Saturday, June 14, 2008

மாமா உன் பொண்ண குடு...part 1


"வித்யா! வித்யா! இன்னும் என்னடி பண்ணிட்டு இருக்க? லேட் ஆச்சுன்னு உங்கப்பா கத்தப் போறாரு!!!"

"வரேம்மா...ஏன் இப்டி கத்தற?" னு சொல்லிட்டே மெதுவா ஆடி அசஞ்சு தேர் மாதிரி வந்தா வித்யா என்கிற வித்யா லக்ஷ்மி, அப்பா அம்மாவுக்கு ஒரே செல்லப் பொண்ணு. அதுவும் மூணு பெரியப்பா, ஒரு அத்தை இருக்குற அவங்க குடும்பத்துக்கே ஒரே பெண் வாரிசு.

"வித்யா மா, கிளம்பிட்டயா? கல்யாணம் முடிஞ்சு வரும்போது அப்டியே உங்க அத்தை வீட்டுக்கு போய்ட்டு வந்துடோவோம், என்ன?" இது அவளோட அப்பா விஸ்வநாதன். இப்ப அவருக்கு இருக்க ஒரே பெரிய வேலை வித்யாவுக்கு ஒரு மாப்ள தேடறது தான். வித்யாவ தவிர பாக்குற எல்லார் கிட்டயும் அவளுக்கு மாப்ள தேட சொல்லிட்டு இருக்காரு.
"சரி பா"
கல்யாணம் முடிஞ்சு இப்ப வித்யாவோட ஒரே அத்தை விஜயா வீட்டுக்கு வந்து சேந்துட்டாங்க.


விஜயாவுக்கு ரெண்டும் பசங்க தான், அதனால அவங்களுக்கு வித்யா னா ரொம்ப இஷ்டம். ஆனா அன்னிக்கு என்னவோ, விஜயா அத்தை அவங்க வீட்டுக்கு போனதுல இருந்து, முகம் குடுத்தே பேசாமே அவங்க பாட்டுக்கு கிட்சென் உள்ள போய்ட்டாங்க.

கொஞ்சம் நேரம் பாத்துட்டு, பொறுக்க முடியாமே விஸ்வநாதன் விஜயா வீட்டுகாரர் கிட்ட, "என்ன மாப்ள? என்ன பிரச்சனை?"

"விஜி உங்க மேல ரொம்ப கோவமா இருக்கா..."

"அப்டியா? என்ன விஜி ஆச்சு? என்னன்னு சொல்லாம நீ பாட்டுக்கு முகத்த தூக்கி வச்சுகிட்ட எனக்கு எப்டி தெரியும்?"

இப்ப உள்ள இருந்து விஜயா விசும்பற சத்தம் கேக்கவும், வித்யாவும் அவங்க அம்மாவும் பதறி போய் எழுந்தாங்க. அதுக்குள்ள விஜயாவே ஹாலுக்கு வந்துட்டாங்க.

"உன் பொண்ணுக்கு மாப்ள பாக்க ஆரம்பிச்சிட்டியாமே?"

"ஆமா! அத சொல்லலைன்னு தான் இப்டி முகத்த தூக்கி வச்சி இருக்கியாக்கும். இப்ப தான் ஒரு ஜாதகம் வந்துருக்கு, எல்லார் கிட்டயும் சொல்லி வச்சுருக்கேன், உன் கிட்டயும் பாக்க சொல்லாம்னு தான் இப்ப மெய்னா வந்ததே"

இப்டி விஸ்வநாதன் சொன்னது தான் தாமதம், விஜயா இன்னும் அதிகமா அழ ஆரம்பிச்சிடாங்க.

"என்ன விஜி ஆச்சு? சொன்னா தான தெரியும்?"

"என்ன சொன்னா தான தெரியும்? குத்துக் கல்லு மாதிரி என பய்யன் இருக்கும் போது நீ எப்டி வெளிய மாப்ள தேட ஆரம்பிக்கலாம்? சரி... நம்ம சொந்த தங்கச்சி பய்யன் இருக்கானே, அவன கேட்டுப் பாக்கலாமேன்னு கொஞ்சமாது தோனுச்சா உனக்கு?"

"என்ன பேசுற விஜிமா? உன் பய்யனுக்கு இப்ப தான் இருபத்தி நாலு ஆச்சு, இப்ப கல்யாணம் பண்ற வயசா அவனுக்கு?"

"என் பய்யனுக்கு எப்ப கல்யாணம் பண்ணனும்னு எனக்கு தெரியும், வித்யா தான் என் மருமகன்னு நான் எப்பவோ முடிவு பண்ணிட்டேன்"

"நீ முடிவு பண்ணா போதுமா? தேவையில்லாமே வார்த்தைய விடாதே, என் பொண்ணு என் கண்ணு முன்னாடி இருக்கா, இப்ப சொல்றேன், நான் கிழிச்ச கோட்ட அவ தாண்ட மாட்டா, உன் மகன் அமெரிக்கால இருக்கான், அவன் உன் பேச்ச கேப்பான்னு சொல்ல முடியுமா உன்னால?"

"ஏன் கேக்க மாட்டான்? இப்பயே போன் பண்றேன் அவனுக்கு" விஜயா போன் பக்கத்துல போய் டையல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.

