு திவ்யாவோட பிரதிபலிப்பு இங்க கொஞ்சம் இருக்கு....

J J Reegan said...

அடுத்த பதிவு எப்போன்னு சொல்லிட்டா கொஞ்சம் நல்ல இருக்கும்....

Divyapriya said...

@ஜி
//aiyo!!! kalakkareenga Ammani... Ilamai thullum kaathal thodar kathai.. superaa poguthu…//

thanks ngnaa…தொடர்ந்து எல்லா part சும் படிங்க, படிச்சுட்டு comment அடிங்க :-)

//second half konjam avasaramaa ezuthuneengalo?? neraya spelling mistakes irunthathu :)))//

என்னோட unicode convertor ல எதோ பிரச்சனைன்னு நினைக்கறேன்…இல்லன்னா மட்டும் தப்பில்லாம எழுதிருவியான்னு கேக்காதீங்க ;-)

//aiyo... ippadi ellaarume ore peru vatchirunthaa conpuse aaguthulla... //

உங்க அமேரிக்க மாப்ளை கதைல ஹீரோயினுக்கு என்ன பேருங்க வச்சிருக்கீங்க??? ;-)
confusiona தவிர்க்க, இனிமே எல்லாரும், மனசுக்குள் மத்தாப்பு திவ்யாவ, தலைவி திவ்யான்னு கூப்டுவோமா?? :-))

Divyapriya said...

@ரம்யா
//Where is the Next Part?? Ore the Waiting inge divyapriya madam ?? //

@திவ்யா
//Krishna cafe part 3 potirupeenganu aasai aa......unga blog etty partha ingey neenga 'ta ta' flash back post potirukireenga:((//

@J J Reegan
//அடுத்த பதிவு எப்போன்னு சொல்லிட்டா கொஞ்சம் நல்ல இருக்கும்....//

இந்த weekend (or worst case monday) போட்டுடறேன் :-)

Divyapriya said...

@ஜி
//ஆண்களை குறிவைத்து வீசிய இக்கடுஞ்சொற்களைக் கண்டித்து பெண்ணியவாதி திவ்யாவை கன்னா பின்னாவாக கண்டமானிக்கு கண்டிக்கிறேன்…//

@J J Reegan
//என்னோட மனசுல இருந்ததை ரொம்ப கரீக்டா சொல்லியிருக்க ஜி மாமு.... என்னோட சார்பா உனக்கு மட்டும் நன்றி... //

இந்த பசங்களுகெல்லாம் கதைல வர ஒரு பய்யன பத்தி சொன்னா கூட பொறுக்க மாட்டேங்குது பா…;-)

Divyapriya said...

@J J Reegan
//ரொம்ப வேகமான கதை எழுதுறீங்க...வாழ்த்துக்கள்.... //

இந்த கதை, ஒவ்வொரு பார்ட்லயும் ஒரு விஷயத்த cover பண்ணுது…
கதையோட frame இது தான்
part 1 - hero and herione meeting
part 2 - hero falls in love
part 3 - hero proposes to herione
part 4 - ?*?*&*&^$&@#*((
part 5 - ?*?*&*&^$&@#*((

இத முதல்லயே போடலாம்ன்னு தான் நினச்சேன்…சரி, கதை முடிஞ்சப்புறம் போடலாம்ன்னு விட்டுட்டேன்…

//மனசுக்குள் மத்தாப்பு திவ்யாவோட பிரதிபலிப்பு இங்க கொஞ்சம் இருக்கு.... //

இது என் முதல் கதை (அதாவது, blog ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி எழுதினது…)
இருந்தாலும், தலைவி திவ்யாவோட பிரதிபலிப்பு இருக்குன்னா...ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம், thank you Reegan :-) btw, மத்த கதைகளையும் படிங்க…

Divya said...