"விஜிமா! என்ன அவசரம்? நாங்க இந்த ஊர்லையே தான் இருக்க போறோம். எங்கயும் ஓடிட மாடோம், மெதுவா கேட்டு சொல்லு, இதெல்லாம் இப்டி அவசர படர விஷயம் இல்ல."

"இல்ல, அவன் என்ன சொல்றான்னு நீங்களே பாருங்க, என் பய்யன் யு.எஸ்கு போனாலும் என் பேச்ச தட்ட மாட்டான், பாருங்க"

இதெல்லாம் போதாதுன்னு, விஜயாவோட ரெண்டாவது பய்யன் விக்ரம், "அம்மா! ஸ்பீக்கர் போன்ல போட்டு, விவேக் என்ன சொல்றான்னு கேப்போம்" னு ஸ்பீக்கர் ஆன் பண்ணி விட்டான்.

ட்ரிங் ட்ரிங். ட்ரிங் ட்ரிங்

"அம்மா! இப்ப தானே அரைமணி நேரம் முன்னாடி கூப்ட்டீங்க, என்ன மா விஷயம்?" இது விஜயாவோட மூத்த மகன் விவேக், நம்ம கதையோட ஹீரோ. யு.எஸ்ல படிப்ப முடிச்சுட்டு அப்ப தான் வேலைலைக்கு போக ஆரம்பிச்சிருந்தான்.

"தம்பி! உன்கிட்ட ஒரு முக்கியமானே விஷயம் பேசனும்பா"

"ஹ்ம்ம், சொல்லுங்க மா"

"அது வந்து...நம்ம வித்யாக்கு மாப்ள பாக்க ஆரம்பிச்சிட்டாங்க, எனக்கு ரொம்ப நாள் ஆசை, அவள தான் உனக்கு கல்யாணம் பண்ணி வக்கனும்னு..."

"என்னது??? அந்த ட்ரம்மையா???"

அது வரைக்கும் அமைதியா இருந்த வித்யா, 'களுக்கு' னு சத்தமா சிரிச்சுட்டா.

"வித்யா! பேசாமே இரு" அப்டீனு அவ அம்மா அவள அதட்டவும், கஷ்டப் பட்டு சிரிப்ப கன்றோல் பண்ணிட்டா.

அதுக்குள்ள விஜயா, "நான் உன்கிட்ட அப்பறமா பேசறேன்" னு சொல்லி உடனே போன வச்சுட்டாங்க.

[தொடரும்]

பகுதி 2

10 comments:

Smriti said...

Hmm.. Nallaa pakka tamizh mega serial maadiri arambichirukka... waiting for more to come..

Lateral Manoj said...

ennappa. climax illama story mudinjudichu.. kadaisila, vivek, vidhyavai kalyanam pannikka sammadhichana illaya.. idhula, vidhya nee, vivek yaru? :)

Divyapriya said...

no, idhule vivek thaan naan...i mean, he s the lead of the story, n i've focussed more on him only...

Unknown said...

Super start.... expecting more twists and turns and a lot of comedy in the story.... Smriti, lets hope this is not going to be another mega serial. but there would be no surprise if it is another divya's mokkai...

Shiva.G said...

- First time 5 comments unnoda blogla .. ;)
- I guess Manoj, 'Vidhya nee' nu sonnadhula oru artham irukku .. cha chaa .. naa 'drum' a manasula vechuttu sollala ;)
- Yenna daa neeye unakku - 'super start' solriyennu nenachen.. paatha vera Dhivya.. btw ther s no doubt in tht comment.. i wud b rather surprised if it does'n fall under Divya's mokkai :)
- Aaand .. enna title idhu .. enna CA poga sollitu, nee anga oru periya communityee aaramichuruva pola irukku .. I know, India has a population crisis.. but :D:D

Divyapriya said...

shocked to see 5 comments in my blog (onnu ennadodhu thaanu vainga :-)...anyways, kadhai neenga ninakkara maadhiri irukkaadhu, it ll be really funny and different, appram indha title thaan apt titlenu neengale solluveenga...naan andha community ellaam illa, i've potrayed my thoughts thru' vivek...avlo thaan :-)

Unknown said...

I don't know if anybody else has told you this, but your work was excellent.You have a wonderful ability to communicate

FunScribbler said...

//என் பய்யனுக்கு எப்ப கல்யாணம் பண்ணனும்னு எனக்கு தெரியும், வித்யா தான் என் மருமகன்னு நான் எப்பவோ முடிவு பண்ணிட்டேன்//

வித்யா தான் என் மருமகள்னு...
ஒரு சின்ன திருத்தம். சரிதானா?:)

FunScribbler said...

காலையில எழுந்துச்சு சும்மா... அப்படியே browse பண்ணிகிட்டு இருந்தபோது, இந்த கதை கண்ணுல பட்டது. இரண்டு மூனு வரி படிக்கும்போதே தெரிஞ்சது எனக்கு இந்த கதை impress பண்ணுமா இல்லையான்னு...
கண்டிப்பா சொல்றேன்.. impress பண்ணிச்சு.

//என்னது??? அந்த ட்ரம்மையா???"//

highlight of this episode. ரசித்து படித்தேன்.:)

அரசூரான் said...

ஆஹா, அருமையா எழுதியிருக்கீங்க. மாமா எப்போ யு.எஸ்-லேருந்து வறாரு? மறக்காம எனக்கு பத்திரிக்கை அனுப்புங்க.