\\ ஜி said...
//இல்லீனாலும்.....அப்படியே பில் பே பண்ற மாதிரிதான்:))//

ஆண்களை குறிவைத்து வீசிய இக்கடுஞ்சொற்களைக் கண்டித்து பெண்ணியவாதி திவ்யாவை கன்னா பின்னாவாக கண்டமானிக்கு கண்டிக்கிறேன்... :))))\\


ஹலோ என்ன....பெருசா கொடி பிடிக்கிறீங்க,

ஓசி ல டின்னர் சாப்பிட போய்ட்டு .....கதையில் விக்னேஷ் தான் சவுண்டு விடுராருன்னு பார்த்தா.......நீங்க கண்டிப்பு கொடியெல்லாம் வேற பிடிக்கிறீங்களா??

இந்த கலாட்டாவெல்லாம் இங்கே வேணாம் கதாசிரியரே!!

\\நீ தான் எப்பயுமே எங்க கம்பனில reimbursement இருக்குன்னு சொல்லி, பே பண்ணுவே? அந்த தைரியத்துல நானும் வந்துட்டேன்...\\

இந்த லைன் தான் விக்னேஷ காப்பித்திருக்கு........இல்லீனா பையன் மானம் கமெண்ட்ஸ்ல பறந்திருக்கும்!!

Divya said...

\ J J Reegan said...
// ஜி said...

//இல்லீனாலும்.....அப்படியே பில் பே பண்ற மாதிரிதான்:))//

ஆண்களை குறிவைத்து வீசிய இக்கடுஞ்சொற்களைக் கண்டித்து பெண்ணியவாதி திவ்யாவை கன்னா பின்னாவாக கண்டமானிக்கு கண்டிக்கிறேன்... :)))) //

என்னோட மனசுல இருந்ததை ரொம்ப கரீக்டா சொல்லியிருக்க ஜி மாமு.... என்னோட சார்பா உனக்கு மட்டும் நன்றி...
\

அட இதுல சப்போர்ட் வேறயா ஜி க்கு??

Divya said...

\\ J J Reegan said...
மனசுக்குள் மத்தாப்பு திவ்யாவோட பிரதிபலிப்பு இங்க கொஞ்சம் இருக்கு....\



திவ்யப்ரியா......இதே மாதிரி என்கிட்டவும் கேட்கிறாங்க,

'நான் அவள் இல்லை' அப்படின்னு ஒரூ போஸ்ட் போட்டு , டவுட் க்ளியர் பண்ணிடுங்க!!

Divya said...

aduththa part eppo ??

me the waitings here, julthy post publish karo na:))

ஜியா said...

//Divya said...
ஹலோ என்ன....பெருசா கொடி பிடிக்கிறீங்க,//

பெண்ணிய கொள்கைகளைத் திணித்தது மட்டுமல்லாமல், அதனை உறுதி படுத்தும் வகையில் மறுமொழி அளித்திருக்கும் தலைவி திவ்யாவை இன்னொரு முறை கண்டிக்கிறேன்.

அதுமட்டுமல்லாமல், இக்கதையின் ஆசிரியர்தான் பெண்ணிய கொள்கைகளை மறைமுகமாக கூறியிருக்கிறார் என்பதுபோல் விளக்கமளித்திருப்பதனையும், ஆசிரியரின் தீவிர ரசிகர் என்ற முறையில் கண்டிக்கிறேன்...

Reimbursement கொடுக்குறதுனாலதானே அந்த பொண்ணு காசு கொடுக்குறா.... இல்லைனா??? :))) ஸோ... அந்த பொண்ணும் ஓசி தானே?? அத மட்டும் மறச்சிட்டு பையனை மட்டும் கேள்வி கேட்டா??

@திவ்யப்ரியா
இதெல்லாம் நீங்க கண்டுக்காதீங்க... சும்மானாச்சிக்குத்தான் :)))

ஜியா said...

ஒரு பிரச்சனைய உண்டு பண்ணலாம்னு பாத்தா, காரா சாரமா இல்லையே :(((

ஃபிஃப்டி ஆச்சா??

Ramya Ramani said...

அட எங்கே நடக்கும் டிஸ்கஸ்ன்ல நானும் சாயின் பண்ணிக்கறேன்..

\\Reimbursement கொடுக்குறதுனாலதானே அந்த பொண்ணு காசு கொடுக்குறா.... இல்லைனா??? :))) ஸோ... அந்த பொண்ணும் ஓசி தானே?? அத மட்டும் மறச்சிட்டு பையனை மட்டும் கேள்வி கேட்டா??
\\
அந்த பொண்ணு Reimbursement பண்ற தெகிரியத்துல தான் விக்னேஷ் இப்படி பண்ணிட்டாரோ??

\\அதுமட்டுமல்லாமல், இக்கதையின் ஆசிரியர்தான் பெண்ணிய கொள்கைகளை மறைமுகமாக கூறியிருக்கிறார் என்பதுபோல் விளக்கமளித்திருப்பதனையும், ஆசிரியரின் தீவிர ரசிகர் என்ற முறையில் கண்டிக்கிறேன்...
\\

இதுல எங்கே சார் பெண்ணியம் இருக்கு...பாவம் ஏதோ பழகின தோஷத்துக்காக கூப்பிட்டு போனா அவங்களையே திட்டராரு விக்னேஷ் இத என்னானு சொல்ல??

Ramya Ramani said...

BTW கேக்க விட்டுப்போச்சு திவ்யபிரியா நீங்க Safeah இருக்கீங்களா??

Divya said...

\\இதுல எங்கே சார் பெண்ணியம் இருக்கு...பாவம் ஏதோ பழகின தோஷத்துக்காக கூப்பிட்டு போனா அவங்களையே திட்டராரு விக்னேஷ் இத என்னானு சொல்ல??\\



அப்படி கேளுங்க ரம்யா,

ஓசி ல சாப்பிடறப்போவே இவ்வளவு பேசுறாங்கன்னா.......இவங்க காசுல அந்த பொண்ணு சாப்பிட்டா????
என்னவாகும்........;(((

ஏதோ மனசு பொறுக்காம......இவ்வளவு நாள் ஓசில தின்ன.....காசுக்கு கணக்கு போட்டு ஒரு டெடி பியர் வாங்கிக் கொடுத்துட்டு பையன் நல்ல புள்ள சீன் போட்டுட்டான்:))

ஐய்யோ பாவம் பொளச்சுப்போட்டும்னு பார்த்தா....பெண்ணியம் பேசுறாங்கன்ன்னு கொடி பிடிக்கிறாங்க, இதை எங்கே போய் சொல்ல:)))

Divya said...

\\ ஜி said...
ஒரு பிரச்சனைய உண்டு பண்ணலாம்னு பாத்தா, காரா சாரமா இல்லையே :(((\

என்ன சார்.....கொளித்திப்போட்டுட்டு வேடிக்கையா??

Divya said...

\\
Reimbursement கொடுக்குறதுனாலதானே அந்த பொண்ணு காசு கொடுக்குறா.... இல்லைனா??? :))) ஸோ... அந்த பொண்ணும் ஓசி தானே?? அத மட்டும் மறச்சிட்டு பையனை மட்டும் கேள்வி கேட்டா?? \


இப்போ பொண்ணு ஓசில சாப்பிடுறாளா இல்லியான்றது ப்ரச்சனை இல்ல......பர்ஸ்ல 50 ரூபாய் வைச்சுண்டு.....100 ரூபாய்க்கு ஒசி டின்னர் சாப்பிட்டா என்ன அர்த்தம்??

அப்படி சாப்பிட்டாலும்.....இவ்வளவு நாள் ஓசில சாப்பாடு வாங்கிக்கொடுத்த 'மகராசி' ய இப்படியா திட்டுறது??

"ஐயோ சரண்யா.....என்கிட்டவும் பணம் இல்லியே, ஐ அம் ஸாரி, ஒசி ல சாப்பிட ஆசை பட்டது என் தப்புதாங்க,மன்னிச்சிருங்க" அப்படின்னு ஒழுங்கா பதில் சொன்னா யாரு இப்ப அவரை திட்ட போறா??

Ramya Ramani said...

\\அப்படி கேளுங்க ரம்யா,

ஓசி ல சாப்பிடறப்போவே இவ்வளவு பேசுறாங்கன்னா.......இவங்க காசுல அந்த பொண்ணு சாப்பிட்டா????
என்னவாகும்........;(((

ஏதோ மனசு பொறுக்காம......இவ்வளவு நாள் ஓசில தின்ன.....காசுக்கு கணக்கு போட்டு ஒரு டெடி பியர் வாங்கிக் கொடுத்துட்டு பையன் நல்ல புள்ள சீன் போட்டுட்டான்:))

ஐய்யோ பாவம் பொளச்சுப்போட்டும்னு பார்த்தா....பெண்ணியம் பேசுறாங்கன்ன்னு கொடி பிடிக்கிறாங்க, இதை எங்கே போய் சொல்ல:)))
\\

திவ்யா மாஸ்டருக்கு ரிப்பீட்டே...எங்க ஜி சவுண்டே காணோம்...தல நீங்களே பயப்பட்டா என்ன ஆகறது..வாங்க சார் எங்க மாஸ்டர், வக்கீல் மாதிரி கேக்கும் கேள்விக்கெல்லாம் பதில் செப்பண்டி !!

Ramya Ramani said...

திவ்யபிரியா..ஒரு லைன் போட்டீங்க ..பட்டாசு வெடிக்குது..உங்க ப்ளாக் ஹிட்டும் ஏறுது..இதெல்லாம் நீங்க பாப்புலர் ப்ளாகர் ஆயிட்டீங்க அப்படிங்கறதுக்கு அறிகுறி...Enjoy Maddi :))


ஏதோ நம்மால முடிஞ்ச ஸோசியல் சர்வீஸ் ;)

ஜியா said...

//இதுல எங்கே சார் பெண்ணியம் இருக்கு...பாவம் ஏதோ பழகின தோஷத்துக்காக கூப்பிட்டு போனா அவங்களையே திட்டராரு விக்னேஷ் இத என்னானு சொல்ல??//

//அப்படி சாப்பிட்டாலும்.....இவ்வளவு நாள் ஓசில சாப்பாடு வாங்கிக்கொடுத்த 'மகராசி' ய இப்படியா திட்டுறது??

"ஐயோ சரண்யா.....என்கிட்டவும் பணம் இல்லியே, ஐ அம் ஸாரி, ஒசி ல சாப்பிட ஆசை பட்டது என் தப்புதாங்க,மன்னிச்சிருங்க" அப்படின்னு ஒழுங்கா பதில் சொன்னா யாரு இப்ப அவரை திட்ட போறா??//

ஹலோ மேடம்ஸ்.... நண்பர்களுக்குள்ள ஆயிரம் செல்ல சண்டைகள் இருக்கும்... அத வச்சி ஏன் அந்த பொண்ண திட்டுனான்னு அந்த பயன மட்டும் திட்டி பிரிச்சு பேசுறது பேரு என்னவாம்?? ;)))

Ramya Ramani said...

ஹிம்ம்ம் என்ன சொல்ரீங்க அவங்க ஃப்ரண்ட்ஸ் இல்லியா அப்போ அங்கே இந்த மாதிரி திட்டுவது எல்லாம் சகஜம் தான் இல்லியா,அவங்க ரெண்டு பேருமே பணம் கொண்டு வராம இருந்தது தப்பு தானே..


அதுனால இவங்க திட்டினதுக்கும்,அவங்க திட்டினதுக்கும் கான்ஸல் ஆயிடிச்சு..இங்கே எங்கே பெண்ணியம் வருது சொல்லுங்க???

ஜியா said...

//இங்கே எங்கே பெண்ணியம் வருது சொல்லுங்க???//

இதுக்கெல்லாம் வெளக்கம் சொல்ல முடியுமா டீச்சர்?? (வடிவேலு பாஷையில் சொல்லவும்)

:)))

Divyapriya said...

யப்பா....உன்னாலே உன்னாலே படம் பாத்த மாதிரி இருக்குது :-)

@ரம்யா
//திவ்யபிரியா..ஒரு லைன் போட்டீங்க ..பட்டாசு வெடிக்குது..உங்க ப்ளாக் ஹிட்டும் ஏறுது..//

அது என்னவோ உண்மை தான் :-D

J J Reegan said...

// Divyapriya said...

இந்த பசங்களுகெல்லாம் கதைல வர ஒரு பய்யன பத்தி சொன்னா கூட பொறுக்க மாட்டேங்குது பா…;-) //

கக்கக்க.... கொ.....

J J Reegan said...

// இது என் முதல் கதை (அதாவது, blog ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி எழுதினது…)
இருந்தாலும், தலைவி திவ்யாவோட பிரதிபலிப்பு இருக்குன்னா...ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம், thank you Reegan :-) btw, மத்த கதைகளையும் படிங்க… //

இருங்க இந்த வாரம் புல்லா பாம் பிளாஸ்ட் பிரச்சினையாகி வேலை இல்ல. படிச்சிட்டு கமெண்டுறேன்....

J J Reegan said...

\\Divya said...


\\ J J Reegan said...
மனசுக்குள் மத்தாப்பு திவ்யாவோட பிரதிபலிப்பு இங்க கொஞ்சம் இருக்கு....\



திவ்யப்ரியா......இதே மாதிரி என்கிட்டவும் கேட்கிறாங்க,

'நான் அவள் இல்லை' அப்படின்னு ஒரூ போஸ்ட் போட்டு , டவுட் க்ளியர் பண்ணிடுங்க!! //


ஆஹா..... எல்லாம் ஒன்னு கூடிட்டாகப்பா....

J J Reegan said...

// ஜி said...
//இதுல எங்கே சார் பெண்ணியம் இருக்கு...பாவம் ஏதோ பழகின தோஷத்துக்காக கூப்பிட்டு போனா அவங்களையே திட்டராரு விக்னேஷ் இத என்னானு சொல்ல??//

//அப்படி சாப்பிட்டாலும்.....இவ்வளவு நாள் ஓசில சாப்பாடு வாங்கிக்கொடுத்த 'மகராசி' ய இப்படியா திட்டுறது??

"ஐயோ சரண்யா.....என்கிட்டவும் பணம் இல்லியே, ஐ அம் ஸாரி, ஒசி ல சாப்பிட ஆசை பட்டது என் தப்புதாங்க,மன்னிச்சிருங்க" அப்படின்னு ஒழுங்கா பதில் சொன்னா யாரு இப்ப அவரை திட்ட போறா??//

ஹலோ மேடம்ஸ்.... நண்பர்களுக்குள்ள ஆயிரம் செல்ல சண்டைகள் இருக்கும்... அத வச்சி ஏன் அந்த பொண்ண திட்டுனான்னு அந்த பயன மட்டும் திட்டி பிரிச்சு பேசுறது பேரு என்னவாம்?? ;))) //



மாம்ஸ்.. ரொம்ப நாளா நானு எதுவும் எழுதாம இருக்கேன்...

இப்ப போயி கந்து வட்டி வாங்கியாவது ஒரு கதை எழுதப்போறேன்...

பாத்துக்கலாம் மாமு...

இப்ப மட்டும் சபைய கலைப்போம்....